عن عَطَاءُ بْنُ أَبِي رَبَاحٍ: قَالَ لِي
ابْنُ عَبَّاسٍ: أَلاَ أُرِيكَ امْرَأَةً مِنْ أَهْلِ الجَنَّةِ؟ قُلْتُ: بَلَى، قَالَ:
هَذِهِ المَرْأَةُ السَّوْدَاءُ، أَتَتِ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَتْ:
إِنِّي أُصْرَعُ، وَإِنِّي أَتَكَشَّفُ؛ فَادْعُ اللَّهَ لِي، قَالَ: «إِنْ شِئْتِ
صَبَرْتِ وَلَكِ الجَنَّةُ، وَإِنْ شِئْتِ دَعَوْتُ اللَّهَ أَنْ يُعَافِيَكِ»، فَقَالَتْ:
أَصْبِرُ، فَقَالَتْ: إِنِّي أَتَكَشَّفُ، فَادْعُ اللَّهَ لِي أَنْ لاَ أَتَكَشَّفَ،
فَدَعَا لَهَا
அதாஃ பின் அபீ ரபாஹ் ரலி அவர்கள் கூறுகிறார்கள்
;
சொர்க்க வாதியான ஒரு பெண்ணை உனக்கு நான் காட்டட்டுமா
என்று என்னுடைய உஸ்தாது இப்னு அப்பாஸ் ரழி அவர்கள் என்னிடம் கேட்டார்கள். சரி என்று
நான் கூறினேன். இதோ இந்த கருப்பு நிற பெண் தான் என்று அவர்கள் கூறினார்கள். இப்பெண்
ஒருநாள் நபி ﷺ
அவர்களிடம் வந்து நான் வலிப்பு
நோயாளி. இதனால் என ஆடை விலகி
விடும் நிலை ஏற்படுபவளாக நான் இருக்கிறேன். எனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுங்கள்
என்று கூறினாள். அப்போது நபி ﷺ அவர்கள் நீ விரும்பினால் பொறுமையாக இரு. உனக்கு
சொர்க்கம் உண்டு. நீ நாடினால் உனக்கு சுகம் கிடைக்க அல்லாஹ்விடம் துஆ செய்கிறேன் என்று
கூறினார்கள். அதற்கு அப்பெண்மணி நான் பொறுமையாக இருக்கிறேன். ஆனால் நான் ஆடை திறக்கப்பட்டு
விடும் நிலை உள்ளவனாக இருக்கிறேன். எனவே எனது ஆடை விலகாமல் இருக்க அல்லாஹ்விடம் பிரார்த்தனை
செய்யுங்கள் என்று கேட்டார். பெண்ணுக்காக நபி ﷺ அவர்கள் துஆ செய்தார்கள். (புகாரி ; 5652)