சமூகத்தின் முக்கிய அங்கமாக இருக்கிற வாலிபர்களை நெறிப்படுத்த வேண்டும், இளம் சமூகத்தை சீர்படுத்த வேண்டும். இன்றைய மோசமான கலாச்சாரச் சீரழிவிலிருந்து அவர்களைப் பாதுகாத்து பழுதுபடாமல் அடுத்த சிறந்த தலைமுறைக்குரியவர்களாக அவர்களை மாற்ற வேண்டும். இது காலத்தின் கட்டாயம் என்ற அடிப்படையில் தொடர்ந்து மூன்று வாரங்களாக அது குறித்து சிந்தித்தும் பேசியும் வருகிறோம். வாலிபர்களை நெறிப்படுத்த நாம் அவசியம் மேற்கொள்ள வேண்டிய முதல் தேவை பள்ளிவாசல்களில் காலையும் மாலையும் நடைபெறும் மார்க்கத்தின் அடிப்படை விஷயங்கள் போதிக்கப்படுகின்ற மக்தப் மதரஸாக்களை முறைப்படுத்த வேண்டும். அதை மேம்படுத்த வேண்டும் என்று கடந்து வாரம் பேசினோம். அடுத்து நாம் அவசியம் மேற்கொள்ள வேண்டிய இரண்டாவது விஷயம், இன்றைய வாலிபர்களின் நட்பு வட்டாரத்தை கவனிக்க நோக்க வேண்டும். அவர்களுக்கு சிறந்த நட்புகளை உருவாக்கித் தர வேண்டும்.
Pages
Pages
Thursday, January 26, 2023
Friday, January 20, 2023
வாலிபச் சமூகத்தை மீட்டெடுப்பதற்கான வழிகள் ; 1, மக்தப்
கடந்த வாரம் இன்றைய காலத்து நம் வாலிப சமூகம் வீண் விளையாட்டுக்களிலும் கூத்து கும்மாளங்களிலும் வீணான காரியங்களிலும் ஈடுபடுகிறார்கள். சாதிக்க வேண்டிய பருவமாக இருக்கிற வாலிபத்தை அவர்கள் வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள். மொபைலுக்கும் இன்டர்நெட்டுக்கும் கேம்ஸுக்கும் சினிமாவிற்கும் போதைக்கும் அடிமையாகிக் கொண்டிருக்கிறார்கள். நடிகர்களுக்குப் பின்னால் நம் சமூகம் சென்று கொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் கோடிட்டுக் காட்டினோம். இந்த ஆபத்தான சூழலிலிருந்து அவர்களைக் காக்க நம் வாலிபச் சமூகத்தை மீட்டெடுக்க நாம் என்ன செய்ய வேண்டும் ? எந்த மாதிரியான நடவடிக்கைகளை நாம் முன்னெடுக்க வேண்டும் ? என்பதைக் குறித்து இன்ஷா அல்லாஹ் அடுத்து சிந்திக்க இருக்கிறோம்.
Friday, January 13, 2023
பைத்தியங்கள் பல விதம்
மனித வாழ்வில் மூன்று பருவங்கள் உண்டு.மூன்று பருவங்களைக்
கொண்டு மனித வாழ்வை இறைவன் அமைத்திருக்கிறான். குழந்தைப்பருவம், இளமைப்பருவம், முதுமைப்பருவம். இறைவன் தந்திருக்கிற இந்த மூன்று
பருவங்களில் மிக முக்கியமான எல்லா வகையான சிறப்பம்சங்களைப் பெற்ற எல்லா வகையான பாக்கியங்களையும்
பெற்ற ஒரு பருவம் இளமைப்பருவம்.ஏனென்றால் குழந்தைப் பருவம் விளையாட்டுப் பருவம்.
அதில் கொஞ்சம் ஆற்றல் இருக்கும். ஆனால் அதற்குத்தேவையான அறிவும் பக்குவமும் இருக்காது.
முதுமைப்பருவத்தில் கொஞ்சம் அறிவும் பக்குவமும் இருக்கும்.ஆனால் அதனை செயல்படுத்துவதற்குத்
தேவையான ஆற்றல் இருக்காது. ஆனால் அறிவும் பக்கவமும் ஆற்றலும் நிறைவாக ஒரு சேர அமையப்
பெற்றிருக்கிற ஒரு பருவம் வாலிபப்பருவம் தான்.எனவே குழந்தைப் பருவம் அறியாமைக்கும்
விளையாட்டுக்கும் சொந்தமானது,வயோதிகப்பருவம் இயலாமைக்கும் பலவீனத்திற்கும் சொந்தமானது, வாலிபம் தான் ஆற்றலுக்கும் சாதனைக்கும் சொந்தமானது.