புனிதம் நிறைந்த பாக்கியம் பொருந்திய அருள் நிறைந்த ரமலான் மாதத்தை நாம் அடைந்திருக்கிறோம்.
உலகத்திலே ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு தொழிலுக்கும் ஒவ்வொரு துறைக்கும் ஒவ்வொரு சீசன் உண்டு.அந்த சீசன் தான் அந்த பொருளுக்குரிய அந்த தொழிலுக்குரிய அந்த துறைகளுக்குரிய பொற்காலம். வசந்த காலம். அல்லாஹ்வை ஏற்று ஈமான் கொண்டு மறுமையின் வெற்றிக்கான அமல்களை செய்யக்கூடிய நமக்கு சீசன் இந்த ரமலான்.எனவே நம்மைப் பொறுத்த வரை இந்த ரமலான் தான் பொற்காலம் வசந்த காலம்.சீசன் என்பது அந்த தொழிலை அந்த வியாபாரத்தை மேம்படுத்துவதற்கான, அதன் மூலம் அதிகமான லாபங்களைப் பெறுவதற்கான தருணம்.சந்தர்ப்பம்.
ஒவ்வொரு விபாயாரிகளும் தங்களுக்குரிய சீசனை எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள்.அதற்காக
முன்னவே ஆயத்தமாகி விடுவார்கள்.சீசனை சந்தித்து விட்டால் களம் இறங்கி செயல்படுவார்கள். அவர்கள் தான் புத்திசாலிகள்.
அதே போன்று அதிகமான வணக்க வழிபாடுகள், இபாதத்களை செய்து நன்மைகளை அள்ளுகிற ஒரு மாதம் இந்த
ரமலான். கிடைத்திருக்கிற இந்த சீசனைப் பயன்படுத்துபவர்கள் தான் உண்மையில் புத்திசாலிகள்.இந்த
ரமலானிலும் மற்ற மாதங்களைப் போன்று அமல்களில் கவனக்குறைவாக ஏனோ தானோ என்று இருப்பவர்கள் பாக்கியம் இழந்தவர்கள் என்று தான்
சொல்ல வேண்டும்.
கிடைப்பதற்கரிய பொக்கிஷமான, பாக்கியம் நிறைந்த ஒரு மாதத்தை நாம் அடைந்திருக்கிறோம்.இதிலுள்ள
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நொடியும் முக்கியமானவை, பொக்கிஷமானவை. இதை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்.
நாம் அடைந்திருக்கிற இந்த மாதம் மிகச்சிறந்த,
பல்வேறு அந்தஸ்துகளை பல்வேறு
உயர்வுகளைப் பெற்றுத் தருகின்ற மாதம்.
இன்றைக்கு நாம் எல்லோரும் பல்வேறு சிரமங்களுக்கு
மத்தியில் பொருளாதாரத்தை நோக்கி ஓடக்கூடிய இவ்வுலகில் நம்முடைய பல்வேறு வேளைபாடுகளுக்கு
மத்தியில் தான் அமல் செய்கிறோம். வணக்கங்கள் புரிகிறோம். தொழுகிறோம். நோன்பு வைக்கிறோம்.
மார்க்கம் சார்ந்த எல்லா காரியங்களையும் செய்கிறோம். அதிலும் குறிப்பாக மார்க்கத்தின்
சிந்தனையை விட்டும் நம்மை திசை திருப்பக்கூடிய அல்லாஹ்வின் நினைவை விட்டும் நம்மை தூரமாக்கக்கூடிய
விஷயங்களெல்லாம் பரவலாகி விட்ட இந்த காலத்தில் அவை அனைத்தையும் தாண்டி நாம் அமல் செய்வது
மிகப்பெரிய ஜிஹாத் என்று தான் சொல்ல வேண்டும்.
இத்தகைய சூழ்நிலைகளிலும் நாம் அமல் செய்கிறோம் என்றால்
அதற்கு காரணம் ஒன்று தான்.
وفيها ما تشتهيه الانفس وتلذ الاعين
அங்கு அவர்கள் மனம் விரும்பியதும், கண்களுக்கு இன்பம் தருவதும் அதிலுள்ளது;
இன்னும், “நீங்கள் இங்கு என்றென்றும் தங்கியிருப்பீர்கள்!”
(அல்குர்ஆன் 43 ;
71)
என்று அல்லாஹ் சொன்ன அந்த சுவனத்தைப் பெறுவதற்குத்தான்.
எல்லோருமே சுவனத்தை விரும்புகிறோம்.ஆசைப்படுகிறோம். சுவனத்தின் ஆசை யாருக்குத்தான்
இல்லாமல் இருக்கும் ?
واجعلني من ورثة جنة نعيم
இன்பம் நிறைந்த சுவனத்தின் வாரிசுக்காரர்களில் ஒருவராகவும்
என்னை ஆக்கிடுவாயாக! (அஷ்ஷுஃரா. வசனம்: 85) என தந்தை இப்ராஹீம் (அலை) அவர்கள் பிரார்த்தித்தார்கள்.
رب ابن لي عندك بيتا في الجنة ونجني من
فرعون وعمله ونجني من القوم الظالمين
என் இரட்சகனே! சுவனத்தில் எனக்கென்று ஒரு மாளிகை
அமைத்திடு, ஃபிர்அவ்ன்,
அவனது (கொடுமையான) நடவடிக்கையில்
இருந்து என்னைக் காத்திடு (அல்குர்ஆன் : 66 ; 11) என்று அன்னை ஆசியா ரலி அவர்கள் பிரார்த்தனை செய்து
பெற்றுக் கொண்டார்கள்.
وقال رسول الله - صلى الله عليه وسلم -: "والذي نفس محمد بيده لا يقاتلهم اليوم رجل فيقتل صابراً محتسباً مقبلاً غير مدبر إلا أدخله الله الجنة"، فقال عمير بن الحمام أخو بني سلمة، وفي يده تمرات يأكلهن: بخ بخ[4]، أفما بيني وبين أن أدخل الجنة إلا أن يقتلني هؤلاء؟ ثم قذف التمرات من يده، وأخذ سيفه فقاتل القوم حتى قتل
இஸ்லாத்தின் முதல் போரான பத்ர் போர்க்களத்தில் நபி
ﷺ அவர்கள் முஸ்லிம்களின்
அணிவகுப்பை சரி செய்து கொண்டு இருந்தார்கள். அந்த நேரத்தில் போரில் கலந்து கொண்டு வீர மரணம் அடைவதைப் பற்றி ஸஹாபாக்களுக்கு
ஆர்வமூட்டிக் கொண்டு இருந்தார்கள். அப்போது எவர் போர்க்களத்திலே பொறுமையோடும் நன்மையை
எதிர்பார்த்தும் புறமுதுகிட்டு ஓடாமல் எதிரிகளை நோக்கி முன்னேறிச் சென்று போர் செய்து
இறுதியில் வீர மரணம் அடைவாரோ அவர் நிச்சயம் சுவனத்தில் நுழைவார் என்று சொன்னார்கள்.
அந்த போர்க்களத்திலே உமைர் பின் ஹுமாம் ரலி என்ற ஒரு சஹாபி. நபியவர்கள் மதினாவிற்கு
வருவதற்கு முன்பே மதினாவில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட முதன்மையான சஹாபாக்களில்
இவரும் ஒருவர்.கையிலே பேரித்தம் பழங்களை வைத்து சாப்பிட்டுக்கொண்டிருந்தார்.
நபியின் அந்த வார்த்தையைக் கேட்டவுடன் உமைர் பின் ஹுமாம் ரலி அவர்கள் தனது கையில் இருந்த
பேரீத்தம் கனிகளை வீசி எறிந்து விட்டு களத்தில்
குதித்து வீர தீரத்தோடு போர் புரிந்து இறுதியில் ஷஹீதாகி விட்டார்கள்.(தாரீஹுத் தப்ரீ)
சொர்க்கம் என்ற வார்த்தையைக் கேட்டவுடன் அவர்களது
கண்ணுக்கு முன்பு அவர்களது குடும்பமோ மனைவி மக்களோ பொருளாதாரமோ தொழிலோ உலகத்தின் மற்ற
எந்த எதிர்பார்ப்புகளோ வந்து நிற்க வில்லை.சொர்க்கத்திற்கு உரியவனாக நான் ஆக வேண்டும்,
சொர்க்கத்தில் நுழையும் பாக்கியத்தை நான் பெற வேண்டும் என்கிற ஒரு ஆசையும் அவாவும்
மட்டும் தான் கையிலே வைத்திருந்த பேரித்தம் கனிகளை தூக்கி எறிந்து விட்டு போர்க்களத்தில்
கலந்து கொண்டு அவர்களை வீரமரணம் அடைய செய்தது என்று பார்க்கிறோம்.
فعن أنس بن مالك: أن رجلا قال: يا رسول
الله! إن لفلان نخلة، وأنا أقيم نخلي بها، فمُره أن يعطيني إياها حتى أقيم حائطي بها.
فقال له النبي صلى الله عليه وسلم: أعطها إياه بنخلة في الجنة فأبى، وأتاه
أبو الدحداح فقال: بعني نخلك بحائطي. قال: ففعل. قال: فأتى النبي صلى الله عليه وسلم
فقال: يا رسول الله! إني قد ابتعت النخلة بحائطي، فاجعلها له، فقال النبي صلى الله
عليه وسلم: فذكره. فأتى امرأته فقال: يا أم الدحداح! اخرجي من الحائط، فإني بعته بنخلة
في الجنة. فقالت: قد ربحت البيع. أو كلمة نحوها. [1] وفي رواية عند أحمد أن النبي صلى
الله عليه وسلم قال له: «كَمْ مِنْ عِذْقٍ دَوَّاحٍ لَأَبِي الدَّحْدَاحِ فِي الْجَنَّةِ»
قَالَهَا مِرَارًا [2]، وروى مسلم من حديث جابر بن سمرة رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ
النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «كم من عذق معلق في الجنة لأبي
الدحداح» [3]، وفي مسند أحمد: فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«كَمْ مِنْ عَذْقٍ رَدَاحٍ لِأَبِي الدَّحْدَاحِ فِي الْجَنَّةِ» قَالَهَا مِرَارًا)
நபி ஸல் அவர்களிடம் ஒரு வாலிபர் வந்து இன்ன
மனிதரிடம் ஒரு பேரீத்த மரம் இருக்கிறது. அதை எனக்கு தரும் படி சொல்லுங்கள் என்றார்.
நபியவர்கள் அந்த மனிதரை அருகே அழைத்து அந்த மரத்தை ஆதரவற்ற அந்த வாலிபருக்கு அன்பளிப்பாக
கொடுத்து விடுங்களேன்” என்று தமது விருப்பத்தை
விண்ணப்பித்தார்கள்.ஆனால், அவரோ தம்மால் அப்படி தர இயலாது என்று கூறி விட்டார்கள். நபி {ஸல்} அவர்கள் விடவில்லை. நீங்கள் அந்த மரத்தை அவருக்கு அன்பளிப்பாக கொடுத்து
விட்டால் அதற்குப் பகரமாக சுவனத்தில் உங்களுக்கு மதுரமான கனிகளைக் கொண்ட ஓர் உயர்ந்த
தோட்டத்தைப் பெற்றுத்தர நான் பொறுப்பேற்றுக்
கொள்கின்றேன்” என்று கூறி மீண்டும்
கேட்டார்கள்.இரண்டாவது முறையாகவும் தம்மால் தர இயலாது என அவர் கூறி விட்டார்.
இதை தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த அபுத்தஹ்தாஹ் (ரலி) அவர்கள் நேராக அந்த மனிதரிடம் வந்து”மதீனாவின் இன்ன பகுதியிலே இருக்கிற 100 பேரீத்தமரங்கள் கொண்ட ஒரு தோட்டத்தை நான் உனக்குத்
தருகிறேன். அதற்குப் பரகமாக எனக்கு அந்த ஒரு
பேரீத்த மரத்தை தருவீர்களா?” என்று கேட்டார்கள்.
அதற்கு அவர் சம்மதம் தெரிவித்தார். உடனே, அபுத்தஹ்தாஹ் (ரலி) அவர்கள், நபி {ஸல்} அவர்களிடம் வந்து “அல்லாஹ்வின் தூதரே! நான் அவரிடமிருந்து இருந்து அந்த மரத்தை என்னுடைய
நூறு பேரீத்தமரங்கள் நிறைந்த ஒரு தோட்டத்தை விலையாகக் கொடுத்து வாங்கி விட்டேன். அந்த
வாலிபருக்கு அந்த மரத்தைக் கொடுத்து உங்களின் விருப்பத்தையும் நான் நிறைவேற்றுகின்றேன் என்றார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் “கனிகள் தரும் மதுரமான எத்தனையோ தோட்டங்கள் சுவனத்தில்
அபுத்தஹ்தாஹ் (ரலி) அவர்களுக்கு உண்டு என்று திரும்பத் திரும்ப பலமுறை சொன்னார்கள். (அஹ்மத் ; 12482)
ஸஹாபாக்கள்
மறுமைக்காகவும் மறுமையின் வெற்றிக்காகவும் அதில் கிடைக்கும் அந்தஸ்திற்காகவும் எவ்வளவு பெரிய தியாகங்களையும் செய்ய முன் வருபவர்களாக இருந்தார்கள்.
சுவனத்தின் மீதான இந்த ஆசை நமக்கும் இருக்கிறது.ஆனால் அவர்கள் அதற்கான தயாரிப்புக்களை
உருவாக்கிக் கொண்டு ஆசைப்பட்டார்கள். ஆனால் நாம் அதற்கான எந்த தயாரிப்பும் இல்லாமல்
அதன் மீது ஆசைப்படுகிறோம்.
ஆக அமல் செய்பவர்களும் சரி அமல் செய்யாதவர்களும்
சரி தொழுபவர்களும் சரி தொழாதவர்களும் சரி நோன்பு வைப்பவர்களும் சரி நோன்பு வைக்காதவர்களும்
சரி எல்லோருக்குமே சுவனம் போக வேண்டும் என்ற ஆசை உண்டு.
ஆனால் அந்த உயர்ந்த மேலான சுவனமே நான்கு நபர்களை
ஆசைப்படுகிறது என்று நபி ஸல் அவர்கள் சொன்னார்கள்.
الجنة مشتاقة الي اربعة نفر تـالي القـرآن
وحـافظ اللسـان ومُطْعـم الجيعـان والصائميـن في شهـر رمضـان "
குர்ஆன் ஓதுபவர்,நாவைப் பாதுகாப்பவர்,பசித்தவருக்கு
உணவளிப்பவர்,ரமலான் மாதத்தில் நோன்பு
நோற்பவர், இந்த நான்கு பேரையும் சொர்க்கம் விரும்புகிறது.
இந்த நான்கு
எவ்வளவு முக்கியமான காரியம் என்று
நமக்குத் தெரியும்.
اقرؤوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعًا
لأصحابه
நீங்கள் குர்ஆனை ஓதுங்கள். நிச்சயமாக குர்ஆன் என்பது
அதை ஒதக்கூடியவர்களுக்கு மறுமையில் பரிந்துரை செய்யும். (முஸ்லிம்
; 804)
لا يستقيم إيمانُ عبد حتى يستقيم قلبه،
ولا يستقيم قلبه حتى يستقيم لسانه
ஒரு அடியான் உடைய உள்ளம் சீராகும் வரை அவனுடைய ஈமான்
சீர் ஆகாது அவனுடைய நாவு சரியாகும் வரை அவருடைய உள்ளம் சரியாகாது.(அஹ்மத் ;13048)
عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ قَالَ جَاءَ
أَعْرَابِيٌّ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ يَا رَسُولَ
اللَّهِ: عَلِّمْنِي عَمَلًا يُدْخِلُنِي الْجَنَّةَ فَقَالَ: «...أَعْتِقِ النَّسَمَةَ
وَفُكَّ الرَّقَبَةَ» فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَوَلَيْسَتَا بِوَاحِدَةٍ؛ قَالَ:
«...فَإِنْ لَمْ تُطِقْ ذَلِكَ فَأَطْعِمِ الْجَائِعَ وَاسْقِ الظَّمْآنَ
ஒரு கிராமவாசி நபியிடம் வந்து அல்லாஹ்வின் தூதர்
அவர்களே சொர்க்கத்தில் என்னை நுழைக்கும் படியான ஒரு காரியத்தை எனக்கு சொல்லித் தாருங்கள்
என்று கேட்ட பொழுது அடிமையை உரிமை விடுவது, அதற்கு உனக்கு சக்தி இல்லை என்றால் பசித்தவருக்கு
உணவளித்தல் தாகித்தவருக்கு தண்ணீர் புகட்டுதல் என்றார்கள்.(அஹ்மத் ;18670)
இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் எந்த நபர்களை
சொர்க்கம் தேடுகிறது, எந்த அமல்கள் இருந்தால் அவரை சுவனம் தேடுகிறது என்று நபியவர்கள் சொன்னார்களோ அவை அனைத்தையும் ஒட்டு மொத்தமாக செய்கின்ற
பாக்கியம் நமக்கு இந்த ரமலானில் தான் கிடைக்கிறது.
ரமலானில் குர்ஆன் ஒதுகிறோம்.புறம் சொல்வது,
கோள் சொல்வது,பொய் சொல்வது,பிறரைப் பற்றி அவதூறு சொல்வது,பிறரைப்பற்றி இட்டுக்கட்டுவது, ஏசுவது, தேவையில்லாத பேச்சுக்களை பேசுவது இவைகளை விட்டும்
நாம் நமது நாவை பாதுகாக்குகிறோம். பாதுகாக்க வேண்டும்.
ஏனென்றால் வெறுமனே உண்ணாமலும் பருகாமலும் இருப்பதற்குப்
பெயர் நோன்பல்ல.நம் உறுப்புக்களை ஹராமான, மார்க்கம் தடுத்திருக்கிற காரியங்களை விட்டும்
பாதுகாப்பத்தற்குப் பெயர் தான் நோன்பு. அவ்வாறு
பாதுகாத்தால் தான் நோன்பின் முழு பலனை அடைய முடியும்.
رب صائم ليس له من صيامه الا الجوع
எத்தனையோ
நோன்பாளிகளுக்கு பசித்திருப்பதைத் தவிர அவர்களுக்கு வேறெதுவும் இல்லை. (இப்னுமாஜா ; 1690)
இதில் இரு கருத்துக்கள் உண்டு. 1, ஹராமை சாப்பிடுவது. 2, உடல் உறுப்புக்களை பாதாகாக்காமல் இருப்பது.
قال جابر بن عبدالله اذا صمت فليصم سمعك
وبصرك ولسانك من المأثم
ஜாபிர் பின் அப்துல்லாஹ் ரலி அவர்கள் கூறினார்கள்
; நீ நோன்பு வைப்பதாக
இருந்தால் உன்னுடைய செவியும் உன்னுடைய பார்வையும் உன்னுடைய நாவும் பாவங்களை விட்டும்
நோன்பிருக்க வேண்டும்.
எனவே சொர்க்கம் தேடுகிறது என்று பெருமானார் ஸல்
அவர்கள் சொன்ன அத்தனை அமல்களையும் ஒட்டு மொத்தமாய் செய்கிற பாக்கியம் இந்த ரமலானில்
தான் கிடைக்கிறது.
எனவே இந்த
புனிதமான ரமலானின் ஒவ்வொரு நொடிப்பொழுதையும் நன்மையில் செலவிட வேண்டும். எந்த நொடியையும் வீணடித்து விடக்கூடாது.
அல்லாஹ் இந்த ரமலானை நமக்கு பாக்கியமானதாக
ஆக்கித் தருவானாக
மாஷா அல்லாஹ்...
ReplyDeleteஅருமையான பதிவு...
பாரகல்லாஹ்...
மாஷா அல்லாஹ் அருமையான பதிவு
ReplyDeleteஅல்லாஹ் உங்களுக்கு பரகத் செய்வானாக ஆமீன்
This comment has been removed by the author.
ReplyDeleteமாஷா அல்லாஹ்
ReplyDeleteநல்ல பல கருத்துக்களை சொல்லியுள்ளீர்கள்
அல்லாஹ் தங்களுக்கு கல்வி ஞானத்தை அதிகப்படுத்துவானாக ஆமீன்
Masha Allah
ReplyDelete