Pages

Pages

Thursday, July 29, 2021

நம் சமூகத்தின் பலம் துஆ



நபிகள் நாயகம் ரசூலுல்லாஹி ஸல் அவர்களின் சமூகமாக இருக்கக்கூடிய நமக்கு அல்லாஹுத்தஆலா ஏராளமான நிஃமத்துக்களை வாரி வழங்கியிருக்கிறான். நாம் உம்மத்தே முஹம்மதிய்யா என்று பெருமைப்பட்டுக் கொள்ள தகுந்த, காலம் முழுக்க நன்றி செலுத்தினாலும் ஈடுசெய்ய முடியாத ஒப்பற்ற  நிமத்துக்கள்

அல்லாஹ் வினால் நாம் வழங்கப்பட்டிருக்கிறோம். அவ்வாறு அல்லாஹ்வினால் தரப்பட்டிருக்கிற அளப்பெரும் நிஃமத்துக்களில் ஒன்று துஆ.

வாழ்வின் எந்தத் தேவையாக இருந்தாலும் கொஞ்சமும் வெட்கப்படாமல் யோசிக்காமல் படைத்த இறைவனிடம் முறையிட்டு கேட்டு பெற்றுக் கொள்ளும் ஒரு அற்புதமான வாய்ப்புக்குப் பெயர் துஆ.

وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ ۖ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ ۖ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ 

{நபியே!} உம்மிடம் என்னுடைய அடியார்கள் என்னைப்பற்றி கேட்டால் நிச்சயமாக நான் அவர்களுக்கு அருகில் இருக்கிறேன்.என்னை அழைத்தால் அழைப்பவரின் அழைப்புக்கு நான் பதிலளிக்கிறேன்.எனவே அவர்கள் நேர்வழி பெற்றவர்களாக ஆகுவதற்கு {என் கட்டளைகளை ஏற்று} எனக்கு அவர்கள் வழிபட்டு என்னை ஈமான் கொள்ளட்டும் {என்று கூறுங்கள்}  (அல்குர்ஆன் : 2  ; 186)

عن الصلب بن حكيم بن معاوية بن حيدة القشيري ، عن أبيه ، عن جده ، أن أعرابيا قال : يا رسول الله ، أقريب ربنا فنناجيه أم بعيد فنناديه ؟ فسكت النبي صلى الله عليه وسلم ، فأنزل الله)

கிரமாப் புறத்து வாலிபர் ஒருவர், நபியிடம் வந்து நம்மைப் படைத்த இறைவன் அருகில் இருக்கிறானா? அல்லது தூரத்தில் இருக்கிறானா? அருகில் இருந்தால் அவனிடம் இரகசியமாகப் பேசுவோம்.தூரத்தில் இருந்தால் அவனை சப்தமாக அழைப்போம் என்று கேட்டார்.அப்போது நபி ஸல் அவர்கள் அமைதியாக இருந்தார்கள் அப்போது இந்த வசனம் அருளப்பட்டது. {இப்னு கசீர்}

وروى الكلبي عن أبي صالح عن ابن عباس قال : قالت اليهود كيف يسمع ربنا دعاءنا ، وأنت تزعم أن بيننا وبين السماء خمسمائة عام ، وغلظ كل سماء مثل ذلك ؟ فنزلت هذه الآية

வானத்திற்கும் நமக்கும் மத்தியில் 500 வருட தொலை தூரம் இருக்கிறது.இதே அளவு தொலை தூரத்தில் தான் ஏழு வானங்களும் இருப்பதாக நீங்கள் கருதுகிறீர்கள். இவ்வளவு தொலை தூரத்தில் இருக்கும் இறைவனால் நம் அழைப்பை எப்படி கேட்க முடியும் என்று யூதர்கள் கேட்டார்கள்.அப்போது இந்த வசனம் அருளப்பட்டது. {குர்துபி}

பிரார்த்தனை என்பது மனித சமூகத்திற்குக் கிடைத்திருக்கிற மிகப் பெரிய வரப்பிரசாதம். காரணம், இதன் மூலம் மனதை வறுத்தும் பாவச் சுமைகளை இறக்கி வைக்கலாம்,உற்ற நண்பனிடம் கூறுவதைப் போல மனக்கஷ்டங்களை எல்லாம் தடையின்றி கூறி அதற்கு நிவாரணத்தைப் பெற்றுக் கொள்ளலாம்,எல்லாத் தேவைகளையும் கேட்டுப் பெறலாம்.ஆயுளைக் கேட்கலாம்,அதிகாரத்தைக் கேட்கலாம்ஆரோக்கியத்தைக் கேட்கலாம், பொருளாதாரத்தைக் கேட்கலாம்,ஏன் காரும்,பங்கலாவும் கூட கேட்கலாம்.

நாம் பிரார்த்தனையின் மூலம் எதையும் சாதித்து விட முடியும்,எந்த இலட்சியத்தையும் எட்டி விட முடியும்.பல நேரங்களில் நம் முன்னோர்கள் மிகப்பெரும் வெற்றியையும் அல்லாஹ்வின் உதவியையும் துஆவின் வழியாகத்தான் பெற்றார்கள்.

எத்தனையோ அசாதாரணமான சூழ்நிலைகளில் அச்சுறுத்தலான சமயங்களில் அமைதியான சூழலை உருவாக்கி பல்வேறு வகையான வெற்றிகள் கிடைப்பதற்கு பிரார்த்தனைகள் தான் காரணமாக இருந்திருக்கிறது என்பதை இஸ்லாமிய வரலாறுகள் நமக்கு சுட்டிக் காட்டுகிறது.

வரலாற்றிலே இரண்டு நிகழ்வு உண்டு. ஒன்று இஸ்லாமிய வரலாற்றில் நடந்த முதல் போர்க்களம், இஸ்லாத்திற்கு மகத்தான வெற்றியை பெற்றுத் தந்ததோடு இஸ்லாமிய சமூகம் உணர்ந்து கொள்ளும் படியான பல்வேறு பாடங்களையும் படிப்பினைகளையும் பெற்றுத்தந்த பத்ர் போர்க்களம். இன்னொன்று தாவூத் அலை அவர்கள் ஜாலூத் மன்னனை வீழ்த்திய வரலாறு.

ஹழ்ரத் மூஸா அலை அவர்களுக்குப் பின் பனூ இஸ்ரவேலர்களிடையே நீண்ட காலமாக எந்த நபியும் வரவில்லை. இந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி ஜாலூத் என்ற கொடிய மன்னன் பனூ இஸ்ரவேலர்களை கொடுமைப் படுத்தினான்,,அநியாயமாக அவர்களைக் கொன்று குவித்தான், அவர்களின் பொருட்களை சூரையாடினான். இதனால் அவர்கள் மிகப்பெரும் கொடுமைகளுக்கு உள்ளானார்கள்.இப்படியே நாட்கள் ஓடிக் கொண்டிருந்தது. நீண்ட இடைவேளைக்குப் பிறகு அவர்களுக்கு ஷம்வீல் என்ற ஒரு நபியை அல்லாஹ் அனுப்பி வைத்தான். பனூ இஸ்ரவேலர்கள் அந்த நபியிடம் சென்று எங்களுக்கு ஓர் அரசனை ஏற்படுத்தித் தர வேண்டும், அந்த அரசனின் துணையோடு அந்த கொடிய மன்னனான ஜாலூத்தோடு போர் புரிய வேண்டும். அதற்காக அல்லாஹ்விடம் துஆ செய்யுங்கள் என்று கேட்டார்கள். அந்த நபியும் அதை ஏற்றுக் கொண்டு அல்லாஹ்விடம் துஆ செய்தார்கள். அல்லாஹுத்தஆலா தாலூத் அரசரை அவர்களுக்குக் கொடுத்தான். தாலூத் மன்னர் சுமார் 70,000 மக்களை ஒன்று திரட்டி போருக்காக ஆயத்தமானார். மக்களே! நீங்கள் ஜாலூத்தை வெல்லப் புறப்படுகிறீர்கள். வழியில் அல்லாஹ்வின் சோதனை ஏற்படும். அந்த நேரத்தில் என் சொற்படி நடந்தால் தான் வெற்றி பெற முடியும். பாலைவனப் பிரதேசத்தில் நீங்கள் நடந்து செல்லும் போது தண்ணீர் தாகமெடுத்து நாவெல்லாம் வரண்டு போகும். பாலஸ்தீனுக்கும் ஜோர்டானுக்கும் இடையே ஒரு ஆறு ஓடிக் கொண்டிருப்பதை நீங்கள் பார்ப்பீர்கள். அதன் தண்ணீர் மிகவும் சுவையாக இருக்கும். அதிலிருந்து நீங்கள் ஒரு மிடறுக்கு மேல் குடிக்க கூடாது. மீறி அதிகமாகக் குடித்தால் எங்கள் கூட்டத்தை விட்டு விலகி விடுவீர்கள் என்று சொன்னார்கள். அவர்கள் சொன்னபடி அந்த ஆறு வந்தது. அந்த தண்ணீரை சொற்ப நபர்களைத் தவிர அனைவரும் வயிறு முட்ட குடித்தார்கள். அதனால் எழுந்திருத்து நடக்க முடியாமல் ஆகி விட்டார்கள்.

அந்த சொற்ப நபர்கள் மட்டுமே அந்த ஆற்றைக் கடந்து போனார்கள் ஆனால் அங்கே ஜாலூத் மன்னனையும் பிரமாண்டமான அவனது படையையும் பார்த்து இவர்களை சந்திப்பதற்கு எங்களுக்கு ஆற்றல் கிடையாது என்று பயந்தார்கள். பனூ இஸ்ரவேலர் களிடையே ஜாலூத்தைக் கொல்பவருக்கு எனது மகளை மணமுடித்து தருவேன் மட்டுமல்ல, எனது ஆட்சியில் சரிபாதியைத் தருவேன் என்று தாலூத் சொன்னார். ஆனாலும் யாரும் முன் வரவில்லை. ஹள்ரத் தாவூத் அலை அவர்கள் மட்டும் ஜாலூத்தை சந்திப்பதற்கு முன் வந்தார்கள் சிறிய கல்லை கொண்டு அவனை வீழ்த்தினார்கள். அதன் பிறகு இஸ்லாமியர்களுக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்தது என்பது வரலாறு.

இந்த பத்ர் நிகழ்வுக்கும் தாவூத் அலை ஜாலூத்தை வீழ்த்திய இந்த நிகழ்வுக்கும் நிறைய தொடர்பு உண்டு.

1، ஸஹாபாக்கள் மதீனாவை விட்டு வெளியேற்றப்பட்டார்கள். பனூ இஸ்ரவேலர்கள் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டார்கள்.

2، அவ்வாறு வெளியேற்றப்பட்டதைக் காரணமாக வைத்துத்தான் அங்கே போருக்கு அனுமதி வழங்கப்பட்டது. இவர்களும் அதைத்தான் சொன்னார்கள்.

 قَالُوا وَمَا لَنَا أَلَّا نُقَاتِلَ فِي سَبِيلِ اللَّهِ وَقَدْ أُخْرِجْنَا مِنْ دِيَارِنَا وَأَبْنَائِنا 

எங்கள் முன்னோர்கள் மற்றும் எங்கள் இல்லங்களிலிருந்து நாங்கள் வெளியேற்றப் பட்டிருக்கும் நிலையில் நாங்கள் போர் புரியாமல் இருப்போமா என்று பனூ இஸ்ரவேலர்கள் கேட்டார்கள். (அல்குர்ஆன் 246)

3،  பத்ரில் இஸ்லாமியர்கள் சொற்பமாக இருந்தார்கள் எதிரிகள் மெஜாரிட்டியாக இருந்தார்கள். அதேபோன்று இந்த நிகழ்விலும் தாலூத் மன்னரின் படை சொற்பமாகும் ஜாலூத்தின் படை மெஜாரிட்டியாக இருந்தது.

4، இஸ்லாமியர்களின் எண்ணிக்கை 313 ஆக இருந்ததை போன்றே இந்த நிகழ்விலும் தாலூத் மன்னரோடு சென்ற அந்த படையின் எண்ணிக்கை 313 ஆகத்தான் இருந்தது.

5، பெரும் படையைப் பார்த்து அவர்களும் அஞ்சினார்கள்.இவர்களும் அஞ்சினார்கள்.

وان فريقا من المومنين لكارهون.

முஃமின்களில் ஒரு பிரிவினர் (பத்ர் போர்க்களத்திற்கு உம்முடன் வருவதற்கு இணக்கமில்லாம்) வெறுத்துக் கொண்டிருந்தனர். (அல்குர்ஆன் : 8 ; 5)

قالوا لا طاقة لنا اليوم بجالوت وجنوده

ஜாலூத் மற்றும் அவன் படைகளுடன் இன்று போர் செய்வதற்கு எங்களுக்கு வலுவில்லை என்று அவர்கள் கூறினார்கள். (அல்குர்ஆன் 249)

6இங்கேயும் அல்லாஹ் இஸ்லாமியர்களுக்கு வெற்றியை கொடுத்தான் அங்கேயும் அல்லாஹுத்தஆலா இஸ்லாமியர்களுக்குத் தான் வெற்றியை தந்தான்.

7எல்லாவற்றையும் விட இந்த இரண்டு நிகழ்விலும் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக இருந்தது துஆ தான். பத்ர் போர்க்களம் நடப்பதற்கு முந்திய இரவில் நபி  அவர்கள் உறுக்கமாக இறைவனிடத்தில் துஆ செய்தார்கள். அந்த துஆ தான் அவர்களின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. அதே போன்று இந்த நிகழ்விலும் தாலூத்தின் மக்கள் துஆ  செய்தார்கள். அதை அல்லாஹுத்தஆலா அல்குர்ஆனில் பதிவு செய்திருக்கிறான்.

لما برزوا لجالوت وجنوده:[قالوا ربنا أفرغ علينا صبرًا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين]

ஜாலூத்தையும் அவன் படைகளையும் களத்தில் சந்திக்க அவர்கள் முன்னேறிச் சென்ற போது எங்கள் இறைவா! எங்களுக்கு பொறுமையைத் தருவாயாக! எங்கள் பாதங்களை உறுதியாக்குவாயாக! காஃபிரான இம்மக்களுக்கு எதிராக எங்களுக்கு உதவி புரிவாயாக! என்று கூறினார்கள். (அல்குர்ஆன் 250)

பல நிற்கதியான கட்டங்களிலும் அச்சுறுத்தலான சூழ்நிலைகளிலும் அமைதியையும் வெற்றியையும் இஸ்லாமிய சமூகத்திற்கு பெற்றுத்தந்தது துஆக்கள் தான் என்பது வரலாறு கூறும் உண்மை.

ஹஜ்ஜாஜ் பின் யூசுஃபைப் பற்றி நமக்குத் தெரியும். கொடுங்கோலன் என்று வரலாறு அவனைக் குறிப்பிடுகிறது.பல பேரை அநியாயமாக கொன்று குவித்தவன்.அவனால் கொல்லப் பட்டவர்களில் கடைசி நபர் ஸஈத் பின் ஜுபைர் ரலி அவர்கள்.

فلما وصل سعيد إلى الحجاج وأدخلوه عليه نظر إليه في حقد وغيظ وقال : ما اسمك ؟ قال : اسمي سعيد بن جبير ، قال له : بل أنت شقي بن كسير ، فقال : بل كانت أمي أعلم باسمي منك ، فقال: ما تقول في محمد ؟ قال : من تعني بمحمد هل تريد الرسول صلى الله عليه وسلم ؟ قال : نعم ، قال : وهل يخفى عليك قولي فيه، وهو سيد ولد آدم، النبي المصطفى وليس مثلك يسأل مثلي لأننا جميعًا نؤمن برسالته، ولا يُسأل إلا شاك مرتاب

قال له : فما تقول في أبي بكر ؟ قال : هو الصديق خليفة رسول الله صلى الله عليه وسلم، ذهب حميدًا وعاش سعيدًا، وسأله عن عمر، وعن عثمان، وعن علي، وهو يجيب بما اتصف به كل واحد من هؤلاء الكرام البررة صفوة الخلق بعد الرسل الأئمة المهديين الذي رضي الله عنهم ورضوا عنه، ثم قال له : أي خلفاء بني أمية أعجب لك ؟ قال : أرضاهم لخالقهم

قال : فأيهم أرضى للخالق ؟

قال : علم ذلك عند ربي في كتاب لا يضل ربي ولا ينسى

قال : فما تقول فيَّ ؟

قال : أنت أعلم بنفسك

قال : أريد علمك أنت ؟

قال : إذن يسوؤك ولا يسرك

قال : لا بد أن أسمع منك

قال : إني لأعلم أنك مخالف لكتاب الله تعالى، تقدم على أمور تريد بها الهيبة وهي تقحمك في الهلكة، وتدفعك إلى النار، قال له : والله لأقتلنك، قال : إذن تفسد علي دنياي وأفسد عليك آخرتك... قال : اختر لنفسك أي قتلة شئت ؟

قال : بل اخترها أنت لنفسك يا حجاج، فوالله ما تقتلني قتلة إلا قتلك الله مثلها في الآخرة

قال : أتريد أن أعفو عنك ؟

قال : إن كان عفو فمن الله تعالى، فدعا الحجاج بالسيف والنطع فتبسم سعيد فقال له الحجاج : وما تبسمك ؟ قال : عجبت من جراءتك على الله وحلم الله عليك

قال : اقتله يا غلام فاستقبل سعيد القبلة ثم قال : "وَجَّهْتُ وَجْهِيَ لِلَّذِي فَطَرَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ حَنِيفًا وَمَا أَنَا مِنَ الْمُشْرِكِينَ"[الأنعام: 8]

قال : احرفوا وجهه عن القبلة، قال سعيد : "فَأَيْنَمَا تُوَلُّوا فَثَمَّ وَجْهُ اللَّهِ" [البقرة: 116]

فقال : كبوه على الأرض

فقال : "مِنْهَا خَلَقْنَاكُمْ وَفِيهَا نُعِيدُكُمْ وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً أُخْرَى" [طه: 55] 

فقال الحجاج : اذبحوا عدو الله فما رأيت أحدًا أدعى للآيات منه

فرفع سعيد المظلوم كفيه البريئتين إلى الرب القدير الذي يعلم خائنة الأعين وما تخفى الصدور ثم قال: «اللهم لا تسلط الحجاج على أحد بعدي»

ولم يمض على مصرع سعيد غير خمسة عشر يومًا حتى أصيب الحجاج بالحمى الشديدة، واشتدت عليه وطأة المرض حتى كان يغفو ساعة ويفيق ساعة، فإذا أفاق استيقظ مذعورًا مهزومًا وهو يصيح ويقول : ما لي ولسعيد بن جبير، ردوا عني سعيد بن جبير، وما بقي إلا أيامًا وهو في عذاب شديد حتى قصم الله ظهره، وأزال ذكره، وأحصى بطشه، وجعله عبرة للمعتبرين

ஸஈத் பின் ஜுபைர் ரலி அவர்களுக்கும் ஹஜ்ஜாஜ் பின் யூசுஃபுக்கும் மத்தியில் நடந்த உரையாடல் ;

ஹஜ்ஜாஜ் ; உன் பெயர் என்ன ?

ஸஈத் பின் ஜுபைர் ரலி ;  என் பெயர் ஸஈத். ஸஈத் என்றால் பாக்கியம் பெற்றவர் என்று பொருள்.

ஹஜ்ஜாஜ் ; இல்லை இல்லை, உன் பெயர் ஷகீ. ஷகீ என்றால் பாக்கியமில்லாதவர் என்று பொருள்.

ஸஈத் பின் ஜுபைர் ரலி ;  உன்னை விட என் உம்மாவிற்கு என் பெயர் நன்றாகத் தெரியும்.

ஹஜ்ஜாஜ் ; முஹம்மதைப்  பற்றி நீ என்ன நினைக்கிறாய் ?

ஸஈத் பின் ஜுபைர் ரலி ;  முஹம்மத் என்றால் அல்லாஹ்வின் தூதரைக் குறித்து கேட்கிறாயா ?

ஹஜ்ஜாஜ் ; ஆம்.

ஸஈத் பின் ஜுபைர் ரலி ;  ஏன் அவர்களைப் பற்றி உனக்குத் தெரியாதா ? அவர்கள் மனிதகுலத் தலைவர். அல்லாஹ்வினால் தேர்ந்தெடுக்கப்பட்ட நபி. உன்னைப் போன்றவர் அல்ல.நாங்கள் அனைவரும் அவர்களை அல்லாஹ்வின் தூதர் என்று நம்பியிருக்கிறோம். சந்தேகத்தில் உள்ளவன் தான் அவர்களைப் பற்றி இவ்வாறு கேட்பான்.

ஹஜ்ஜாஜ் ; அபூபக்கரைக் குறித்து உன் கருத்து என்ன ?

ஸஈத் பின் ஜுபைர் ரலி ;  அவர்கள் சித்தீக், நபி  அவர்களின் கலீஃபா. பாக்கியத்துடன் வாழ்ந்தார். புகழுடன் சென்றார்.

இப்படியே எல்லா கலீஃபாக்களைக் குறித்தும் கேட்ட போது அவர்களைப் பற்றி சொன்னார்கள்.

ஹஜ்ஜாஜ் ; பனூ உமய்யாவின் கலீஃபாக்களில் உனக்கு யாரைப் பிடிக்கும் ?

ஸஈத் பின் ஜுபைர் ரலி ;  அவர்களில் அல்லாஹ்வின் திருப்தியைப் பெற்றவர்.

ஹஜ்ஜாஜ் ; அவர்களில் அல்லாஹ்வின் திருப்தியைப் பெற்றவர் யார் ?

ஸஈத் பின் ஜுபைர் ரலி ;  அதைப் பற்றிய ஞானம் என் இறைவனிடத்தில் தான் இருக்கிறது.

ஹஜ்ஜாஜ் ; என்னைப் பற்றி என்ன சொல்கிறாய் ?

ஸஈத் பின் ஜுபைர் ரலி ;  அது உனக்கே நன்றாகத் தெரியுமே !

ஹஜ்ஜாஜ் ; என்னைப் பற்றி நீ என்ன அறிந்து வைத்திருக்கிறாய் ! சொல்.

ஸஈத் பின் ஜுபைர் ரலி ;  நான் சொன்னால் அது உனக்கு வேதனையைத் தான் ஏற்படுத்தும். நிச்சயம் மகிழ்ச்சியைத் தராது.

ஹஜ்ஜாஜ் ; பரவா இல்லை சொல்.

ஸஈத் பின் ஜுபைர் ரலி ;  நீ அல்லாஹ்வின் வேதமான அல்குர்ஆனுக்கு மாறு செய்பவன். கர்வத்துடன் நடப்பவன். நீ புரியும் காரியங்கள் நிச்சயம் உன்னை அழிவில் கொண்டு போய் சேர்க்கும். நரகத்திற்கு இழுத்துச் செல்லும்.

ஹஜ்ஜாஜ் ; நிச்சயம் உன்னை நான் கொல்வேன்.

ஸஈத் பின் ஜுபைர் ரலி ;  அப்படி செய்தால் என் உலக வாழ்க்கை நீ அழித்து விடலாம். ஆனால் என்னைக் கொல்வதால் உன் மறுமை வாழ்க்கை அழிந்து போகும்.

ஹஜ்ஜாஜ் ; உன்னை எப்படிக் கொல்வது என்பதை நீயே முடிவு செய்து சொல்.

ஸஈத் பின் ஜுபைர் ரலி ;  இல்லை உன் விருப்பம்.ஆனால் அல்லாஹ்வின் மீது சத்தியமாக என்னை எப்படி கொல்கிறாயோ அவ்வாறே உன்னை மறுமையில் அல்லாஹ் கொல்வான்.

ஹஜ்ஜாஜ் ; உன்னை மன்னிக்க வேண்டும் என்று விரும்புகிறாயா ?

ஸஈத் பின் ஜுபைர் ரலி ;  மன்னிப்பு இருந்தால் அது என் இறைவன் புறத்திலிருந்து மட்டும் தான். உன் தயவு எனக்கு தேவையில்லை.

அவனைக் கொல்வதற்கு ஹஜ்ஜாஜ் முற்பட்ட போது அவர்கள் சிரித்தார்கள்.

ஹஜ்ஜாஜ் ; உனக்கென்ன சிரிப்பு ?

ஸஈத் பின் ஜுபைர் ரலி ;  அல்லாஹ்விடம் நீ இவ்வளவு துணிச்சலாக நடந்து கொண்டும், உன்னை தண்டிக்காமல் அவன் பொறுமையாக இருக்கிறானே அதை நினைத்து சிரிக்கிறான்.

அவர்களைக் கொல்வதற்கு உத்தவிட்ட போது அவர்கள் கிப்லாவை முன்னோக்கி வஜ்ஜஹ்து வஜ்ஹிய லில்லதீ என்ற தஸ்பீஹை ஓதினார்கள். அவர் முகத்தை கிப்லாவை விட்டும் திருப்புங்கள் என்று சொன்னான்.அப்போது நீங்கள் எங்கே திரும்பினாலும் அங்கே அல்லாஹ்வின் முகம் இருக்கிறது என்ற வசனத்தை ஓதினார்கள். அவரை முகம் குப்புரப் போடுங்கள் என்று சொன்னான்.அந்த மண்ணிலிருந்தே உங்களை நாம் படைத்தோம். அதன் பக்கமே உங்களை மீட்டுவோம். அதிலிருந்தே மறுமுறை உங்களை வெளியாக்குவோம் என்ற வசனத்தை ஓதினார்கள். அவரை கொல்லுங்கள். இவரைப் போன்று அல்லாஹ்வின் வசனங்களை வாதிட்ட வேறு எவரையும் நான் கண்டதில்லை என்று கூறினான்.அப்போது ஸஈத் ரலி அவர்கள் தன் கரங்களை உயர்த்தி எனக்குப் பிறகு வேறு யாரின் மீதும் இவனை சாட்டி விடாதே  ! அதாவது இவனால் கொல்லப்படுகிற கடைசி நபராக நான் தான் இருக்க வேண்டும் என்று பிரார்த்தித்தார்கள்.அவர்களின் பிரார்த்தனை அல்லாஹ்வினால் ஏற்கப்பட்டது. அவர்கள் இறந்து 15 நாட்களில் ஹஜ்ஜாஜின் மரணம் ஏற்பட்டது.கடுமையாக காய்ச்சல் ஏற்பட்டு மயக்கமுற்று நடக்க முடியாமல் படுத்த படுக்கையானான். மயக்கம் தெளிந்த பிறகு ஸஈத் ரலி அவர்கள் செய்த பிரார்த்தனைய்யை எண்ணிப் பார்த்து வருந்தினான். கடைசியில் மிகவும் வேதனைக்குள்ளாக்கப்பட்டு இறந்து போனான்.

وقد روي عنه لما مات : أنْ رآه بعض الناس في الحلم فقالوا ما فعل الله بك ؟ قال : قتلني الله بكل امرئ قتلة واحدة، وقتلني بسعيد بن جبير سبعين قتلة

அவன் இறந்த பிறகு அவனை கனவில் ஒருவர் கண்டார். உன் நிலை என்ன என்று விசாரித்தார்.அதற்கு அவன், நான் செய்த ஒவ்வொரு கொலைக்கும் பகரமாக அல்லாஹ் என்னை ஒரு முறை தான் கொல்கிறான்.ஆனால் ஸஈதின் கொலைக்குப் பகரமாக 70 முறை என்னை கொன்றான் என்று கூறினான் என சொல்லப்படுகிறது. (அல்பிதாயா வன் நிஹாயா, ஸியரு அஃலாமின் நுபுவ்வா)

கொடுங்கோலன் ஹஜ்ஜாஜ் பின் யூசுஃபின் முடிவுக்கு காரணமாக இருந்தது ஸஈத் பின் ஜுபைர் ரலி அவர்களின் அந்த துஆ தான் என்பதை இந்த வரலாறு நமக்கு தெளிவாக உணர்த்துகிறது.

ஹிஜ்ரி ஐந்தாம் நூற்றாண்டு ஐரோப்பியர்கள் ஜெருசலத்தை கைபற்றி சுமார் 90 வருடங்கள் ஜும்மாவிற்கு கூட அனுமதிக்காமல் முஸ்லிம்களை சித்திரவதை செய்து கொண்டிருந்தார்கள். சுமார் 38.000 முஸ்லிம்கள் கொல்லப்பட்டார்கள்,கொஞ்சம் கூட இரக்கம் இல்லாமல் சிறு பிள்ளைகளின் கால்களை பிடித்து சுவரில் அடித்து கொன்றார்கள், அப்போது தான் ஸலாஹுத்தீன் அய்யூபி (ரஹ்)  அவர்களின் தலைமையில்  சிலுவை யுத்தம் நடந்தது. சிலுவை யுத்தத்திற்கு முந்தைய இரவு இஷா  தொழுகையை  முடித்து விட்டு மறுநாள் ஃபஜர்  தொழுகை வரை சஜ்தாவிலிருந்து ஸலாஹுத்தீன் அய்யூபி (ரஹ்) அவர்கள் துஆ செய்தார்கள்.அந்த துஆவிற்கு கிடைத்த பலன் என்ன தெரியுமா ? நடக்க விருக்கும் யுத்தத்தில்  ஐரோப்பியர்களுக்கு உதவி செய்ய வந்த மிகப்பெரும் நேவி கப்பல் ஆயுதங்களோடு மூழ்கடிக்கப்பட்டது.  ஜெருசலமும்  வெற்றி கொள்ளப்பட்டது.

இப்படி நபி  அவர்களின் காலத்திலிருந்து இன்று வரை துஆவின் மூலம் ஏற்பட்ட பலன்கள் நிறைய உண்டு.

துஆ என்பது இஸ்லாமிய சமூகத்திற்கு இருக்கக்கூடிய மிகப்பெரிய பலம். துஆ கேட்காதவர்கள், துஆ கேட்கத்தெரியாதவர்கள் மிகவும் பலவீனமானவர்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

فعن أبي هريرة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال: «أعجز الناس من عجز عن الدعاء، وأبخل الناس من بخل بالسلام

துஆ செய்வதற்கு இயலாதவன் தான் மக்களிலேயே மிகவும் பலவீனமானவன். ஸலாம் சொல்வதில் கஞ்சத்தனம் செய்பவன் தான் மக்களிலேயே மிகவும் கஞ்சன் ஆவான். (இப்னு ஹிப்பான் ;  4498)

துஆ என்பது அழிவில் இருந்தும் நஷ்டத்தில் இருந்து நம்மைப் பாதுகாத்து நமக்கு வெற்றியையும் ஈடேற்றத்தையும் தரக்கூடியது. நமக்கு வந்திருக்கிற அல்லது வரவிருக்கிற எல்லா சோதனைகளையும் தடுத்து நமக்கு சுகமான வாழ்க்கையை தரக்கூடியது.

لا تعجِزوا في الدُّعاءِ فإنَّه لنْ يهلِكَ مع الدُّعاءِ أحَدٌ

அல்லாஹ்விடம் துஆக் கேட்கும் விஷயத்தில் நீங்கள் பலவீனமானவர்களாக ஆகிவிடாதீர்கள். ஏனெனில், துஆ கேட்டுக் கொண்டிருக்கும் எவரும் அழிவுக்குரியவராக ஆக மாட்டார்(இப்னு ஹிப்பான் ;  4498)

لا يُغْنِي حَذَرٌ من قَدَرٍ ، [ والدعاءُ ينفعُ مما نزل ، ومما لم يَنْزِلْ ، وإنَّ البلاءَ لَيَنْزِلُ ، فيَتَلَقَّاه الدعاءُ ، فيَعْتَلِجَانِ إلى يومِ القيامةِ ]

அல்லாஹ்வுடைய களா கத்ரை விட்டும் (விதிப்பை விட்டும்) தப்பித்தல் முடியாது. துஆவாகிறது வந்து விட்ட துன்பத்தையும் இனி வரவிருக்கிற துன்பத்தையும் நீக்குவதில் மிக்கப் பலன் தரக்கூடியதாகும். துன்பமாகிறது வானிலிருந்து இறங்குகிறது. அதே நேரத்தில் அடியான் கேட்கும் துஆவாகிறது மேலே செல்லுகிறது.அப்பொழுது அந்தத் துன்பமும், இந்த துஆவும் இரண்டும் சந்தித்து மோதிக் கொள்கின்றன.(அந்தத் துன்பத்தை கீழே இறங்க விடாமல் இந்த துஆ தடுத்து விடுகிறது. எனவே துஆவின் பொருட்டால் அடியான் துன்பத்தை விட்டும் பாதுகாக்கப்படுகிறான்.) கியாமத்து நாள் வரை இந்நிகழ்ச்சி இவ்வாறே நடைபெற்றுக் கொண்டிருக்கும்’(ஸஹீஹுல்  ஜாமிவு ; 7739)

من فتحَ له منكم باب الدعاءِ ، فتحتُ لهُ أبوابِ الرحمةِ ، وما سُئِل اللهُ شيئا – يعني : أحبّ إليهِ - من أن يُسأَلَ العافيةَ وقال رسولُ اللهِ صلى الله عليه وسلم إن الدعاءَ ينفعُ ممّا نزَلَ ومما لم يَنْزِلْ فعليكم عبادَ اللهِ بالدعاء

உங்களில் யாருக்கு துஆவின் வாசல் திறக்கப்பட்டு விட்டதோ அவருக்கு ரஹ்மத்தின்  வாசல் திறக்கப்பட்டு விடும். அல்லாஹ்விடத்தில் ஆரோக்கியத்தைக் கேட்பதை விட அவனுக்கு மிகவும் பிரியமாக வேறு எதுவும் கேட்கப்படுவதில்லை. நிச்சயமாக துஆ என்பது வந்திருக்கிற மேலும் வர இருக்கிற சோதனைகளை  நீக்குவதில் பலன் தரக்கூடியது. ஆகவே நீங்கள் துஆவை அவசியமாக்கிக் கொள்ளுங்கள். (திர்மிதி ; 3548)

இவ்வாறு தஆவின் மூலம் நாம் அடைந்து கொள்ளும் பலன்களையும் நன்மைகளையும் விவரிக்கும் நபிமொழிகள் நிறைய உண்டு.மட்டுமல்ல,  அதிகம் துஆ கேட்கவர்களை இறைவன் நேசிக்கிறான்.அவ்வாறு  கேட்பவர்களுக்கு நிச்சயம் பதிலளிப்பதாகவும் வாக்களிக்கிறான்.

«من لم يسأل الله يغضبْ عليه

எவர் அல்லாஹ்விடம் கேட்க வில்லையோ அவர் மீது அல்லாஹ் கோபம் கொள்கிறான். (திர்மிதி ; 3373)

: لا تسألنَّ بُنَيَّ آدمَ حـاجةً * وسل الذي أبوابُهُ لا تحجبُ اللهُ يغضبُ إن تركت سؤالَه * وبُنيُّ آدمَ حين يُسألُ يغضبُ

மனிதனிடத்தில் உன் தேவையைக் கேட்காதே. யாருடைய வாசல் பூட்டப் படாமல் எப்போதும் திறந்திருக்கின்றதோ அத்தகைய அல்லாஹ்விடத்தில் உன் தேவையைக் கேள். மனிதனிடத்தில் கேட்டால் அவன் கோபம் கொள்வான். ஆனால் இறைவனிடத்தில் கேட்க வில்லை என்றால் அவன் கோபம் அடைகிறான் என்று அல்லாமா ஷாஃபிஈ ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.

إنَّ ربَّكم حييٌّ كريمٌ يستحيي من عبدِه أن يرفعَ إليه يدَيْه فيرُدَّهما صِفرًا أو قال خائبتَيْن

உங்களது இறைவன் ஜீவித்திருப்பவன்,சங்கை மிகுந்தவன்.தன் அடியான் அவனிடம் கரம் ஏந்தும் போது, அவன் கேட்பதைக் கொடுக்காமல் அந்தக் கரங்களை காலியாக திருப்பி அனுப்புவதற்கு அவன் வெட்கப்படுகிறான். (இப்னுமாஜா ; 3131)

عنِ النَّبيِّ صلَّى اللهُ عليه وسلَّم فيما يروى عن ربَّه قال أربعُ خصالٍ واحدةٌ منهنَّ لي وواحدةٌ لك واحدةٌ فيما بيني وبينَك وواحدةٌ فيما بينَك وبينَ عبادي فأمَّا الَّتي لي فتعبُدُني لا تُشرِكُ بي شيئًا وأمَّا الَّتي لك عليَّ فما عمِلْتَ من خيرٍ جزَيْتُك به وأمَّا الَّتي بيني وبينَك فمنك الدُّعاءُ وعليَّ الإجابةُوأمَّا الَّتي بينَك وبينَ عبادي فارضَ لهم ما ترضى لنفسِك

நான்கு விஷயங்கள் உண்டு.அதில் ஒன்று எனக்குரியது.இன்னொன்று உங்களுக்குரியது.மற்றொன்று எனக்கும் உங்களுக்கும் மத்தியில் உள்ளது. மற்றொன்று உங்களுக்கும் என் அடியார்களுக்கும் மத்தியில் உள்ளது என அல்லாஹ் நபியைப் பார்த்துக் கூறினான்.எனக்குரியது என்பது என்னை வணங்குவதும் எனக்கு இணை வைக்காமல் இருப்பதுமாகும்.நீங்கள் எந்த நன்மை செய்தாலும் அதற்கு உங்களுக்கு கூலி உண்டு.அது உங்களுக்குரியது.நீங்கள் துஆ செய்தால் நான் பதில் தருவேன்.இது எனக்கும் உங்களுக்கும் மத்தியில் உள்ளது. உங்களுக்கு எதை விரும்புவீர்களோ அதையே மற்றவர்களுக்கும் விரும்புங்கள்.இது உங்களுக்கும் என் அடியார்களுக்கும் மத்தியில் உள்ளது. (மஜ்மவுஸ்ஸவாயிது ; 56/1)

قال سفيان بن عيينة : لا يمنعن أحدا من الدعاء ما يعلمه من نفسه فإن الله قد أجاب دعاء شر الخلق إبليس ، قال : رب فأنظرني إلى يوم يبعثون ، قال فإنك من المنظرين

நாம் புரியும் பாவங்களை நினைத்து அதன் காரணமாக நாம் கேட்கும் துஆக்கள் ஏற்றுக் கொள்ளப்படாது.அதற்கு எந்த பயனும் இருக்காது என்று எண்ணக் கூடாது. ஏனென்றால் படைப்பிலேயே மிகத்தீய படைப்பாக இருக்கிற ஷைத்தானின் கோரிக்கையையே அல்லாஹ் ஏற்றுக் கொண்டான்.உலக அழிவு நாள் வரை வாழ எனக்கு அவகாசம் வழங்கு என்று கேட்டான்.அல்லாஹ்வும் அதை கொடுத்து விட்டான் என்று சுஃப்யான் இப்னு உயைனா ரஹ் அவர்கள் கூறுவார்கள் (குர்துபி)

அடியார்கள்  தன்னிடம் துஆ கேட்பதை இறைவன் விரும்புகிறான். பதில் அளிப்பதற்கு காத்திருக்கிறான். தன்னிடம் உயரும் கரங்களை காலியாக திருப்பி அனுப்புவதற்கு வெட்கப்படுகிறான் என்பதை இதுவரை குறிப்பிட்ட ஹதீஸ்கள் வழியாக நாம் புரிந்து கொள்ளலாம். ஆனால் நாம் கேட்கும் எத்தனையோ துஆக்களுக்கு பதில் கிடைப்பதில்லை.நான் நிச்சயம் பதிலளிப்பேன் என்று அவன் வாக்களித்திருந்தும் ஏன் நம்  துஆக்கள் கபூல் ஆகுவதில்லை. அதற்கு காரணம் என்ன என்பதை இன்ஷா அல்லாஹ் வரும் வாரங்களில் பார்ப்போம்.

 


No comments:

Post a Comment