Pages

Pages

Sunday, September 19, 2021

ஹதீஸ் எண் ; 20 رجل قتل تسعة وتسعين

 

عن أبي سعيد سعد بن مالك بن سنان الخدري  عن نبي الله قال: كان فيمن كان قبلكم رجل قتل تسعة وتسعين نفسًا، فسأل عن أعلم أهل الأرض فدُل على راهب فأتاه فقال: إنه قتل تسعة وتسعين نفسًا، فهل له من توبة؟ فقال: لا، فقتله فكمل به مائة، ثم سأل عن أعلم أهل الأرض، فدُل على رجل عالم، فقال: إنه قتل مائة نفس، فهل له من توبة؟ فقال: نعم، ومن يحول بينه وبين التوبة؟ انطلق إلى أرض كذا وكذا، فإن بها أناسًا يعبدون الله تعالى فاعبد الله معهم، ولا ترجع إلى أرضك، فإنها أرض سوء، فانطلق حتى إذا نصف الطريق أتاه الموت، فاختصمت فيه ملائكة الرحمة وملائكة العذاب، فقالت ملائكة الرحمة: جاء تائبًا مقبلاً بقلبه إلى الله تعالى، وقالت ملائكة العذاب: إنه لم يعمل خيرًا قط، فأتاهم ملك في صورة آدمي، فجعلوه بينهم -أي حكمًا- فقال: قيسوا ما بين الأرضيْن، فإلى أيتهما كان أدنى فهو له، فقاسوه فوجدوه أدنى إلى الأرض التي أراد، فقبضته ملائكة الرحمة

உங்களுக்கு முன் வாழ்ந்த மக்களில் ஒருவர் இருந்தார். அவர் 99 கொலை செய்திருந்தார். (தவறை உணர்ந்த அவர்) இவ்வூரில் சிறந்த அறிஞர் யார் என்று விசாரித்தார். பனூ இஸ்ராயீல் கூட்டத்தில் ஓரு (மார்க்க அறிவு குறைந்த வணக்க-வழிபாட்டில் ஆர்வம் மிகுந்த) ராஹிப் இருக்கிறார் என்று அவரிடம் கூறப்பட்டது. அவர் அவரிடம் வந்து, தான் 99 கொலை செய்ததாகவும், தனக்கு மன்னிப்பு உண்டா? என்றும் கேட்டார். “இல்லை!என்று அந்த ராஹிப் பதில் கூறினார். உடனே அவரையும் கொன்று நூறைப் பூர்த்தியாக்கி விட்டார்.


பின்னர், இந்த ஊரில் சிறந்த அறிஞர் யார் என்று விசாரித்தார். அறிஞர் ஒருவர் பற்றி அவரிடம் கூறப்பட்டது. அவரிடம் வந்தார். தான் 100 நபர்களைக் கொலை செய்ததாகவும், தனக்கு தவ்பா” (பாவமன்னிப்பு) உண்டா?’ என்றும் கேட்டார். உண்டு, உனக்கும், தவ்பாவுக்குமிடையே தடையாக இருப்பவர் யார்? நீ பூமியில் இன்ன இன்ன இடங்களுக்குச் செல். அங்கே சில மனிதர்கள் இருப்பார்கள். அல்லாஹ்வை வணங்குவார்கள். அவர்களுடன் சேர்ந்து அல்லாஹ்வை நீ வணங்குவாயாக! உன் ஊர் பக்கம் திரும்பிச் செல்லாதே! அது கெட்ட பூமியாகும்என்று கூறினார்.அவரும் நடக்க ஆரம்பித்தார். பாதி தூரத்தைக் கடந்திருப்பார்.. அதற்குள் அவருக்கு மரணம் வந்து விட்டது. அவன் விஷயமாக அருள் தரும் வானவர்களும், வேதனை தரும் வானவர்களும் (உயிரைக் கைப்பற்றுவதில்) போட்டியிட்டனர். அருள் தரும் வானவர்கள், ‘தவ்பா செய்தவனாக தூய உள்ளத்துடன் அல்லாஹ்வின் பக்கம் முன்னோக்கி வந்தார்என்று கூறினார்கள். வேதனை தரும் வானவர்களோ, ‘அவன் நன்மையை அறவே செய்ததில்லைஎன்று கூறினார்கள். அப்போது அவர்களிடம் மனித தோற்றத்தில் ஒரு வானவர் வந்தார். அவரை தீர்ப்புக் கூறுபவராக தங்களிடையே ஏற்படுத்தினார்கள்.அவர் கூறினார்; ‘அவர் (பயணித்த தூரத்தை) அளந்து, எந்த ஊர் அவனுக்கு நெருக்கமாக உள்ளது என்று பாருங்கள்!என்று கூறினார். அவர்கள் அளந்தார்கள். அவர் சென்று கொண்டிருந்த பாதை அவனுக்கு நெருக்கமாக இருந்ததைக் கண்டார்கள். ஆகவே, அருள் தரும் வானவர்கள் அவர் உயிரைக் கைப்பற்றினார்கள். (முஸ்லிம் 2766)

 

கொலை செய்தவருக்கு பாவமன்னிப்பு கிடைக்குமா என்பதில் மார்க்க அறிஞர்களுக்கு இடையில் கருத்து வேற்றுமை உண்டு. சில அறிஞர்கள் கொலை செய்தவருக்கு பாவ மன்னிப்புக் கிடைக்காது, அவருடைய தவ்பா ஏற்றுக் கொள்ளப்படாது என்று கூறுகிறார்கள். குறிப்பாக இப்னு அப்பாஸ் ரலி அவர்களிடத்தில் கொலை செய்தவருடைய தவ்பா ஏற்றுக் கொள்ளப்படுமா என்று கேட்கப்பட்ட போது இல்லை என்று சொன்னார்கள்.

பெரும்பாலும் இப்படி இல்லை என்று சொல்வதற்கு இரண்டு காரணங்கள் முன் வைக்கப்படுகிறது. ஒன்று அல்லாஹ் அவர்களுக்கு நிரந்தர நரகம் என்று கூறுகிறான்.

وَمَنْ يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ خَالِدًا فِيهَا

 

யார் ஈமான் கொண்ட ஒருவரை வேண்டுமென்றே கொலை செய்கிறானோ அவனுக்கான தண்டனை  நரகமாகும். அதில் அவன் நிரந்தரமாக இருப்பான். (அல்குர்ஆன் : 4 ; 93)

 

இரண்டாவது, கொலை என்பது அடியார்களோடு சம்மந்தப்பட்ட விஷயமாகும். அடியார்களுக்குரிய கடமைகளில் அநீதம் இழைத்தால் அந்த சம்பந்தப்பட்ட நபர் மன்னிக்காத வரை இறைவன் மன்னிப்பதில்லை. அந்த வகையில் பார்க்கின்ற போது, கொலை செய்யப்பட்டவரிடத்தில் மன்னிப்பு கேட்பதற்கான வாய்ப்பு இல்லை. ஏனென்றால் அவர் போய் விட்டார். எனவே அவரிடத்தில் மன்னிப்பு கேட்க முடியாத சூழ்நிலை இருப்பதினாலும் அல்லாஹ் அவருக்கு நிரந்தர நரகம் என்று கூறி இருப்பதினாலும் அவருடைய தவ்பா ஏற்றுக் கொள்ளப்படாது என்று கூறுகிறார்கள்.

ஆனால் பெரும்பான்மையான மார்க்க அறிஞர்கள், கொலை செய்தவனுடைய தவ்பா ஏற்றுக்கொள்ளப்படும். ஏனென்றால் பாவங்களிலேயே மிகக் கடுமையானது அல்லாஹ்வுக்கு இணை வைப்பது. ஆனால் அவ்வாறு இணை வைத்த எத்தனையோ பேர் திருந்தி  கலிமாவைச் சொல்லி இஸ்லாத்தில் நுழைந்த பொழுது அவர்களை அல்லாஹ் மன்னித்து இருக்கிறான். இணைவைப்பை விட கொலை என்பது குறைந்த குற்றம் தான். எனவே அதற்கும் தவ்பா கிடைக்கும் என்று கூறுகிறார்கள். அந்த ஆயத்தில் நிரந்தர நரகம் என்று அல்லாஹ் குறிப்பிட்டது அந்த கொலைக் குற்றத்தின் விபரீதத்தை அதனுடைய ஆபத்தையும் மக்களுக்கு சொல்லி அது மிகப்பெரிய பாவம் என்பதை உணர்த்துவதற்காக சொன்னதாகவும். அதேபோன்று கொலை செய்யப்பட்டவர் சென்று விட்டாலும் அவருடைய பிள்ளைகள், அவருடைய மனைவி, அல்லது அவருடைய பெற்றோர்களிடத்தில் அதற்கான மன்னிப்பைத் தேட வேண்டும். அதற்குரிய நஷ்ட ஈட்டையும் செலுத்த வேண்டும் என்று கூறுகிறார்கள். ஒருவேளை அவர்களிடத்திலே சென்று மன்னிப்பு கேட்க வில்லை என்றாலோ அல்லது நஷ்ட ஈட்டை வழங்க வில்லை என்றாலோ மறுமையில் இவருடைய நன்மையிலிருந்து எடுத்து அல்லாஹ் அவருக்கு தந்து விடுகிறான்.

أتدرون من المفلس؟ قالوا: المفلس فينا من لا درهم له ولا متاع. فقال: إن المفلس من أمتي، من يأتي يوم القيامة بصلاة وصيام وزكاة، ويأتي وقد شتم هذا، وقذف هذا، وأكل مال هذا، وسفك دم هذا، وضرب هذا، فيعطى هذا من حسناته، وهذا من حسناته، فإذا فنيت حسناته، قبل أن يقضي ما عليه، أخذ من خطاياهم فطرحت عليه، ثم طرح في النار

ஒரு முறை நபி அவர்கள், (மக்களிடம்) திவாலாகிப் போனவன் யார் என்று உங்களுக்குத் தெரியுமா?’ என்று கேட்டார்கள்.அங்கு கூடியிருந்த மக்கள், ‘யாரிடம் வெள்ளிக்காசோ, பொருட்களோ இல்லையோ அவர் தான் எங்களைப் பொறுத்த வரை திவாலானவர்என்று பதிலளித்தார்கள். இதற்கு நபிகளார் இவ்வாறு பதில் அளித்தார்கள் :

என் சமுதாயத்தாரில் திவாலாகிப்போனவர் ஒருவராவார்.அவர் மறுமை நாளில் தொழுகை, நோன்பு, ஜகாத் ஆகியவற்றுடன் வருவார். (அந்நேரத்தில்) அவர் ஒருவரை திட்டியிருப்பார்; ஒருவர் மீது அவதூறு சொல்லியிருப்பார்; ஒருவரின் பொருளை (முறைகேடாக) புசித்திருப்பார்; ஒருவரை அடித்திருப்பார்.

ஆகவே, அவருடைய நன்மைகளில் இருந்து சிலவற்றை பாதிக்கப்பட்டவருக்கு கொடுக்கப்படும். இன்னும் சிலவற்றை மற்றவருக்கு கொடுக்கப்படும். அவருடைய நன்மைகளில் இருந்து எடுத்து கொடுப்பதற்கு முன் நன்மைகள் தீர்ந்து விட்டால், (அவரால் பாதிக்கப்பட்ட) மக்களின் பாவங்களில் இருந்து சிலவற்றை எடுக்கப்பட்டு, இவர் மீது போடப்படும். பிறகு அவர் நரக நெருப்பில் தூக்கி எறியப்படுவார். முஸ்லிம் 5037).

 

இதன் தொடரை இன்ஷா அல்லாஹ் நாளைப் பார்க்கலாம்....

No comments:

Post a Comment