عن أبي هريرة أن رسول الله ﷺ قال: يقول الله تعالى: ما لعبدي المؤمن
عندي جزاء إذا قبضت صفيه من أهل الدنيا ثم احتسبه إلا الجنة
முஃமினான என் அடியானுக்கு உலக மக்களில் பிரியமானவரை நான் கைப்பற்றி, பின்பு அவன் பொறுமையாக இருந்து நன்மையை எதிர் பார்த்திருந்தால் அவனுக்கு என்னிடம் கூலி சொர்க்கத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை என்று அல்லாஹ் கூறுகிறான். (புகாரி ; 6424)
இது ஹதீஸே குதுஸியாவும். இந்த நேரத்தில் ஹதீஸே
குதுஸிக்கும் குர்ஆனுக்கும் இடையே இருக்கிற வித்தியாசத்தை புரிந்து கொள்ள வேண்டும்.
குர்ஆன் என்பது ஓதப்படக்கூடியது.ஹதீஸே குதுஸி ஓதப்படக்கூடியதல்ல. குர்ஆன் அதன் ஒரு
எழுத்துக்கு 10 நன்மைகள் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
ஹதீஸே குதுஸிக்கு அவ்வாறு சொல்லப்பட வில்லை. குர்ஆன் மனனம் இடப்படுகிறது. ஹதீஸே
குதுஸி அவ்வாறு மனனம் இடப்படுவதில்லை. குர்ஆன் தொழுகையில் ஓதப்படுகிறது. ஹதீஸே
குதுஸி அவ்வாறு தொழுகையில் ஓதப்படுவதில்லை. குர்ஆன் ஒரு புள்ளி கூட மாறாமல் இன்றைக்கு
வரைக்கும் பாதுகாக்கப்படுகிறது.ஆனால் ஹதீஸே குதுஸிக்கு குர்ஆனுக்கு இருப்பதைப் போன்று
முழுமையான பாதுகாப்பு இல்லை. இது தான் அவ்விரண்டுக்கும் இடையே உள்ள வித்தியாசம் ஆகும்.
பொதுவாக மனிதனுக்கு ஒரு சோதனை வருகின்ற பொழுது முதலில்
பொறுமையை கொள்ள வேண்டும். பின்பு அந்த பொறுமைக்கு இறைவனிடத்தில் கூலியை எதிர் பார்க்க
வேண்டும். சோதனையின் போது இவ்விரண்டும் இருந்தால் அது உயர்ந்த அந்தஸ்தை பெற்றுத் தரும
ثُمَّ يُنَادِي مُنَادٍ: أَيْنَ أَهْلُ
الصبر؟ فيتقدم نَاسٌ، وَهُمْ يَسِيرٌ، فَيَنْطَلِقُونَ إِلَى الْجَنَّةِ سراعاً، قال:
فتلقاهم الْمَلَائِكَةُ، فَيَقُولُونَ: إِنَّا نَرَاكُمْ سِرَاعًا إلى الجنة، فمن أَنْتُمْ؟
فَيَقُولُونَ: نَحْنُ أَهْلُ الصَّبْرِ فَيَقُولُونَ: وَمَا صَبْرُكُمْ؟ فَيَقُولُونَ:
كُنَّا نَصْبِرُ عَلَى طاعة الله تعالى، وَكُنَّا نَصْبِرُ عَنْ معاصي الله عز وجل،
فَيُقَالُ لَهُمُ: ادْخُلُوا الْجَنَّةَ فَنِعْمَ أَجْرُ الْعَامِلِينَ
மறுமையில் பொறுமையாளிகள் எங்கே என்று ஒரு அழைப்பாளர்
அழைப்பார். அப்போது ஒரு சில மக்கள் முன் வந்து சொர்க்கத்தை நோக்கி வேகமாக செல்வார்கள்.
வானவர்கள் அவர்களை சந்தித்து வேகமாக சொர்க்கத்தை நோக்கி சொல்கிறீர்களே நீங்கள் யார்
என்று கேட்பார்கள். நாங்கள் பொறுமையாளர்கள் என்று அவர்கள் சொல்வார்கள். நீங்கள் எதில்
பொறுமையாக இருந்தீர்கள் என்று வானவர்கள் கேட்கின்ற பொழுது, அல்லாஹ்வை வழிபடுவதின் பாவத்தை
விடுவதின் மீதும் நாங்கள் பொறுமையாக இருந்தோம் என்று அவர்கள் கூறுவார்கள்.
اء عن ابن مسعود لما دخل عليه بعض أصحابه فرأوا صِبْية عنده وغلاماناً
كالدنانير، يعني: بحسنهم، وبهائهم، ونضارتهم، فجعلوا ينظرون إليهم، فقال: "تنظرون
إليهم؟ والله إني لأتمنى موتهم
இப்னு மஸ்வூத் ரலி அவர்களை சந்திப்பதற்காக அவர்களின்
தோழர்களில் சிலர் வந்தார்கள். அப்போது அவர்கள் வீட்டில் அழகான தோற்றத்தையுடைய முகப்பொலிவு
மிக்க குழந்தைகள் இருந்தார்கள். வந்தவர்கள் அக்குழந்தைகளை மெய்மறந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
அப்போது இப்னு மஸ்வூத் ரலி அவர்கள், இவர்கள் மரணிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்
என்றார்கள்.
قال عمر بن عبد العزيز لابنه عبد الملك:
يا بني، والله إني لأحب أن تموت قبلي لأحتسبك، فقال: والله ما بي كراهة لما تحب يا
أبت
ஒரு நாள் உமர் பின் அப்துல் அஜீஸ் அவர்கள் தன் மகனிடத்தில் எனது அருமை மகனே எனக்கு
முன்னால் நீ மரணிக்க வேண்டும் என்று நான் பிரியப்படுகிறேன். அதன் மூலம் பொறுமையாக இருந்து
நன்மையை எதிர்பார்த்து இறைவனிடத்தில் சுவனத்தை பெற வேண்டும் என்று நினைக்கிறேன் என்று
சொன்ன பொழுது, அவர்களின் மகன், அருமை தந்தையே அது தான் உங்களின் விருப்பம் என்றால்
அதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று கூறினார்.
தனக்கு பிரியமான ஒருவரை இறைவன் அழைக்கின்ற பொழுது
அந்த நேரத்தில் பொறுமையை மேற் கொண்டு இறைவனிடத்தில் நன்மையை எதிர்பார்க்கின்ற பொழுது
அதன் மூலம் சொர்க்கத்தை தருவதாக இறைவன் வாக்களித்த காரணத்தினால் தான் அவர்கள் அவ்வாறு
தனக்கு முன்னால் தன் குழந்தைகள் மரணிக்க வேண்டும் என்று விரும்பி இருக்கிறார்கள். அத்தகைய
ஈமானும் மன உறுதியும் நம்மிடம் இல்லை அவர்கள் ஆசைப்பட்டதைப் போன்று நம்மில் யாரும்
ஆசைப்பட மாட்டோம். இருந்தாலும் இது மாதிரியான சோதனைகளை சந்திக்கின்ற பொழுது மனம் தளர்ந்து
விடாமல் பொறுமையை மேற் கொண்டு அதற்கு இறைவனிடத்தில் நன்மையை எதிர் பார்க்க வேண்டும்.
அதற்கு அல்லாஹ்விடத்தில் மக்கத்தான கூலி இருக்கிறது.
No comments:
Post a Comment