Pages

Pages

Thursday, November 25, 2021

உண்மையான வெற்றி எது

 உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனின் குறிக்கோலும் ஒரு வெற்றியை நோக்கியே இருக்கிறது.அந்த வெற்றியைப் பெறுவதற்கு அதை ருசிப்பதற்கு அதை தனதாக்கிக் கொள்வதற்கு ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு விஷயத்தை கையாளுகிறான்.அந்த விஷயத்தையே வெற்றிக் கான படிக்கட்டாக அமைத்துக் கொள்கிறான்.அந்த வெற்றியை வெகு சீக்கிரம் அடைந்து கொள்வதற்காக பல்வேறு முயற்சிகளை செய்கிறான். பல்வேறு அர்பணிப்புகளை செய்கிறான்.அதை நோக்கியே தன் வாழ்க்கைப் பயணத்தை அமைத்துக் கொள்கிறான்.

வாழ்வில் வெற்றியைப் பெறுவதற்காக போராடும் அப்போராட்டத்தில் சிலர் வெற்றிக் கனியைப் பறித்து விடுகிறார்கள்.சிலர் அதில் தோற்றுப் போகிறார்கள்.

வியாபாரத்தின் மூலம் வாழ்வில் வெற்றி பெறலாம் என்று சிலர் முயற்சிக்கிறார்கள்,பாடுபடுகிறார்கள்,அதற்காக கடுமையாக உழைக்கிறார் கள்.அதில் ஒரு சிலர் வெற்றி பெறுகிறார்கள்.சிலர் அதில் தோல்வியைத் தழுவுகிறார்கள்.

கல்வியின் மூலம் வெற்றி பெறலாம் என்று சிலர் முயலுகிறார்கள், பாடுபடுகிறார்கள்,அதற்காக தன் நேரங்களை செலவழிக்கிறார்கள்.அதில் சிலருக்கு வெற்றி கிட்டுகிறது.சிலருக்கு தோல்வி தான் கிடைக்கிறது.

தங்களிடம் இருக்கும் திறமைகளின் மூலம் வாழ்வில் ஜொலிக்கலாம் என்று சிலர் ஆசைப்படுகிறார்கள்.அதற்கான முயற்சியில் இறங்குகிறார்  கள்.சிலருக்கு அத்திறமைகள் பயன் தருகிறது.சிலருக்கு பயனற்றுப் போய் விடுகிறது.

ஆட்சி அதிகாரத்தைக் கொண்டு சமூகத்தில் தங்களுக்கென்று ஒரு இடத்தை நிறுவி விட வேண்டும் என்று சிலர் நினைத்து அதற்காக தன் நேரங்களை பொருளையும் செலவழிக்கிறார்கள்.சிலருக்கு அது கை கொடுக்கிறது.சிலருக்கு அவர்களின் கால்களை வாறிவிடுகிறது.

இப்படி மனிதர்கள் உலகில் வெற்றி பெறுவதற்காக சமூகத்தில் ஒரு அங்கீகாரத்தைப் பெறுவதற்காக கையாளுகிற விஷயங்கள் நிறைய உண்டு.

இதுவெல்லாம் உலகத்தில் மனிதர்கள் பெறக்கூடிய வெற்றிகள்.ஆனால் இஸ்லாமிய பார்வையில் குர்ஆன்,ஹதீஸின் மொழியில் இதுவெல்லாம் உண்மையான வெற்றியல்ல.பணம்,கல்வி,திறமை,ஆட்சி இவைகளைக் கொண்டு கிடைப்பது உண்மையான வெற்றியல்ல.பணம் உண்மையில் வெற்றியைத்தரும் என்றால் காரூன் வெற்றி பெற்றிருக்க வேண்டும். அறிவு வெற்றியைத்தரும் என்றால் இப்லீஸ் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.ஆட்சி அதிகாரம் வெற்றியைத்தரும் என்றால் ஃபிர்அவ்னுக்கு வெற்றி கிடைத்திருக்க வேண்டும்.எனவே இவைகள் உண்மையான வெற்றிக்கான படிக்கட்டுகள் அல்ல.

அப்படியானால், உண்மையான வெற்றி எது உண்மையான வெற்றியாளர் கள் யார் என்பதை குர்ஆன் நமக்கு தெளிவுபடுத்துகிறது.

فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ

நரகிலிருந்து ஈடேற்றம் பெற்று சுவனம் பிரவேசிப்பவர் தான் வெற்றி யாளர் என்று கூறுகிறான்.

இந்த வெற்றிக்கான வழியை பின் வரும் வசனத்தில் குறிப்பிடுகிறான்.

فَمَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ  23/102) وَمَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُولَئِكَ الَّذِينَ خَسِرُوا أَنْفُسَهُمْ فِي جَهَنَّمَ خَالِدُونَ

நாம் புரியும் நன்மைகள் தான் வெற்றிக்கான வழி என்று இவ்வசனம் நமக்கு தெளிவுபடுத்துகிறது.

குர்ஆனில் இன்னொரு இடத்தில் அல்லாஹுத்தஆலா மனிதனின் உண்மையான வெற்றி குறித்து பதிவு செய்திருக்கிறான்.

وَالْعَصْرِ (1) إِنَّ الْإِنْسَانَ لَفِي خُسْرٍ (2) إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ وَتَوَاصَوْا بِالصَّبْرِ (3)

குர்ஆனிலுள்ள சூராக்களில் மிகச்சிறந்த கருத்தாழமிக்க சூராக்களில் இதுவும் ஒன்று.

قال الامام الشافعي : انها سورة لو لم ينزل الي الناس الا هي لكفتهم

குர்ஆனில் வேறு எந்த சூராவையும் இறக்காமல் இந்த ஒரு சூராவை மட்டும் அல்லாஹ் இறக்கியிருந்தாலும் இது ஒன்றே போதுமானதாக இருக்கும் என்று இமாம் ஷாஃபிஈ ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.

ولما سمع الاصمعي في سوق بغداد ذلك البائع يقول وينادي يدلل على بضاعته “ايها الناس ارحموا من يذوب رأس ماله” يقول الاصمعي فقلت والله لاذهبن لارى ماذا يبيع الرجل فوجده يبيع قوالب الثلج التي هي رأس ماله وان لم يبعها في وقتها فان رأس ماله سيضيع ويخسر ، فقال الاصمعي عندها فهمت معنى قول الله تعالى : (والعصر ان الانسان لفي خسر الا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر)  أي ان الانسان يخسر كل يوم بعض عمره 

பக்தாது நகரத்தின் கடைவீதியில் ஒரு வியாபாரி மக்களே! மூலதனம் உருகிக் கொண்டிருக்கிற ஒருவருக்கு நீங்கள் இரக்கம் காட்டுங்கள் என்று சப்தமிட்டு வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அவர் அப்படி என்ன வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார் என்று இஸ்மயீ ரஹ் அவர்கள் பார்த்தார்கள். அவர் ஐஸ்கட்டியை வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அதைப் பார்த்த பிறகு தான் இந்த சூராவுடைய அர்த்தம் எனக்கு புரிந்தது. அதாவது காலம் என்பது ஐஸ்கட்டியைப் போன்றது. ஐஸ் கட்டி அதை பயன்படுத்தினாலும் பயன்படுத்தா விட்டாலும் கரைந்து போய்விடும். அதேபோன்று காலமும் நேரமும் அதை பயன்படுத்தினாலும் பயன்படுத்தா விட்டாலும் நம்மை விட்டும் சென்று விடும். ஐஸ் கட்டி கரைவதற்கு முன்பு அதை விற்று விட்டால் அதைக்கொண்டு லாபம் பெற முடியும். அதே போன்று காலமும் நேரமும் நம்மை விட்டு கடந்து போவதற்குள் அதை சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டால் அதைக்கொண்டு வெற்றியைப் பெறலாம் என்று இஸ்மயீ ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.

எனவே உலகம் என்பது அழியக்கூடியது.காலம் கரையைக்கூடியது. அழியக்கூடிய கரைந்து போகக்கூடிய இவ்வுலகத்தில் எதுவும் நிரந்தரமல்ல.இங்கே கிடைப்பது எதுவும் உண்மையான வெற்றியல்ல. நமக்கு உண்மையான வெற்றி மறுமையின் தயாரிப்பாக இருக்கிற நல்லமல்கள் தான்.

நமது வாழ்வின் குறிக்கோலும் இலக்கும் மறுமையும் அதன் தயாரிப்பாக இருக்கிற நல்லமல்களும் தான்.இவ்வுலகம் என்பது சந்தர்ப்ப சூழ்நிலைக்காக பயன்படுத்தும் இடம் தானே தவிர இது அஸல் அல்ல.

உலகம் இறைவனின் சந்தை மடம்.இங்கு வருவோரும் போவோரும் தங்குமிடம்.இதுவல்ல நமக்கு சொந்த இடம்.அங்கு இருக்குது வேறு புதிய இடம் என்று கவிஞர் ஒருவரின் பாடல் இங்கே மிகப் பொருத்தமாக இருக்கும்.

أخَذ رسولُ اللهِ صلَّى اللهُ عليه وسلَّم بمَنكِبي فقال : ( كُنْ في الدنيا كأنك غريبٌ أو عابرُ سبيلٍ ) . وكان ابنُ عُمرَ يقولُ : إذا أمسيْتَ فلا تنتَظِرِ الصباحَ، وإذا أصبحْتَ فلا تنتظِرِ المساءَ، وخُذْ من صحتِك لمرضِك، ومن حياتِك لموتِك

الراوي: عبدالله بن عمر المحدث: البخاري  -المصدر: صحيح البخاري - الصفحة أو الرقم: 6416

நபி ஸல் அவர்கள் என்னுடைய தோளைப் பிடித்துக்கொண்டு உலகத்திலே நீ ஒரு வழிப்போக்கனைப் போல இரு என்றார்கள். இப்னு உமர் ரலி அவர்கள் மாலையில் நீ இருந்தால் காலை நேரம் வரும் என்று எதிர்பார்க்காதே காலையில் நீ இருந்தால் மாலை நேரம் வரும் என்று எதிர்பார்க்காதே. நோய் வருவதற்குள் உன்னுடைய ஆரோக்கியத்தை நீ பயன்படுத்திக் கொள். மரணம் வருவதற்குள் உனக்கு தரப்பட்டு இருக்கிற வாழ்க்கையை பயன்படுத்திக் கொள் என்றார்கள். புகாரி (6416)

ஒருவன் ஒரு இலக்கை மனதில் எண்ணிக் கொண்டு வெகு தூரம் பயணிக் கிறான்.பயணத்தின் இடையில் தங்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. எனவே அதற்கான ஏற்பாடுகளை செய்து தங்குகிறான்.அதற்கான சௌகரீகங்களை அமைத்துக் கொள்கிறான் என்றால்,அவன் தங்கி விட்டு அங்கிருந்து அவனின் இலக்கை நோக்கி கிழம்பி விட வேண்டும்.அங்கே தங்குவதற்கு நல்ல வசதியாக இருக்கிறது என்று அங்கேயே தங்க நினைத்தால் அவனை விட மிக முட்டாள் வேறு யாரும் இருக்க முடியாது. அவன் இலக்கையும் அடைய முடியாது.அதே போன்று தான் நமக்கும் இவ்வுலகம்.சந்தர்ப்பத்திற்காக இங்கே தங்குகிறோம்.அதற்காக வீண் விரயமில்லாமல் ஆடம்பரமில்லாமல் எல்லா வசதிகளையும் செய்து கொள்ளலாம். தவறில்லை.ஆனால் இதையே அஸல் என்று நினைத்து மறுமையை மறந்து விட்டால் நாம் நஷ்டமடைந்து விடுவோம்.

இன்றைக்கு நாம் உலகில் சம்பாதிக்கிற விஷயங்கள் தான் நமது சேமிப்பு என்று தப்புக்கணக்கு போட்டுக் கொண்டிருக்கிறோம்.ஆனால் உண்மையான சேமிப்பு எதுவென்று நாயகம் ஸல் அவர்கள் கூறுகிறார்கள்.

أنهم ذَبَحُوا شاةً فقالَ النبيُّ صلَّى اللهُ عليه وسلَّمَ ما بَقِيَ منها ؟ قلْتُ : ما بَقِيَ منها إلَّا كَتِفُها . قال : بَقِيَ كلُّها غيرُكَتِفِها

ஆயிஷா ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள் ; ஒரு நாள் ஆடு ஒன்று அறுக்கப்பட்டு பங்கு வைத்து கொடுக்கப்பட்டது. மீதம் என்ன இருக்கிறது என்று நபி ஸல் அவர்கள் கேட்டார்கள். அதன் சப்பை மட்டும் மீதம் உள்ளது என்று நான் சொன்னேன்.இல்லை, அந்த ஒரு சப்பையைத் தவிர அனைத்தும் மீதம் உள்ளது என்றார்கள். திர்மிதி (2470)

எனவே எதை நாம் நம் மறுமை வாழ்விற்காக அனுப்பினோமோ அது தான் நம்முடைய உண்மையான சேமிப்பாகும். அது தான் நமக்கு பயன் தரக்கூடியதாகும்.

நாம் இன்றைக்கு சம்பாதிக்கிற சம்பாத்தியம் சேர்த்து வைக்கிற பொருளாதாரம் அனைத்தும் நம் மரணம் வரை நமக்கு பயன் தரலாம். ஆனால் நம் மரணத்திற்கு பின் மறுமை வரை நமக்கு கை கொடுப்பது நாம் செய்யும் நல்லறங்கள் தான்.

عن أَنَس بْن مَالِكٍ ، قال: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : ( يَتْبَعُ المَيِّتَ ثَلاَثَةٌ ، فَيَرْجِعُ اثْنَانِ وَيَبْقَى مَعَهُ وَاحِدٌ : يَتْبَعُهُ أَهْلُهُ وَمَالُهُ وَعَمَلُهُ ، فَيَرْجِعُ أَهْلُهُ وَمَالُهُ وَيَبْقَى عَمَلُهُ )

ஒரு மய்யித்தை அவனுடைய குடும்பம் அவனுடைய பொருளாதாரம் அவனுடைய அமல் இம்மூன்று விஷயங்களும் பின் தொடர்ந்து செல்லும். இதில் அவனுடைய குடும்பமும் அவனுடைய பொருளாதாரமும் திரும்பி விடும். அவன் செய்த அமல் மட்டும் அவனோடு தங்கி விடும். புகாரி (6514)

எனவே வியாபாரத்திலும் தொழிலிலும் அதிக அக்கரையும் கவனமும் செலுத்துகிற நாம் நற்காரியங்களிலும் கவனம் செலுத்த வேண்டும்.

அருமை நாயகம் ஸல் அவர்களின் கண்கானிப்பில் வளர்ந்த அவர்களின் பாசரையில் வார்த்தெடுக்கப்பட்ட ஸஹாபாக்கள் அனைவரும் அமல்களில் தான் வெற்றி என்பதை உண்ர்ந்திருந்தார்கள்.அதனால் அமல்களில் அதிக கவனம் செலுத்தினார்கள் மட்டுமல்ல,  அதில் ஒருவருக் கொருவர் போட்டி போடுபவர்களாக இருந்தார்கள்.

இன்றைக்கு பெண் பிள்ளைகள் வெறுக்கிற காலமாக இருக்கிறது. ஆனால் நபி ஸல் அவர்கள் பெண் பிள்ளைகளை வளர்ப்பது கூற்றி கூறினார்கள்.

جابر بن عبد الله ـ رضي الله عنه ـ أن النبي ـ صلى الله عليه وسلم ـ قال: ( مَن كان له ثلاثُ بناتٍ يُؤدِّبُهنَّ ويرحَمُهنَّ ويكفُلُهنَّ وجَبَت له الجنَّةُ ألبتةَ، قيل يا رسولَ اللهِ: فإن كانتا اثنتينِ؟، قال: وإن كانتا اثنتين، قال: فرأى بعضُ القوم أن لو قال: واحدةً، لقال: واحدة ) رواه أحمد وصححه الألباني 

யாருக்கு மூன்று பெண் பிள்ளைகள் இருந்து அம்மூவர்களையும் ஒழுக்கமாக வளர்த்து அவர்களின் மீது கிருபை கொண்டு அவர்களின் அனைத்து காரியங்களுக்கும் பொறுப்பேற்றுக் கொள்கிறாரோ அவருக்கு நிச்சயம் சொர்க்கம் உண்டு என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள். இரண்டு இருந்தால் என்று கேட்கப்பட்டது இரண்டு இருந்தாலும் சொர்க்கம் உண்டு என்றார்கள். ஒன்று இருந்தால் என்று கேட்கப்பட்ட போது ஒன்று இருந்தாலும் சொர்க்கம் உண்டு என்றார்கள். (அஹ்மது)

இதற்கு பிறகு ஸஹாபாக்களுக்கு மத்தியில் பெண் பிள்ளைகளை வளர்ப்பதில் போட்டி உருவானது.

لما اعتمر النبيُّ صلَّى اللهُ عليهِ وسلَّمَ في ذي القَعدةِ، فأبى أهلُ مكةَ أن يدَعوهُ يدخلُ مكةَ، حتى قاضاهم على أنْ يقيمَ بها ثلاثةَ أيامٍ، فلما كتبوا الكتابَ، كتبوا : هذا ما قاضى عليه محمدٌ رسولُ اللهِ، قالوا : لا نُقرُّ لك بهذا، لو نعلم أنكَ رسولُ اللهِ ما منعناكَ شيئًا، ولكن أنتَ محمدٌ بنُ عبدِ اللهِ . فقال : ( أنا رسولُ اللهِ، وأنا محمدٌ بنُ عبدِ اللهِ ) . ثم قال لعليِّ بن أبي طالبٍ رضي اللهُ عنهُ : ( امحُ رسولَ اللهِ ) . قالعليٌّ : لا واللهِ لا أمحوكَ أبدًا، فأخذ رسولُ اللهِ صلَّى اللهُ عليهِ وسلَّمَ الكتابَ، وليس يُحسنُ يكتبُ، فكتب : هذا ما قاضى عليهِ محمدٌ بنُ عبدِ اللهِ، لا يُدخلُ مكةَ السلاحَ إلا السيفَ في القِرابِ، وأن لا يخرجَ منْ أهلها بأحدٍ إن أراد أنْ يتبعَهُ، وأن لا يمنعَ مِن أصحابِهِ أحدًا إن أراد أن يُقيم بها . فلما دخلها ومضى الأجلُ أتوا عليًّا، فقالوا : قلْ لصاحبِكَ : اخرُجْ عنا، فقد مضى الأجلُ . فخرج النبيُّ صلَّى اللهُ عليهِ وسلَّمَ، فتبعتْهُ ابنةُ حمزةَ، تنادي : يا عمُّ يا عمُّ، فتناولهَا عليٌّفأخذ بيدِها وقال لفاطمةَ عليها السلامُ : دونكِ ابنةَ عمِّكِ احمِليها، فاختصم فيها عليٌّ وزيدٌ وجعفرُ، قال عليٌّ : أنا أخذْتُها، وهي بنتُ عمّي . وقال جعفرُ : ابنةُ عمِّي وخالتُها تحتي . وقال زيدٌ : ابنةُ أخي . فقضى بها النبيُّ صلَّى اللهُ عليهِ وسلَّمَ لخالَتِها، وقال : ( الخالةُ بمنزلةِ الأمِّ ) . وقال لعليٍّ : ( أنت مني وأنا منكَ ) . وقال لجعفرَ : ( أشبهْتَ خلْقي وخُلُقي ) . وقال لزيدٍ : ( أنت أخونا ومولانا ) . وقال عليٌ : ألا تتزوجُ بنتَ حمزةَ ؟ قال : ( إنها ابنةُ أخي منَ الرَّضاعةِ

நபி ஸல் அவர்கள் மக்காவை விட்டு வெளியேறினார்கள். அப்போது உஹத் போரில் கொல்லப்பட்டிருந்த ஹம்ஸா ரலி அவர்களின் மகள் என் சிறிய தந்தையே என் சிறிய தந்தையே என்று கூவிக்கொண்டே நபி ஸல் அவர்களை பின் தொடர்ந்து வந்தாள். அலி ரலி அவர்கள் அச்சிறுமியை பரிவோடு எடுத்து அவருடைய கையைப் பிடித்தார்கள். பாத்திமா ரலி அவர்களிடம் அழைத்து வந்து இவளை எடுத்துக்கொள். இவள் உன் தந்தையின் சகோதரருடைய மகள் என்று கூறினார்கள். அச்சிறுமியின் விஷயத்தில் அலி ரலி அவர்களும் ஜைத் பின் ஹாரிஸா ரலி அவர்களும் ஜாபர் ரலி அவர்களும் ஒவ்வொருவரும் அவளை நான் தான் வளர்ப்பேன் என்று போட்டியிட்டுக் கொண்டார்கள். அலி ரலி அவர்கள், நானே இவளுக்கு மிகவும் உரிமை உடையவன். ஏனெனில் இவள் என் சிறிய தந்தையின் மகள் என்று கூறினார்கள். ஜாபிர் ரலி அவர்கள், இவள் என் சிறிய தந்தையின் மகள். மேலும் இவளுடைய சிறிய தாயார் என் மனைவி ஆவார்கள் என்று கூறினார்கள். ஜைத் ரலி அவர்கள், இவள் நபியவர்கள் ஏற்படுத்திய சகோதரத்துவத்தின் மூலம் வந்த என் சகோதரியின் மகள் என்று கூறினார்கள். நபி ஸல் அவர்கள் அச்சிறுமியின் சிறிய தாயிக்கு சாதகமாக ஜாபர் அலி அவர்கள் அச்சிறுமியை வளர்க்கட்டும் என்று தீர்ப்பளித்தார்கள். சிறிய தாயார் தாயின் அந்தஸ்தில் இருக்கிறாள் என்றும் கூறினார்கள். பிறகு அலி ரலி அவர்களை நோக்கி நீங்கள் என்னைச் சார்ந்தவர். நான் உங்களை சார்ந்தவன் என்று ஆறுதலாக கூறினார்கள். ஜாபர் அலி அவர்களை நோக்கி நீங்கள் தோற்றத்திலும் குணத்திலும் என்னைப் போன்று இருக்கிறீர்கள் என்று கூறினார்கள். ஜைத் ரலி அவர்களை நோக்கி நீங்கள் என் சகோதரர் என் அடிமை என்று கூறினார்கள். (புகாரி ; 4251)

இதுமட்டுமல்ல மற்ற எல்லா அமல்களிலும் அவர்களுக்கு மத்தியில் போட்டி நிலவியது.

ذهب أهلُ الدُّثورِ بالدرجاتِ العُلى والنعيمِ المُقيمِ . فقال " وما ذاك ؟ " قالوا : يُصلُّون كما نُصلِّي . ويصومون كما نصومُ . ويتصدَّقون ولا نتصدَّقُ . ويعتِقون ولا نعتِقُ . فقال رسولُ اللهِ صلَّى اللهُ عليه وسلَّمَ " أفلا أُعلِّمكم شيئًا تُدركون به مَن سبقَكم وتَسبقون به من بعدكم ؟ ولا يكون أحدٌ أفضل منكم إلا من صنع مثلَ ما صنعتُم " قالوا : بَلى : يا رَسولَ الله ! قال"ُتُسبِحونَ وَتُكَبِرُونَ وَتُحَمِدونَ ، دُبُرَ كلِّ صلاةٍ ، ثلاثًا وثلاثين مرةً " . قال أبو صالحٍ : فرجع فقراءُ المهاجرين إلى رسولِ اللهِ صلَّى اللهُ عليه وسلَّمَ . فقالوا : سمِع إخوانُنا أهلُالأموالِ بما فعَلْنا . ففعلوا مثلَه . فقال رسولُ اللهِ صلَّى اللهُ عليه وسلَّمَ " ذلك فضلُ اللهِ يُؤتيه مَن يشاءُ

ஏழைகள் (சிலர்) நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "செல்வச் சீமான்கள் உயர்வான பதவிகளையும் நிலையான இன்பங்களையும் (தட்டிக்)கொண்டு போய் விடுகின்றனர். நாங்கள் தொழுவது போன்றே அவர்களும் தொழுகின்றனர். நாங்கள் நோன்பு நோற்பது போன்றே அவர்களும் நோன்பு நோற்கின்றனர். ஆயினும் தங்களது அதிகப்படியான செல்வங்கள் மூலம் அவர்கள் ஹஜ் செய்கின்றனர்; உம்ரா செய்கின்றனர்; அறப்போருக்காக செலவளிக்கின்றனர்; தான தர்மம் செய்கின்றனர். (ஏழைகளாகிய எங்களால் இவற்றைச் செய்ய முடிவதில்லையே)'' என்று கூறினர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "நான் உங்களுக்கு ஒன்றைத் தெரிவிக்கட்டுமா? அதை நீங்கள் கடைப்பிடித்தால் (இந்த சமுதாயத்தில்) உங்களை முந்திவிட்ட (செல்வர்)வர்களையும் நீங்கள் பிடித்து விடலாம். உங்களுக்குப் பின்னால் வரும் எவராலும் உங்களை பிடிக்க இயலாது. நீங்கள் எந்த மக்களிடையே வாழ்கிறீர்களோ அவர்களில் சிறந்தவர்கள் ஆவீர்கள். உங்களைப் போன்று மற்றவரும் அதைச் செயல்படுத்தினால் தவிர (அவர்களாலும் அச்சிறப்பை அடைய முடியாது.) (அந்தக் காரியமாவது:) நீங்கள் ஒவ்வொரு (கடமையான) தொழுகைக்குப் பின்பும் 33 தடவை தஸ்பீஹ் (சுப்ஹானல்லாஹ்) சொல்லுங்கள்; 33 தடவை தஹ்மீத் (அல்ஹம்துலில்லாஹ்) கூறுங்கள்; 33 தக்பீர் (அல்லாஹு அக்பர்) சொல்லுங்கள்'' என்று கூறினார்கள். பிறகு அதே ஏழை முஹாஜிர்கள் நபியிடம் வந்து செல்வம் இருக்கிற அந்த மக்கள் நாங்கள் செய்வதை அறிந்து அவர்களும் அவ்வாறே செய்கிறார்கள் என்று சொன்னார்கள். அப்போது நபியவர்கள் அது அல்லாஹ்வின் அருளாகும். தான் நாடியவர்களுக்கு அதை அவன் தருகிறான் என்றார்கள். (முஸ்லிம் ; 595)

جِئنَ النِّساءُ إلى رسولِ اللَّهِ صلَّى اللَّهُ عليه وسلَّم فقلن: يا رسول اللَّهِ ذَهبَ الرِّجالُ بالفضلِ والجِهادِ في سبيلِ اللَّهِ فما لنا عملٌ ندرِكُ بِهِ عملَ المجاهدينَ في سبيلِ اللَّهِ فقالَ رسولُ اللَّهِ صلَّى اللَّهُ عليهِ وسلَّم: من قعدَ -أو كلمةً نحوَها-منْكُنَّ في بيتِها فإنَّها تدرِكُ عملَ المجاهدِ في سبيلِ اللَّهِ

 பெண்கள் நபியிடம் வந்து ஆண்கள் அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வதின் மூலம் அல்லாஹ்வின் அருளைப் பெற்று சென்று விடுகிறார்கள். எங்களுக்கும் அதைப் போன்ற அமல் எதுவும் இல்லை என்று சொன்னார்கள். அப்போது நபியவர்கள் உங்களில் ஒருவர் தன் வீட்டில் இருந்து கொண்டே போரில் கலந்து கொண்டவர்களின் நன்மையை அடைந்து கொள்வாள் என்றார்கள். (பஜ்ஜார் ; 339/13)

இந்த போட்டி நம்மிடமும் உருவாக வேண்டும்.அதில் தான் உண்மையான வெற்றியும் சுபிட்சமும் அடங்கியிருக்கிறது.அல்லாஹ் அருள் புரிவானாக

 

No comments:

Post a Comment