இஸ்லாமிய வருடத்தின் மூன்றாம் மாதமான ரபீவுல் அவ்வல் மாதம் நம்மை வந்தடைந்திருக்கின்றது. ரபீவுல் அவ்வல் மாதம் என்றாலே ஈமான் கொண்டவர்களின் இதயங்கள் ஆனந்தத்திலும் மகிழ்ச்சியிலும் துள்ளிக் குதிக்க ஆரம்பித்து விடும்.காரணம் அண்ணல் நபி ஸல் அவர்கள் இந்த மண்ணிற்கு வருகை தந்த மாதம் ரபூவுல் அவ்வல்.
பெருமானார் ஸல்
அவர்கள் நினைவுகூறப்படுகின்ற அவர்களின் அழகிய வாழ்க்கை வரலாறுகள் பேசப்படுகின்ற
அவர்களின் உயர்வான நற்பண்புகள் சிலாகித்துச் சொல்லப்படுகின்ற மாதம் இது. நபி ஸல்
அவர்கள் அவர்களின் வருகைக்கு முன்பும் பேசப்பட்டார்கள். வாழும் காலங்களிலும்
பேசப்பட்டார்கள்.இன்றும் பேசப்படுகிறாரகள். அழிவு நாள் வரை அவர்களைப் பற்றி உலகம்
பேசும்.இஸ்லாமியர்கள் மட்டுமல்ல, அனைத்து சமூகத்து மக்களும் பேசிக்
கொண்டிருக்கிறார்கள். அனைத்து மக்களாலும் பேசப்படுகின்ற உயர்வான வாழ்க்கையை
அல்லாஹ் அவர்களுக்கு வழங்கினான்.
أنَّ العاصَ
بْنَ وائِلٍ كانَ يَقُولُ: إنَّ مُحَمَّدًا أبْتَرُ لا ابْنَ لَهُ يَقُومُ
مَقامَهُ بَعْدَهُ، فَإذا ماتَ انْقَطَعَ ذِكْرُهُ واسْتَرَحْنا مِنهُ، وكانَ قَدْ
ماتَ ابْنُهُ عَبْدُ اللَّهِ مِن خَدِيجَةَ،
أَنَّ
الْأَبْتَرَ الَّذِي إِذَا مَاتَ انْقَطَعَ ذِكْرُهُ، فَتَوَهَّمُوا لِجَهْلِهِمْ
أَنَّهُ إِذَا مَاتَ بَنُوهُ يَنْقَطِعُ ذِكْرُهُ، وَحَاشَا وَكَلَّا بَلْ قَدْ
أَبْقَى اللَّهُ ذِكْرَهُ عَلَى رُءُوسِ الْأَشْهَادِ، وَأَوْجَبَ شَرْعَهُ عَلَى
رِقَابِ الْعِبَادِ، مُسْتَمِرًّا عَلَى دَوَامِ الْآبَادِ، إِلَى يَوْمِ
الْحَشْرِ
பெருமானார் ஸல்
அவர்களின் மகனார் அப்துல்லாஹ் ரலி சிறு பிராயத்தில் வஃபாத்தான போது அவர்
சந்ததியற்றவர். அவருக்கு பிள்ளைகள் இல்லை.அவரைப் பற்றி பேசுவதற்கு யாரும் இல்லை.
இத்தோடு அவரின் வாழ்க்கை முடிந்து விட்டது. இனிமேல் அவரைப் பற்றி நாம் கவலை
கொள்ளத் தேவையில்லை என்று மக்காவாசிகள் சொன்னார்கள். ஆண் மக்கள் இல்லையெனில்
ஒருவரின் வாழ்க்கை அத்தோடு முடிந்து விடும். வரலாற்றிலிருந்து மறைந்து போய் விடும்
என்று அவர்கள் கருதினார்கள். ஆனால் அல்லாஹ் அவர்களின் எண்ணங்களை தவிடுபொடியாக்கி
ஆண் மக்கள் இல்லா விட்டாலும் அவர்களின் பெயரை உலக அழிவு நாள் வரை நிலைக்கச் செய்து
விட்டான்.
இன்றைக்கு
பெருமானார் ஸல் அவர்கள் அனைவராலும் பேசப்படுகிறார்கள்.
புகழப்படுகிறார்கள்.அவர்களின் வாழ்வை வாசித்த ஆய்வு செய்த அனைத்து அறிஞர்களும்
புகழ்ந்துரைக்கிறார்கள்.
மைக்கேல் ஹெச்.
ஹார்ட் என்ற ஆய்வு வல்லுனர் உலகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய நபர்களில்,
முதலில் 1000 பேரை தேர்வு செய்தார். பின்பு
அதிலிருந்து 100 நபர்களை மட்டும் தேர்வு செய்தார்.அதில் முதலிடத்தை
நபிகள் நாயகம்ஸல்) அவர்களுக்கு கொடுத்தார்.பின்பு அதற்கான் காரணத்தையும்
குறிப்பிட்டார்.
இந்த உலகத்தில்
அளப்பரிய செல்வாக்குடன் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர்களின் பட்டியலில் முஹம்மது
அவர்களை முதலாமானவராகத் தேர்ந்தெடுத்தது வாசகர்களில் சிலருக்கு வியப்பாக
இருக்கும். மற்றும் சிலர் "ஏன் அப்படி?" என்று
வினாவும் தெடுக்கலாம். ஆனால் சமயம், உலகியல் ஆகிய
இரு நிலைகளிலும் ஒரு சேர மகத்தான வெற்றி பெற்றவர் வரலாற்றில்
அவர் ஒருவர் தான். எளிமையான வாழ்க்கைப் படியில் துவங்கிய அன்றைய உலகத்தின் பெரும்
கொள்கை ஒன்றை நிறுவி, அதனைப் பரப்பிய பேராற்றல் வாய்ந்த அரசியல்
தலைவர் அவர்கள். அவர்கள் உயிர் நீத்து பதினான்கு நூற்றாண்டுகளுக்குப் பின்னரும்
அவர்களின் தாக்கம் சக்தி மிக்கதாகவும், எல்லாத்
துறைகளிலும் பரவி நிற்கக்கூடியதாகவும் விளங்குகிறது.
மைக்கேல் ஹெச்.
ஹார்ட் சொன்னது நூற்றுக்கு நூறு
உண்மை.அவர்கள் இந்த மண்ணை விட்டு மறைந்து 14 நூற்றாண்டுகள் கடந்த போதிலும் அவர்கள்
ஏற்படுத்திய தாக்கம் இன்னும் மறைய வில்லை. இனி எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும்
மறையாது.காரணம் அவர்கள் உலக மக்களால் பின்பற்றப்படும் தலைவராக இருக்கிறார்கள்.
இந்த
துறைகளிலெல்லாம் முஹம்மது
நபி ஸல் அவர்கள் கருத்துக்களை கூறினார்கள் என்று ஒற்றை வரியில்
நகர்ந்து விட முடியாது. இத்துறைகள் அத்தனையும் அவர்கள் பரிசோதனை முயற்சிகளை செய்து
அதில் பெரும் வெற்றி கண்டார்கள் என்று சொன்னால் அது கூட அவர்களைப் பற்றிய முழு
அறிமுகமாகி விடாது. மாறாக அவர்கள் கொடுத்த அத்தனை சிந்தனைகளையும் வழிவழியாக காலம்
காலமாக பின் பற்றி நடக்கும் ஒரு சமூகத்தை உருவாக்கிச் சென்றார்கள், அந்த
சமூகம் இன்றளவும் மட்டுமல்ல இனி உலகம் வாழும் காலம் வரையும் அவர்களது சிந்தனைகளை,
ஆலோசனைகளை, உத்தரவுகளாக தலைமேற் கொண்டு செயல்படக் காத்திருக்கிறது.
பல
நூற்றாண்டுகளை கடந்து இன்றும் அவர்களைப் பற்றியும் அவர்கள் விட்டுச் சென்ற
தத்துவங்கள், நடைமுறைகள் குறித்தும் விவாதங்கள் தொடர்ந்து கொண்டிருப்பதை பத்திரிக்கைகளும்
தொலைக்காட்சிகளும் காட்சிப் படுத்திக் கொண்டிருக்கின்றன.
முஹம்மது நபி ஸல்
அவர்களுக்கும் உலகம் கொண்டாடும் மற்ற தலைவர்களுக்கும் இடையே மிக முக்கியமான ஒரு
வித்தியாசம் இது தான். உலகில் வாழ்ந்த மற்ற தலைவர்களும் மக்களால் பாராட்டப்படுகிறார்கள்
என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இவர்கள் இன்றைய நவ நாகரீகத்தின் அழுத்தத்தைத் தாண்டி
அவர்களைப் பின்பற்றுகின்ற ஆட்கள் உண்டா என்பதும் அப்படியே இருந்தாலும் அவர்களின்
சதவீதம் எத்தனை என்பதும் கேளிவிக்குரியதாகும்.ஆனால் முஹம்மது நபி ஸல் அவர்கள்
பாராட்டப்படுகின்றவர்களாக மட்டுமில்லாது இன்றளவும் கண்டங்கள் அத்தனையிலும்
பின்பற்றப்படுகிறார்கள் என்பதை கூர்ந்து யோசிக்க வேண்டும்.
அவர்கள் வாழும் காலத்தில் அவர்கள் விட்டுச் சென்ற சிறந்த காலத்தை
உடையவர்கள் என்று நாம் சொல்கின்ற ஸஹாபாக்களிலிருந்து அவர்களை அடுத்து வந்த இமாம்கள்,
நல்லோர்கள், இன்று வாழும் முஸ்லிம்கள் வரை அனைவரும் அவர்களின் மேலான
சுன்னத்துக்களை அவர்களின் உத்தரவுகளை பின்பற்றுகிறார்கள்.
தங்களின் ஒவ்வொரு செய்பாடுகளையும் பெருமானாரின் செயல்பாடுகளாகவே
அமைத்துக் கொண்டவர்கள் ஸஹாபாக்கள். தன் விருப்பு வெறுப்புகளைத் தாண்டி நபி ஸல்
அவர்களின் விருப்பம் எதுவாக இருக்கும் இந்த விஷயத்தில் அவர்களின் நடைமுறை எதுவாக
இருந்தது என்று பார்த்து பார்த்து அவர்கள் நபி ஸல் அவர்களை பின்பற்றினார்கள்.
كان وائل بن حجر
أحد أقيال حضرموت ، وكان أبوه من ملوكهم . ويقال : إن رسول الله صلى
الله عليه وسلم بشر أصحابه قبل قدومه به وقال : " يأتيكم بقية أبناء
الملوك " . فلما دخل رحب ، به وأدناه من نفسه ، وقرب مجلسه ، وبسط له
رداءه ، وقال : " اللهم بارك في وائل وولده وولد ولده " واستعمله
على الأقيال من حضرموت وأرسل معه معاوية بن أبي سفيان ، فخرج معه
راجلا ، فشكى إليه معاوية حر الرمضاء ، فقال : انتعل ظل الناقة . فقال :
وما يغني عني ذلك ؟ لو جعلتني ردفا . فقال له وائل : اسكت فلست من أرداف
الملوك . ثم عاش وائل بن حجر حتى وفد على معاوية وهو أمير المؤمنين
فعرفه معاوية ، فرحب به وقربه وأدناه ، وأذكره الحديث ، وعرض عليه جائزة
سنية فأبى أن يأخذها ، وقال : أعطها من هو أحوج إليها مني . وأورد الحافظ
البيهقي بعض هذا ، وأشار إلى أن البخاري في " التاريخ "
روى في ذلك شيئا
.
وقد
قال الإمام أحمد : حدثنا حجاج ، أنبأنا شعبة ، عن سماك
بن حرب ، عن علقمة بن وائل ، عن أبيه أن رسول الله صلى الله
عليه وسلم أقطعه أرضا . قال : فأرسل معي معاوية أن أعطها إياه - أو قال
: أعلمها إياه - قال : فقال معاوية : أردفني خلفك . فقلت : لا تكون من أرداف
الملوك . قال : فقال : أعطني نعلك . فقلت : انتعل ظل الناقة . قال : فلما
استخلف معاوية أتيته ، فأقعدني معه على السرير ، فذكرني الحديث .
قال سماك : فقال : وددت أني كنت حملته بين يدي . وقد رواه أبو
داود ، والترمذي من حديث شعبة ، وقال الترمذي :
صحيح .
வாஇல் பின்
ஹுஜ்ர் யமன் தேசத்தை அடுத்த ஹள்ரமௌத் என்ற பகுதியை ஆண்ட மன்னரின் மகன்.அந்த நேரத்தில்
இஸ்லாம் மதீனாவின் எல்லையைக் கடந்து கொஞ்சம் கொஞ்சமாக அண்டை நாடுகளில் பரவிக்
கொண்டிருந்தது.அண்டை நாட்டைச் சார்ந்தவர்கள் படிப்படியாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டிருந்தார்கள்.
வாஇல் பின்
ஹுஜ்ர் அவர்களும் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள நேரடியாக நபி {ஸல்}
அவர்களை சந்திப்பதற்கு மதீனாவை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள்.மதீனாவை
வந்தடைவதற்கு முன் மஸ்ஜிதுன் நபவீயில் தோழர்களோடு அமர்ந்திருந்த நபி {ஸல்}
அவர்கள் “இன்னும் சிறிது நேரத்தில் ஹள்ரமௌத் என்கிற பகுதியிலிருந்து
வாஇல் பின் ஹுஜ்ர் என்பவர் அல்லாஹ்விற்காகவும், அவனுடைய
தூதருக்காகவும் பயணித்தவராக உங்களின் முன்பாக வந்து நிற்பார். அவர் அரசர்களின்
வாரிசுகளில் கடைசியாக இருப்பவர் என்று கூறினார்கள்.
சிறிது
நேரத்தில் அங்கே வாஇல் பின் ஹுஜ்ர் வந்தார். நபி {ஸல்}
அவர்கள் மகிழ்ச்சியோடு அவரை வரவேற்று தங்களோடு நெருக்கிக்
கொண்டார்கள். தங்களின் மேணியில் இருந்த துண்டை விரித்து அதன் மீது அவரை அமர வைத்தார்கள்.
வாஇல் பின்
ஹுஜ்ரும் நபி {ஸல்} அவர்களுக்கு மிக
அருகில் நெருக்கமாக அமர்ந்தார்.இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்.சில நாட்களுக்குப்
பிறகு தான் தன் ஊருக்கு திரும்ப
செல்வதாக நபி {ஸல்} அவர்களிடம்
தெரிவித்த போது “யாஅல்லாஹ்! வாஇல் அவர்களுக்கும், அவரின்
சந்ததிக்கும், சந்ததியின் சந்ததிக்கும் பரக்கத் செய்வாயாக!”
என்று பிரார்த்தித்து விட்டு, ஹள்ரமௌத்தினுடைய பொறுப்பு தாரியாக
நியமித்து அனுப்பினார்கள்.
போகின்ற போது
மதீனாவின் எல்லை வரை விட்டு வருமாறு முஆவியா (ரலி) அவர்களை நபி {ஸல்}
அவர்கள் அனுப்பி வைத்தார்கள்.ஒட்டகையின் மீது அமர்ந்தவாறு வாஇல் பின்
ஹுஜ்ர் (ரலி) அவர்கள் செல்ல, அந்த ஒட்டகையின் மூக்கணாங்கயிற்றை
பிடித்து நடந்தவாறு முஆவியா (ரலி) அவர்கள் செறுப்பணியாத வெறுங்காலோடு
செல்கின்றார்கள்.
வெயிலின் தாக்கம்
அதிகரிக்கவே முஆவியா (ரலி) அவர்கள் வாஇல் பின் ஹுஜ்ர் (ரலி) அவர்களிடம் வெயில்
கடுமையாக இருக்கிறது. இந்த சுடு மணலில் என்னால் நடந்து வர முடிய வில்லை. எனவே உங்களின்
பின்னால் அமர்ந்து நான் வரட்டுமா? என்று கேட்டார்கள்.
அதற்கு, வாஇல்
(ரலி) அவர்கள் அரசர்களுக்கு அருகே அமர்கிற தகுதி உமக்கு கிடையாது” என்றார்கள். அமைதியாக வந்து கொண்டிருந்த முஆவியா
(ரலி) அவர்கள் மீண்டும் சூடு தாங்காமல் வாஇல் (ரலி) அவர்களிடம் “நீங்கள்
ஒட்டகையில் தானே அமர்ந்து வருகின்றீர்கள், உங்களின்
செருப்பை கழற்றி எனக்குத் தாருங்களேன்! சிறிது நேரம் நான் பயன்படுத்தி விட்டு
தருகின்றேன்” என்றார்கள்.
அது கேட்ட வாஇல்
பின் ஹுஜ்ர் (ரலி) அவர்கள் அதுவும் முடியாது. வேண்டுமானால் “ஒட்டகையின் நிழலிலேயே
நீர் நடந்து வாரும்!” என்று கூறினார்கள்.அவர் செல்ல வேண்டிய எல்கை வந்ததும் விடை
பெற்று முஆவியா (ரலி) அவர்கள் மதீனா வந்தடைந்தார்கள்.
சில காலங்கள்
கழிகிறது.முஆவியா (ரலி) அவர்கள் இப்போது கலீஃபாவாக இருக்கின்றார்கள். புதிய
ஆட்சியாளரை சந்திக்கும் முகமாக வாஇல் பின் ஹுஜ்ர் (ரலி) அவர்கள் முஆவியா (ரலி)
அவர்களைக் காண சபைக்குள் வருகின்றார்கள். மஸ்ஜிதுன் நபவீக்குள் வாயில் பின் ஹுஜ்ர் (ரலி)
நுழைகிற போது நபி {ஸல்} அன்றைக்கு இஸ்லாத்தை ஏற்பதற்காக அவர்கள் வந்த நேரத்தில் எவ்வாறு
கண்ணியப்படுத்தி, மரியாதை செய்தார்களோ அதே போன்று முஆவியா (ரலி)
அவர்களும் கண்ணியமும், மரியாதையும் கொடுத்து நபி ஸல் அவர்கள் செய்ததைப்
போன்றே தன் துண்டை விரித்து அவர்களை அமர வைத்தார்கள்.
இந்தச் செய்தியை
அறிவிக்கும் ஸிமாக் (ரஹ்) அவர்கள் வாஇல் பின் ஹுஜ்ர் (ரலி) அவர்கள் என்னிடம்
“முஆவியா (ரலி) அவர்களை என்னோடு நான் ஒட்டகையில் அமர வைத்திருக்கலாமே என்று
இப்போது வருந்துகின்றேன்” என்று கூறினார்கள்.(அல்பிதாயா வன் நிஹாயா)
ஒரு நேரத்தில் தன்னிடம் அவர்கள் நடந்து கொண்டது எதையும் எண்ணிப்
பார்க்காமல் அவர்கள் விஷயத்தில் பெருமானார் எப்படி நடந்து கொண்டார்களோ அப்படியே
இவர்களும் நடந்து கொண்டார்கள்.நபி ஸல் அவர்களை ஸஹாபாக்கள் எப்படியெல்லாம்
பின்பற்றினார்கள் என்பதற்கு இந்த ஒரு வரலாற்று நிகழ்வே போதுமானது.
عَنْ عَمْرِو
بْنِ الشَّرِيدِ، قَالَ وَقَفْتُ
عَلَى سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ، فَجَاءَ المِسْوَرُ بْنُ مَخْرَمَةَ، فَوَضَعَ
يَدَهُ عَلَى إِحْدَى مَنْكِبَيَّ، إِذْ جَاءَ أَبُو رَافِعٍ مَوْلَى النَّبِيِّ
صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا سَعْدُ ابْتَعْ مِنِّي بَيْتَيَّ
فِي دَارِكَ؟ فَقَالَ سَعْدٌ وَاللَّهِ مَا
أَبْتَاعُهُمَا، فَقَالَ المِسْوَرُ: وَاللَّهِ لَتَبْتَاعَنَّهُمَا، فَقَالَ
سَعْدٌ: وَاللَّهِ لاَ أَزِيدُكَ عَلَى أَرْبَعَةِ آلاَفٍ مُنَجَّمَةً، أَوْ
مُقَطَّعَةً، قَالَ أَبُو رَافِعٍ: لَقَدْ أُعْطِيتُ بِهَا خَمْسَ مِائَةِ
دِينَارٍ، وَلَوْلاَ أَنِّي سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
يَقُولُ: «الجَارُ أَحَقُّ بِسَقَبِهِ»، مَا أَعْطَيْتُكَهَا بِأَرْبَعَةِ آلاَفٍ،
وَأَنَا أُعْطَى بِهَا خَمْسَ مِائَةِ دِينَارٍ، فَأَعْطَاهَا إِيَّاهُ
அம்ர் பின்
ஷரீத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் ;
நான், ஸஅத்
இப்னு அபீ வக்காஸ் (ரலி)
அவர்களிடம் தங்கியிருந்தேன். அப்போது மிஸ்வர் இப்னு மக்ரமா (ரலி) வந்து,
தம் கையை என்னுடைய தோள் புஜங்களில் ஒன்றில் வைத்தார்கள். அப்போது
(அடிமையாயிருந்து) நபி (ஸல்)
அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அபூ ராஃபிஉ (ரலி) வந்து, ‘ஸஅதே!
உம்முடைய வீட்டிலுள்ள எனக்குச் சொந்தமான இரண்டு அறைகளை என்னிடமிருந்து வாங்கிக்
கொள்வீராக!’ எனக் கூறினார்கள்.
அதற்கு ஸஅத் (ரலி)
‘அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவற்றை நான் வாங்க மாட்டேன்!’ என்றார்கள். அருகிலிருந்த
மிஸ்வர் (ரலி)
அவர்கள், ஸஅத் (ரலி) அவர்களிடம் ‘அல்லாஹ்வின் மீது ஆணையாக!
நீர் வாங்கிக் கொள்ளத்தான் வேண்டும்!’ என்றார்கள். அப்போது ஸஅத் (ரலி),
‘அல்லாஹ்வீன் மீது ஆணையாக! தவணை அடிப்படையில் நாலாயிரம் வெள்ளிக்
காசைத் தவிர உமக்கு அதிகமாகத் தர மாட்டேன்!’ என்று கூறினார்கள்.
அதற்கு அபூ
ராஃபிவு (ரலி) அவர்கள்,
‘ஐநூறு தங்கக் காசுகளுக்கு அது கேட்கப்பட்டுள்ளது; அண்டை
வீட்டில் இருப்பவர் அண்மையில் இருப்பதால் அவரே அதிகம் உரிமை படைத்தவர் என்று நபி (ஸல்)
அவர்கள் கூறியதை நான் செவியுற்றிராவிட்டால் ஐநூறு தங்கக் காசுக்கு கேட்கப்பட்டதை
நாலாயிரம் வெள்ளிக்காசுக்கு உமக்கு விற்க மாட்டேன்’ என்று கூறி விட்டு ஸஅதுக்கே விற்றார்.
(புகாரி
; 2258)
500 தீனாருக்கு விற்பனை செய்வது அவர்களுக்கு விருப்பமானதாக
இருந்தாலும் பெருமானார் ஸல் அவர்கள் அண்டை வீட்டார் விஷயத்தில் சொன்ன ஒரு
விஷயத்திற்காக 400 தீனாருக்கு விற்கிறார்கள்.
عن بكر بن
عبدالله المزني قال: كُنْتُ جالِسًا مع ابْنِ عَبّاسٍ عِنْدَ الكَعْبَةِ، فأتاهُ
أَعْرابِيٌّ فَقالَ: ما لي أَرى بَنِي عَمِّكُمْ يَسْقُونَ العَسَلَ واللَّبَنَ
وَأَنْتُمْ تَسْقُونَ النَّبِيذَ؟! أَمِنْ حاجَةٍ بكُمْ أَمْ مِن بُخْلٍ؟ فَقالَ
ابنُ عَبّاسٍ: الحَمْدُ لِلَّهِ، ما بنا مِن حاجَةٍ وَلا بُخْلٍ؛ قَدِمَ النبيُّ ﷺ
على راحِلَتِهِ وَخَلْفَهُ أُسامَةُ، فاسْتَسْقى، فأتَيْناهُ بإناءٍ مِن نَبِيذٍ،
فَشَرِبَ، وَسَقى فَضْلَهُ أُسامَةَ، وَقالَ: أَحْسَنْتُمْ وَأَجْمَلْتُمْ، كَذا
فاصْنَعُوا، فلا نُرِيدُ تَغْيِيرَ ما أَمَرَ به رَسولُ اللهِ ﷺ.
பக்ர் பின்
அப்தில்லாஹ் அல் முஸனீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் :
நான் இப்னு
அப்பாஸ் (ரலி) அவர்களுடன் இறையில்லம் கஅபா அருகில் அமர்ந்திருந்தேன். அப்போது
அவர்களிடம் ஒரு கிராமவாசி வந்து, "உங்கள்
தந்தையின் சகோதரர் மக்கள், (ஹாஜிகளுக்கு) தேனும் பாலும்
விநியோகிக்கின்றனர். நீங்களோ (உலர்ந்த திராட்சைப்) பழரசம் விநியோகிப்பதை நான்
காண்கிறேனே, ஏன்? உங்களுக்கு
வறுமை ஏற்பட்டு விட்டதா, அல்லது கருமித்தனம் செய்கிறீர்களா?"
என்று கேட்டார்.
அதற்கு இப்னு அப்பாஸ்
(ரலி) அவர்கள், "அனைத்துப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது.
எங்களுக்கு எந்த வறுமையும் ஏற்பட்டுவிட வில்லை; கருமித்தனமும்
செய்ய வில்லை.மாறாக (ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் தமக்குப் பின்னால் (தமது
வாகனத்தில்) உஸாமா (ரலி) அவர்கள் இருக்க, எங்களிடம் வந்து
தண்ணீர் கேட்டார்கள். அவர்களுக்கு ஒரு பாத்திரத்தில் நாங்கள் பழரசம் கொண்டு வந்(து
கொடுத்)தோம். அவர்கள் அதைப் பருகி விட்டு மீதியை உஸாமா (ரலி) அவர்களுக்குப் பருகக்
கொடுத்தார்கள். பிறகு, "நன்றே செய்தீர்கள்! நன்றே செய்தீர்கள்!
இவ்வாறே செய்து வாருங்கள்!" என்று (எங்களைப் பாராட்டிக்) கூறினார்கள். எனவே, நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்களின் (உத்தரவுப்படியே செய்து வருகிறோம். அந்த) உத்தரவிற்கு மாற்றம் செய்ய
நாங்கள் விரும்ப வில்லை" என்று சொன்னார்கள். முஸ்லிம் 1316
ஸஹாபாக்கள் தங்களின் ஒவ்வொரு செயலையும் பெருமானாரின் விருப்பம்
அவர்களின் கட்டளைக்கு ஏற்றவாறே அமைத்துக் கொண்டார்கள்.
فهذا الإمام
أحمد رحمه الله وضع في كتابه المسند فوق أربعين ألف حديث، وعمل بها كلها، فقال:
"ما تركت حديثًا إلا عملت به"، ولمَّا قرأ: أنَّ النَّبي صلى الله عليه
وسلم احتجم، وأعطى أبا طيبة الحجَّام دينارًا، قال: "احتجمتُ، وأعطيت
الحجَّام دينارًا"، والدينار: أربعة غرامات وربع من الذَّهب، لكن لأجل تطبيق
الحديث بذلها الإمام أحمد رحمه الله تعالى، والنّماذج في هذا الصَّدد كثيرة.
சுமார் 40000 ஹதீஸ்களுக்கு மேல் எழுதியவர்கள் இமாம் அஹ்மத் பின் ஹம்பல்
ரஹ் அவர்கள். அவர்கள் கூறுகிறார்கள். நான் எந்த ஹதீஸையும் அமல் செய்யாமல் விட்டதில்லை.
நபி ஸல் அவர்கள் ஒரு தடவை இரத்தம் குத்தி எடுத்து விட்டு அதை செய்தவருக்கு ஒரு தீனாரைக்
கொடுத்தார்கள்.அந்த ஹதீஸைப் பின்பற்ற வேண்டும் என்பதற்காக நானும் அவ்வாறு செய்து
ஒரு தீனாரைக் கொடுத்தேன் என்று கூறுகிறார்கள்.
இவ்வாறு ஸஹாபாக்களும் இமாம்களும் பெருமானார் ஸல் அவர்களை அணுஅணுவாக
பின்பற்றினார்கள்.
பல நூற்றாண்டுகள் கடந்து இன்றைக்கும் பெருமானார் ஸல் அவர்களின்
சுன்னத்துகள் பின்பற்றப்படுகிறது.தங்கள் வாழ்வின் ஒவ்வொரு அம்சங்களிலும் பெருமானார்
ஸல் அவர்களை முழுமையாக பின்பற்றும் ஒரு சமூகம் இருந்து கொண்டே இருக்கிறது.
துருக்கியில்
ஏற்பட்ட பூகம்பத்தில் இடர்பாடுகளில் ஒரு இஸ்லாமியப் பெண் சிக்கியிருக்கிறார். அவரை
மீட்பதற்கு மீட்புக்குழுவினர் முயற்சிக்கிறார்கள். ஆனால் அவர் அந்த நிலையிலும் என் தலை திறந்திருக்கின்றது. தலையை மறைக்க (head
scarf) தலை தாவணி எதுவும் கொடுங்கள். இது வரை அந்நிய ஆண்களுக்கு முன்னால்
இந்த நிலையில் வந்ததில்லை என்று கூறினார்- கடைசியில் ஒரு துணி கொடுக்கப்பட்டு
தலையை மறைத்த பின்பு தான் தன்னை மீட்க சம்மதம் தெரிவித்தார்.
எமனைச் சார்ந்த
தவக்குல் கர்மான். பெண் விடுதலைக்காகவும் பெண்களின் உரிமைகளுக்காகவும் பெண்களின்
பாதுகாப்பிற்காகவும் குரல் கொடுத்த களம் கண்ட ஒரு வீர பெண்மணி.
எமன் நாட்டு
மக்கள் இந்த பெண்மணியை இரும்புப் பெண்மணி புரட்சித் தாய் என்று அழைப்பார்கள்.2011
நம் ஆண்டு உலகின் மிகவும் உயர்ந்த பரிசான நோபல் பரிசு பெற்றார். உலகிலேயே நோபல்
பரிசு பெற்ற முதல் அரேபிய பெண்மணி. 2 வது இஸ்லாமிய
பெண்மணி மட்டுமல்ல மிகக் குறைந்த வயதில் நோபல் பரிசு பெற்ற முதல் பெண்மணியாகவும்
இருக்கிறார்.
நோபல் பரிசு
பெற்று விட்டு அவர் திரும்பிய போது பத்திரிகையாளர்கள் கேட்டார்கள். இந்த வெயில்
காலத்தில் கடும் உஷ்ணமான நேரத்தில் இந்த உடல் முழுவதையும் போர்த்திக் கொள்கிற
ஹிஜாப் தேவையா என்பது தான் அந்த கேள்வி.அப்போது அந்த பெண்மனி இந்த உஷ்ணத்தை விட
நரகத்தின் உஷ்ணம் ரொம்ப கடுமையானது என்று கூறினார்.
காலம் கடந்தும் பெருமானார் ஸல் அவர்கள் பின்பற்றப்படுகிறார்கள். அவர்கள்
நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது தான் அவர்களின் மிகப்பெரும் சாதனை.
மாஷா அல்லாஹ்
ReplyDeleteதரமான குறிப்புகள் மா ஷா அல்லாஹ் பாரக்கல்லாஹ்
ReplyDeleteMasha Allah barakallahu feeka
ReplyDeleteமிக சிறப்பு
ReplyDelete