Pages
▼
Pages
▼
Friday, September 27, 2013
நபி புகழ் பாடிய நல்லவர்கள்
நபியின் ஆஸ்த்தான கவிஞர் ஹஸ்ஸான் பின் தாபித் (ரலியல்லாஹீ அன்ஹீ) அவர்கள்
ஓதிய மவ்லுத் .
இடம் :அல்மதீனத்துல் முனவ்வரா
உங்கள் கண்களை விட கருமையான அழகான கண்கள் இல்லை
எந்தத் தாயும் தங்களை விட அழகான குழந்தையைப் பெற்றதில்லை
நீங்கள் குறையில்லாமல் படைக்கப்பட்டீர்கள்
நீங்கள் எப்படி படைக்கப்பட விரும்புவீர்களோ - அப்படி
உங்கள் புகழ் இவ்வுலகில் பரவுகிறது
கஸ்தூரியை விட அதிக மணத்தோடு
உங்கள் அதிர்ஷ்டம் நிறைவானது
தங்கள் கரம் பெரும் கடலை விட தாராளமானது
தங்கள் தர்மம் ஓடும் நதியை போன்றது
தங்களைப் பார்த்து பொறாமைப்படுபவர்கள்
இன்னும் பொறாமைக் தீயிலே வெந்து
கொண்டிருப்பவர்களிடமிருந்து தங்களை
இறைவன் பாதுகாக்க வேண்டும்
எங்கள் எஜமானரே!
உங்களுக்கு தகுமான
அளவுக்கு புகழ்சேர்க்க என்னால் முடியவில்லை
நான் சொல்லாற்றலில் ஏழை
ஏழை எபபோதும் தோற்றுவிடுகிறான்.
என் கவிதைகள் முஹம்மது(ஸல்) அவர்களுக்கு பெரும் புகழ் சேர்க்கவில்லை
முஹம்மதுதான் என் கவிதைகளுக்கு என்றும்
புகழ் நிலைக்கச் செய்தது.
(ருஹீல் குத்ஸ்(ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் மூலம் அல்லாஹ் தங்களுக்கு உதவுவான் என்று அருமை நாயகம்(ஸல்) அவர்களால் வாழ்த்தப்பட்டவர் ஹஸ்ஸான் பின் தாபித்(ரலியல்லாஹீ அன்ஹீ)
No comments:
Post a Comment