Pages

Pages

Tuesday, October 8, 2013

சிறுவர் விவாதம்- பெண் கல்வி தேவையா?

                                                                              
                                                              
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                        
 சித்தீக்கா ; அண்ணே அஸ்ஸலாமு அலைக்கும் நல்லா இருக்கீங்களா?                                                                     

இத்ரீஸ்  ; வஅலைக்குமுஸ்ஸலாம் ஏதோ இருக்கேம்மா.        

சித்தீக்கா ;  ஏன்னே ஒரு மாதிரியா இருக்கீங்க---எதாவது பிரச்சனையா தினமும் சாப்புடுற சாப்பாட்ல இன்னைக்கி எதுவும் கொறஞ்சி போச்சா இல்ல----உங்க WIFE எதுவும் அடிச்சிட்டாங்களோ.  

இத்ரீஸ்    ;  ஏம்மா கொழுப்பா?  

சித்தீக்கா ;  பின்ன எதுக்குன்னே கவலயா இருக்கீங்க?                                                  

இத்ரீஸ்    ; இல்ல----இன்னைக்கி காலைல ஒரு பத்திரிக்க படிச்சேன்.அதப்பாத்ததுல இருந்துதான் ஒரே டென்ஷனா இருக்கு.      

சித்தீக்கா ;  நீங்க பத்திரிக்கலாம் படிப்பீங்களா------சரி சரி மொறைக்காதீங்க.என்ன பத்திரிக்கண்ணே படிச்சீங்க?  

இத்ரீஸ்    ; சமூக நீதி முரசுன்னு ஒரு பத்திரிக்க அதத்தான் படிச்சேன்.

சித்தீக்கா ; சமூக நீதி முரசா----உங்கள டென்ஷனாக்குற அளவுக்கு அதுல அப்டி என்ன செய்திண்ணே இருந்துச்சு----                    

இத்ரீஸ்    ; சென்னையோட புற நகர்ல ஒரு போலீஸ் ஸ்டேஷன்ல மட்டும் 22 ஓடிப்போன பெண்களோட கேஸ் பதிவாகி இருக்காம்         

சித்தீக்கா ;  என்னண்ணே சொல்றீங்க ஒரே ஊர்ல 22 புள்ளைங்க  ஓடிப்போயிடுச்சா?

இத்ரீஸ்  ;   ஆமம்மா ஒரே ஒரு ஊர்ல,ஒரே ஒரு போலீஸ் ஸ்டேஷன்ல, அதுவும் ஒரே மாசத்துல மட்டும் 22 கேஸ்னா இந்த சமூகம் எங்க போயிட்டு இருக்குன்னு நெனச்சிப்பாக்கும்போது ரொம்ப கஷ்டமாவும் வேதனயாவும் இருக்குது.    

சித்தீக்கா ;   கஷ்டப்பட்டு பெத்து வளத்து படிக்க வச்ச பெத்தவங்கள கேவலப்படுத்திட்டு ஓடுற இந்த மாதிரி பொண்ணுங்களல்லா சும்மா உடக்கூடாதுண்ணே.      

இத்ரீஸ்    ; அந்தப்பிள்ளைங்களச் சொல்லி என்ன பிரயோஜனம். உங்கள மாதிரி பெத்தவங்களத்தான் முதல்ல சாத்தனும்.கல்யாணம் பன்னத்தெரியும் புள்ளய பெத்துக்கத்தெரியும் ஆனா அதுங்கல ஒழுங்கா வழக்கத்தான் தெரியாது

சித்தீக்கா ;  ஏண்ணே அப்டி சொல்றீங்க பெத்தவங்க எங்க மேல என்ன தப்பு பாவம் நாங்க என்ன  பன்னுவோம்.  

இத்ரீஸ்    ;  என்னது----- என்ன தப்பா வீட்ல புள்ளைங்க ஓடிப்போறதே உங்கள மாதிரி பெத்தவங்களாலத்தான் தெரியுமா?

சித்தீக்கா ;  நீங்க சொல்றது ஒன்னும் புரியலியே----எந்த பெத்த தாயாவது தான் புள்ள ஓடிப்போவனுன்னு நெனப்பாளா? 

இத்ரீஸ்  ; நான் அதச்சொல்லலம்மா.எதுக்கு பொட்டப்பிள்ளைங்கள படிக்கிறதுக்கு வெளிய அனுப்புறீங்கன்னு கேக்குறேன்.       

சித்தீக்கா ; ஏண்ணே பொட்டப்புள்ளைங்களாம் படிக்கக்கூடாதாஎன்ன?     

இத்ரீஸ்    ; பொட்டப்புள்ளைங்களுக்கு எதுக்கு படிப்பு. ஒரு எட்டு வரைக்கும் படிச்சா போதாதா--- ஒரு பொட்டப்புள்ள இன்ஜினியரிங் படிச்சி பில்டிங் கட்டப்போவுதா அல்லது மெகானிக்கல் படிச்சி மெகானிக் செட் வைக்கப்போவுதா அல்லது டீச்சருக்கு படிச்சி ஹெட் மாஸ்டர் ஆவப்போவுதா அல்லது எம் காம் படிச்சி பேங்க் மேனேஜராத்தான் ஆவப்போவுதா அல்லது அதுக்கு இஸ்லாத்துலதான்  எடம் இருக்குதா. ஒன்னும் கெடயாது.என்னத்த படிச்சாலும் படிச்சிக்கிழிச்சாலும் கல்யாணத்துக்குப்பிறகு அந்த ஆப்பையையும்,சட்டியையும் தான் புடிக்கப்போவுது. எந்த மாப்ளயாவது அவன் ஒழுக்கமானவனா இருந்தா கட்டுன பொண்டாட்டிய வேளைக்கு அனுப்புவானா.கண்டிப்பா அனுப்ப மாட்டான்.பின்ன எதுக்கு இதுங்க படிக்கனும்.அதனால துட்டு வேஸ்ட்,அலச்சல் வேஸ்ட் பெத்தவங்களுக்கு சிரமம். அதுமட்டுமில்லாம நான் கொடுத்த பணத்த எப்டி செலவழிச்சன்னு அல்லாஹ் கேட்டா என்ன பதில் சொல்வீங்க.யா அல்லாஹ் எம் புள்ளய எம் காம் படிக்க வச்சி பெரிய பட்டதாரியா ஆக்குனேன் அப்டின்னா சொல்வீங்க மு அப்டியே சொன்னாலும் அதனால என்ன பிரயோஜனம்னு அல்லாஹ் கேட்டா என்ன சொல்ல முடியும். அதனால---- பொட்டப்புள்ளைங்கள 8-க்கு மேல படிக்க வைக்கவே கூடாது.     

சித்தீக்கா ;  என்னண்ணே இப்டி சொல்லிட்டீங்க கீழப்பாருங்க புள்ளைங்களாம் உங்களையே மொறச்சிப்பாக்குறாங்க.    

இத்ரீஸ்    ; யார் மொறச்சிப்பாத்தா எனக்கென்ன  உண்மைய சொல்றதுக்கு யாருக்கு பயப்படனும்.     

சித்தீக்கா ; சரிண்ணே நீங்க பெரிய மல் யுத்த வீரர்தான் ஒத்துக்கிறேன். நான் சொல்றத கொஞ்சம் கேளுங்க

இத்ரீஸ்    ; சரி சொல்லு.      

சித்தீக்கா ;  பெண்களுக்கு கல்வி தேவயில்லைங்கிறீங்க ஆனா குர்ஆன்ல பல இடங்கள்ள கல்வி அவசியம்னு அல்லா சொல்றான்.நபி ஸல் அவர்களும் சொல்றாங்க எந்த இடத்திலேயும் ஆண்களுக்கு மட்டும் தான் என்றோ பெண்களுக்கு தேவயில்லையென்றோ வரலயே---அன்னை ஆயிஷா ரலி அவங்கள நமக்கு சின்னப்பொண்ணாதான் தெரியும்.ஆனா நபிக்குப்பிறகு சுமார் 48 வருஷம் ஆசிரியரா இருந்துருக்காங்களே------அது மட்டுமா அலி ரலி அவர்கள் காலத்தில் நஃபீஸா என்ற பெண்மனி ஹதீஸ் கலையில் மிகப்பெரிய நிபுணராக இருந்திருக்கிறார்களே----இது போன்ற எத்தனையோ வரலாறுகள் இருக்குதே. பெண்களுக்கு கல்வி கூடாதுன்னா அவங்க படிச்சிருப்பாங்களா------                                     

இத்ரீஸ்    ; ஏம்மா அறிவாளி அவங்க படிச்சதும், படிச்சிக்கொடுத்ததும் அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு இல்ல மார்க்க கல்வியாக்கும்---

சித்தீக்கா ;  ஏன் உலக கல்வில தேர்ச்சி பெற்ற பெண்மனிகள் இல்லையா--- உமர் ரலி அவங்க காலத்துல ஷிஃபா பின்த் அப்துல்லா என்ற பெண்மனி  மார்க்கெட்டிங் பொருளை தரம் பார்க்கும் நிபுணராக இருந்திருக்கிறாங்க,ருகைய்யா அஸ்லமிய்யா என்ற பெண்மனி டாக்டராக இருந்திருக்கிறாங்க, ஷைஹா ஷுஹதா என்ற பெண்மனி இலக்கணம் இலக்கியம், கவிதை போன்ற துறையில் மிகப்பெரும் நிபுணராக இருந்திருக்கிறாங்க  அது மட்டுமில்லாம குர்ஆன்லயோ,ஹதீஸ்லயோ எந்த இடத்திலேயும் உலகக்கல்வி, மார்க்கக்கல்வி என்று பிரிக்கப்படலையே பொதுவாக கல்வின்னு தானே வருது.

இத்ரீஸ் ; ஏய் நீ சொல்றதுலாம் சரிதாம்மா பொம்பள புள்ள உலகக்கல்வியும் படிக்கலாம் மார்க்க கல்வியும் படிக்கலாம் நான் ஒத்துக்கிறேன். ஆனா இந்த காலம் எப்டிப்பட்ட காலம் தெரியுமா----நல்ல கேட்டுக்கோ ஒரு அம்மா தன் மகள வீட்டு மொட்ட மாடியில போய் டேங்க்ல தண்ணீ நெரஞ்சிடுச்சான்னு பாத்துட்டுவாம்மான்னு அனுப்புனாங்க ஆனா மொட்டமாடிக்குப்போனவ போனவ போனவதான் கீழ இறங்கி வரவே இல்ல. அந்த கண் சிமிட்டுற நேரத்துல  யாரோ பக்கத்து வீட்டுப்பையனோட ஓடிட்டா.பொட்டப்புள்ளைங்கள ஊட்ல வச்சே இந்த லட்சணம்.ஆனா இந்த காலத்துல பெத்தவங்க நீங்க என்ன பன்றீங்க---வெளியூர்ல போய் படிச்சிட்டு வாங்கன்னு பஸ்ல அனுப்பி வைக்கிறீங்க கையில தாராளமா பணத்தையும் கொடுத்து விடுறீங்க கூடவே டேஞ்சரான செல் ஃபோனையும் கொடுத்து விடுறீங்க. புள்ள நல்லா படிக்கட்டும்னு வீட்ல தனீ அறையையும் கொடுத்தர்ரீங்க. புள்ள ரூம்ல என்ன பன்னுதுன்னு பாக்குறதும் கிடயாது செல்ஃபோன்ல என்ன நம்பர் இருக்குதுன்னு கவனிக்கிறதும் கிடயாது. பொன்னுங்களுக்கு ரொம்ப வசதியா போயிடுது.   பஸ்ல போகுது----யாரையாவது பாக்குது----நம்பர வாங்குது----வீட்ல இருக்குற தனீ ரூம்ல உக்காந்து மணிக்கணக்கா பேசுது அடுத்த நாள் ஊட்ட வுட்ட ஓடுது.இதுதான் இங்க நடக்குது.இப்ப நல்ல புரிஞ்சிருச்சா         

சித்தீக்கா ; ----நல்ல புரிஞ்சிது.இவ்ளோ விஷயம் இருக்கா எங்களுக்கு என்ன தெரியுது.எதோ புள்ள நல்லா படிச்சி நாளு விஷயம் தெரிஞ்சிக்கட்டுமேன்னு பள்ளிக்கு அனுப்புறோம்.ஆனா இப்பல்லோ தெரியுது புள்ளைங்கள பள்ளிக்கு அனுப்புறது எவ்ளோ டேஞ்சருன்னு.                    

இத்ரீஸ்    ; இப்பவாச்சி புரிஞ்சிகிட்டியே முதல்ல போய் புள்ளைங்கல பள்ளிக்கு போறத நிறுத்திட்டு நம்ம ஊர்ல பெண்கள் மதரஸா இருக்கு அங்க கொண்டு போய் சேரு. மார்க்கத்தை தெரிஞ்சிக்கட்டும் .என்ன OK வா? 

சித்தீக்கா  ;  OKண்ணே     

இத்ரீஸ்     ; எனவே தாய்மார்களே  நீங்க பெத்த புள்ளைங்க கடைசி வரைக்கும் உங்க கூடவே இருந்து உங்க மானத்த காப்பத்தனும்னா நெனச்சா வெளியூருக்லாம் படிக்க அனுப்பாதீங்க அனுப்பி விட்டு பின்ன வருந்தாதீங்க அஸ்ஸலாமு அலைக்கும்.
                                                                                                                                        

No comments:

Post a Comment