Pages
(Move to ...)
Home
மக்தப் சிறுவர் நிகழ்ச்சிகள்
பட்டி மன்றம்
உரையாடல்கள்
ஆடியோ உரைகள்
இறையருள்
சிறுவர் பயான்கள்
சிறுவர் கருத்தரங்கம்
கீதங்கள்
தராவீஹ் பயான்
ஜும்ஆ பயான்
வாரம் ஒரு அமல்
ரியாளுஸ் ஸாலிஹீன்
தராவீஹ் குறிப்புகள் (2022)
தராவீஹ் குறிப்புகள் 2023
▼
Pages
(Move to ...)
Home
ரியாளுஸ் ஸாலிஹீன்
▼
வியாபாரத் திருமணம்
தரகர் ; அஸஸலாமு அலைககும் பாய் !...
பாய் ; வ அலைக்குமுஸ்ஸலாம் . என்னய்யா இந்த பக்கம் --- காய் கறி வாங்கவா ?
தரகர் ; ஆ --- பாம் வைக்க . ஏம் பாய் மார்கட்டுக்கு காய் கறி வாங்க வராம --- பாம் வைக்கவா வருவாங்க ---- பாய் ; இல்லயா சும்மாதான் கேட்டேன் .
தரகர் ; ஏன் பாய் சும்மா கேக்குறீங்க . இந்த கல்ல வேணும்னா தலைல வச்சிட்டு கேக்க வேண்டியதானே . பாய் ; ஏன் யா கேக்குறது தப்பா ?
தரகர் ; சாரி பாய் , சரியா தப்பான்னு பாக்குறதுக்கு...... நான் ஒன்னும் டீச்சர் இல்ல . வேணும்னா ஒரு டீச்சர கூப்புட்டு கேளுங்க . அவங்க கரைக்டா சொல்லுவாங்க . பாய் : ஏம்பா உன் கிட்ட தெரியாம கேட்டுட்டேன் . என்ன மன்னிச்சிரு .
தரகர் ; தெரியாம இருந்தாதான் கேப்பாங்க . பின்ன என்ன தெரிஞ்சிகிட்டேவா கேப்பாங்க? பாய் ; யோவ் ஏன் யா என் உசுர போட்டு வாங்குற ?
தரகர் ; உங்க உசுரு என்ன கத்திரிக்காயா இல்ல முருங்கக்காயா ? வாங்கி குழம்பு வச்சி சாப்பிடுறதுக்கு .
பாய் ; ஏன் யா உன் லொள்ளுக்கு ஒரு அளவே கிடையாதா ?
தரகர் ; சாரி பாய் நான் தராசுலாம் ஒன்னும் கொண்டு அதனால அளந்துலாம் பாக்க முடியாது .
பாய் ; அய்யோ..... முடியல .
தரகர் ; முடியலன்னா போயிட்டு வாங்க பாய் --- அப்புறம் இங்கயே இருந்துறப்போறீங்க . பாய் ; ஸ்ஸ்ஸ் --
தரகர் ; என்ன டயர் எதுவும் பஞ்சராயிடுச்சா ?
பாய் ; ஆ --- என் வாய் பட்சராயிப்போச்சி . நீ ஒரு மனுஷன்னு உன் கிட்ட வந்து பேசுனம்பாரு என்ன செருப்பாலயே ---- அடிக்கனும் .
தரகர் ; சாரி பாய் நான் செருப்பு போட்டுட்டு வரல்ல . வேண்ணா உங்க செருப்ப கலட்டிக் கொடுங்க நாளு சாத்து சாத்துறேன் .
பாய் ; ஏய்யா உன் கிட்டலாம் மனுஷன் பேச முடியாது . ஆள வுடு நான் வர்ரேன் .
தரகர் ; சரி பாய் சரி பாய் கோவப்படாதீங்க . சும்மா தமாஷ் தான் பன்னுனேன் . சொல்லுங்க என்ன விஷயம் ?
பாய் ; ஏய்யா உன் கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசலாம்னு நினச்சா நீ பாட்டுக்கு தமாஷ் அடிச்சிட்டு இருக்கிற .
தரகர் ; சரி பாய் சொல்லுங்க என்ன விஷயம் . நான் தான் மன்னிப்பு கேட்டன்ல .
பாய் ; ஒன்னுமில்லயா ---- என் பையனுக்கு ஒரு நல்ல பொண்ணா இருந்தா சொல்லு .
தரகர் ; அதுக்கு என்ன பாய் பாத்துறுவோம் . கவலைய விடுங்க . நீங்க நம்ம ஃப்ரண்ட் --- உங்களுக்கு பாக்காம வேற யாருக்கு பாக்க போறேன் . சரி உங்க பையன் என்ன பன்றான் பாய் .
பாய் ; என்னய்யா இப்டி கேட்டுபுட்ட — என் பையன் பெரிய V I P ய்யா --
தரகர் ; V I P யா --- அப்டின்னா .
பாய் ; V I P ன்னா ---- வி ஃபார் வேளை ஐ ஃபார் இல்ல பி ஃபார் பட்டதாரி வேளையில்லா பட்டதாரின்னு அர்த்தம் .
தரகர் ; அடத்தூ — ஏன் பாய் இதுக்குத் தான் இந்த பில்டப்பா .
பாய் ; சரிய்யா என் பையனுக்கு நல்ல பெரிய இடமா பாரு .
தரகர் ; பெரிய இடம்னா எப்டி --- இந்த கிரவ்ண்ட் மாதிரி போதுமா --- இல்ல இத வுட பெரிய இடமா வேணுமா .
பாய் ; ஏய்யா மறுபடியும் உன் குசும்ப ஆரம்பிச்சிட்டியா . பெரிய இடம்னா நிறைய பணம் உள்ள இடமா பாருய்யா .
தரகர் ; நிறைய பணம் உள்ள இடத்த எங்க போய் தேடுறது . பேங்கத்தான் புடிச்சி கட்டி வைக்கனும் . [ மவ்னமாக ] சரி பாய் ரண்டு இடம் இருக்குது ---- ஒரு இடத்துல 2 லட்சம் ரொக்கமும் 10 பவுன் நகையும் போடுவாங்க . பொண்ணு கொஞ்சம் கருப்பா இருக்கும் . இன்னொரு இடத்துல 3 லட்சம் ரொக்கமும் 20 பவுன் நகையும் போடுவாங்க ஆனா பொண்ணு அத வுட கொஞ்சம் கருப்பா இருக்கும் . எந்த பொண்ணு பாய் வேணும் .
பாய் ; அத வுட கருப்பா ஏதாவது பொண்ணு இருந்தா பாருயா .
தரகர் ; ஏம் பாய் நீங்களா ஒரு அப்பனா .
பாய் ; சரி சரி கோவிச்சிக்காத . ரொம்ப வேணாம்யா ஒரு 1 லட்சம் 10 பவுன்ல சிம்பிலா ஒரு இடம் பாருய்யாபோதும் .
தரகர் ; ஏம் பாய் 1 லட்சம் 10 பவுனுங்றது உங்களுக்கு சிம்பிலா . அது சரி ---- உங்க பையனுக்கு வேளை வெட்டி இல்லாமயே இவ்வளவு கேக்குறீங்களே . ஒரு வேளை கெடச்சா எவ்வளவு கேப்பீங்க .
பாய் ; அது ---- கிடைக்குற வேளைய பொறுத்து தான் இருக்குது .
தரகர் ; நல்ல புள்ள நல்ல அப்பய்யா --- மொத்தத்துல இது கல்யாணம் இல்ல வியாபாரச் சந்ததான் .
பாய் ; யோவ் வள வளன்னு பேசாதயா . உன்னால முடியுன்னா சொல்லு . இல்லன்னா நான் வேற ஆளப் பாத்துக்குறேன் .
தரகர் ; சரி பாய் நீங்க சொன்ன மாதிரியே பன்னிரலாம் . இன்னும் ஒரு வாரத்துல பாத்துட்டு வர்ரேன் .
பாய் ; யோவ் முக்கியமா பொண்ணு தளதளன்னு இருக்கனும் ஆமா --
தரகர் : பாய் தளதளன்னு இருக்கனும்னா பேசாம உங்க மகனுக்கு ஒரு முகம் பாக்குற கண்ணாடிய வாங்கிக் கொடுங்க அதான் தளதளன்னு இருக்கும் . அதப்பாத்துகிட்டே இருக்கட்டும் . ஏம் பாய் நீங்க வேற .
பாய் ; சரிய்யா ஏதாவது பாத்துட்டு வாய்யா போயா .
தரகர் ; பாத்தீங்களா சகோதரர்களே என்னமோ நாங்க தான் முஸ்லிம்,எங்க மார்க்கம் தான் உண்மையான மார்ககம்,எங்க வேதம் தான் உண்மையான வேதம்னு இந்த முஸ்லிம்கள் பீத்துறாங்களே....இப்படி திருமணத்த வியாபாரமா ஆக்கி்ட்ட இவங்கள்ளாம் என்ன முஸ்லிம் த்து.....
good job
ReplyDeletejazakallah khairah
good
ReplyDelete