Pages

Pages

Tuesday, February 25, 2014

கதை - கடல் அலை

                                                                                                                          

ஒரு கடல்ல சின்ன அலை ஒன்னு வந்துச்சி.
அதுக்கு பின்னால பெரிய அலை ஒன்னும் வந்துச்சி.
அந்த சின்ன அலை பெரிய அலையைப்பாத்து பயந்து நடுங்கிச்சி.அய்யோ பெரிய அலை வருதே---- வந்தா நம்மள முழிங்கிருமே---- அப்டின்னு பொளம்புச்சி.

சின்ன அலை தன்னப்பாத்து பயந்து நடுங்குறதப்பாத்தவுடனே பெரிய அலைக்கு கர்வம் வந்துச்சி ---நாம தான் பெரிய ஆளுன்னு காலர தூக்கி விட்டுச்சி.

 இதப்பாத்து கடல் சிரிச்சிச்சு.

ஏம்பா என்னப்பாத்து சிரிக்கிறன்னு பெரிய அலை கேட்டுச்சி.                   

அப்ப கடல் பெரிய அலையப்பாத்து   நீ யார் அப்டின்னு கேட்டுச்சி,

அதுக்கு நான் தான் அலை, பெரிய்ய---அலைன்னு பெரிய அலை சொல்லிச்சி. 

அப்ப கடல் திரும்பவும் சிரிச்சிச்சு.

எதுக்காக திரும்பத் திரும்ப சிரிக்கிறன்னு பெரிய அலை கேட்டுச்சி.      

அப்ப கடல் சொல்லிச்சி  ; நானும் தண்ணீதான் நீயும் தண்ணீதான் சின்ன அலையும் தண்ணீதான்.நாம எல்லாருமே ஒரே இனந்தான். ஆனா நீயோ நான் தான் பெரியவன்னு காலர தூக்கி விடுற ஆனா இன்னும் கொஞ்ச நேரத்துல என்ன நடக்குன்னு பாரு அப்டின்னு சொல்லிச்சி.                     

ஆனா அந்த பெரிய அலை என்னை யார் என்ன செய்ய முடியும் அப்டின்னு கர்வத்தோட போய் அந்த சின்ன அலையை இரக்கமில்லாமல் முழிங்கிச்சி.

சின்ன அலையை முழிங்கிட்டு யேப்பம் வுட்டுக்கிட்டே வேகமா போய் ஒருபெரிய பாறையில மோதி அந்த பெரிய அலையும் சுக்கு நூரா--- நொருங்கி---போச்சி. 

தற்பெருமையால் ஏற்படும் விளைவு இது தான்.

No comments:

Post a Comment