Pages

Pages

Monday, February 24, 2014

குடும்ப மகிழ்ச்சிக்கு பெரிதும் காரணம் ஆண்களா? பெண்களா?



                                              பெண்களே!...3                                                                                                                                
அஸ்ஸலாமு அலைக்கும் [வரஹ்]. அல்ஹம்து லில்லாஹ். அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன். வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா சய்யிதினா முஹம்மதின் வஆலிஹி வஸஹ்பிஹி அஜ்மஈன்.

ஏக இறைவனான அல்லாஹ்வை புகழ்ந்து நாயகம் [ஸல்] அவர்களின் மீது ஸலவாத்து சொல்லி என் வாதத்தை தொடங்குகிறேன். அன்பு நிறைந்த பெரியோர்களே! தாய்மார்களே! சகோதர சகோதரிகளே! இந்த பட்டி மன்றத்தை சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கிற நடுவர் ஹஜ்ரத் அவர்களே!
குடும்ப மகிழ்ச்சிக்கு பெரிதும் காரணம் பெண்களே என்பதை ஆதாரத்துடன் நிரூபிக்க வந்திருக்கிறேன்.

குடும்ப மகிழ்ச்சிக்கு காரணமா இருக்குறது பெண்கள் தான் என்று எனது அணியினர் ஆதாரத்துடன் அடித்துச் சொல்லியும் மண்டைல மசாலா இல்லாத இந்த பசங்களுக்கு விளக்கலன்னா என்ன தான் பன்னுறது?

எதிரணியில இருந்து பயாஸ் வந்தாரு.எங்களலாம் பாத்து கா வேக்காடுன்னு சொன்னாரு. ஆனா நடுவர் அவர்களே நாங்களாச்சும் கா வேக்காடா இருக்குறோம், ஆனா அவர் சுத்தமா வேகவே இல்லன்னு நெனக்கிறேன். ஏன்னா அந்த மாதிரி தான் அவர் பேசிட்டு போயிருக்காரு. அவர் பேசுன லட்சணம் என்னன்னு சொல்றேன்....கேளுங்க.

நடுவர் அவர்களே! அவர் சொன்னாரு....நாங்களுந்தான் எங்க தங்கச்சிய கவனிக்கிறோம். இன்னைக்கி நிறைய வீட்ல குமருகள் எங்களால தான் கர சேருது தெரியுமா அப்டின்னாரு. நடுவர் அவர்களே அத நானும் ஏத்துக்குறேன். ஆனா.....தங்கச்சியா இருக்குறதனால தான கவனிக்கிறாங்க.....இதே தம்பியா இருக்கட்டும் கவனிப்பாங்களா? நிச்சயமா கவனிக்க மாட்டீங்க. எப்படா இவன் போவான். இவன் சொத்தையும் சேத்து ஆட்டய போடலான்னு தான நெனப்பாங்க. என்ன நடுவர் அவர்களே நான் சொல்றது கரைக்ட்தான.........பாத்தீங்களா..... நடுவரே சொல்லிட்டாங்க. நிறைய அனுபவப்பட்டிருப்பாங்கன்னு நெனக்கிறேன்.

அதனால ஆம்பளைங்க அவங்க பாசத்த வெளிப்படுத்துறதுக்கும், அவங்க கடமைய செய்றதுக்கும்  நாங்க தான தேவப்படுறோம்.எனவே எங்களால தான மகிழ்ச்சி?

அடுத்து , உங்களுக்குலாம் எல்லாம் செஞ்சா தான் அழகு. ஆனா எங்களுக்கு எதுவும் செய்யாமயே அழகு அப்டின்னாரு. நடுவர் அவர்களே நாம இப்ப என்ன அழகு போட்டியா நடத்துறோம்? யார் அழகுன்னு முடிவு பன்றதுக்கு. எங்கள வச்சி தான் பெத்தவங்க ரொம்ப சந்தோஷப்படுறாங் கன்னு சொல்ல வந்தா அழகப்பத்தி பேசுறாரு. இவர லாம் யாருங்க பட்டிமன்றத்துல சேத்தது?

அடுத்து , பொம்பள புள்ள பொறந்தா ஒன்னும் கொடுக்க மாட்டாங்களாம். ஆனா ஆம்பளப் புள்ளைங்க பொறந்தா மட்டும் பெத்தவங்க சந்தோஷமா லட்டு கொடுப்பாங்களாம்!  இப்ப அவன் பொறந்ததுக்காக நீங்க லட்டு கொடுக்கலாம். ஆனா பின்னால அவன் உங்களுக்கு அல்வாவ கொடுத்துறுவானே அப்ப என்ன செய்வீங்க?

அதே மாதிரி , பொம்பளப் புள்ளைய பெத்தவங்க பூராம் கவலைல எதையோ பரிகொடுத்த மாதிரி இருப்பாங்களாம். கட்டிக் கொடுக்கனுமே நக எடுக்கனுமே பணம் சேக்கனுமேன்னு கவலப்பட்டுக்குட்டே.... இருப்பாங்கலாம். நடுவர் அவர்களே நான் கேக்குறேன்......இப்டி கவல பட வச்சது யாரு?.....இவங்க தான…..
  • சொத்த மாப்பிள்ளையானாலும் சொக்கத் தங்கத்துல 25 பவுன் நகை.
  • வேலைவெட்டிக்கே போகாம ஊதாரித்தனமா ஊர் சுத்துனாலும் 50 ஆயிரம் பணம்.
  • வாட்ச் வாங்க கூட வக்கில்லாதவனுக்கு கைக்கு ஒரு வாட்ச்.
  • விரலே இல்லாத விளக்கெண்ணைக்கு இன்ஷியல் போட்ட மோதிரம்.
  • நிச்சயதார்த்தம் அன்னைக்கு 100 பேருக்கு ஓசி பிரியாணி.
  • கல்யாணத்தன்னிக்கு சுத்தமான கிடாக்கறியிலே 500 பேருக்கு தண்டச்சோறு
  • சுத்த பேக்கு மாப்பிள்ளயானாலும் தேக்கு மரத்துல கட்டிலு - பீரோ
இப்படி கொஞ்சங்கூட வெக்கமில்லாம இவங்க கை நீட்டி வாங்குறதனால தான பெண்ண பெத்தவங்க கவல படுறாங்க. எல்லாத்துக்கும் இவங்க காரணமா இருந்துட்டு எங்கள குத்தம் சொல்ல வந்துட்டாங்க.

அடுத்து ஒன்னு சொன்னாரு. பொம்பளப் புள்ளைங்களாம் கல்யாணத்துக்குப் பிறகு பெத்தவங்கள அம்போன்னு விட்டுட்டு போயிறுவாங்க, நாங்க தான் கடைசி வரைக்கும் பெத்தவங்கள கவனிக்கிறோம் அப்டின்னு. யாரு.... இவங்களா..... கவனிக்கிறது?

நடுவர் அவர்களே! இன்னைக்கி ஒவ்வொரு ஆம்பளைங்களும் முறையா பெத்தவங்கள கவனிச்சா எதுக்கு முதியோர் இல்லங்கள் அதிகமாகுது? இவங்க யாரும் கவனிக்காததுனால தான வயசான பெத்தவங்க கவனிக்க ஆளில்லாம முதியோர் இல்லத்துக்கு போறாங்க.

நடுவர் அவர்களே உண்மையிலேயே பெத்தவங்கள வச்சி காப்பத்துறதுக்கு புள்ளைங்க போட்டி போடனும். ஆனா இன்னைக்கி என்ன நடக்குது ? உம்மாவ நீ வச்சிக்கோ நீ வச்சிக்கோன்னு சண்ட புடிக்கிறாங்க அண்ணன் தம்பிங்க.
அப்டித்தான் ஒரு வயசான அம்மாவுக்கு ரண்டு ஆம்பளப் புள்ளைங்க இருந்தாங்க. அண்ணன் தம்பி ரண்டு பேரும் ஆறு ஆறு மாசம் அம்மாவ கவனிக்கனும்னு ஒப்பந்தம் பன்னுனாங்க. மொத ஆறு மாசம் அண்ணன் கவனிச்சிக்கிட்டு இருந்தான். ஆறு மாசம் முடிஞ்ச உடன தம்பிக்காரன் அண்ணனுக்கு போன் பன்னி  நாங்க வெளியூருக்கு போறோம் அதனால இன்னும் ஒரு ஆறு மாசம் அம்மாவ நீயே பாத்துக்கோ அப்டின்னு சொன்னான். ஆனா அதுக்கு அண்ணங்காரன் ; முடியவே முடியாது உன் வீட்டுக்கு வர்ரதுக்கு அம்மாவுக்கு டிக்கட்லாம் போட்டாச்சு. அதனால நீ தான் பாத்துக்கனும்னு சொனான். இப்படியே ரண்டு பேரும் சண்ட போடுறாங்க. அப்போ அந்த வயசான அம்மா ; ஏன்டா வயசான காலத்துல அங்கேயும் இங்கேயும் அலய விடுறீங்கன்னு கேக்குறாங்க.

பாத்தீங்களா நடுவர் அவர்களே!  இவங்க கொஞ்சங்கூட இரக்கமில்லாம பெத்தவங்கள கஷ்டப்படுத்திட்டு எங்கள நொட்டஞ் சொல்ல வந்துட்டாங்க.

அடுத்து ஒரு பலமொழி சொன்னாரு. ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே.பெண்ணால ஆவுதோ இல்லையோ அழிவு நிறைய ஏற்படுதுன்னு சொன்னாரு. நடுவர் அவர்களே உண்மையிலேயே அந்த பலமொழிக்கு என்ன அர்த்தம் தெரியுமா? நல்லவைகள் ஆவதும் பெண்ணாலே, கெட்டவைகள் அழிவதும் பெண்ணாலே. இந்த அழகான பலமொழிய எப்படி மாத்தி சொல்றாரு பாத்தீங்களா....இதுலயே அவங்க எவ்ளோ பெரிய கேடின்னு தெரியுதுல்ல....

நடுவர் அவர்களே அதனால தான் சொல்வாங்க.....உலகத்துல நல்ல பசங்களும் டைனோஸரும் ஒன்னுன்னு. ஏன் தொரியுமா ? ஏன்னா....ரண்டு பேருமே இந்த காலத்துல இல்ல. டைனோஸரையும் பாக்க முடியாது, நல்ல  பசங்களையும் பாக்க முடியாது.

எனவே குடும்ப மகிழ்ச்சிக்கு பெரிதும் காரணம் பெண்களே பெண்களே பெண்களே என்று கூறி என் வார்த்தைக்கு திரையிடுகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்.


No comments:

Post a Comment