Pages

Pages

Tuesday, March 4, 2014

கதை - கலை நயம்

                                                                                            

ஒரு ஸ்கூல் டீச்சர், ஸ்கூல்ல படிக்கிற பசங்களோட அறிவ செக் பன்றதுக்காக ஒன்னு செஞ்சாங்க.ஒரு பையன கூப்புட்டு ஒரு சின்ன பாறையக் காட்டி இப்ப இந்த பாறைய இல்லாம ஆக்கனும், அதுக்கு நீ என்ன செய்வேன்னு கேட்டாங்க.

அந்த பையன் பக்கத்துல ஒரு குழிய தோண்டுனான். தோண்டி அந்த பாறைய அதுக்குள்ள போட்டு மூடிட்டு நான் பாறைய இல்லாம  ஆக்கிட்டேன்னு சொன்னான்.

டீச்சர் சரின்னு சொல்லிட்டு, இன்னொரு பையன கூப்புட்டு இந்த பாறைய இல்லாம ஆக்குறதுக்கு நீ என்ன பன்னுவேன்னு கேட்டாங்க. உடனே அவன் ஒரு சம்மட்டிய எடுத்து அந்த பாறைய சுக்கு நூறா ஒடைச்சான்பாத்தீங்களா டீச்சர் பாறைய இல்லாம ஆக்கிட்டேன்னு சொன்னான்.

அதுக்குப் பிறகு இன்னொரு பையன கூப்புட்டு நீ என்ன செய்வேன்னு கேட்டாங்க. உடனே அவன் ஒரு உளிய எடுத்தான். ஒரு மணி நேரமா அந்த பாறையப் போட்டு தட்டு தட்டுன்னு தட்டுனான்.ஒரு மணி நேரம் கழிச்சி பாருங்க டீச்சர் இப்ப பாறை இல்ல அப்டின்னு சொன்னான்.
ஏன்னா அப்ப அந்த பாறை ஒரு அழகான சிலையா மாறி இருந்துச்சி. அதப்பாத்து அந்த டீச்சரே ஆச்சர்யப்பட்டாங்க.


No comments:

Post a Comment