Pages

Pages

Tuesday, March 4, 2014

கதை-வரைபடம்.

                                                            
                                                                                                                                                     
ஒரு வீட்ல ஒரு பொடி பையன் இருந்தான்சேட்டன்னாலும் சேட்ட பயங்கரமான சேட்ட.சொல் பேச்சி கேக்கவே மாட்டான். ஏதாவது ஒரு சேட்ட பன்னிகிட்டே இருப்பான். ஸ்கூல் லீவுன்னா அவனோட அப்பாவுக்கு இவன எப்டி சமாளிக்கப் போறோம்னு தெரியலியேங்குற கவல வந்துறும்.
                                                     

ஒரு தடவை முழு ஆண்டு பரிச்ச முடிஞ்சி ஸ்கூல்ல லீவு வுட்டாங்க.இந்த லீவுல  எப்டியாவது இவன் சேட்டய கொறைக்கனும்னு அவனோட அப்பா நினைச்சாரு.என்ன பன்னலாம்னு யோசிச்சாரு.ஒரு ஐடியா கிடச்சிச்சி.               

என்ன ஐடியான்னா---- வீட்டு சுவத்துல ஒரு இந்திய வரைபடம் இருந்துச்சி.அத எடுத்து துண்டு துண்டா கிழிச்சாரு.  கிழிச்சி அந்த பையன் கையில கொடுத்து இத கரக்டா ஒட்டிட்டு வா. கரக்டா ஒட்டிட்டன்னா நீ என்ன கேட்டாலும் வாங்கித்தருவேன்.அப்டின்னு சொன்னாரு.                                                                                                                     
எதுக்கு அவர் அப்டி கொடுத்தாருன்னா------ இத கிழிச்சா இவனால ஒட்டவே முடியாது. அதனால இந்த லீவுல இவன் சேட்டைலயிருந்து தப்பிச்சிரலாம்னு நினைச்சிதான் அப்டி கொடுத்தார்.

 ஆனா என்ன ஆச்சர்யம் ஒரு நாள்லயே ஒட்டிக்கிட்டு வந்துட்டான்.
அதப்பாத்து ஆச்சர்யப்பட்டு டேய்! இத எப்டிடா ஒட்டுனே அப்டின்னு அப்பா கேட்டார்.

அப்ப அவன் சொன்னான் ;---- ஒன்னுமில்லப்பா அந்த அட்டைக்கு பின்னால ஒரு இளைஞருடைய ஃபோட்டா இருக்கும் நான் பாத்துருக்கேன்.அதனால அந்த ஃபோட்டாவ மட்டும் கரக்டா ஒன்னு சேத்துட்டு அப்டியே திருப்பி பாத்தேன் வரைபடம் வந்திடுச்சிப்பா அப்டின்னு சொன்னான்.


2 comments:

  1. சேட்டைபன்ற பிள்ளைகள் தாம்

    ReplyDelete
  2. தாம் தூம் என்று படிக்குமாம்

    ReplyDelete