Pages

Pages

Monday, August 18, 2014

மிஃராஜ் தரும் படிப்பினை


தொழில் நுட்பக் கோளாறு காரணமாக தமிழ் எழுத்துக்களில் கொஞ்சம் ஏற்ற இறக்கங்கள் நிகழ்ந்து விட்டது.சில இடங்களில் முன்ன பின்ன மாறியிருக்கும். வாசிப்பவர்கள் என்னை மன்னிக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.என்னால் முடிந்த வரை எல்லாவற்றிற்கும் அரபி வாசகங்களை சேர்த்திருக்கிறேன்.அதை வைத்து நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.

புனிதமான மாதத்தில் புனிதமான இரவில் புனிதம் நிறைந்த கண்மனி நாயகம் [ஸல்] அவர்களுக்கு அல்லாஹ் வழங்கிய பேரற்புதத்தை குறித்து பேசுவதற்கும்,கேட்பதற்கும்,அலசுவதற்கும்,ஆராய்வதற்கும் இந்நிகழ்வில் புதைந்து கிடக்கிற பாடங்களையும்,படிப்பினைகளையும் பார்த்து நமது ஈமானை புதுப்பித்துக் கொள்வதற்கும் சிறந்த வாய்ப்பாக அல்லாஹ் இந்நிகழ்வை நமக்கு அமைத்துத் தந்திருக்கிறான்.


இந்நிகழ்வு நிச்சயம் நமது ஈமானை புதுப்பித்து பலப்படுத்தும் என்பது திண்ணம். காரணம் ;- அல்லாஹ்வையும்,ரசூலையும்,அவர்களது அத்தாட்சிகளையும்,வஹியையும் எதையும் நேரடியாகப் பார்க்காமல் வெறும் படித்ததையும்,செவிமடுத்ததையுமே வைத்துக் கொண்டு மறைவான விஷயங்களை ஈமான் கொள்வது நிச்சயம் அது உயர்ந்த ஈமானாகத் தான் இருக்கும்.அதிலும் உலகில் அனைத்து விஞ்ஞான அறிஞர்களையும் மூக்கின் மேல் விரல் வைக்க வைத்த இந்த மிஃராஜ் பயணம்,நமது ஈமானை மெருகேற்றும் என்பதில் ஐயம் ஏதும் கிடையாது.
عَن أَنَسٍ ، قال : قال النَّبِيّ صَلَّى الله عَلَيه وَسَلَّم : أي الخلق أعجب إيمانا ؟ قالوا : الملائكة ، قال : الملائكة كيف لا يؤمنون ؟ قال : النبيون ، قال : النبيون يوحى إليهم فكيف لا يؤمنون ؟ قالوا : الصحابة ، قال : الصحابة يكونون مع الأنبياء ، فكيف لا يؤمنون ، وَلكن أعجب الناس إيمانا : قوم يجيؤون من بعدكم ، فيجدون كتابا من الوحي ، فيؤمنون به ، ويتبعونه ، فهم أعجب الناس ، أو الخلق ، إيمانًا.]مسند البزار[
உங்களுக்குப் பின்னால் ஒரு சமுதாயம் வரும்.அவர்கள் எதையும் பார்த்திருக்க மாட்டார்கள்.வேதத்தைப் படித்து அதை ஈமான் கொண்டு அதை பின்பற்றுவார்கள்.இவர்கள் தான் மக்களிலேயே ஈமானில் சிறந்தவர்கள் என்று நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள்.

இந்நிகழ்வில்  நாம் பல வினாக்களுக்கு விடை காண வேண்டும்.

இதில் என்ன நடந்தது?

எப்படி நடந்தது?

ஏன் நடந்தது?

இதில் என்ன படிப்பினைகள் உள்ளது?

மிஃராஜ் நிகழ்வின் சுருக்கம் ;-

நபி [ஸல்] அவர்கள் அவர்களின் சிறிய தந்தை அபூதாலிப் அவர்களின் மகளான உம்முஹானி [ரலி] அவர்களின் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது அவர்கள் எழுப்பப்பட்டு ஜம்ஜம் கிணற்றுக்கு அருகில் அழைத்து வரப்படுகிறார்கள். அங்கே அவர்களது நெஞ்சு பிழக்கப்பட்டு அதிலிருந்து அவர்களது இதயம் எடுக்கப்படுகிறது.அது ஜம்ஜம் நீரால் கழுகப்பட்டு ஞானத்தால் நிறப்பப்படுகிறது.பின்பு அங்கிருந்து ஃபலஸ்தீனிலுள்ள பைத்துல் முகத்தஸுக்கு வருகிறார்கள். அங்கே கூடியிருக்கிற அனைத்து நபிமார்களுக்கும் முன்னின்று தொழுகை நடத்துகிறார்கள்.

தொழுகை முடிந்த பிறகு ஒரு பாத்திரத்தில் மதுவும்,மறு பாத்திரத்தில் பாலும் கொண்டு வரப்படுகிறது.இவற்றில் எது வேண்டும் என்று கேட்ட போது பாலைத் தேர்ந்தெடுத்தார்கள்.

பின்பு அங்கிருந்து ஏழு வானங்களைக் கடந்து செல்கிறார்கள்.அங்கே எட்டு நபிமார்களை காணுகிறார்கள்.அதன் பிறகு சித்ரதுல் முன்தஹாவைக் கடந்து,பைத்துல் மஃமூரைக் கடந்தார்கள். சுவனத்தையும்,நரகத்தையும் கண்டார்கள்.இறுதியாக இறைவனை சந்தித்து தொழுகையை பரிசாகப் பெற்று வந்தார்கள்.

இந்நிகழ்வு அண்ணல் வாழ்வில் நடந்த பேரற்புதம்.உலகில் வேறு எவருக்கும் வழங்கப்படாத உயர்நத அந்தஸ்து.

ஒளியின் வேகம் ஒரு வினாடிக்கு 86282 மைல் ஆகும்.இந்த வேகமுள்ள ஒளி நமக்கு அருகில் இருக்கும் நட்சத்திரத்திலிருந்து பூமிக்கு வர சுமார் நாளரை வருடமாகும் என்று அறிவியல் கூறுகிறது.
ஆனால் நபி [ஸல்] அவர்கள் அந்த நட்சத்திரம் மட்டுமல்ல எல்லா நட்சத்திரங்களையும் கடந்து ஏழு வானங்களையும் கடந்து யாரும் கடக்க முடியாத சித்ரத்துல் முன்தஹாவையும் கடந்து அல்லாஹ்வையும் தரிசித்து வந்தது ஒரு இரவின் சிறு பகுதி என்பது ஆச்சர்யத்தின் உச்சம் என்பது நாம் அறிந்த விஷயம்.

மிஃராஜ் பயணம் ஏன் ?

காரணம் 1 ;- நபிகள் நாயகம் [ஸல்] அவர்களின் நபித்துவ வாழ்வின் தொடக்கத்தில் எதிரிகளிடமிருந்து எதிர்ப்புகளும்,தொந்தரவுகளும் வந்த நேரத்தில் அவர்களுக்கு எல்லா வகையிலும் பெரும் உருதுணையாக இருந்தது இரண்டு பேர்.

ஒன்று ; அவர்களின் சிறிய தந்தை அபூதாலிப் அவர்கள்.
எதிரிகளின் சூழ்ச்சிகளும்,அவர்களின் தந்திரங்களும் நபியைத் தொடாமல் இருக்க பெரும் உதவியாக இருந்தது இவர்கள் தான்.

"يا رَسُولَ الله، هل نَفَعْتَ أَبَا طَالِبٍ بِشَيْءٍ فإنه كان يَحُوطُكَ وَيَغْضَبُ لك؟ قال: نعم، 
هو في ضَحْضَاحٍ من نَارٍ لَوْلَا أنا لَكَانَ في الدَّرَكِ الْأَسْفَلِ من النَّارِ" متفق عليه، وفي رواية لمسلم قال صلى الله عليه وسلم: "وَجَدْتُهُ في غَمَرَاتٍ من النَّارِ فَأَخْرَجْتُهُ إلى ضَحْضَاحٍ". ]السيرة النبوية[

யாரசூலல்லாஹ்! உங்களுக்காக கோபம் கொண்டு உங்களுக்கு அரணாக இருந்த உங்களின் சிறிய தந்தை அவர்களுக்கு நீங்கள் கைமாறு செய்துள்ளீர்களா? என வினவப்பட்ட போது,ஆம் அவர்கள் நரகின் மேல் தட்டில் இருக்கிறார்கள்.நான் மட்டும் இல்லையெனில் அவர்கள் நரகின் அடிப்பகுதியில் இருந்திருப்பார்கள் என்றார்கள்.

இரண்டாவது  ;  நபிகளாரின் அன்பு மனைவி அன்னையர் திலகம் அன்னை கதீஜா [ரலி] அவர்கள்.

பெரும் செல்வச் சீமாட்டியான அன்னை அவர்கள் நபிக்காக தன் அனைத்து சொத்துக்களையும் செலவு செய்தார்கள்.நபித்துவத்திற்கு முன்பு அண்ணல் அவர்கள் ஹிரா குகையில் தன்னை தனிமைப் படுத்திக் கொண்டு இறை வணக்கத்தில் ஈடுபட்ட போது தன் வயோதிக நிலையிலும் மிக கறடு முறடான பாதைகளைக் கடந்து நபியவர்களுக்கு பல நாட்களாக உணவு எடுத்துச் சென்றார்கள்.

முதன் முதலாக ஜிப்ரயீலை சந்தித்த அதிர்ச்சியில் பதட்டத்துடனும், படபடப்புடனும் வந்த நபியவர்களை அமைதிபடுத்தி பின்பு என்ன நடந்தது என்று விசாரித்தறிந்து அவர்களுக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறியதை வரலாறு பதிவு செய்துள்ளது ;

فَرَجَعَ بِهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَرْجُفُ بَوَادِرُهُ حَتَّى دَخَلَ عَلَى خَدِيجَةَ فَقَالَ زَمِّلُونِي زَمِّلُونِي فَزَمَّلُوهُ حَتَّى ذَهَبَ عَنْهُ الرَّوْعُ قَالَ لِخَدِيجَةَ أَيْ خَدِيجَةُ مَا لِي لَقَدْ خَشِيتُ عَلَى نَفْسِي فَأَخْبَرَهَا الْخَبَرَ قَالَتْ خَدِيجَةُ كَلَّا أَبْشِرْ فَوَاللَّهِ لَا يُخْزِيكَ اللَّهُ أَبَدًا فَوَاللَّهِ إِنَّكَ لَتَصِلُ الرَّحِمَ وَتَصْدُقُ الْحَدِيثَ وَتَحْمِلُ الْكَلَّ وَتَكْسِبُ الْمَعْدُومَ وَتَقْرِي الضَّيْفَ وَتُعِينُ عَلَى نَوَائِبِ الْحَقِّ ]بخاري[

அதனால் தான் அன்னை கதீஜா இறந்த விட்ட பிறகு எப்பொழுதும் அவர்களைப் பற்றி பேசிக் கொண்டே இருப்பார்கள்.ஏதாவது பொருட்கள் அன்பளிப்பாக வந்தால் முதன் முதலாக அன்னை அவர்களின் நெருக்கமானவர்களுக்கு வழங்கும் படி கூறுவார்கள்.

ஒரு நாள் நபியவர்கள் அன்னையைப் பற்றி பேசியதைக் கண்டு ஆயிஷா [ரலி] அவர்களே ரோஷம் கொண்டு யாரசூலல்லாஹ்!  உங்களுக்கு நாங்களெல்லாம் இல்லையா? என்று கேட்டு விட்டார்கள். கடுமையாக கோபமுற்ற அருமை நாயகம் [ஸல்] அவர்கள் ; ஆயிஷாவே ! கதீஜா அவர்களுக்குப் பிறகு அவர்களை விட சிறந்த பகரத்தை அல்லாஹ் எனக்கு வழங்கவே இல்லை. 

மக்களெல்லாம் என்னை பொய்யாக்கிய போது என்னை உண்மைப்படுத்தியது அவர்கள் தான். மக்களெல்லாம் என்னை கைவிட்ட பொழுது எனக்காக தன் சொத்துக்களை தியாகம் செய்தது அவர்கள் தான்.என் மனைவிகளில் அவர்களின் மூலம் தான் எனக்கு குழந்தைப் பேற்றையும் இறைவன் வழங்கினான் என்றார்கள்.

عَنْ عَائِشَةَ، قَالَتْ: كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا ذَكَرَ خَدِيجَةَ أَحْسَنَ عَلَيْهَا الثَّنَاءَ، فَقُلْتُ: مَا تَذْكُرُ مِنْهَا وَقَدْ أَبْدَلَكَ اللَّهُ بِهَا خَيْرًا؟ قَالَ:مَا أَبْدَلَنِي اللَّهُ بِهَا خَيْرًا مِنْهَا، صَدَّقَتْنِي إِذْ كَذَّبَنِي النَّاسُ، وَوَاسَتْنِي بِمَالِهَا إِذْ حَرَمَنِي النَّاسُ، وَرَزَقَنِي اللَّهُ مِنْهَا الْوَلَدَ إِذْ لَمْ يَرْزُقْنِي مِنْ غَيْرِهَا.  ]المعجم الكبير للطبراني[



இந்தளவு நெருக்கடியான நேரத்தில் ஆதரவாகவும்,பெரும் உருதுணையாகவும் இருந்து உதவிகள் புரிந்த இவ்விருவரும் அடுத்தடுத்து மரணத்தை தழுவுகிறார்கள். நபி [ஸல்] அவர்களின் ஐம்பத்தி ஓராவது வயதில் இருவரும் இரு மாத இடைவெளியில்,இன்னொரு கருத்தின் படி மூன்று நாட்கள் இடைவெளியில் உலகை விட்டுப் பிரிகிறார்கள்.
وبعد وفاة أبي طالب بنحو شهرين أو بثلاثة أيام ـ على اختلاف القولين ـ توفيت أم المؤمنين خديجة الكبرى رضي الله عنها وكانت وفاتها في شهر رمضان في السنة العاشرة من النبوة، ولها خمس وستون سنة على أشهر الأقوال، ورسول الله صلى الله عليه وسلم إذ ذاك في الخمسين من عمره .]الرحيق المختوم[

மிகப்பெரிய இழப்பையும் நெருக்கடியையும் சந்தித்த நபி [ஸல்] அவர்களுக்கு ஆறுதல் அளிப்பதற்காகவும் அவர்களின் உள்ளத்தில் படிந்த துயரத்தை துடைப்பதற்காகவும் தான் இந்த நிகழ்வு நடந்தது.

காரணம் 2  ;- தனது எல்லா அத்தாட்சிகளையும் நபியவர்களுக்கு காண்பித்து உலகத்தில் நிறைவானவர்கள் அவர்கள் தான் என்பதை உலகிற்கு சொல்வதற்காக அல்லாஹ் இந்நிகழ்வை ஏற்பாடு செய்தான்.
இதைக் குறித்துத் தான் அல்லாஹுத்தஆலா கூறுகிறான் ;-

لِنُرِيَهُ مِنْ آيَاتِنَا
لَقَدْ رَأَى مِنْ آيَاتِ رَبِّهِ الْكُبْرَى
وَعَلَّمَكَ مَا لَمْ تَكُنْ تَعْلَمُ

காரணம் மூன்று ;- மக்களின் ஈமானை பரிசோதிப்பதற்காக இந்நிகழ்வு நடந்ததாகவும் கூறப்படுகிறது. சிலர் இந்நிகழ்வை மறுத்தனர்.ஆனால் அபூபக்கர் [ரலி] அவர்கள் ; இது மட்டுமல்ல.இதை விட தூரமான விஷயங்கள் கூட நபி [ஸல்] அவர்களின் நாவிலிருந்து வெளிப்பட்டால் அதையும் நான் ஏற்றுக் கொள்வேன் என்றார்கள்.அதனால் தான் அவர்களுக்கு சித்தீக் – உண்மையாளர் என்ற பெயர் வந்தது.

فقال النبي صلى الله عليه وسلم: " إني أسري الليلة بي ".
قالوا: إلى أين ؟ قال: إلى بيت المقدس، قالوا: ثم أصبحت بين ظهرانينا ؟ قال: نعم فمن بين مصفق ومن بين واضع يده على رأسه متعجبا، وضجوا وأعظموا ذلك.
فقال المطعم بن عدي: كل أمرك قبل اليوم كان أمما غير قولك اليوم، أنا أشهد أنك كاذب، نحن نضرب أكباد الإبل إلى البيت المقدس مصعدا شهرا ومنحدرا
شهرا، أتدعي أنت أتيته في ليلة ؟ واللات والعزى لا أصدقك.
فقال أبو بكر لمطعم: بئس ما قلت لابن أخيك، جبهته وكذبته، أما أنا فأشهد أنه صديق صادق.
فقالوا: يا محمد صف لنا بيت المقدس، كيف بناؤه وكيف هيئته ؟ وكيف قربه من الجبل ؟ وفي القوم من سافر إليه.
فذهب ينعت لهم بناءه كذا وهيئته كذا، وقربه من الجبل كذا، فما زال ينعته لهم حتى التبس عليه النعت فكرب كربا ما كرب مثله، فجئ بالمسجد وهو ينظر إليه حتى وضع دون دار عقيل أو عقال، فقالوا: كم للمسجد من باب ؟ ولم يكن عدها، فجعل ينظر إليه ويعدها بابا بابا، ويعلمهم، وأبو بكر يقول: صدقت صدقت، أشهد أنك رسول الله.
فقال القوم: أما النعت فوالله لقد أصاب.
ثم قالوا لأبي بكر: أفتصدقه أنه ذهب الليلة إلى بيت المقدس وجاء قبل أن يصبح ؟ قال: نعم إني لأصدقه فيما هو أبعد من ذلك، أصدقه بخبر السماء في غدوة أؤ روحة.
فبذلك سمي أبو بكر الصديق.]سبل الهدي[

ஏழு வானங்களில் எட்டு நபிமார்களை சந்தித்த காரணம் ;-

முதல் வானத்தில் ஆதம் நபி [அலை] அவர்கள்.

1, நபிமார்களில் முதல் நபி என்பதினால்.
2, ஆதம் [அலை] அவர்கள் பிறந்த இடமான சுவனத்திலிருந்து வெளி யேற்றப்பட்டதைப் போல் நீங்கள் ஹிஜ்ரி 1 –ம் ஆண்டு மக்காவிலிருந்து வெளியேற்றப் படுவீர்கள். அந்த சுவனத்தைப் பிரிவால் அவர்கள் சங்கடப்பட்டதைப் போல் உங்களுக்கு மக்காவின் பிரிவு சிரமத்தைத் தரும்.
3, பின்பு அவர்கள் சுவனத்திற்கு திரும்பியதைப் போன்று நீங்கள் மக்காவிற்கு திரும்புவீர்கள்.
4, ஆதம் சுவனத்தை விட்டு வெளியேறிய காரணத்தினால் தான் மக்கள் பல்கிப் பெருகினார்கள்.அதுபோல நீங்கள் மதீனா சென்ற பிறகு தான் இஸ்லாம் பல்கிப் பெருகும் போன்ற அறிவிப்புகள் உள்ளன.
 
قال ابن أبي جمرة: (الحكمة في كون آدم في السماء الدنيا لانه أول الانبياء وأول الاباء فهو أصل فكان الأول في الاولى، ولاجل تأنيس النبوة بالابوة)
وقال السهيلي رحمه الله: (فآدم وقع التنبيه بما وقع له من الخروج من الجنة إلى الارض بما سيقع للنبي صلى الله عليه وسلم من الهجرة إلى المدينة، والجامع بينهما ما حصل لكل منهما من المشقة وكراهة فراق ما لقيه في الوطن، ثم كان لكل منهما أن يرجع إلى وطنه الذي خرج منه).

وقال ابن دحية: (إن في ذلك تنبيها على أنه يقوم مقامه في مبدأ الهجرة لان مقام آدم التهيئة والنشأة وعمارة الدنيا بأولاده، وكذا كان مقام المصطفى أول سنة من الهجرة مقام تنشئة الاسلام وتربية أهله واتخاذ الانصار لعمارة الارض كلها بهذا الدين الذي أظهره الله على الدين كله،

இரண்டாவது வானத்தில் ஈஸா,யஹ்யா [அலை] அவர்கள்.

1, யூதர்கள் ஈஸா நபியை பொய்யாக்கி அவர்களுக்கு நோவினை கொடுத்தனர்,இறுதியாக அவர்களை கொல்வதற்கு திட்டமிட்டனர். அதுபோல் உங்களுக்கு ஏற்படும்.
2, யஹ்யா நபியை அவர்களை கொலை செய்து விட்டார்கள். அவர்கள் ஷஹீதானார்கள். இதுபோன்று நபிக்கும் ஷஹாதத் கிடைக்கும் என்ற அறிவிப்பு இருக்கிறது. விஷம் வைக்கப்பட்ட உணவை சாப்பிட்டு அதன் பாதிப்பு நபியின் மரண வேளை வரை நீடித்தது என்று ஹதீஸ் கூறுகிறது.
3, யஹ்யா நபிக்கு முன்பு வேறு யாருக்கும் அந்த பெயர் வைக்கப்பட வில்லை.அது போன்று நபிக்கு முன்பு வேறு எவருக்கும் முஹம்மது என்ற பெயர் வைக்கப்பட வில்லை.
3, உங்களில் எனக்கு உதவி புரிபவர் யார் என ஈஸா நபி கேட்டார்கள். அப்போது நாங்கள் உதவி புரிகிறோம் என்று அவர்களின் தோழர்கள் கூறினார்கள்.அதுபோல் நபி [ஸல்] அவர்கள் ஹிஜ்ரி 2 –ம் ஆண்டு தன் தோழர்களை பத்ருக்காக அழைப்பார்கள்.அப்போது அவர்களின் தோழர்கள் அதற்கு பதிலளிப்பார்கள் என்ற அறிவிப்பு உள்ளது.

ثم رأى في السماء الثانية عيسى ويحيى وهما الممتحنان باليهود.
أما عيسى فكذبته اليهود وآذته وهموا بقتله فرفعه الله تعالى، وأما يحيى فقتلوه، ورسول الله صلى الله عليه وسلم بعد انتقاله إلى المدينة صار إلى حالة ثانية من الامتحان.
وكان محنته فيها باليهود (آذوه) وظاهروا عليه وهموا بإلقاء الصخرة عليه ليقتلوه فنجاه الله تعالى كما نجى عيسى منهم ثم سموه في الشاة، فلم تزل تلك الاكلة تعاده حتى قطعت أبهره (كما قال عند الموت).

وقال ابن دحية: كانت حالة عيسى ومقامه معالجة بني إسرائيل والصبر على معاداة اليهود وحيلهم ومكرهم، وطلب عيسى الانتصار عليهم بقوله: (من أنصاري إلى الله) أي مع الله ؟ (قال الحواريون نحن أنصار الله) (يوسف: 92) فهذه كانت حالة نبينا صلى الله عليه وسلم في السنة الثانية من الهجرة، ففيها طلب الانصار للخروج إلى بدر العظمى فأجابوا ونصروا، فلقاؤه لعيسى في السماء الثانية تنبيه على أنه سيلقى مثل حاله ومقامه في السنة الثانية من الهجرة.

மூன்றாவது வானத்தில் யூசுப் [அலை] அவர்கள்.

இது நபியின் மூன்றாவது நிலையை அறிவிக்கிறது.

1, யூசுப் நபி அவர்களை அவர்களது சகோதரர்கள் தங்களை விட்டும் வெளியேற்றினர்.ஆனால் யூசுப் நபி அவர்கள் அவர்களை வெற்றி கொண்டு அவர்களை மன்னித்தார்கள். அதுபோல் உங்களை வெளியேற்றிய மக்களை நீங்கள் வெற்றி கொண்டு அவர்களை மன்னிப்பீர்கள்.
2, யூசுப் அவர்கள் இறந்து விட்டார்கள் என்று யஃகூப் [அலை] அவர்கள் எண்ணி சங்கடப்பட்டதைப் போல் ஹிஜ்ரி 3 –ம் ஆண்டு உஹது போர் களத்தில் நீங்கள் இறந்து விட்டீர்கள் என்று மக்கள் பீதி அடைவார்கள் என்ற அறிவிப்பு உள்ளது.

وأما لقاؤه ليوسف عليه السلام في السماء الثالثة فإنه يؤذن بحالة ثالثة تشبه حال يوسف بما جرى له مع إخوته الذين أخرجوه من بين أظهرهم ثم ظفر بهم فصفح عنهم وقال: (لا تشريب عليكم اليوم يغفر الله لكم وهو أرحم الراحمين) (يوسف: 92) وكذلك نبينا عليهالصلاة والسلام أخرجه قومه ثم ظفر بهم في غزوة الفتح فعفا عنهم وقال: (أقول كما قال أخي يوسف: (لا تثريب عليكم)).

قال ابن أبي جمرة: لان أمة محمد صلى الله عليه وسلم يدخلون الجنة على صورته، زاد ابن أقرص وإشارة إلى جعله على خزائن الارض.

ومما اتفق في غزوة أحد من المناسبة شيوع قتل المصطفى فناسب ما حصل للمسلمين من الاسف على فقد نبيهم ما حصل ليعقوب من الاسف على يوسف لاعتقاده أنه فقد إلى أن وجد ريحه بعد تطاول الامد.

நான்காவது வானத்தில் இத்ரீஸ் [அலை] அவர்கள்.

இது நபியின் நான்காவது நிலையை அறிவிக்கிறது.

முதன் முதலாக பேனா கொண்டு எழுதி எழுத்துக்கலையை உருவாக்கியது இத்ரீஸ் [அலை] அவர்கள் தான். அதுபோன்று எல்லா மன்னர்களும் பார்த்து பயப்படும் அளவுக்கு நபியின் அந்தஸ்து உயரும். அந்நேரத்தில் எல்லாருக்கும் கடிதம் மூலம் இஸ்லாத்தின் பக்கம் அழைப்பு விடுப்பார்கள் என்ற அறிவிப்பு உள்ளது.
قال السهيلي: (ثم لقاؤه لادريس عليه السلام في السماء الرابعة وهو المكان الذي سماه الله (مكانا عليا) (مريم: 57) فإن الله تعالى شرفه بالنبوة وأنزل عليه ثلاثين صحيفة وهو أول من خط بالقلم ونظر في علم النجوم والحساب وأول من خاط الثياب ولبسها وكانوا يلبسون الجلود  وإدريس أول من آتاه الله الخط بالقلم فكان ذلك مؤذنا بحال رابعة وهي علو شأنه عليه السلام حتى خافه الملوك وكتب إليهم يدعوهم إلى طاعته

ஐந்தாவது வானத்தில் ஹாரூன் [அலை] அவர்கள்.

1, ஆறாவது வானத்தில் மூஸா நபி அவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு நெருக்கமானவர்களாக இருந்த காரணத்தினால் ஹாரூன் நபி அவர்கள் ஐந்தாவது வானத்தில் இருந்தார்கள்.
2, ஒரு கட்டத்தில் ஹாரூன் [அலை] அவர்கள் மீது கோபம் கொண்ட மக்கள் பின்பு அவர்களை நேசிக்க ஆரம்பித்தனர். அதுபோல் நபியை விரோதம் கொண்டவர்கள் பின்பு நேசம் கொள்வார்கள் என்ற அறிவிப்பு உள்ளது.
3, அல்லாஹ்வுடன் உரையாடுவதற்காக சென்ற மூஸா நபி அவர்கள் அந்நேரத்தில் ஹாரூன் நபியை தனக்குப் பகரமாக மக்களிடம் விட்டுச் சென்றார்கள். ஆனால் அம்மக்கள் ஒப்பந்தத்தை மீறி ஹாரூன் [அலை] அவர்களை கொல்ல முயற்சித்தனர்.காளைக் கன்றை தெய்வமாக்கி 
வணங்க ஆரம்பித்தனர்.

அதுபோல் யூதர்கள் அனைவரும், நபிக்கு உதவி புரிவோம் 
என்ற ஒப்பந்தத்தை மீறி ஒன்று திரண்டு குறைஷிகளையும் தங்களுடன் இணைத்துக் கொண்டு நபியுடன் போர் செய்ய முனைந்தனர்.அப்போது அவர்களைத் தடுப்பதற்காகத் தான் நபி [ஸல்] அவர்கள் அகழ் தோண்டும் படி உத்தரவிட்டார்கள்.இது ஹிஜ்ரி 5 –ம் ஆண்டு நடந்தது.
عَنْ مُحَمّدِ بْنِ إسْحَاقَ الْمُطّلِبِيّ قَالَ ثُمّ كَانَتْ غَزْوَةُ الْخَنْدَقِ فِي شَوّالٍ سَنَةَ خَمْسٍ
أَنّ نَفَرًا مِنْ الْيَهُودِ ، مِنْهُمْ سَلّامُ بْنُ أَبِي الْحَقِيقِ النّضْرِيّ ، وَحُيَيّ بْنُ أَخْطَبَ النّضْرِيّ ، وَكِنَانَةُ بْنُ أَبِي الْحَقِيقِ النّضْرِيّ ، وَهَوْذَةُ بْنُ قَيْسٍ الْوَائِلِيّ ، وَأَبُو عَمّارٍ الْوَائِلِيّ ، فِي نَفَرٍ مِنْ بَنِي النّضِيرِ وَنَفَرٍ مِنْ بَنِي وَائِلٍ وَهُمْ الّذِينَ حَزّبُوا الْأَحْزَابَ عَلَى رَسُولِ اللّهِ صَلّى اللّهُ عَلَيْهِ وَسَلّمَ خَرَجُوا حَتّى قَدِمُوا عَلَى قُرَيْشٍ مَكّةَ ، فَدَعَوْهُمْ إلَى حَرْبِ رَسُولِ اللّهِ صَلّى اللّهُ عَلَيْهِ وَسَلّمَ...... ثُمّ خَرَجَ أُولَئِكَ النّفَرُ مِنْ يَهُودَ حَتّى جَاءُوا غَطَفَانَ ، مِنْ قَيْسِ عَيْلَانَ ، فَدَعَوْهُمْ إلَى حَرْبِ رَسُولِ اللّهِ صَلّى اللّهُ عَلَيْهِ وَسَلّمَ وَأَخْبَرُوهُمْ أَنّهُمْ سَيَكُونُونَ مَعَهُمْ عَلَيْهِ وَأَنّ قُرَيْشًا قَدْ تَابَعُوهُمْ عَلَى ذَلِكَ فَاجْتَمَعُوا مَعَهُمْ فِيهِ . فَلَمّا سَمِعَ بِهِمْ رَسُولُ اللّهِ صَلّى اللّهُ عَلَيْهِ وَسَلّمَ ضَرَبَ الْخَنْدَقَ عَلَى الْمَدِينَةِ. ]سيرة ابن هشام[

(ولقاؤه في السماء الخامسة لهارون المحبب في قومه يؤذن بحب قريش وجميع العرب له بعد بغضهم فيه).
وقال ابن أبي جمرة: إنما كان هارون في الخامسة لقربه من أخيه موسى، وكان موسى أرفع منه بفضل كلام الله تعالى.

وقال ابن دحية ما نال هارون من بني إسرائيل من الاذى ثم الانتصار عليهم والايقاع بهم وقصر التوبة فيهم على القتل دون غيره من العقوبات المنحطة عنه، وذلك أن هارون عندما تركه موسى في بني إسرائيل وذهب لموعدالمناجاة تفرقوا على هارون وتحزبوا عليه وداروا حول قتله ونقضوا العهد وأخلفوا الموعد واستضعفوا جانبه كما حكى الله تعالى ذلك عنهم وكانت الجناية العظمى التي صدرت منهم عبادة العجل فلم يقبل الله تعالى منهم التوبة إلا بالقتل فقتل في ساعة واحدة سبعون ألفا كان نظير ذلك في حقه صلى الله عليه وسلم ما لقيه في السنة الخامسة من الهجرة من يهود قريظة والنضير وقينقاع، فإنهم نقضوا العهد وحزبوا الاحزاب وجمعوها وحشدوا وحشروا وأظهروا عداوة
النبي صلى الله عليه وسلم وأرادوا قتله.
ونظير استضعاف اليهود لهارون استضعافهم المسلمين في غزوة الخندق كما سيأتي بشط ذلك.

ஆறாவது வானத்தில் மூஸா [அலை] அவர்கள்.

மூஸா [அலை] அவர்கள் பைத்துல்முகத்தஸை கைப்பற்றுவதற்காக அங்கே சென்று போரிடுவதற்கு தன் சமூகத்தை அழைத்தார்கள். அப்போது அவர்கள்,நாங்கள் வர மாட்டோம்,வேண்டுமென்றால் நீங்களும் உங்கள் இறைவனும் சேர்ந்து போரிடுங்கள் என்று கூறி மறுத்து விட்டனர். உள்ளே செல்ல வில்லை. அதுபோன்று நபி [ஸல்] அவர்களும் ஹிஜ்ரி 6 –ம் ஆண்டு மக்காவிற்குள் நுழைய முற்படும் போது தடுக்கப்படுவார்கள் என்பதை அறிவிக்கிறது.
وقال ابن دحية: (يؤذن لقاؤه في السادسة بمعالجة قومه فإن موسى ابتلي بمعالجة بني إسرائيل والصبر على أذاهم، وما عالجه المصطفى في السنة السادسة لم يعالج قبله ولا بعده مثله، أراد أن يقيم الشريعة في الارض المقدسة وحمل قومه على ذلك فتقاعدوا عنه وقالوا: إن فيها قوما جبارين وإنا لن ندخلها أبدا حتى يخرجوا منها.
وفي الاخر سجلوا بالقنوط فقالوا: إنا لن ندخلها أبدا ما داموا فيها، فغضب الله عليهم وحال بينهم وبينها، وأوقعهم في التيه.
وكذلك أراد النبي صلى الله عليه وسلم في السنة السادسة أن يدخل بمن معه مكة يقيم بها شريعة الله وسنة إبراهيم، فصدوه فلم يدخلها في هذا العام، فكان لقاؤه لموسى تنبيها على التأسي به وجميل الاثر في السنة القابلة.


ஏழாவது வானத்தில் இப்ராஹீம் [அலை] அவர்கள்.

1, நபி [ஸல்] அவர்கள் ஹபீபுல்லாஹ்.இப்ராஹீம் [அலை] அவர்கள் கலீலுல்லாஹ். கலீலுல்லாஹ் என்பது ஹபீபுல்லாஹ் விற்கும் அடுத்த அந்தஸ்தாகும்.எனவே நபி [ஸல்] எல்லாவற்றையும் கடந்து அல்லாஹ்வை தரிசித்த போது அதற்கு அடுத்த நிலையில் இப்ராஹீம் நபியை அல்லாஹ் வைத்தான்.
2, ஹிஜ்ரி 7 –ம் ஆண்டு தான் நபியவர்கள் இப்ராஹீம் நபியின் சுன்னத்தான உம்ராவை நிறைவு செய்வதற்காக மக்காவுக்கு சென்றார்கள்.இந்த அறிவிப்பும் இதில் உண்டு.
قال ابن أبي جمرة: (وإنما كان إبراهيم في السماء السابعة لانه الاب الاخير، فناسب أن يتجدد للنبي صلى الله عليه وسلم بلقائه أنس لتوجهه بعده إلى عالم آخر، وأيضا فمنزلة الخليل تقتضي أرفع المنازل، ومنزلة الحبيب أرفع من منزلته فلذلك ارتفع النبي صلى الله عليه وسلم عن منزلة إبراهيم إلى قاب قوسين أو أدنى) (1).
وقال ابن دحية: (مناسبة لقائه لابراهيم عليه السلام في السماء السابعة أن النبي صلى الله عليه وسلم اعتمر عمرة القضاء في السنة السابعة من الهجرة، ودخل مكة وأصحابه ملبين معتمرين محييا لسنة إبراهيم ومقيما لرسمه الذي كانت الجاهلية أماتت ذكره وبدلت أمره. ]سبل الهدي والرشاد[
மிஃராஜ் தரும் படிப்பினைகளில் சில.....

1, அல்லாஹ்வை நெருங்க வேண்டுமெனில் உள்ளப் பரிசுத்தம் தேவை என்பதை நபியின் உள்ளம் ஜம்ஜம் நீரால் கழுகிய நிகழ்வு உணர்த்துகிறது.

2, மக்காவிலிருந்து புறப்பட்டு பைத்துல் முகத்தஸ் செல்வதற்கு முன்பு ஜிப்ரயீல் அலை அவர்கள் நபி ஸல் அவர்களை ஒரு சில முக்கியமான இடங்களுக்கு அழைத்துச் சென்று அங்கே தொழும்படி கூறுகிறார்கள்.எனவே புனிதஸ்தலங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை இது உணர்த்துகிறது.

فسرت فقال : انزل فصل . فصليت ، فقال : أتدري أين صليت ؟ [ صليت بطيبة وإليها المهاجر ، ثم قال : انزل فصل . فصليت ، فقال : أتدري أين صليت ؟ ] صليت بطور سيناء ، حيث كلم الله موسى ، ثم قال : انزل فصل . فصليت ، فقال : أتدري أين صليت . صليت ببيت لحم ، حيث ولد عيسى ، عليه السلام ، ثم دخلت بيت المقدس


3, அல்லாஹ்வை நோக்கி பயணிக்க வேண்மெனில் ஒரு பூரணத்துவம் அடைந்த வழிகாட்டி வேண்டும் என்பதை இப்பயணத்தில் ஜிப்ரயீல் [அலை] அவர்களின் தோழமை உணர்த்துகிறது.

4, இப்பயணம் நபித்துவத்திலிருந்து 11 வது வருடத்தின் இடையில் நடந்தது.அதாவது நபியின் 52 வது வயதில்.நபித்துவம் 23 ஆண்டுகள் என்றால் இந்நிகழ்வு சரியாக அதன் மத்தியில் நடை பெற்றிருக்கிறது.
வெள்ளிக்கிழமை வார நாட்களில் முதல் நாளாகும்.அந்த அடிப்படையில் இந்நிகழ்வு நடந்த திங்கள்கிழமை வாரத்தின் மத்தியாகும். எனவே இதன் மூலம் எதிலும் நடுநிலமை வேண்டும் என்று உணர்த்தப்படுகிறது.

5, உயர்நத அந்தஸ்தைக் குறித்து பேசும் இடத்தில் கூட அடியாரை அழைத்துச் சென்றான் என்று எளிமையான பெயரை பயன்படுத்தி யிருப்பது எப்பொழுதும் பணிவு வேண்டும்.அது தான் மனிதனை உயர்த்தும் என்ற பாடத்தை தருகிறது.

இன்றைக்கு உலகிலே பலருக்கு நிறைய திறமை, நிறைய அறிவு இருந்தும் தங்கள் வாழ்வில் ஒவ்வொன்றையும் பல போராட்டங்கள், பல முயற்சிகள், பல தடைக் கற்களைத் தாண்டியே பெற்றுக் கொள் வார்கள். ஆனால் அந்த அளவு திறமையும், புத்திசாலித் தனமும் இல்லாத ஒரு சிலர் எளிதாக நல்ல வேலை,அந்தஸ்து, பதவி என உயர்ந்த நிலைக்குப் போய் விடுவார்கள். அவர்கள் விரும்பிய அனைத்தும் எளிதில் கிடைத்து விடும்.அவர்களுக்கு தொட்டதெல 
துலங்கும்.
இந்த இரு சாராரின் குணங்களை நாம் சற்று ஆராய்ந்தால்

 அவர்களுக்கிடைய நிலவும் இந்த வேறுபாட்டை புரிந்து கொள்ளலாம். வாழ்வில் மேலும் மேலும் உயர்ந்து கொண்டே செல்பவர்களை நாம் நோக்கினால் நிச்சயம் அவரிகளிடம் பணிவு, அடக்கம் மேலோங்கி இருப்பதைக் காண முடியும்.
قال : لما وصل محمد صلوات الله عليه إلى الدرجات العالية والمراتب الرفيعة في العارج أوحى الله تعالى إليه : يا محمد بم أشرفك؟ قال : { رب بأن تنسبني إلى نفسك بالعبودية } فأنزل الله فيه : { سُبْحَانَ الذى أسرى بِعَبْدِهِ }
இந்தப் பணிவைக் கொண்டு தான் நபி ஸல் அவர்கள் இவ்வளவு பெரிய மகத்தான அந்தஸ்தைப் பெற்றார்கள் என்பதையும் உணர்த்துகிறது.

6, 50 நேரத்தொழுகை பல முறை திரும்பத் திரும்பக் கேட்டு கொஞ்சம் கொஞ்சம் குறைக்கப்பட்டு 5 நேரமாக ஆனது.எத்தனை முறை நாம் அல்லாஹ்விடம் இறைஞ்சினாலும் அவன் கொடுக்கத் தயங்க மாட்டான் என்ற பாடம் இதில் உண்டு.
  
7, அல்லாஹ் நினைத்தால் எதுவும் நடக்கும்,நம் அறிவுக்கு எட்டாததும் சாத்தியமாகும் என்பதை இந்நிகழ்வு காட்டி விட்டது. அறிவை வைத்துக் கொண்டு நாம் மார்க்கத்தை அளவீடு செய்யக் கூடாது.மார்க்கம் என்று வந்து விட்டால் அது அறிவுக்கு எட்டா விட்டாலும் அதை ஏற்க வேண்டும்.

ثم قالوا لأبي بكر: أفتصدقه أنه ذهب الليلة إلى بيت المقدس وجاء قبل أن يصبح ؟ قال: نعم إني لأصدقه فيما هو أبعد من ذلك، أصدقه بخبر السماء في غدوة أؤ روحة.
فبذلك سمي أبو بكر الصديق.]سبل الهدي[
அது தான் உண்மையான ஈமானின் அடையாளம்.

8, அபூதாலிப் மற்றும் அன்னை கதீஜாவின் மரணத்திற்குப் பிறது தான் மிஃராஜ் நிகழ்ந்தது.எனவே கஷ்டம் வரும்போது பொருமை காண்டால் அல்லாஹ் நிச்சயம் அதற்கு சிறந்த பகரத்தைத் தருவான் என்ற பாடம் இதில் இருக்கிறது.

நாம் வாழ்கின்ற இந்த உலக வாழ்க்கை, இன்பமும்,துன்பமும் கலந்த கலவை.துன்பத்தை அனுபவிக்காமல் இன்பத்திலேயே மூழ்கியவனும் கிடையாது.இன்பத்தை சுவைக்காமல் துன்பத்திலேயே சிக்கியவனும் கிடையாது. நம்மைப் படைத்த இறைவன் இரண்டையும் ஒன்றன் பின் ஒன்றாகத் தருகிறான்.
ஒரு நொடியில் ஏற்படும் துன்பம், அடுத்த நொடியில் ஏற்படும் இன்பத்தால் மறைந்து போய்விடும். ஓர் உயிரிழப்பு ஏற்பட்டு துன்பத்தில் துவண்டு கொண்டிருக்கும் ஒரு வீட்டில், புது வரவாக ஒரு குழந்தை பிறப்பது, அந்த வீட்டில் குதூகலத்தை ஏற்படுத்துகிறது. பொருளாதாரத்தில் மிகுந்த நஷ்டத்தை சந்தித்து மனம் நொந்து போன ஒருவனுக்கு சிறந்த ஊதியத்தில் பணி கிடைக்கிற போது, நஷ்டத்தைக் குறித்த கவலை காணாமல் போகிறது. இது மனித வாழ்கையின் தாத்பரியம்.இந்த தாத்பரியத்தை ஒருவன் புரிந்து கொண்டால் கஷ்டங்களை சுலபமாக எதிர்கொள்ளும் பக்குவத்தைப் பெற்று விடுவான்.

அறிஞர் லுக்மான் அலைஹிஸ் ஸலாம் அவர்கள் தன் மகனை அழைத்துக் கொண்டு அவசரமாக ஒரு ஊருக்குப் புறப்படுகிறார்கள். வழியில் ஒரு காட்டுப் பகுதியில் மகனின் காலில் முள் ஒன்று தைத்து இரத்தம் வழிகிறது. கடுமையான வலி. நடக்க முடியவில்லை. சரி இன்றிரவு இங்கேயே பொழுதைக் கழித்து விட்டு வலி குறைந்ததும் பயணிக்கலாம் என்று அங்கு தங்குகிறார்கள். மறுநாள் காலையில் புறப்பட்டு அந்த ஊருக்கு சென்று பார்த்தபோது ஒரே மயானமாக காட்சி தந்தது . அன்று அதிகாலையில் நடந்த பூகம்பத்தில் அந்த ஊரே காணாமல் போயிருந்தது.மகனே! ஒருவேளை உன் காலில் முள் குத்தாமல் இருந்திருந்தால் நாமும் பூமிக்குள் புதையுண்டிருப்போம் 
என்று அறிஞர் லுக்மான் {அலை} அவர்கள் தன் மகனிடம் கூறினார்கள் 

பொறுமை இருந்தால் நிச்சயம் மேன்மையை அடைய முடியும் என்பதை பல்வேறு நிகழ்வுகள் உணர்த்துகின்றன 

عَنْ صُهَيْبٍ قَالَ
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَجَبًا لِأَمْرِ الْمُؤْمِنِ إِنَّ أَمْرَهُ كُلَّهُ خَيْرٌ وَلَيْسَ ذَاكَ لِأَحَدٍ إِلَّا لِلْمُؤْمِنِ إِنْ أَصَابَتْهُ سَرَّاءُ شَكَرَ فَكَانَ خَيْرًا لَهُ وَإِنْ أَصَابَتْهُ ضَرَّاءُ صَبَرَ فَكَانَ خَيْرًا لَهُ .]مسلم[


قَالَ حَدَّثَنِي عَطَاءُ بْنُ أَبِي رَبَاحٍ قَالَ قَالَ لِي ابْنُ عَبَّاسٍ
أَلَا أُرِيكَ امْرَأَةً مِنْ أَهْلِ الْجَنَّةِ قُلْتُ بَلَى قَالَ هَذِهِ الْمَرْأَةُ السَّوْدَاءُ أَتَتْ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ إِنِّي أُصْرَعُ وَإِنِّي أَتَكَشَّفُ فَادْعُ اللَّهَ لِي قَالَ إِنْ شِئْتِ صَبَرْتِ وَلَكِ الْجَنَّةُ وَإِنْ شِئْتِ دَعَوْتُ اللَّهَ أَنْ يُعَافِيَكِ فَقَالَتْ أَصْبِرُ فَقَالَتْ إِنِّي أَتَكَشَّفُ فَادْعُ اللَّهَ لِي أَنْ لَا أَتَكَشَّفَ فَدَعَا لَهَا

عَنْ ثَابِتٍ عَنْ أَنَسٍ قَالَ
مَاتَ ابْنٌ لِأَبِي طَلْحَةَ مِنْ أُمِّ سُلَيْمٍ فَقَالَتْ لِأَهْلِهَا لَا تُحَدِّثُوا أَبَا طَلْحَةَ بِابْنِهِ حَتَّى أَكُونَ أَنَا أُحَدِّثُهُ قَالَ فَجَاءَ فَقَرَّبَتْ إِلَيْهِ عَشَاءً فَأَكَلَ وَشَرِبَ فَقَالَ ثُمَّ تَصَنَّعَتْ لَهُ أَحْسَنَ مَا كَانَ تَصَنَّعُ قَبْلَ ذَلِكَ فَوَقَعَ بِهَا فَلَمَّا رَأَتْ أَنَّهُ قَدْ شَبِعَ وَأَصَابَ مِنْهَا قَالَتْ يَا أَبَا طَلْحَةَ أَرَأَيْتَ لَوْ أَنَّ قَوْمًا أَعَارُوا عَارِيَتَهُمْ أَهْلَ بَيْتٍ فَطَلَبُوا عَارِيَتَهُمْ أَلَهُمْ أَنْ يَمْنَعُوهُمْ قَالَ لَا قَالَتْ فَاحْتَسِبْ ابْنَكَ قَالَ فَغَضِبَ وَقَالَ تَرَكْتِنِي حَتَّى تَلَطَّخْتُ ثُمَّ أَخْبَرْتِنِي بِابْنِي فَانْطَلَقَ حَتَّى أَتَى رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَخْبَرَهُ بِمَا كَانَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَارَكَ اللَّهُ لَكُمَا فِي غَابِرِ لَيْلَتِكُمَا قَالَ فَحَمَلَتْ  ]مسلم[

9, இந்த விஷயத்தை மக்களிடம் சொல்ல வேண்டாம்.மக்கள் நம்ப மாட்டார்கள் என்று உம்முஹானீ [ரலி] அவர்கள் தடுத்த போதும் தாஹா நபியவர்கள் தயங்காமல் வெளிப்படுத்தினார்கள். உண்மையை உரைப்பதற்கு யாருக்கும் அஞ்சக் கூடாது என்று இதன் மூலம் உணர்த்தப் படுகிறது.   

10, பெண்கள் தங்கள் கணவன்களுக்கும் மரியாதை அளிக்க வேண்டும்.
عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ
قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أُرِيتُ النَّارَ فَإِذَا أَكْثَرُ أَهْلِهَا النِّسَاءُ يَكْفُرْنَ قِيلَ أَيَكْفُرْنَ بِاللَّهِ قَالَ يَكْفُرْنَ الْعَشِيرَ وَيَكْفُرْنَ الْإِحْسَانَ لَوْ أَحْسَنْتَ إِلَى إِحْدَاهُنَّ الدَّهْرَ ثُمَّ رَأَتْ مِنْكَ شَيْئًا قَالَتْ مَا رَأَيْتُ مِنْكَ خَيْرًا قَطُّ ]بخاري[

قَالَ لَهُ أَلَا أُخْبِرُكَ بِخَيْرِ مَا يَكْنِزُ الْمَرْءُ الْمَرْأَةُ الصَّالِحَةُ إِذَا نَظَرَ إِلَيْهَا سَرَّتْهُ وَإِذَا أَمَرَهَا أَطَاعَتْهُ وَإِذَا غَابَ عَنْهَا حَفِظَتْهُ . ]ابو داود[

11,அமல்கள் குறைவாக இருந்தாலும் நிறைவான பாக்கியம் கிடைக்கும்.

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِبِلَالٍ عِنْدَ صَلَاةِ الْغَدَاةِ يَا بِلَالُ حَدِّثْنِي بِأَرْجَى عَمَلٍ عَمِلْتَهُ عِنْدَكَ فِي الْإِسْلَامِ مَنْفَعَةً فَإِنِّي سَمِعْتُ اللَّيْلَةَ خَشْفَ نَعْلَيْكَ بَيْنَ يَدَيَّ فِي الْجَنَّةِ قَالَ بِلَالٌ مَا عَمِلْتُ عَمَلًا فِي الْإِسْلَامِ أَرْجَى عِنْدِي مَنْفَعَةً مِنْ أَنِّي لَا أَتَطَهَّرُ طُهُورًا تَامًّا فِي سَاعَةٍ مِنْ لَيْلٍ وَلَا نَهَارٍ إِلَّا صَلَّيْتُ بِذَلِكَ الطُّهُورِ مَا كَتَبَ اللَّهُ لِي أَنْ أُصَلِّيَ . ]مسلم[
12, முக்கியமான பயணங்கள்  புறப்படும் போது நல்லோர்களின் ஆசியைப் பெற வேண்டும் என்பதை பைத்துல் முகத்தஸில் எல்லா 
நபிமார்களையும் சந்தித்த நிகழ்வு உணர்த்துகிறது.



13, அல்லாஹ்வை சந்தித்த போது அல்லாஹ்வை புகழும் விதமாக அத்தஹிய்யாத்து லில்லாஹி என்று தஷஹ்ஹுதில் வரும் வார்த்தை களைக் கூறினார்கள்.அப்போது அல்லாஹ் அஸ்ஸலாமு அலைக்கு அய்யுஹன் நபிய்யு என்று கூறினான்.ஆனால் நபி ஸல் அவர்கள் அஸ்ஸலாமு அலைனா வஅலா இபாதில்லாஹிஸ் ஸாலிஹீன் என்று அந்த ஸலாமில் தன் உம்மத்தையும் இணைத்தார்கள்.

فتقدم سيدنا محمد إلى سدرة المنتهى .. واقترب منها ..

ثم قال سيدنا رسول الله : التحيات لله والصلوات الطيبات

رد عليه رب العزة : السلام عليك أيها النبي ورحمة الله وبركاته.

قال سيدنا رسول الله : السلام علينا وعلى عباد الله الصالحين.

فقال سيدنا جبريل (وقيل الملائكة المقربون ) : أشهد أن لا إله إلا الله .. وأشهد أن 
محمدا رسول الله
அல்லாஹ்வை சந்தித்தல்,அல்லாஹ்வை பார்த்தல் என்பது உலகத் திலேயே ஈடுஇணையற்ற இன்பம்.அதற்கு நிகராக வேறெந்த இன்பமும் உலகிலும் இல்லை,மறுமையிலும் இல்லை.

சுவனவாசிகளுக்கு அல்லாஹ்வின் தரிசனம் கிடைத்தால் அவர்கள் சுவனத்தின் அனைத்து இன்பங்களையும் மறந்து விடுவார்கள் என ஹஸன் பஸரி ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.
قال الحسن: «إذا تجلى لأهل الجنة نسوا كل نعيم الجنة 

அல்லாஹ்வைப் பார்க்கும் இன்பம் உலகமே கிடைத்ததைப் போன்று.சுவனத்தின் மற்ற இன்பங்கள் அந்த உலகத்தில் ஒரு சிறு 
சிட்டுக்குருவியைப் போன்று என்று கூறுவார்கள். 
ولا تظنن أن أهل الجنة عند النظر إلى وجه الله تعالى يبقى للذة الحور والقصور متسع في قلوبهم، بل تلك اللذة بالإضافة إلى لذة نعيم أهل الجنة كلذة ملك الدنيا والاستيلاء على أطراف الأرض ورقاب الخلق بالإضافة إلى لذة الاستيلاء على عصفور واللعب به، والطالبون لنعيم الجنة عند أهل المعرفة وأرباب القلوب كالصبي الطالب للعب بالعصفور التارك للذة الملك وذلك لقصوره عن إدراك لذة الملك » 


சுவனத்தின் மற்ற இன்பங்கள் அனைத்தையும் மறக்கச் செய்யும் அத்தகைய மாபெறும் இன்பத்தின் போது கூட அண்ணலம் பெருமானார் ஸல் அவர்கள் தன் உம்மத்தை மறக்காமல் நினைத்துப் பார்த்தார்கள் என்றால் அவர்கள் எந்தளவு தன் உம்மத்தின் மீது அளவு கடந்த அன்பு வைத்துள்ளார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

அத்தகைய நாயகத்தை என்றும் நினைத்துப் பார்ப்போம்.
இன்ஷா அல்லாஹ் அவர்களோடு சுவனத்தில் இணைவோம்.

இன்னும் எண்ணற்ற பாடங்களை இந்த விண்ணேற்றப் பயணம் தாங்கி நிற்கிறது.இதிலுள்ள அகமியங்களையும் பாடங்களையும் படிப்பினை களையும் விளங்கி அதைப் பின்பற்றி ஈருலக வெற்றிகளைப் பெறுவதற்கு வல்லோனாம் அல்லாஹ் அருள்புரிவானாக ஆமீன்.    




5 comments: