Pages

Pages

Thursday, November 8, 2018

கல்வியே 2


                                                                                கல்வியே – 2                                                        
எல்லாப்புகழும் ஏகனாய் வாழும் வல்லோன் உனக்கே வான் புகழ் அல்லாஹ்,அல்ஹம்து லில்லாஹ். எம்பெருமானார் கண்மனி நாயகம் ரசூலே கரீம் ஸல் அவர்கள் மீதும், அவர்களின் குடும்பத்தார்கள், தோழர்கள், மற்றும் நம் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் அன்பும் அருளும் உண்டாவதாக ஆமீன்.   
                                   
அன்பிற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே பாசத்திற்குரிய நடுவர் அவர்களே அல்லாஹுத்தஆலா தன் திருமறையின் முதன் வார்த்தையாக எதை  இறக்கி பெருமை சேர்த்தானோ அந்த கல்விக்கு பெருமை சேர்க்க வந்திருக்கிறேன். அண்ணல் நபி ஸல் அவர்கள் எந்த கல்வியை கற்றுக் கொடுப்பதற்காகத்தான் நான் வந்துள்ளேன் என்று கூறினார்களோ அந்த கல்வியை உயர்த்திப்பேச நான் வந்துள்ளேன்.                                   
அறிவுக்களஞ்சியம் நடுவர் அவர்களே, படிப்பால் இந்த ஊருக்கு பெருமை சேர்த்துக்கொண்டிருக்கிற என் நண்பன் ஆஷிக் அவர்களே மழைக்குக்கூட ஸ்கூல் பக்கம் ஒதுக்காத கைநாட்டர்களே,எங்க பேச்ச ஆவலாய் கேட்டுக் கொண்டிருக்கிற அறிவு ஜீவிகளே உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை ஸலாம் கூறி என் வாதத்திற்கு வருகிறேன். அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.                                
கல்வி மேன்மையைத்தரும்...உயர்வைத்தரும்...என்றெல்லாம் என் நண்பன் அடித்துச்சொல்லியும் இந்த மர மண்டைங்களுக்கு ஏரலன்னா நான் என்ன பன்றது!                                                            
நடுவர் அவர்களே இவங்க பணம் பணம் பணம்னு வாயப் பொளக்குறாங்களே அந்த பணம் எந்தளவுக்கு ஆபத்துன்னு தெரியுமா...அந்த பணம் எந்தளவுக்கு டேஞ்சர்னு தெரியுமா... அந்த பணம் என்தளவுக்கு வேஸ்டுன்னு தெரியுமா...நான் வரிசையாக அடுக்குறேன் குறிச்சிக்கோங்க.                                                                    
இன்னைக்கி பணத்தாச வந்துட்டாலே எல்லா நல்ல குணமும் மாறிடுங்குறத சொல்லித்தான் தெரிய வேண்டுமா... அப்படித்தான்  நஸீமா,ஜெஸீமான்னு ரண்டு பெண்கள் பேசிக்கிட்டாங்க. அடியே ஜெஸீமா உன் மாமியார் கிட்டயிருந்து எப்டிடீ  சாவிக்கொத்த புடுங்குன... அப்டின்னு நஸீமா கேட்டா. அதையாடீ... கேக்குறே திடீர்னு ஒரு நாள் நான் காக்கா வலிப்பு வந்த மாதிரி நடிச்சேன்.உடனே என் மக்கு மாமியார் என்ன பன்னுனா... சாவிக்கொத்த எடுத்து என் கையில தந்துட்டா,அப்டித்தான் அவ கிட்டயிருந்து அத வாங்குன நஸீமா அப்டின்னு சொன்னாளாம். பாத்தீங்களா நடுவர் அவர்களே பணம் பணம்னு அலைறவங்க நிலைமலாம் இப்டித்தான் இருக்கும்.யார எப்படி ஏமாத்தலாம்,யாருக்கு எப்படி குழி பறிக்கலாம் என்ற எண்ணந்தான் அதிகமா இருக்கும்.       
ஏ செல்வத்துக்கு வக்காலத்து வாங்க வந்திருக்குற பணத்தாச புடிச்சவங்களா நல்லா சொல்றேன் கேளுங்க.. பூட்டி பூட்டி வைக்கிற செல்வம் உங்களுக்கு சிறப்பத்தராது.நரக நெருப்பத்தான் தரும்.இத நான் சொல்லல அல்லாஹ்வே சொல்றான் கேளுங்க.                                                           
அல்லாஹுத்தஆலா ஹுமஸா என்ற சூரால சொல்றான். யஹ்ஸபு அன்ன மாலஹு அஹ்லதா கல்லா லயும்பதன்ன ஃபில் ஹுதமா செல்வத்த சேமித்து வைத்தவனுக்கு அந்த செல்வம் நிரந்தரமான வாழ்வைத்தரும் என்று எண்ணிக்கொண்டானா...? இல்லை இல்லை நிச்சயமாக அவன் ஹுதமா என்ற நரகத்தில் தான் வீசப்படுவான் என்று கூறுகிறான்.எனவே செல்வந்தர்களே நீங்க எங்க போகனும்னு நீங்களே முடிவு பன்னிக்கோங்க...                                                     
அது மட்டுமா நடுவர் அவர்களே அபூலஹப பத்தி அல்லாஹ் என்ன சொல்றான்... மா அக்னா அன்ஹு மாலுஹு வமா கஸப். அபூ லஹபின் செல்வங்கள் அவனை காப்பாற்ற வில்லை.எனவே செல்வம் என்றைக்கும் சிறப்பைத்தராது. ஆனா கல்வியப்பத்தி அல்லாஹ் சொல்லும்போது உங்களில் ஈமான் கொண்டவர்களுக்கும்,கல்வி ஞானம் கொடுக்கப் பட்டவர்களுக்கும் நான் பதவிகளை உயர்த்துகிறேன் என்று கூறுகிறான். அதனால தான் சொல்வாங்க.. கற்றவருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு கல்லாதவருக்கு சென்ற இடமெல்லாம் செருப்பு. எனவே உங்களுக்கு சிறப்பு வேணுமா ? செருப்பு வேணுமா...? சிறப்பு வேணும்னா எங்க பக்கம் வாங்க இல்லன்னா உங்களுக்கு செருப்பு தான் ஜாக்கிரத.                
அதுமட்டுமில்ல நடுவர் அவர்களே இன்னைக்கி இவங்க செல்வம் செல்வம்னு கூப்பாடு போடுறாங்களே... தங்கம் தங்கம்னு குதிக்கிறாங்களே…. உண்மைல அந்த செல்வத்துக்கும்,தங்கத்துக்கும் என்ன அர்த்தம்னு  தெரிஞ்சா இப்டி குதிக்கவும் மாட்டாங்க, கூப்பாடு போடவும் மாட்டாங்க. அர்ரத்தந்தெரியாம ஆட்டம் போடுற முட்டாள்களே நான் சொல்றேன் நல்ல கேளுங்க, கேட்டுட்டு..... திருந்துறதுக்கு வழியப்பாருங்க.
செல்வம் செல்வம்னு சொல்றீங்களே அது செல்வம் இல்ல, செல்வோம். செல்வோம்,செல்வோம்  சென்று கொண்டே இருப்போம்தங்கம் தங்கம்னு சொல்றீங்களே அது தங்கம் இல்ல தங்கோம். தங்கோம் தங்கோம் எங்கேயும் தங்கோம் இஹ்ஸான் கிட்டேயும் தங்க மாட்டோம் ரியாஸ் கிட்டேயும் தங்க மாட்டோம். அதாவது எங்கேயும் நிரந்தர மில்லேன்னு அர்த்தம்.இப்படி நிரந்தரமில்லாத, உறுதியில்லாத, ஒரு கேரண்டி இல்லாத பணத்தைப்புடிச்சி இவங்க தொங்குறாங்களே இவங்கள விவரந்தெரியாத அப்பாவிங்கன்னு சொல்லலாமா இல்ல பொலைக்கத் தெரியாதவங்கன்னு சொல்லலாமா நீங்களே சொல்லுங்க நடுவர் அவர்களே!                                                      
அதுமட்டுமில்ல நடுவர் அவர்களே கல்வி இருக்கே கொடுக்க கொடுக்க அது பெருகும். ஆனா பணம் என்ன செய்யும் ? கொடுக்க கொடுக்க கூடவா செய்யும் கொறஞ்சிகிட்டே தான் போகும்.அந்த போராரே அவர் ஒரு காலத்துல பெரிய லெச்சாதிபதியா இருந்தாரு. ஆனா இப்ப கொடுத்து கொடுத்து பிச்சாதிபதியா ஆயிட்டாரு அப்டின்னு சொல்லலாம்.ஆனா படிச்ச ஒரு ஆளப்பாத்து அந்த போராரே அவர் ஒரு காலத்துல சாரா இருந்தாரு இப்ப சொல்லிக்கொடுத்து சொல்லிக்கொடுத்து அவர்ட இருந்த படிப்புலா போய் ஒன்னுமில்லாம ஸ்கூல் பையனா...ஆயிட்டாரு அப்டின்னு சொல்ல முடியுமா ? அப்ப கொடுக்க கொடுக்க குறையிற பணம் பெருசா ? இல்ல கொடுக்க கொடுக்க அதிகமாகுற கல்வி பெருசா ? சொல்லுங்க நடுவர் அவர்களே!
அடுத்து நம்ம ரியாஸ் வந்து சொன்னாரு.பணம் இருக்குறவங்களுக்கு எங்க   போனாலும் மரியாத.ஆனா நீங்க படிச்சிட்டு ஒரு வேளைக்கு போறதுக்கு கூட பல பேர் கால்ல விழ வேண்டியதா இருக்கு அப்டின்னு. நான் கேக்குறேன்.இதுக்குலாம் காரணம் யாரு... உங்கள மாதிரி ஆளுங்க தான…..மக்களுக்கு சேவ செய்றதுக்காக இலவசமா கொண்டு வரப்பட்ட கல்வி,மருத்துவம் இப்டி எல்லாத்தையும் வியாபாரமா மாத்தி பணம் பணம் பணம்னு நீங்க அளயுறதனால தான் எங்கள மாதிரி படிச்சவங் களுக்கு மரியாத இல்லாம ஆயிப்போச்சி.இத உங்களால மறுக்க முடியுமா ? என்ன தலய தொங்க போட்டுட்டீங்க.இப்ப புரியுதா        
அன்பான நடுவர் அவர்களே இவங்க சொல்றமாதிரி செல்வம் சிறப்படையலாம்,உயர்வடையலாம். எப்ப தெரியுமா ? அந்த செல்வம் கல்விக்காக செலவழிக்கப்படும்போது தான்.    அதத்தான் ஃப்ராங்லின் என்ற அறிஞன் சொன்னான்-செல்வம் என்பது கல்விக்காக செலவழிக்கப்பட்டால் தான் நல்ல பலனைத்தரும்.இல்லையெனறால் அந்த செல்வம் வீணானது தான். எனவே செல்வத்துக்கு பெருமை சேக்குறதே இந்த கல்வி தானங்க .கல்வி என்று ஒன்று மட்டும் இல்லன்னா இவங்களோட பணம் கால் தூசிக்கு கூட சமமாகாதுங்குறத நாம விளங்கனும்.                                                         
நடுவர் அவர்களே நான் உங்கள்ட ஒரு கேள்வி கேக்குறேன். அல்லாஹ் ஜல்ல ஷானுஹு தஆலா ஹஜ்ரத் மூஸா அலை அவங்கள்ட நீங்க கடலுக்கு போங்க. அங்க கடலுக்கு அடியில ஒரு ஆளு இருப்பாரு. அவர்ட்ட போயிட்டு வாங்க அப்டின்னு ஹிள்ர் நபி அலை அவங்க கிட்ட போகச்சொன்னானே எதுக்கு...10,000 கடன் வாங்கவா...? இல்ல 10 பவுன் நகை வாங்கவா...? இல்லையே கல்வியை கற்பதற்காக, அறிவைப் பெறுவதற்காக. இப்ப சொல்லுங்க நடுவர் அவர்களே கல்வி சிறந்ததா ? பணம் சிறந்ததா ?                                                           
நடுவர் அவர்களே இதுவே இவங்களுக்கு போதும்னு நினைக்கிறேன்.போதாதுன்னா இப்ப அடுக்குறேன் கேளுங்க 1,கல்வி நல்லவர்களின் சொத்து,பணம் தீயவர்களின் சொத்து. 2,கல்வி நம்மை காக்கும் ஆனால் பணத்தை நாம் தான் காக்க வேண்டும். 3,கல்விக்கு நண்பர்கள் அதிகம்,ஆனால் பணத்துக்கு எதிரிகள் அதிகம். 4,கல்வி அதிக மாகிக்கொண்டே போகும்,ஆனால் பணம் குறைந்து கொண்டே போகும். 5,கல்வியை திருட முடியாது, ஆனால் பணத்தை திருடி விடலாம். 6,கல்வி உள்ளத்துக்கு ஒளி தரும் ஆனால் பணம் உள்ளத்துக்கு இருளைத்தரும். 7,கல்வி பணிவைத்தரும்,ஆனால் பணம் பெருமையை ஏற்படுத்தும். இதெல்லாம் நான் சொல்லலங்க அறிவின் வாசல் அலி ரலி அவர்கள் சொன்னாங்க.                                                                                                                                                                               
நடுவர் அவர்களே இதுக்கு மேலேயும் நீங்க இவங்களுக்கு தீர்ப்பு வழங்குனீங்க....நீங்க எப்படி ஊருக்கு போறீங்கன்னு பாம்போம். எனவே உயர்ந்த வாழ்க்கைக்கு உறுதுணையாக இருப்பது கல்வியே என்று கூறி விடை பெறுகிறேன்.அஸ்ஸலாமு அலைக்கும் [வரஹ்]

1 comment:

  1. கல்வியா செல்வமா பட்டிமன்றத்தில் நடுவர் பேசுறது எங்கே தீர்ப்பு எங்கே

    ReplyDelete