Pages

Pages

Thursday, November 8, 2018

வரதட்சணை வன்கொடுமை


                                                                                               
 இந்த சிறப்பிற்குரிய விழாவில் வரதட்சணை ஒரு சமுதாயக் கொடுமை என்ற மகுடத்தின் கீழ் பேசுவதற்காக அழைக்கப்பட்டிருக்கிறேன்.                      
கண்ணியமானவர்களே வரதட்சணை என்ற பெயரை சொல்வதற்கே நாவு கூசுகிறது.அந்த அளவுக்கு அது ஒரு கடுமையான வார்த்தை.ஆனால் இன்னைக்கு வரதட்சணை இல்லாத திருமணமே கிடையாதுன்னு சொல்ற அளவுக்கு இந்த கொடிய உயிர் கொல்லி நோய் சமுதாயம் முழுக்க பரவியிருக்கு.வருவதற்கு தட்சணை, அதாவது ஒரு பெண் கணவன் வீட்டிற்கு வருவதற்கு தட்சணை கேட்கிறார்கள்.அதுக்குத்தான் வரதட்சணை என்று சொல்லப்படுகிறது. 
                    
இன்னைக்கு வரதட்சணை என்ற பேர்ல 1 லட்சம் 2 லட்சம் 50 சவரன் 100 சவரன் என்று பெண் வீட்ல இருந்து வாங்கி அவங்கள கசக்கி பிழியக்கூடிய இந்த அவலநிலை உலகம் முழுக்க நடந்து கொண்டிருக்குது. கண்ணியமானவர்களே! இத கவுரவ பிச்சைன்னு கூட சொல்லலாம். ரோட்ல பிச்சை எடுக்குறதுக்கும் இதுக்கும் ஒரே ஒரு வித்தியாசம் தான்.அவங்க ரோட்ல. இவங்க வீட்ல. அவ்ளோ தான்.            
கல்யாணத்துக்கு பெண் பேசுற போதே மாப்பிள்ளைய பெத்த தாய்மார்கள் சொல்வாங்க என் மகன் ஒரு பிஸ்னஸ் ஆரம்பிக்கப்போறான் அதுக்கு ஒரு லட்ச ரூபா கொடுத்துறுங்க, என்மகன் வெளி நாட்டுக்கு போ போறான், அதுக்கு ஒரு லட்ச ரூபா கொடுத்துறுங்க, கல்யாணத்த முடிச்சர்லாம் அப்டின்னு சொல்வாங்க. நான் கேக்குறேன் இப்படி பெண் வீட்ல கையேந்தித்தான் பிஸ்னஸ் செய்யனுன்னா அந்த கேடு கெட்ட பிஸ்னஸ் எதுக்கு? அந்த கேடு கெட்ட கல்யாணம் எதுக்கு? சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
ஒரு பொண்ணுக்கு கல்யாணம் நடந்துச்சி. சீர்வரிசை சாமான்லாம் வந்து இறங்குச்சி.அந்த பெண் அந்த சாமான்கள தன் தோழிகளுக்கு காட்டிக்கிட்டு இருந்தா. அந்த வேடிக்கைய கொஞ்சம் பாருங்க.இதோ ஃபிரிட்ஜ், இது என் மாமா 15000 கொடுத்து வாங்கித்தந்தாரு.இதோ வாஷிங் மெஷின், இத என் அண்ணன் 20000 கொடுத்து வாங்கித்தந்தாரு.இதோ ஏர் கூலர், இத என் பெரிய அத்தா 30000 கொடுத்து வாங்கித்தந்தாரு.இதோ நிக்கிதே என் புருஷன் இத என் அத்தா 5 லட்சம் கொடுத்து வாங்கித்தந்தாரு.இந்த கேவலம் தேவையா? இந்த இன்ஸல்ட் தேவையா? அருமையான சகோதரர்களே! சிந்தித்துப் பாருங்க.                                                                                                 
இன்னைக்கு பெண் வீட்ல இருந்து பெட்டி பெட்டியாக வாங்கி கிட்டிருக்கோம்.ஆனால் உண்மையில் மூட்ட மூட்டயாக கொடுக்க வேண்டியது நாம தான். ஏன்னா மணப்பெண்ணா வரக்கூடிய அந்த பெண்மனி, கண்மனி அது வரைக்கும் கண்ணியமாக வாழ்ந்திருப்பாங்க, ஆனால் நம்ம வீட்டுக்கு வந்த பிறகு நம் துணிகள துவைக்கிற வண்ணாத்தியா ஆயிடுறாங்க, நமக்கு உணவுகள சமைச்சிப் போடுற சமையல் காரியா ஆயிடுறாங்க, நம்ம வீட்ட சுத்தம் செய்ற வேளைக்காரியா ஆயிடுறாங்க. நம்ம குழந்தைகள கவனிக்கிற ஆயாவா ஆயிடுறாங்க, இதுக்குலாம் நாம எத்தனை லட்சத்த கொடுக்குறோம்,அத விட மேலா பத்துமாதம் சுமந்து வேதனைகள அனுபவிச்சி செத்துப் பிளைச்சி நம்ம குழந்தைங்கள பெத்து தன் ரத்தத்தையே பாலா கொடுக்குற அந்த தியாகிக்கு நாம எத்தன கோடிகள கொடுக்கப் போறோம்.ஆனா அதையெல்லாம் நினைச்சிப் பார்க்காம அவங்கள்ட இருந்தே பிடிங்கி சாப்டுட்டு இருக்கோமே. கொஞ்சம் கூட வெட்கப்பட வேண்டாமா! யோசிச்சிப்பாருங்க.                                                                                                               
இன்னைக்கு எத்தன பெண்மனிகள் தற்கொலை செய்றாங்க, எத்தன பெண்மனிகள் திருமண வயச அடைஞ்ச பிறகும் வரண் கிடைக்காம, திருமணம் முடிக்காம கண்ணீர் வடிச்சிகிட்டு இருக்காங்க. எத்தன பெற்றோர்கள் குமருக்கு உதவி செய்யங்க அப்டின்னு சொல்லி வீடு வீடாக யாசகம் கேக்குறாங்க.இன்னும் எத்தன பேர்கள் தங்கள் சொந்த வீட்ட வித்து மகள கட்டிக் கொடுத்துட்டு நடுத்தெருவுக்கு வந்திருக்காங்க.இந்த சாபமெல்லாம் யாருக்கு ?  கொஞ்சங்கூட யோசிக்காம வாங்கிக் கொண்டிருக்கிற நமக்குத்தானே சிந்துத்துப்பார்க்க வேண்டும்.                  
பெண்களுக்கு அவர்களது மகரை குவியலாக கொடுங்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்.ஆனா இன்னைக்கு நாம 501 1001 என்று சல்லிக்காச மகரா சபையில் கொடுத்துட்டு கொள்ளைப்புறமாக 1 லட்சம் 5 லட்சம் னு வாங்கிக்கிறோமே இதுக்கு பெயர் தான் மகரா.         
ஒரு பெண்மனி பொருள், வம்சம், அழகு, மார்க்கம் இந்த நான்கு விஷயங்களுக்காக உலகில் திருமணம் முடிக்கப்படுகிறாள்.ஆனால் நீங்கள் மாரக்கமுள்ள பெண்ணை தேர்வு செய்யுங்கள் என்று நபி ஸல் அவர்கள் சொன்னாங்க. ஆனா இன்றைக்கு இந்த வம்சமா? அந்த வம்சமா? அவ்ளோ போடுவாங்களா? இவ்ளோ போடுவாங்களா? என்று தான் பார்க்குறோமே தவிர தொழக்கூடிய பெண்ணா? ஓதக்கூடிய பெண்ணா? நல்ல ஒழுக்கமுள்ள பெண்ணா? னு யாரும் பாக்கிறதில்ல.இப்டி பணத்தை மட்டும் பார்க்கிற காரணத்தினால தான் இன்னைக்கு பல குடும்பங்கள்ள ஒற்றும இல்லாம போயிடுச்சி.அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்.                                        
அதுமட்டுமில்லாம இன்னைக்கு ஒரு ஆள் எதுவும் வேண்டாம் பெண்ணை மட்டும் கொடுத்தா போதும் அப்டின்னு சொன்னா கூட அவர்ட ஏதோ குறை இருக்குது அதான் எதுவும் வேண்டாம் னு சொல்றாரு அப்டின்னு சொல்ற சமுதாயமாகவல்லவா நாம் மாறிவிட்டோம். அதுமட்டுமல்ல இன்னைக்கு பல முஸ்லிம்களே தங்கள் பெண் பிள்ளைங்கள மாற்று மதத்தவர்களுக்கு திருமணம் முடிச்சிக் கொடுக்குறாங்க. காரணம் கேட்டா முஸ்லிம்கள் கேட்கிற வரதட்சணையை எங்களால கொடுக்க முடியலன்னு சொல்றாங்க. அன்பானவர்களே இந்த விபச்சார உறவுக்கு வரதட்தணை வாங்குகிற, அதுக்கு துணை போற எல்லாரும் பதில் சொல்லியாகனும் என்பத நாம் மறந்து விடக்கூடாது.                                                            
எனவே கண்ணியமானவர்களே   இனியாவது இந்த வரதட்சணை என்ற கொடிய பாவத்தை விடுவோம்.இன்ஷா அல்லாஹ் நான் எனது திருமணத்தில் ஒரு பைசா கூட வாங்க மாட்டேன், முடிந்த வரை நான் அதிகம் மஹர் கொடுத்து திருமணம் முடிப்பேன் என்று முடிவு செய்து விட்டேன். இளைஞர்களே நீங்களும் முடிவு செய்யுங்கள். அல்லாஹுத்தஆலா நமது சமுதாயத்தை வரதட்சணையில்லாத சமுதாயமாக மாற்றுவானாக.




No comments:

Post a Comment