Pages

Pages

Sunday, June 28, 2020

அதிகாலைப் பொழுதின் மகிமை


   
இஸ்லாம் நம் வாழ்வில் பரக்கத்தைப் பெற்றுக் கொள்வதற்கு எண்ணற்ற வழிகளை கற்றுத் தந்திருக்கிறது. எந்த பரக்கத்தை நபி அவர்கள் விரும்பினார்களோ,எந்த பரக்கத் வேண்டுமென்று அனைத்து நபிமார்களும் ஆசைப்பட்டார்களோ,எந்த பரக்கத்தைப் பெற்றதினால் ஸஹாபாக்கள் வளமாகவும் செழிப்பாகவும் நிறைவாகவும் வாழ்ந்தார்களோ அந்த பரக்கத்தை நாம் பெற வேண்டு மென்றால் நாம் செய்ய வேண்டிய முதல் விஷயம் அதிகாலையில் எழுதல்.


அல்லாஹ்விடமிருந்து பரக்கத்துகள் இறங்குகிற, அல்லாஹ் விடமிருந்து அருள் வளங்கள் கொட்டப்படுகின்ற, நமக்கு தேவையான நற்பாக்கியங்கள் வாறி இறைக்கப்படுகின்ற அருமையான நேரம் அதிகாலைப்பொழுது. ஆனால் இன்று நம்மில் பலருக்கு தூக்கத்தின் உச்சமாக இருப்பது அந்த அதிகாலைப் பொழுது தான்.

அல்லாஹ் நம் வாழ்வில் எண்ணற்ற பாக்கியங்களை செய்திருக்கிறான். இப்போதும் செய்து கொண்டிருக்கிறான்.நாம் மவ்த்தாகி மண்ணரையை சந்தித்து இன்ஷா அல்லாஹ் சுவனம் வரை அல்லாஹ்வின் நிஃமத்துகள் தொடர்ந்து கொண்டே இருக்கும். அல்லாஹ்வின் நிஃமத்துகளை நீங்கள் எண்ணி முடிக்க இயலாது என்று அல்லாஹ் கூறுகிறான்.அந்தளவு எண்ணி முடிக்க முடியாத நிரப்பமான விசாலமான நிஃமத்துகளை அல்லாஹ் செய்து கொண்டிருக்கிறான்.

அந்த நிஃமத்துகளை நாம் இரு வகையாகப் பிரிக்கலாம்.
1, அது நமக்கு நிஃமத்தாக தெரியும்.அதை நிஃமத் என்று நாம் புரிந்திருப்போம்.வீடு,வாகனம்,செல்வம்,பிள்ளைகள்,உணவு,நீர்,உடை போன்றவை.
2, இதுவும் நிஃமத்துகள் தான்.ஆனால் அவை நமக்கு நிஃமத்தாக தெரிவதில்லை.
عَنِ ابْنِ عَبَّاسٍ ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا ، قَالَ : : قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم
نِعْمَتَانِ مَغْبُونٌ فِيهِمَا كَثِيرٌ مِنَ النَّاسِ الصِّحَّةُ وَالْفَرَاغ.[بخاري]
இரண்டு நிஃமத்துக்கள் இருக்கிறது.அவ்விரண்டிலும் அதிகமான மக்கள் கவனக்குறைவாகவே இருக்கிறார்கள் ஒன்று ஆரோக்கியம்.இரண்டு ஓய்வு. (புகாரி ; 6412)

عَنْ عَمْرو بْنٍِ مَيْمُونٍ ، قَالَ : قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِرَجُلٍ وَهُوَ يَعِظُهُ : اغْتَنِمْ خَمْسًا قَبْلَ خَمْسٍ : شَبَابَكَ قَبْلَ هَرَمِكَ ، وَصِحَّتَكَ قَبْلَ سَقَمِكَ ، وَغِنَاكَ قَبْلَ فَقْرِكَ ، وَفَرَاغَكَ قَبْلَ شُغْلِكَ ، وَحَيَاتِكَ قَبْلَ مَوْتِكَ
(வரக்கூடிய) ஐந்துக்கு முன்பு (இப்போது இருக்கிற) ஐந்தை நீ பயன்படுத்திக் கொள். 1, வயோதிகத்திற்கு முன்பு வாலிபத்தை.2,நோயிக்கு முன்பு ஆரோக்கியத்தை. 3,ஏழ்மைக்கு முன்பு செல்வத்தை. 4,வேலைக்கு முன்பு ஓய்வை. 5,மரணத்திற்கு முன்பு வாழ்க்கையை என்றார்கள் நபி அவர்கள். (ஷுஃபுல் ஈமான் ; 7/3319) 

இந்த இரண்டு ஹதீஸிலும் கூறப்பட்ட அனைத்தும் நிஃமத்துகள் தான். ஆனால் அவைகளில் எதுவும் நம் பார்வைக்கு நிஃமத்தாக தெரிவதில்லை. அவ்வாறு தெரியாத காரணத்தினால் தான் வாலிபத்தை சீரழிக்கிறோம், ஆரோக்கியத்தை பாழ்படுத்துகிறோம், நேரத்தை வீணடிக்கிறோம், வாழ்க்கையை தொலைத்து விடுகிறோம்.

இப்படி நிஃமத் என்று புரியாத எண்ணற்ற விஷயங்கள் நம் வாழ்வில் குவிந்து கிடக்கிறது.அதிலே ஒன்று தான் இந்த காலைப் பொழுது.அதை நாம் விளங்க வில்லை.அதை நாம் சரியாக பயன்படுத்த வில்லை.எனவே தான் நாம் எதிர்பார்க்கிற பரக்கத்துகளும் நமக்கு கிடைப்பதில்லை.

عَنْ صَخْرٍ الْغَامِدِىِّ عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- قَالَ « اللَّهُمَّ بَارِكْ لأُمَّتِى فِى بُكُورِهَا ». وَكَانَ إِذَا بَعَثَ سَرِيَّةً أَوْ جَيْشًا بَعَثَهُمْ فِى أَوَّلِ النَّهَارِ. وَكَانَ صَخْرٌ رَجُلاً تَاجِرًا وَكَانَ يَبْعَثُ تِجَارَتَهُ مِنْ أَوَّلِ النَّهَارِ فَأَثْرَى وَكَثُرَ مَالُهُ.
யா அல்லாஹ் என் சமூகத்திற்கு அதிகாலையில் பரக்கத் செய்வாயாக என்று நபி ஸல் அவர்கள் துஆ செய்துள்ளார்கள்.எதாவது சிறு கூட்டத்தையோ ஒரு படையையோ அனுப்புவதாக இருந்தால் பகலின் ஆரம்ப நேரத்தில் தான் அனுப்புவார்கள். (திர்மிதி ; 1212)

رواه البيهقي في شعب الإيمان عَن فَاطِمَةَ بِنْتِ مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَتْ: مَرَّ بِيَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَا مُضْطَجِعَةٌ مُتَصبِّحَةٌ، فَحَرَّكَنِي بِرِجْلِهِ، ثُمَّ قَالَ: يَا بُنَيَّةُ، قَوْمِي اشْهَدِي رِزْقَ رَبِّكِ، وَلَا تَكُونِي مِنَ الْغَافِلِينَ، فَإِنَّ اللهَ يَقْسِمُ أَرْزَاقَ النَّاسِ مَا بَيْنَ طُلُوعِ الْفَجْرِ إِلَى طُلُوعِ الشَّمْسِ. قال السيوطي ـ رحمه الله ـ في جامع الأحاديث: البيهقي في شعب الإيمان 

ஹள்ரத் ஃபாத்திமா ரலி அவர்கள் கூறுகிறார்கள் ; நான் அதிகாலை வேளையில் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தேன். அப்போது நபி அவர்கள் என்னை எழுப்பி அருமை மகளே! எழுந்திரு. அல்லாஹ்வின் அருள்வாதாரங்கள் இறங்குகிற நேரமிது. அதில் நீ கலந்து கொள்.அதை அலட்சியப்படுத்தியவர்களில் நீ ஆகிவிடாதே. ஃபஜ்ருடைய நேரத்திற்கும் சூரிய உதயத்திற்கும் மத்தியில் தான் அல்லாஹ் ரிஜ்கை பங்கு வைக்கிறான் என்று கூறினார்கள். {ஷுஃபுல் ஈமான் ; 4/1708}

رآى بن عباس ابناً له نائما نوم الصبح فقال له قم ا تنام في الساعة التي تقسم فيها الأرزاق
ஹள்ரத் இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் அவருடைய மகன்களில் ஒருவர் அதிகாலைப் பொழுதில் உறங்குவதைப் பார்த்தார்கள். எழுந்திரு அல்லாஹ்வின் ரிஸ்க் பகிர்ந்தளிக்கப்படும் நேரத்தில் தூங்குகிறாயா? என்று கேட்டார்கள். (ஷிஃபா : பக்கம் ; 49)

இன்றைக்கு நமக்கு ரிஸ்க் தடை செய்யப்படுவதற்கும் பரக்கத்துகளை இழந்து தவிப்பதற்கும் விசாலமான வீடு இருந்தும் நிம்மதி காணாமல் போனதற்கும் வியாபாரம் நடந்தும் அதில் திருப்தி இல்லாமல் போனதற்கும் நிறைய செல்வங்கள் இருந்தும் மனநிறைவு இல்லாமல் ஆனதற்கும் காரணம் இந்த அதிகாலை தூக்கம் தான்.எனவே பரக்கத்தை எதிர் பார்ப்பவர்கள் அதிகாலை நேரத்தை தவற விடக் கூடாது.

உண்மையில் அந்த நேரம் தான் நம் வாழ்க்கையில் அதிக லாபத்தைப் பெற்றுத்தரும்.

عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعَثَ بَعْثًا قِبَلَ نَجْدٍ فَغَنِمُوا غَنَائِمَ كَثِيرَةً وَأَسْرَعُوا الرَّجْعَةَ فَقَالَ رَجَلٌ مِمَّنْ لَمْ يَخْرُجْ مَا رَأَيْنَا بَعْثًا أَسْرَعَ رَجْعَةً وَلَا أَفْضَلَ غَنِيمَةً مِنْ هَذَا الْبَعْثِ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَلَا أَدُلُّكُمْ عَلَى قَوْمٍ أَفْضَلُ غَنِيمَةً وَأَسْرَعُ رَجْعَةً قَوْمٌ شَهِدُوا صَلَاةَ الصُّبْحِ ثُمَّ جَلَسُوا يَذْكُرُونَ اللَّهَ حَتَّى طَلَعَتْ عَلَيْهِمْ الشَّمْسُ أُولَئِكَ أَسْرَعُ رَجْعَةً وَأَفْضَلُ غَنِيمَةً (ترمدي]
நபி அவர்கள் நஜ்தை நோக்கி ஒரு படையை அனுப்பி வைத் தார்கள். அந்தப்படை அதிக கனீமத் பொருட்களோடு     சீக்கிரமே திரும்பியது. அப்போது ஒரு ஸஹாபி இதைப்போன்று அதிககனீமத் பொருட்களோடு வெகு சீக்கிரத்தில் திரும்பிய வேறு எந்தப்படையும் நாங்கள் இதுவரை கண்டதில்லை என்று கூறினார்.அப்போது நபி அவர்கள் இதை விட விரைவாக அதிக லாபத்தைப் பெறக்கூடிய ஒரு கூட்டத்தை நான் உங்களுக்கு அறிவிக்கவா! என்று கேட்டு விட்டு, எந்த மக்கள் சுபுஹு தொழுது விட்டு சூரியன் உதயமாகும் வரை அதே இடத்தில் அமர்ந்து திக்ர் செய்கிறார்களோ அந்த மக்கள் தான் உண்மையில் அதிகம் லாபத்தைப் பெறக் கூடியவர்கள் என்று கூறினார்கள். (திர்மிதி ; 3561)

இன்றைக்குள்ள அறிவியல்,ஆராய்ச்சி,மருத்துவம் சார்ந்த அறிஞர்கள் கூட இந்த அதிகாலைப் பொழுதில் எண்ணற்ற நன்மைகள் இருப்பதாக கூறுகிறார்கள்.

கடந்த காலங்களை விட இந்த 21 ம் நூற்றாண்டில் குழந்தையின் பிறப்பு சதவீதம் குறைந்து வருவதை நாம் அறிவோம்.அதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும் அதற்கு மிக முக்கியமான காரணம் இந்த அதிகாலைப் பொழுதை தவற விடுதல் என்று கூறலாம்.

பெண்களின் வயிற்றில் கரு உருவாகக் காரணமான சினை முட்டை உற்பத்தி அவர்களின் உடலில் வெப்ப நிலை சீராக இருப்பதின் மூலமாகவே ஏற்படுகிறது. அதிகாலை நேரத்தில் அவர்களின் உடம்பில் ஒழு அல்லது குளிப்பின் மூலம் தண்ணீர் படும் போது பெண்களின் உடலில் வெப்ப நிலை சீராக இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். எனவே ஒரு பெண் அதிகாலையில் எழுந்து ஒழு செய்து சுபுஹு தொழுவதால் அவர்களின் உடம்பில் வெப்ப நிலை சமச்சீராக இருக்கும், குழந்தைப் பேரும் ஏற்படும்.            

மற்ற நேரங்களில் வாகனங்களின் புகை,தொழிற்சாலைகளின் புகை, மனிதர்களின் புகை இப்படி பல்வேறு வகையான மாசுக்கள் காற்றில் கலந்து அசுத்தமான காற்றைத்தான் சுவாசிக்கிறோம்.ஆனால் அதிகாலையில் அதிகமான வாகனங்கள், மிஷின்கள் இயங்காததனால் காற்று ஆரோக்கியமாக இருக்கும் அதை சுவாசித்து, நாம் அந்த நாளை தொடங்கினால் ஆரோக்கியம் கிடைக்கும்.

உடம்பில் வெளி உறுப்புகள் இருப்பதைப் போன்று உள் உறுப்புகளும் இருக்கின்றது.அதில் ஒவ்வொன்றும் இரண்டு மணி நேரம் இயங்குகிறது. சளி பிரச்சனை மூச்சி பிரச்சனை உள்ளவர்கள் காலையில் எழுந்து மூச்சிப்பயிற்சி செய்தால் குணம் பெறலாம். ஏனெனில் அதிகாலை 3 மணியிலிருந்து 5 மணி வரை தான் நுரையீரல் இயங்குகிறது.ஆனால் அந்த பயிறசி தஹஜ்ஜத்திலும் சுபுஹுவிலும் நமக்கு கிடைக்கிறது. இன்னும் காலை 5 மணியிலிருந்து 7 மணி வரை பெருங்குடல் இயங்குகிறது.அந்த நேரத்தில் பாத்ரூம் போய் பழக வில்லையென்றால் நமக்கு மோஷன் பிரச்சனை வரும். சுபுஹு தொழுது விட்டால் அந்த பிரச்சனை இருக்காது.                       

நரம்பியல் துறை நிபுணர்கள் மனித மூளையின் ஆற்றலை நவீன கருவிகளைக் கொண்டு ஆய்வு செய்தார்கள். மூளையின் ஆற்றல் முழுமையாக அறியப்படவில்லையென்றாலும் அவர்கள் கண்டு பிடித்த வரை சராசரியாக மனித மூளையின் ஆற்றல் 30 முதல் 40 சதவீதமாக இருக்கும்.ஆனால் அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பாக மனித மூளையின் ஆற்றல் 70 சதவீதமாக இருக்கும் என்று கூறுகிறார்கள்.  

இந்த பாக்கியங்கள் அனைத்தும் காலைப் பொழுதில் அடங்கியிருக்கிற காரணத்தினால் தான் ஒரு விஞ்ஞானி பொறாமையோடு கூறிய வார்த்தை முஸ்லிம்கள் பிறக்கும் போதே வாயில் வெள்ளிக் கரண்டியோடு பிறந்தவர்கள். muslims are born with silver spoon in their mouth. அதாவது [பாக்கியசாலிகள்]. காரணம் மூளையின் ஆற்றல் உச்சத்தில் இருக்கும் போது சுபுஹு தொழுகையைத் தொழுது விட்டு, தங்கள் வேலைகளை துவங்கும் படி ஏவப்பட்டுள்ளார்கள்.

இந்த அளவு அபரிவிதமான நன்மைகளும், பயன்களும் இருக்கிற காரணத்தினால் தான் அந்த பாக்கியங்கள் அனைத்தும் தன் சமூகத்திற்கு கிடைக்க வேண்டும் என்ற நன்நோக்கில் நபி அவர்கள் மற்ற தொழுகைகளுக்கு கொடுக்காத முக்கியத்துவத்தை இந்த சுபுஹு தொழுகைக்கு கொடுத்திருக்கிறார்கள்.                         

صلَّى رسولُ اللَّهِ صلَّى اللَّهُ عليْهِ وسلَّمَ يومًا صلاةَ الصُّبحِ فقالَ أشَهِدَ فلانٌ الصَّلاةَ قالوا لا. قالَ ففلانٌ قالوا لا. قالَ إنَّ هاتينِ الصَّلاتينِ من أثقلِ الصَّلاةِ على المنافقينَ ولو يعلمونَ ما فيهما لأتوْهما ولو حبوًا
நபி அவர்கள் ஒரு நாள் சுபுஹுக்கு பிறகு இவர் வந்தாரா? அவர் வந்தாரா? என்று கேட்டார்கள். இல்லையென்று சொன்னபோது சுபுஹும் இஷாவும் முனாஃபிக்களுக்குத் தான் பாரமாக இருக்கும். இதன் நன்மையை புரிந்து கொண்டால் தவழ்ந்தாவது வந்து விடுவார்கள் என்று கூறினார்கள். (அஸ்ஸுனனுல் குப்ரா ; 3/68)                                                          

எனவே இத்தனை பெரிய நன்மைகளையும் பாக்கியங்களையும் நமக்கு நிறைவாகத் தருகிற சுபுஹு தொழுகையில் கவனம் செலுத்துவோம். நன்மைகளைப் பெறுவோம்.                                                     



1 comment:

  1. மாஷா அல்லாஹ் எங்கள் மலை மாவட்டத்திற்கு கிடைத்த பாக்கியம் தாங்கள்

    ReplyDelete