Pages

Pages

Saturday, April 2, 2022

ரமலான் காலங்கள் தனித்துவமானவை

 

அல்லாஹ்வின் பேரருளால் மகத்துவம் பொருந்திய ரமலான் மாதத்தின் முதல் தராவீஹில் நாம் அமர்ந்திருக்கிறோம்.ரமலான் மாதம் வந்து விட்டாலே நம் எல்லாரின் முகத்திலும் மலர்ச்சி தோன்றி விடுகிறது. நம் உள்ளங்களில் சந்தோஷம் ஒட்டிக் கொள்கிறது.நம் வணக்கங்களில் உற்சாகமும் உத்வேகமும் பிறந்து விடுகிறது.தொலைத்து பல நாட்களாக தேடிக் கொண்டிருந்த ஒரு புதையல் கிடைத்ததைப் போன்ற ஒரு உணர்வு நமக்கு ஏற்படுகிறது.பகல் முழுதும் உண்ணாமலும் பருகாமலும் இருந்தாலும் அந்த பசியும் தாகமும் சுமையைத் தருவதற்குப் பதில் நமக்கு சுகத்தைத் தருகிறது. இது தான் இந்த நோன்புக்கு அல்லாஹ் கொடுத்திருக்கிற தனித்தன்மை.மற்ற காலங்களில் எந்த நாளிலும் சாப்பிடாமல் நம்மால் இருக்க முடியாது. எதையும் குடிக்காமல் நம்மால் இருக்க முடியாது.ஆனால் இந்த நோன்பு காலங்களில் பசி இருக்கும், தாகம் இருக்கும், ஆனால் சாப்பிட வேண்டும் என்ற எண்ணமோ குடிக்க வேண்டும் என்ற உணர்வோ நமக்கு வருவதில்லை. இது தான் இந்த நோன்புக்கு அல்லாஹ் கொடுத்திருக்கிற தனித்துவம்.

இந்த நேன்பை நாம் கடுமையான வெயில் காலங்களில் சந்தித்திருக் கிறோம்.இது எந்தளவு வெயில் வாட்டி வதைக்கக்கூடிய நேரம் என்பதை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஆனாலும் நோன்பு வைத்து விட்டால் அல்லாஹ் நம் உடலுக்கு புது வகையான உத்வேகத்தைத் தந்து விடுகிறான். அதனால் தான் ஸஹாபாக்கள் வெயில் காலங்களிலும் சிரமமான நேரங்களிலும் நோன்பு வைப்பதை விரும்பினார்கள்.

جاء في المواهب اللدنية للقسطلاني رحمه الله : " روي أنّه صلى الله عليه وسلم لمّا قال : ( حبِّب إليّ من دنياكم النساء والطيب وجعلت قرّة عيني في الصلاة ) قال أبو بكر : وأنا يا رسول الله حبِّب إليّ من الدنيا : النظر إلى وجهك ، وجمع المال للإنفاق عليك ، والتوسل بقرابتك إليك . وقال عمر : وأنا يا رسول الله حبّب إليّ من الدنيا : الأمر بالمعروف والنهي عن المنكر والقيام بأمر الله . وقال عثمان : وأنا يا رسول الله حبّب إليّ من الدنيا إشباع الجائع وإرواء الظمآن وكسوة العاري . وقال علي بن أبي طالب

وأنا يا رسول الله حبّب إليّ من الدنيا : الصوم في الصيف ، وإقراء الضيف ، والضرب بين يديك بالسيف

பெண்கள், நறுமனம் எனக்கு பிரியமானது. மேலும் தொழுகையில் என் கண் குளிர்ச்சி இருக்கிறது என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள். பிறகு அபூபக்கர் ரலி அவர்கள்,  உங்கள் முகத்தைப் பார்த்துக் கொண்டிருப்பது, உங்களுக்காக என் பொருளாதாரத்தை செலவழிப்பது, உங்களோடு இருக்கிற நெருக்கத்தைக் கொண்டு உதவி தேடுவது இம்மூன்றும் எனக்கு பிரியமானது என்று கூறினார்கள். நன்மையை ஏவுவது, தீமையைத் தடுப்பது, அல்லாஹ்வுடைய உத்தரவை நிலை நிறுத்துவது, இம்மூன்றும் எனக்குப் பிரியமானது என உமர் ரலி அவர்கள் கூறினார்கள். பசித்தவருக்கு உணவளிப்பது,தாகித்திருப் பவருக்கு நீர் புகட்டுவது, ஆடை இல்லாதவருக்கு ஆடையளிப்பது இம்மூன்றும் எனக்கு பிரியமானது என உஸ்மான் ரழி அவர்கள் கூறினார்கள். கோடை காலத்தில் நோன்பு நோற்பது, விருந்தாளிகளை உபசரிப்பது, அல்லாஹ்வின் பாதையில் போர் செய்வது, இம்மூன்றும் எனக்கு பிரியமானது என அலி ரலி அவர்கள் கூறினார்கள். (அல்மவாஹிபுல்லதுன்னிய்யா)

ஹள்ரத் அலி ரலி அவர்கள் உலகத்திலேயே எனக்கு பிடித்தமான விஷயம் நோன்பு வைப்பது என்று கூற வில்லை,கடுமையான வெயில் காலத்தில் நோன்பு வைப்பது என்று கூறுகிறார்கள்.அப்படியென்றால் நோன்பை எந்தளவு அவர்கள் ரசித்து ருசித்து அதன் இன்பத்தை உணர்வுப்பூர்வமாக உணர்ந்து வைத்திருக்கிறார்கள் என்பதை நாம் விளங்க வேண்டும்.

ولما احتضرت نفيسة بنت الحسن وهي صائمة ألحوا عليها بالفطر فقالت : واعجبا لي منذ ثلاثين سنة أسأل الله أن ألقاه وأنا صائمة ، أُفطر الآن .

நபி ஸல் அவர்களின் பாரம்பரியத்தில் வரக்கூடிய நபீஸா பின்த் ஹஸன் ரலி அவர்கள் நோன்பு வைப்பதிலும் உலகப் பற்றற்ற வாழ்க்கையிலும் இரவு நின்று வணங்குவதிலும் பெயர் பெற்றவர்கள். ஒரு நாள் அவர்கள் நோன்பு வைத்திருந்தார்கள். அன்று அவர்களுக்கு ஸக்ராத் வேளை வந்தது. கூடியிருந்தவர்கள் நீங்கள் நோன்பை திறந்து விடுங்கள் என்று கூறினார்கள். அப்போது அவர்கள் நோன்பாளியாக இருக்கும் நிலையில் தான் நான் இறைவனை சந்திக்க வேண்டும் என்று 30 வருடங்களாக அவனிடத்தில் கேட்டுக் கொண்டிருக்கிறேன். அவ்வாறிருக்க, இப்போது நான் எப்படி நோன்பு திறப்பேன் என்று கூறினார்கள்.

ரமலான் மாதம் கிடைப்பதே அல்லாஹ்வின் மாபெரும் நிஃமத்.

أنَّ رَجُلَيْنِ من بَلِيٍّ قَدِما على رسولِ اللهِ صلَّى اللهُ عليهِ وسلَّمَ وكان إِسْلامُهُما جَمِيعًا فكانَ أحدُهُما أَشَدَّ اجْتِهادًا مِنَ الآخَرِ فَغَزَا المُجْتَهِدُ مِنْهُما فَاسْتُشْهِدَ ثُمَّ مَكَثَ الآخَرُ بعدَهُ سَنَةً ثُمَّ تُوُفِّيَ قال طلحةُ فَرأيْتُ في المنامِ بَيْنا أنا عندَ بابِ الجنةِ إذا أنا بِهما فَخَرَجَ خَارِجٌ مِنَ الجنةِ فَأَذِنَ لِلَّذِي تُوُفِّيَ الآخِرَ مِنْهُما ثُمَّ خرجَ فَأَذِنَ لِلَّذِي اسْتُشْهِدَ ثُمَّ رجعَ إِلَيَّ فقال ارْجِعْ فإنَّكَ لمْ يَأْنِ لكَ بَعْدُ فَأصبحَ طلحةُ يُحَدِّثُ بهِ الناسَ فَعَجِبُوا لِذلكَ فَبَلَغَ ذلكَ رسولَ اللهِ صلَّى اللهُ عليهِ وسلَّمَ وحَدَّثُوهُ الحَدِيثَ فقال من أَيِّ ذلكَ تَعْجَبُونَ فَقَالوا يا رسولَ اللهِ هذا كان أَشَدَّ الرجلَيْنِ اجْتِهادًا ثُمَّ اسْتُشْهِدَ، ودخلَ هذا الآخِرُ الجنةَ قبلَهُ فقال رسولُ اللهِ صلَّى اللهُ عليهِ وسلَّمَ أَليسَ قد مَكَثَ هذا بعدَهُ سَنَةً قالوا بلى قال وأَدْرَكَ رَمَضَانَ فَصامَ وصلَّى كذا وكذا من سَجْدَةٍ في السَّنَةِ قالوا بلى قال رسولُ اللهِ صلَّى اللهُ عليهِ وسلَّمَ فما بينَهُما أَبْعَدُ مِمَّا بين السَّماءِ والأرضِ 

இரண்டு நபர்கள் வெளியூரிலிருந்து நபியை சந்தித்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள். அதில் ஒருவர் அல்லாஹ்வுடைய பாதையில் போர் புரிந்து வீரமரணம் அடைந்தார். இன்னொருவர் கூடுதலாக ஒரு வருடம் வாழ்ந்து சாதாரணமாக மரணத்தைத் தழுவினார். அவ்விருவரையும் தல்ஹா பின் உபைதில்லாஹ் ரலி அவர்கள் கனவில் கண்டார்கள். அதில் சாதாரணமாக மரணத்தைத் தழுவிய நபர் முதலாவதாகவும் போர்க்களத்தில் வீர மரணத்தை அடைந்த அந்த நபித்தோழர் இரண்டாவதாகவும் சொர்க்கத்திற்கு அழைக்கப்படுவதாகக் கண்டார். ஆச்சரியமுற்று மக்களிடத்தில் கூறினார்கள். மக்களும் ஆச்சரியப்பட்டார்கள். நபி ஸல் அவர்களிடம் வந்து இதைக் கூறிய போது இதில் ஆச்சரியப்படுவதற்கு என்ன இருக்கிறது? ஏன் அவரை விட  இவர் கூடுதலாக ஒரு வருடம் உலகத்தில் தங்கியிருக்க வில்லையா? அவர் அடையாத ஒரு ரமலானை இவர் அடைந்து கொள்ள வில்லையா? அதில் இன்னென்ன தொழுகைகளை தொழ வில்லையா?  நோன்புகள் வைக்க வில்லையா? என்று கேட்டார்கள். ஆம் என்று கூறிய போது, அவருக்கும் இவருக்கும் இடையில் வானத்திற்கும் பூமிக்கும் இடையில் இருக்கிற வித்தியாசம் ஆகும் என்றார்கள்.  (இப்னுமாஜா)

 

 

எனவே புனிதமான கிடைப்பதற்கரிய பொக்கிஷமான நாட்களை அல்லாஹ் நமக்குக் கொடுத்திருக்கிறான். கடந்த இரு வருடங்களாக பெரும் தொற்று நோயினால் ரமலானை முழுமையாக அடைந்து கொள்ள முடியாத துர்பாக்கிய நிலை ஏற்பட்டது. அந்த பெருந்தொற்றில் ஏராளம் பேர் இந்த உலகத்தை விட்டு பிரிந்து சென்று விட்ட நிலையில் எல்லாம் வல்ல ரப்புல் ஆலமீன் அதிலிருந்து நம்மைப் பாதுகாத்து இந்த ரமலானை நமக்கு அடையச் செய்திருக்கிறான் என்றால், இது எண்ணிலடங்காத ஈடு செய்ய முடியாத மாபெரும் அல்லாஹ்வின் அருள் என்பதில் ஐயம் ஏதும் இல்லை. இதற்காக அல்லாஹ்விற்கு அதிகமதிகம் ஷுக்ர் செய்யக் கடமைப்பட்டிருக்கிறோம்.

கிடைத்த நிஃமத்திற்கு நன்றி செலுத்துகின்ற பொழுது அந்த நிஃமத் இன்னும் அதிகமாகும் என்பது அல்குர்ஆனின் வாக்குறுதி. அந்த வகையில் இப்போது கிடைத்திருக்கும் இந்த ரமலானுக்காக அல்லாஹ்விற்கு நாம் நன்றி செலுத்துகின்ற பொழுது நம் வாழ்க்கையில் இன்னும் ஏராளமான ரமலான்களை அல்லாஹ் தருவான். அத்தகைய தவ்ஃபீகை அனைவருக்கும் வழங்குவானாக.

2 comments:

  1. மாஷா அல்லாஹ்.
    உங்களது கல்வியியல் الله பரகத் செய்வானாக أمين
    இது பேன்ற உரைகளை தினமும் எதிர் பார்க்கிறேன்.انشاالله.

    ReplyDelete
  2. ஜஸாகல்லாஹு கைர் ஹழ்ரத் அல்ஹம்துலில்லாஹ்

    ReplyDelete