Pages

Pages

Saturday, April 16, 2022

நுழையும் முன் அனுமதி

 

يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَدْخُلُوْا بُيُوْتًا غَيْرَ بُيُوْتِكُمْ حَتّٰى تَسْتَاْنِسُوْا وَتُسَلِّمُوْا عَلٰٓى اَهْلِهَا ‌ ذٰ لِكُمْ خَيْرٌ لَّـكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُوْنَ‏

நம்பிக்கையாளர்களே! உங்களுடையதல்லாத வீடுகளில் நீங்கள் (நுழையக் கருதினால்,) அதில் இருப்பவர்களுக்கு ஸலாம் கூறி (அவர்களுடைய) அனுமதியைப் பெறும் வரையில் நுழையாதீர்கள். இவ்வாறு நடந்துகொள்வது உங்களுக்கே மிக்க நன்று. (இதனை மறந்து விடாது) நீங்கள் கவனத்தில் வைப்பீர்களாக! (அல்குர்ஆன் : 24:27)

மனித சமூகத்திற்கு இஸ்லாம் வழங்கியிருக்கிற மிகச்சிறந்த நற்பண்புகளில் ஒன்று, மிகச்சிறந்த நற்குணங்களில் ஒன்று ஒருவர் மற்றவரின் வீட்டிற்குள் நுழையும் முன் அனுமதி கேட்டு ஸலாம் சொல்லி நுழைவது.

அனுமதி கேட்பது மிகச்சிறந்த நாகரீகம். மா நபி அவர்களின் மிக உயர்ந்த சுன்னத். மிஃராஜின் போது ஒவ்வொரு வானத்திலும் ஜிப்ரயீல் அலை அவர்கள் அனுமதி கேட்டார்கள்.

وروى البخاري ومسلم في حديث الإسراء المشهور، قال رسول الله صلى الله عليه وسلم: "ثُمَّ صَعِدَ بِي جِبْرِيلُ إِلَى السَّمَاءِ الدُّنْيَا، فَاسْتَفْتَحَ، فَقِيلَ: مَنْ هَذَا؟ قَالَ: جِبْرِيلُ، قِيلَ: وَمَنْ مَعَكَ؟ قَالَ: مُحَمَّدٌ، ثُمَّ صَعِدَ إِلَى الثَانيةِ وَالثَالِثَةِ وسَائِرَهُن، وَيُقَالَ فِي بَابِ كُلِ سَمَاءٍ: مَنْ هَذَا؟ فَيَقُول: جِبْرِيلُ، وَيُقَالَ: وَمَنْ مَعَكَ؟ فَيَقُولُ: مُحَمد

மிக உயர்ந்த காரணங்களுக்காகவும் உன்னதமான நோக்கங்களுக் காகவும் இதை இஸ்லாம் அறிமுகப்படுத்தி இருக்கிறது.தடுக்கப்பட்ட விஷயங்களை தகாத விஷயங்களை பார்ப்பதை விட்டும் உள்ளே நுழைபவரை தடுக்கவும், தேவையில்லாமல் அந்நியர்கள் தங்களைப் பார்த்து அதனால் வீட்டிலுள்ளவர்களுக்கு மனஉளைச்சல் ஏற்படாமல் இருக்கவும் இந்த சட்டத்தை அல்லாஹ் தந்திருக்கிறான்.

அனுமதி கேட்டு உள்ளே நுழைகிற இந்த கலாச்சாரம் மட்டும் இல்லையென்றால் ஆகுமாத விஷயங்களை பார்க்க வேண்டிய சூழ்நிலை உள்ளே நுழைபவருக்கு ஏற்படும். அவ்வாறு பார்ப்பதின் மூலம் பெரும் மனஉளைச்சல் வீட்டிலுள்ளவர்களுக்கு ஏற்படும். வந்தவர் நல்லவராக இருந்தால் இப்படி பார்த்து விட்டோமே என்ற நெருடல் அவருக்கும் ஏற்படும். இந்த இரண்டு சூழ்நிலைகளையும் தடுப்பதற்குத் தான் இது உருவாக்கப்பட்டுள்ளது.

மேற்கூறப்பட்ட வசனத்தில்

 ذلكم خير لكم ) يعني : الاستئذان خير لكم ، بمعنى : هو خير للطرفين : للمستأذن ولأهل البيت ،

இந்த வார்த்தைக்கு அவ்வாறு அனுமதி கேட்பது இரண்டு சாராருக்கும் நல்லது என்ற பொருளாகும். அதாவது அனுமதி கேட்பவர், வீட்டிலுள்ளவர் இருவருக்கும் அது சிறந்தது. (இப்னுகஸீர்)

இந்த சட்டத்தை இன்று நாம் பெரும்பாலும் பின்பற்றுவதில்லை. மற்றவர் வீட்டிற்குள் நுழைபவரும் அதை பின்பற்றுவதில்லை. வீட்டிலுள்ளவர்களும் அதை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. இந்தளவு தான் நம் ஈமான் இருக்கிறது. எல்லா நேரமும் ஒரே போல் இருக்காது. சில சங்கடமான சூழல்கள் ஏற்பட்டு விடும். அதனால் அனைவரும் இறைவன் சொன்ன இந்த உத்தரவை பின்பற்ற வேண்டும்.

இது எந்தளவு வலியுறுத்தப் பட்டுள்ளது என்றால் நாம் நம்ம வீட்டுக்குத் தான் போகிறோம், வீட்டில் தாயோ சகோதரியோ தான் இருக்கிறார்கள். என்றாலும் அனுமதி அவசியம் என்று இஸ்லாம் கூறுகிறது.

عن صفوان بن سليم ، عن عطاء بن يسار أن رسول الله - صلى الله عليه وسلم - سأله رجل فقال : يا رسول الله ، أستأذن على أمي ؟ فقال : نعم ، فقال الرجل : إني معها في البيت ، قال رسول الله - صلى الله عليه وسلم - : استأذن عليها ، فقال الرجل : إني خادمها ، فقال له رسول الله - صلى الله عليه وسلم - استأذن عليها ، أتحب أن تراها عريانة ؟ قال : لا ، قال : فاستأذن عليها .

நபித்தோழர் ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம், என் தாயாரின் அறைக்குள் செல்வதற்கும் நான் அனுமதி கோர வேண்டுமா? என்று கேட்டார். அதற்கு நபி அவர்கள், ஆம் என்றார்கள். நான் அவர்களோடு தான் வீட்டில் இருக்கிறேன் என்றார். நீ அனுமதி கேட்க வேண்டும் என்று மாநபி  அவர்கள் கூறினார்கள். நான் தான் அவர்களுக்கு பணிவிடை செய்கிறேன் என்றார். நீ அனுமதி கேட்க வேண்டும்உன் தாயை அவலட்சணமான தோற்றத்தில் நீ காண விரும்புவாயா?” என்று கேட்டார்கள். இல்லை (மாட்டேன்)என்று கூறினார். அப்படியானால், அனுமதி பெற்றே செல்என்று கூறினார்கள். (பைஹகீ ; 408)

ஒரு தாயிடத்தில் ஒரு மகன் செல்வதாக இருந்தாலே அனுமதி கேட்க வேண்டும் என்றால் மற்றவர் வீட்டிற்கு செல்லும் போது கண்டிப்பாக வேண்டும் என்பதை விளங்க வேண்டும்.

வீடு என்பது அனைவரும் தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்ளும் ஒரு இடம். எல்லோரும் வெளியில் இருப்பதைப் போலவே வீட்டிலும் இருப்பார்கள் என்று கூற முடியாது. தங்கள் வீடு தானே, யாரும் இல்லையே என்று சாதாரண உடையில் இருக்கலாம். அல்லது ஆடைகள் மாற்றிக் கொண்டிருக்கலாம். கணவன் மனைவியாக இருப்பவர்கள் அவர்கள் வேறு நிலையில் இருக்கலாம். எனவே அனுமதி கேட்டுச் செல்வது தான் சாலச் சிறந்தது.

இனி அதனுடைய ஒழுங்குமுறைகளை நாம் பார்க்க வேண்டும்.

1, ஒரு வீட்டுக்குள் செல்வதாக இருந்தால் முதலில் ஸலாம் சொல்ல வேண்டும், பிறகு அனுமதி கேட்க வேண்டும். இவ்வாறு மூன்று முறை செய்யலாம். அதற்கு பிறகு அனுமதி கிடைக்க வில்லையெனில் திரும்பி விட வேண்டும்.

இன்றைக்குள்ள நவீன காலகட்டத்தில் ஸலாம் சொன்னாலும் கேட்காத அளவுக்கு பிரமாண்டமான வீடுகள் வந்து விட்டன. இப்போது காலிங்பெல் வைக்கப்பட்டுள்ளது. சில இடத்தில் மைக் வைத்திருக் கிறார்கள். சில இடங்களில் ஸ்கேனர் வைத்திருக்கிறார்கள். அதன் மூலம் வெழியே நிற்பவரின் முழு விபரமும் உள்ளே சென்று விடும். எப்படி இருந்தாலும் இது தான் சட்டம். மூன்று தடவைக்குத் தான் அனுமதி. அல்லது மூன்று முறை கேட்கிற நேரத்திற்குத்தான் அனுமதி. அதன் பிறகும் பதில் வர வில்லையென்றால் திரும்பி விட வேண்டும்.

عن أبي موسى رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم : « إذا أستأذن أحدكم ثلاثا فلم يؤذن له فليرجع » متفق عليه

உங்களில் மூன்று முறை அனுமதி கேட்டு அனுமதி கிடைக்க வில்லையென்றால் அவர் திரும்பி விடட்டும். (அபூதாவூது ; 5180)

ஏனென்றால் சில நேரங்களில் அவர் வீட்டிற்குள் நுழைவதை அவர்கள் விரும்பாமல் இருக்கலாம். அல்லது வெளியே வர முடியாத சூழ்நிலையாக இருக்கலாம். அந்த நேரத்தில் ரொம்ப நேரமாக நின்று கொண்டே இருந்தால் அது அவர்களுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும். நமக்கும் நேரம் வீணாகும்.இதை கருத்தில் கொண்டு தான் இப்படி ஒரு சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

 كما ثبت في الصحيح : أن أبا موسى حين استأذن على عمر ثلاثا ، فلم يؤذن له ، انصرف . ثم قال عمر : ألم أسمع صوت عبد الله بن قيس يستأذن؟ ائذنوا له . فطلبوه فوجدوه قد ذهب ، فلما جاء بعد ذلك قال : ما رجعك؟ قال : إني استأذنت ثلاثا فلم يؤذن لي ، وإني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول : " إذا استأذن أحدكم ثلاثا ، فلم يؤذن له ، فلينصرف

அபூ மூஸா அஷ்அரி ரலி அவர்கள் உமர் ரலி அவர்களை சந்திப்பதற்காக சென்றிருந்தார்கள். அனுமதி கேட்டார்கள். அவர்களுக்கு அனுமதி கிடைக்க வில்லை. எனவே திரும்பி விட்டார்கள். உள்ளே உமர் ரலி அவர்கள், அவர் அனுமதி கேட்கிறார். உங்களுக்கு சப்தம் கேட்க வில்லையா அவருக்கு அனுமதியளியுங்கள் என்றார்கள். வெளியே வந்து பார்த்த போது அவர் இல்லை.திரும்பி விட்டார்கள். மீண்டும் வந்த பிறகு ஏன் வந்து விட்டு திரும்பி விட்டீர்கள் என்று கேட்டார்கள். அப்போது அபூ மூஸா அஷ்அரி ரலி அவர்கள், நான் மூன்று முறை அனுமதி கேட்டேன். அனுமதி வழங்க வில்லை. மூன்று முறை அனுமதி கேட்டும் அனுமதி வழங்கப்பட வில்லையென்றால் அவர் திரும்பி விட வேண்டும் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள் என்றார்கள்.

 

عن ثابت ، عن أنس - أو : غيره أن رسول الله صلى الله عليه وسلم استأذن على سعد بن عبادة فقال : " السلام عليك ورحمة الله " . فقال سعد : وعليك السلام ورحمة الله ولم يسمع النبي صلى الله عليه وسلم حتى سلم ثلاثا . ورد عليه سعد ثلاثا ولم يسمعه . فرجع النبي صلى الله عليه وسلم ، واتبعه سعد فقال : يا رسول الله ، بأبي أنت وأمي ، ما سلمت تسليمة إلا وهي بأذني ، ولقد رددت عليك ولم أسمعك ، وأردت أن أستكثر من سلامك ومن البركة . ثم أدخله البيت ، فقرب إليه زبيبا ، فأكل نبي الله . فلما فرغ قال : " أكل طعامكم الأبرار ، وصلت عليكم الملائكة ، وأفطر عندكم الصائمون

ஒருநாள் நபி அவர்கள் ஸஃத் பின் உபாதா ரலி அவர்களின் வீட்டிற்கு சென்று உள்ளே வர அனுமதி கேட்டார்கள். ஸலாம் சொன்னார்கள் உள்ளே இருந்த ஸஃத் பின் உபாதா ரலி அவர்கள் அமைதியாக அதற்கு பதில் சொன்னார்கள். அவர்கள் மூன்று முறை ஸலாம் சொல்லும் பொழுதும் அமைதியாகவே பதில் கூறினார்கள். வீட்டிலிருந்து பதில் ஸலாம் வராத காரணத்தினால் நபி அவர்கள் திரும்பினார்கள். அப்போது வேகமாக வீட்டிலிருந்து வெளியே வந்தவர்கள் அல்லாஹ்வின் தூதர் அவர்களே நீங்கள் மூன்று முறை ஸலாம் சொன்னீர்கள். உங்கள் ஸலாமும் அதன் மூலம் என் வீட்டிற்கு பரக்கத்தும் அதிகமா கிடைக்க வேண்டும் என்று நான் விரும்பினேன் என்றார்கள். (இப்னுகஸீர்)

 

2, வீட்டின் வாசலுக்கு நேராக நின்று அனுமதி கேட்கக்கூடாது. வலப்பக்கமாக அல்லது இடப்பக்கமாக நின்று தான் கேட்க வேண்டும்.

عن عبد الله بن بسر قال : كان رسول الله صلى الله عليه وسلم إذا أتى باب قوم ، لم يستقبل الباب من تلقاء وجهه ، ولكن من ركنه الأيمن أو الأيسر ، ويقول : " السلام عليكم ، السلام عليكم " . وذلك أن الدور لم يكن عليها يومئذ ستور . تفرد به أبو داود .

நபி அவர்கள் ஒரு கூட்டத்தாரின் வீட்டு வாசலுக்கு வந்தால் வாசலுக்கு நேராக முகம் பார்த்து நிற்க மாட்டார்கள். வீட்டுக்கு வலப்புறமாக அல்லது இடப்புறமாக நின்று சலாம் சொல்வார்கள். ஏனென்றால் அந்த நேரத்தில் வீடுகளின் மீது மறைவுகள் எதுவும் இல்லை. (அபூதாவூது ; 5186)

عن هزيل قال : جاء رجل - قال عثمان : سعد - فوقف على باب النبي صلى الله عليه وسلم يستأذن ، فقام على الباب - قال عثمان : مستقبل الباب - فقال له النبي صلى الله عليه وسلم : " هكذا عنك - أو : هكذا - فإنما الاستئذان من النظر

ஒருவர் நபி அவர்களைப் பார்ப்பதற்காக அவர்களின் வீட்டுக்கு வந்தார்கள். வாசலுக்கு நேராக நின்று அனுமதி கேட்டார்கள். அப்போது நபியவர்கள் ஒன்று இந்த பக்கம் அல்லது அந்த பக்கம் நின்று கேள். அனுமதி என்பது பார்வைக்காகத்தான் என்றார்கள். (அபூதாவூது ; 5174)

 

 

3, அனுமதி கேட்பவர் தன்னுடைய பெயரைக் குறிப்பிட வேண்டும்

عن جابر بن عبد الله رضي الله عنه قال: استأذنت على النبي صلى الله عليه وسلم، فقال: من هذا؟ فقلت: أنا، فقال النبي صلى الله عليه وسلم: أنا أنا.

ஜாபிர் ரலி அவர்கள் கூறுகிறார்கள் ; நான் நபியிடன் உள்ளே வர அனுமதி கேட்டேன். யாரென்று கேட்டார்கள். நான் தான் என்றேன். அப்போது அது என்ன நான் நான் என்றார்கள். (இப்னு ஹிப்பான் ; 5808)

3, அனுமதி கேட்கின்ற போது உள்ளே நம் பார்வை படக்கூடாது.

وروى البخاري ومسلم من حديث أبي هريرة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال: "لَوْ أَنَّ امْرَأً اطَّلَعَ عَلَيْكَ بِغَيْرِ إِذْنٍ، فَحَذَفْتَهُ بِحَصَاةٍ، فَفَقَأْتَ عَيْنَهُ، لَمْ يَكُنْ عَلَيْكَ جُنَاحٌ

ஒருவன் அனுமதியின்றி உன்னை உற்று நோக்கினான். அதனால் நீ அவனை நோக்கி ஒரு கல்லை எறிந்தாய். அதன் மூலம் அவனது கண்ணைப் பிடிங்கி விட்டாலும் உன் மீது எந்த குற்றமும் இல்லை. (புகாரி ; 6902)

4, உள்ளே இருப்பவர்களுக்கு சிரமம் ஏற்படாத வகையில் வெதுவாக கதவைத் தட்ட வேண்டும்.

أنس بن مالك أنه قال: أن أبواب النبي صلى الله عليه وسلم كانت تقرع بالأظافير

நபி   அவர்களின் வீட்டுக் கதவுகள் நகங்களால் தட்டப்படும்.

No comments:

Post a Comment