Pages

Pages

Thursday, October 13, 2022

நபி ﷺ அவர்களை எப்படி நம்ப வேண்டும் ?

 

அகிலத்தின் அருட்கொடை மனிதருல் மாணிக்கம் நபிமார்களின் தலைவர் நபிகள் நாயகம் அவர்கள் பிறந்த ரபீவுல் அவ்வல் மாதத்தில் நாம் இருக்கிறோம். காலம் முழுக்க நபிகள் நாயகம் அவர்களைப் பற்றி பேசப்படுகிறது, எழுதப்படுகிறது, அவர்களின் வரலாறுகள் ஆலசப்படுகிறது, ஆராயப்படுகிறது. அவர்களைப் பற்றி பேசாமல் அவர்களின் சொல்லை மேற்கோள் காட்டாமல் அவர்களின் செயல்களை குறிப்பிடாமல் எந்த விஷயத்தையும் பேச முடியாது. எந்த தலைப்புக்குள்ளும் நுழைய முடியாது. அந்த அளவு உலக மக்களால் அனுதினமும் பேசப்படும் நபராக அவர்கள் இருக்கிறார்கள். உலக மக்களால் அதிகம் உச்சரிக்கப்படும் பெயராக முகம்மது என்ற அவர்களின் பெயர் இருக்கிறது. காலம் முழுக்க அவர்களைத் தொட்டு பேசினாலும் அவர்கள் பிறந்த ரபியுல் அவ்வல் மாதத்தில் அவர்களைப் பற்றி பேசாமல் இருக்க முடியாது.

வல்லோன் அல்லாஹ் வள்ளல் நபியின் வருகை குறித்து

اِنَّاۤ اَرْسَلْنٰكَ شَاهِدًا وَّمُبَشِّرًا وَّنَذِيْرًا ‏

(நபியே!) நிச்சயமாக நாம் உங்களை (நம்பிக்கையாளர்களின் ஈமானைப் பற்றி) சாட்சி கூறுவதற்காகவும், (அவர்களுக்கு) நற்செய்தி கூறுவதற்காகவும், (பாவிகளுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காகவும் அனுப்பி வைத்தோம். (அல்குர்ஆன் : 48:8)

لِّـتُؤْمِنُوْا بِاللّٰهِ وَ رَسُوْلِهٖ وَتُعَزِّرُوْهُ وَتُوَقِّرُوْهُ  وَتُسَبِّحُوْهُ بُكْرَةً وَّاَصِيْلًا

ஆகவே, (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நம்பிக்கை கொண்டு, அவருக்கு உதவி புரிந்து, அவரை கண்ணியப்படுத்தி வைத்து, காலையிலும் மாலையிலும் அவனை துதி செய்து வாருங்கள். (அல்குர்ஆன் : 48:9)

இங்கே நபி உலகிற்கு எப்படி வந்தார்கள். வந்த நோக்கம் என்ன என்பதை ஆரம்பத்தில் சொல்லி விட்டு அதற்குப் பிறகு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை அல்லாஹ் சொல்கிறான். அதில் முதலாவது அல்லாஹ்வையும் ரஸூலையும் நம்புவது. அல்லாஹ்வையும் அவனுடைய ரஸூலான முஹம்மது நபி அவர்களையும் எப்படி நம்ப வேண்டுமோ அப்படி நம்ப வேண்டும்.

امنوا كما آمن الناس

அம்மக்கள் (நபித்தோழர்கள்) ஈமான் கொண்டதைப் போல் நீங்கள் ஈமான் கொள்ளுங்கள். (அல்குர்ஆன் : 2  ; 13)

நாயகத் தோழர்களான அருமை ஸஹாபாக்கள் நபி அவர்களை எப்படி நம்பினார்கள் என்றால் அவர்கள் சுயமாக எதையும் பேசுவதில்லை. அல்லாஹ்வின் உத்தரவின்றி எதையும் சொல்வதில்லை. அவர்கள் சொல்வது அனைத்தும் வஹி.  மறுமையைக் குறித்து சொன்னாலும் இம்மையைக் குறித்து சொன்னாலும் நடந்த விஷயத்தைச் சொன்னாலும் நடக்கப்போகிற விஷயங்களைச் சொன்னாலும் அது தனக்கு புரிந்தாலும் புரியா விட்டாலும் தனக்கு ஒத்து வந்தாலும் ஒத்து வரா விட்டாலும்  அவர்கள்  சொல்வது அனைத்தும் சத்தியம்,  அவர்கள் ஒன்றைச் சொன்னால் அது நன்மையாக இருக்கும், அவர்கள் ஒன்றை தடுத்தால் அது தீமையாகத்தான் இருக்கும். இது தான் நபி அவர்களை ஸஹாபாக்கள் நம்பிய விதம்.

உலகத்தில் யாரும் காம்பர்மேஸ் ஆகாத இடம் ஒன்று உண்டு. யார் எதை சொன்னாலும் யார் என்ன தடுத்தாலும் ஒருவர் தன் முடிவிலிருந்து மாறாத ஒரு இடம் உண்டு. அது தான் திருமணம். பெற்றோர்கள், சொந்தபந்தங்கள், ஊரார் இப்படி யார் எதிர்த்தாலும் தன் முடிவிலிருந்து பின் வாங்க மாட்டான். கட்டினால் அவளைத் தான் கட்டுவேன் என்று நிற்பான். இதில் பெண்களும் விதிவிலக்கல்ல. சொல்லப்போனால் பசங்களை விட பொன்னுங்க இதில் ரொம்ப வைராக்கியமாக இருப்பார்கள். அவன் வேண்டாம், நம்ம குடும்பத்துக்கு சரி பட்டு வர மாட்டான். உன் வாழ்க்கை வீணாகப் போய் விடும் என்றெல்லாம் பெற்றோர்கள் சொன்னாலும் அவை காதில் விழாது. குடும்பத்தோட சம்மதம் இல்லாம அவன் கூட போய் விட்டால் குடும்பத்தோட மானம் போய் விடும், பெற்றவர்கள் தலை குனிந்து நிற்பார்கள், ஊர் உலகம் காறித்துப்பும் இப்படி எதைப்பற்றியும் கவலைப் பட மாட்டார்கள். குடும்பத்தை எதிர்த்து அவனை நம்பி போகிறோம். ஒரு வேளை அவன் கை விட்டு விட்டால் நம் நிலமை என்னவாகும் ? இப்படி எந்த சிந்தனையும் இருக்காது. அவனைத்தான் கட்ட வேண்டும் என்பதில் ரொம்பவும் உறுதியாக இருப்பார்கள். அதேபோன்று பிடிக்க வில்லையென்றால் யார் என்ன சொன்னாலும் திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள். எனவே ஆணும் சரி பெண்ணும் சரி காம்பர்மேஸ் ஆகாத ஒரே இடம் திருமணம். ஆனால் அந்த திருமணத்தில் கூட ஸஹாபாக்கள் காம்பர்மேஸ் ஆனார்கள். இன்னும் சொல்ல வேண்டுமானால் அவர்களை காம்பர்மேஸ் செய்து கொள்ளத் தேவையில்லாத அளவிற்கு நபிக்கு வார்த்தைக்கு முன்னால் சரனாகதி ஆனார்கள் ஸஹாபாக்கள். காரணம் நபியின் வார்த்தையில் அவர்களுக்கு இருந்த நம்பிக்கையும் ஈமானும்.

ذَكَرْتُ له أنَّ مُعَاوِيَةَ بنَ أَبِي سُفْيَانَ، وَأَبَا جَهْمٍ خَطَبَانِي، فَقالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عليه وَسَلَّمَ: أَمَّا أَبُو جَهْمٍ، فلا يَضَعُ عَصَاهُ عن عَاتِقِهِ، وَأَمَّا مُعَاوِيَةُ فَصُعْلُوكٌ لا مَالَ له، انْكِحِي أُسَامَةَ بنَ زَيْدٍ فَكَرِهْتُهُ، ثُمَّ قالَ: انْكِحِي أُسَامَةَ، فَنَكَحْتُهُ، فَجَعَلَ اللَّهُ فيه خَيْرًا، وَاغْتَبَطْتُ بهِ.

ஃபாத்திமா பின்த் கைஸ் ரலி அவர்கள் கூறுகிறார்கள் ; எனது முதல் கணவரோடு மனவிலக்கு ஏற்பட்டு இத்தாவை முடித்த பிறகு அல்லாஹ்வின் தூதர் அவர்களிடம் வந்து  முஆவியா பின் அபீசுஃப்யான் ரலி அவர்களும் அபூஜஹ்ம் பின் ஹுதைஃபா ரலி அவர்களும் என்னைப் பெண் கேட்கின்றனர்" என்று சொன்னேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் அவர்கள், அபூஜஹ்ம் தமது கைத்தடியைத் தோளிலிருந்து கீழே வைக்க மாட்டார். (கோபக்காரர்; மனைவியரைக் கடுமையாக அடித்து விடுபவர்). முஆவியோ, அவர் ஓர் ஏழை; அவரிடம் எந்தச் செல்வமும் இல்லை. நீ உஸாமா பின் ஸைதை மணந்து கொள்" என்று கூறினார்கள். நான் உசாமாவை விரும்ப வில்லை. பிறகு அல்லாஹ்வின் தூதர் அவர்கள் "நீ உஸாமாவை மணந்து கொள்" என்று (மீண்டும்) கூறினார்கள். ஆகவே, நான் அவரை மணந்து கொண்டேன். அவரிடம் (எனக்கு) அல்லாஹ் நன்மையை வைத்திருந்தான்; நான் பெருமிதம் அடைந்தேன். (முஸ்லிம் ; 1480)

فقال رسول الله صلى الله عليه وسلم لرجل من الأنصار: "زوجني ابنتك". قال: نعم، وكرامة يا رسول الله  ، ونُعْمَة عين. فقال: إني لست أريدها لنفسي. قال: فلمن يا رسول الله؟ قال: لجليبيب

 

فقال: يا رسول الله، أشاور أمها. فأتى أمها فقال: رسول الله صلى الله عليه وسلم يخطب ابنتك؟ فقالت: نعم ونُعمة عين. فقال: إنه ليس يخطبها لنفسه، إنما يخطبها لجليبيب. فقالت: أَجُلَيبيب إنيه  ؟ أجليبيب إنيِه  ؟ لا لعمر الله لا تزَوّجُه. فلما أراد أن يقوم ليأتي رسول الله صلى الله عليه وسلم فيخبره بما قالت أمها، قالت الجارية: مَنْ خطبني إليكم؟ فأخبرتها أمها. قالت: أتردون على رسول الله صلى الله عليه وسلم أمره؟! ادفعوني إليه، فإنه لن يضيعني. فانطلق أبوها إلى رسول الله صلى الله عليه وسلم فقال: شأنَك بها. فَزَوّجها جليبيبا فقال: "اللهم، صب عليها [الخير] صبا، ولا تجعل عيشها كدا" كذا قال، فما كان في الأنصار أيم أنفق منها

நபி அவர்கள் ஒரு அன்ஸாரி தோழரிடம் உன் மகளை மனமுடித்துத் தருவீரா என்று கேட்டார்கள். அதற்கவர் ரொம்ப நல்லது. மிகவும் மகிழ்ச்சி என்றார்கள். உன் மகளை எனக்கு கேட்க வில்லை என்று நபியவர்கள் சொன்னதும் வேறு யாருக்கு என்று கேட்டார்கள். ஜுலைபீபுக்கு என்றார்கள். நான் என் மனைவியுடம் ஆலோசித்து வருகிறேன் என்று சொன்னார்கள். மனைவியிடம் விஷயத்தைச் சொன்ன பொழுது அவர்களும் சந்தோஷப்பட்டார்கள். இல்லை நபியவர்கள் நம் மகளை அவர்களுக்கு கேட்க வில்லை. ஜுலைபீபுக்கு கேட்கிறார்கள் என்று சொன்ன போது அவர்கள் தயங்கினார்கள். அவருக்கு பெண் தர அவர்களின் மனம் இடம் தர வில்லை.  அப்போது உள்ளிருந்தவாரே தமது பெற்றோரின் உரையாடலைக் கேட்டுக்கொண்டிருந்த சம்பந்தப்பட்ட அந்தப் பெண்மணி தமது பெற்றோரை அழைத்துஅல்லாஹ்வுடைய தூதரின் உத்தரவை மறுக்கிறீர்களா ? என்னை அவருக்கே மனமுடித்துக் கொடுத்து விடுங்கள்.  நீங்கள் எப்படி எனக்காக மாப்பிள்ளை பார்ப்பீர்களோ அதை விட பன்மடங்கு அக்கறையோடு தான் மாநபி  அவர்கள் எனக்கான மணாளனை தேர்ந்தெடுப்பார்கள். அதனால் என் வாழ்க்கை எந்த வகையிலும் வீண் போய் விடாது என்று கூறிவிட்டு

அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஏதேனுமொரு விவகாரத்தில் முடிவு செய்து விட்டால் பிறகு அந்த விவகாரத்தில் மாற்று முடிவு எடுக்கும் அதிகாரம் இறை நம்பிக்கை கொண்டுள்ள எந்த ஆணுக்கும், இறை நம்பிக்கை கொண்டுள்ள எந்தப் பெண்ணுக்கும் கிடையாது.” எனும் இறை வசனத்தை தம் பெற்றோரிடம் ஓதிக் காண்பித்து விட்டு என் விஷயத்தில் நபிகளாரின் முடிவையே நான் திருப்தி அடைகிறேன். ஜுலைபீப் அவர்களை என் மணாளராக்க மனப்பூர்வமாக சம்மதிக்கின்றேன்.என்று கூறினார்கள்

அந்தப் பெண்மணி உதிர்த்த வார்த்தைகளை கேட்ட மாநபி அவர்கள்

فقال: "اللهم، صب عليها [الخير] صبا، ولا تجعل عيشها كدا" كذا

இறைவா! அப்பெண்மணியின் வாழ்க்கையில் அனைத்து வகையான நலவுகளையும் கொட்டுவாயாக! அவளது வாழ்வை நெருக்கடியாக ஆக்கி விடாதே! என்று அகம் மகிழ துஆ செய்தார்கள். இந்த செய்தியை அறிவிக்கின்ற அபூ பர்ஸா{ரலிஅவர்கள் மதீனாவிலேயே, அன்ஸாரிப் பெண்களிலேயே இந்தப் பெண்மணியை விட செல்வச் சீமாட்டியை நாங்கள் கண்டதில்லை.என்று கூறுகின்றார்கள். (ஷுஃபுல் ஈமான் ; 2/672)

உலகத்தில் யாரும் காம்பர்மேஸ் ஆகாத, யாருக்காகவும் எதற்காகவும் தன் முடிவிலிருந்து தன்னை மாற்றிக கொள்ளாத அந்த இடத்திலும் நபித்தோழியர்கள்  தன் முடிவை மாற்றிக் கொண்டார்கள். நபி அவர்களின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு முழுமையாக அவர்களை நம்பி செய்தார்கள். அதே போன்று அவர்களின் வாழ்க்கையை அல்லாஹ் கைராகவே அமைத்துத்தந்தான்.

நபி அவர்களை நம்புவதில் அவர்களுக்கு என்றைக்கும் எந்த குழப்பமும் இருந்ததில்லை.எந்த சந்தேகமும் இருந்ததில்லை. கண்ணை மூடிக் கொண்டு நம்பினார்கள்.சொல்லப்போனால் நபியவர்கள் அவர்கள் கண்மூடித்தனமாக நம்பினார்கள் என்று தான் சொல்ல வேண்டும். எதையும் ஆராயாமல் உண்மையா இல்லையா என்று யோசிக்காமல் எதையும் நம்பக்கூடாது என்று உண்மை தான். ஆனால் பெருமானார் நபி அவர்கள்  விஷயத்தில் எதையும் யோசிக்காமல் தான் நம்ப வேண்டும். ஸஹாபாக்கள் அப்படித்தான் நம்பினார்கள்.

أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ابْتَاعَ فَرَسًا مِنْ أَعْرَابِيٍّ فَاسْتَتْبَعَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِيَقْضِيَهُ ثَمَنَ فَرَسِهِ فَأَسْرَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَشْيَ وَأَبْطَأَ الْأَعْرَابِيُّ فَطَفِقَ رِجَالٌ يَعْتَرِضُونَ الْأَعْرَابِيَّ فَيُسَاوِمُونَهُ بِالْفَرَسِ وَلَا يَشْعُرُونَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ابْتَاعَهُ فَنَادَى الْأَعْرَابِيُّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ إِنْ كُنْتَ مُبْتَاعًا هَذَا الْفَرَسِ وَإِلَّا بِعْتُهُ فَقَامَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ سَمِعَ نِدَاءَ الْأَعْرَابِيِّ فَقَالَ أَوْ لَيْسَ قَدْ ابْتَعْتُهُ مِنْكَ فَقَالَ الْأَعْرَابِيُّ لَا وَاللَّهِ مَا بِعْتُكَهُ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَلَى قَدْ ابْتَعْتُهُ مِنْكَ فَطَفِقَ الْأَعْرَابِيُّ يَقُولُ هَلُمَّ شَهِيدًا فَقَالَ خُزَيْمَةُ بْنُ ثَابِتٍ أَنَا أَشْهَدُ أَنَّكَ قَدْ بَايَعْتَهُ فَأَقْبَلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى خُزَيْمَةَ فَقَالَ بِمَ تَشْهَدُ فَقَالَ بِتَصْدِيقِكَ يَا رَسُولَ اللَّهِ فَجَعَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شَهَادَةَ خُزَيْمَةَ بِشَهَادَةِ رَجُلَيْنِ

 

நபிகள் நாயகம் அவர்கள் ஒரு கிராமவாசியிடம் குதிரையை விலைபேசி முடித்தார்கள். அந்தக் கிராமவாசி (அதற்கான கிரயத்தைப் பெறுவதற்காக) நபிகள் நாயகம் அவர்களைப் பின் தொடர்ந்தார். நபிகள் நாயகம் அவர்கள் விரைந்து நடக்க, அந்தக் கிராமவாசி மெதுவாக நடந்து வந்தார்.நபிகள் நாயகம் அவர்கள் விலைபேசி வாங்கியதை அறியாத மக்கள் அந்தக் கிராமவாசியிடம் கூடுதல் விலைக்கு கேட்கலானார்கள். அப்போது கிராமவாசி நபிகள் நாயகத்தை உரத்த சப்தத்தில் அழைத்து நீங்கள் இதை வாங்குவதாக இருந்தால் வாங்கிக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் நான் மற்றவருக்கு விற்று விடுவேன் என்று கூறினார். உடன் நபிகள் நாயகம் அவர்கள் நின்றார்கள்.

நான் தான் உன்னிடம் விலை பேசி வாங்கி விட்டேனே என்று நபிகள் நாயகம் அவர்கள் கூறினார்கள். அந்தக் கிராமவாசி அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் இதை உங்களுக்கு விற்க வில்லை என்றார். இல்லை நான் உன்னிடம் இதை விலைக்கு வாங்கி விட்டேன் என்று கூறினார்கள். அப்போது கிராமவாசி இதற்கு சாட்சியைக் கொண்டு வாருங்கள் என்று கூறினார்.

அப்போது குஸைமா என்ற நபித்தோழர் கிராமவாசியைப் பார்த்து நீ நபிகள் நாயகத்திடம் விற்றாய் என்று  நான் சாட்சி கூறுகிறேன் என்றார்கள். பின்னர் நபிகள் நாயகம் அவர்கள் குஸைமாவிடம் (நான் அவரிடம் விலை பேசிய போது நீ அந்த இடத்தில் இல்லை. நீ பார்க்க வில்லை) பிறகு எப்படி சாட்சி கூறினாய் என்று கேட்டார்கள். உங்கள் மீது உள்ள நம்பிக்கையால் சாட்சி கூறினேன் என்றார். அப்போது நபிகள் நாயகம் அவர்கள் அவரது சாட்சியத்தை இருவரின் சாட்சியத்துக்கு சமமாக ஆக்கினார்கள்.  (நஸயீ ; 4661)

நபி அவர்கள் பொய் சொல்ல மாட்டார்கள். அவர்கள் சொன்னால் அது சரியாகத்தான் இருக்கும். அதை செய்வதால் நன்மை தான் கிடைக்கும் என்பதில் நபித்தோழர்கள் உறுதியாக இருந்தார்கள். அவர்கள் விஷயத்தில் எதையும் யோசிக்காமல் கண்ணை மூடிக் கொண்டு நம்பினார்கள்.

இன்றைக்கு நாமும் எத்தனையோ விஷயங்களைப் பார்க்கிறோம் படிக்கிறோம். நபி அவர்களின் உயர்வான சுன்னத்துக்களை அறிந்திருக்கிறோம். ஆனால் நமக்கு அதில் நம்பிக்கை வருவதில்லை. அவர்கள் நம்பியதைப் போன்று நாம் நம்புவதில்லை. எனவே தான் நபி அவர்களின் எண்ணற்ற சுன்னத்துக்கள் நம் வாழ்க்கையில் வருவதில்லை.

اعظم النكاح بركة ايسرها مؤونة

நிகாஹ்வில் அதிகம் பரக்கத்தானது செலவு குறைவானது என்று நபி அவர்கள் கூறினார்கள். ஆனால் எத்தனை பேரின் இல்லத் திருமணங்கள் குறைந்த செலவில் நடைபெறுகிறது. திருமணத்தின் மூலம் நாம் அனைவரும் எதிர் பார்ப்பது அந்த பரக்கத்தைத் தான். என் பிள்ளைக்கு நிகாஹ் வைத்திருக்கேன். பரக்கத்தாக இருப்பதற்காக துஆ செய்யுங்கள் என்று தான் சொல்கிறோம். ஆனால் பல இலட்சங்கள் செலவழித்து ஆடம்பரமாகவும் பெருமையாகவும் திருமணங்களை நடத்துகிறோம். அவசியமான செலவுகள் தவறில்லை. ஆனால் இன்றைக்கு நடக்கிற பெரும்பாலான திருமணங்கள் ஆடம்பரத்திற் காகவும் பெருமைக்காகவும் தான் நடக்கிறது. பின்பு அத்திருமணங் களின் வழியாக  ஒன்றிணைகின்ற மணமக்கள் வாழ்வில் எப்படி பரக்கத் இடம்பெறும் ?

பெருமானார் அவர்களை நாம் நம்பியது அவ்ளோ தான். நம்பிக்கை இல்லாதனால் தான்  அவர்களின் சுன்னத்துக்கள் நடைமுறைக்கு வருவதில்லை.

நம்பிக்கை இல்லாமல் செய்வதினால் சில நேரங்களில் அந்த சுன்னத்துக்களின் மூலம் கிடைக்க வேண்டிய பலன்களையும் நாம் இழந்து விடுகிறோம்.

قال رسول الله صلى الله عليه وسلم :

ما من مسلم تصيبه مصيبة، فيقول ما أمره الله: {إنا لله وإنا إليه راجعون}،[البقرة:156] اللهم أجرني في مصيبتي، وأخلف لي خيرا منها، إلا أخلف الله له خيرا منها، قالت: فلما مات أبو سلمة، قلت: أي المسلمين خير من أبي سلمة؟ أول بيت هاجر إلى رسول الله صلى الله عليه وسلم، ثم إني قلتها، فأخلف الله لي رسول الله صلى الله عليه وسلم

உங்களில் எவருக்கேனும் துன்பம் ஏற்பட்டால் அவர், “ நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்விற்கு உரியவர்கள் ; நிச்சயமாக நாங்கள் அவனிடமே திரும்பச் செல்வபர்கள்; ( இறைவா!) எனக்கு ஏற்பட்ட துன்பத்திற்கு உன்னிடமே நன்மையை எதிர் பார்க்கிறேன் . அதற்குரிய கூலியைத் தருவாயாக ! இதை விட சிறந்ததை எனக்கு பகரமாக்குவாயாக என்று கூறுங்கள் என்று நபி அவர்கள் கூறினார்கள். எனது கணவர் அபூ ஸலமா இறக்கும் நேரத்தில் அபூ ஸலமாவை விடச் சிறந்தவர் யார் இருக்கிறார் என்று நான் சொல்லிக் கொண்டு இறுதியில் ( அந்த பிரார்த்தனையைக் ) கேட்டு விட்டேன். அல்லாஹ் அவர்களுக்கு பகரமாக நபி அவர்களைத் தந்தான் என்று உம்மு ஸலமா ரலி அவர்கள் கூறுகிறார்கள். (முஸ்லிம் ; 918)

தன் கணவரை விட சிறந்த கணவர் யாரும் இல்லை என்பதை உணர்ந்திருந்தும் பெருமானார் அவர்கள் கூறிய வார்த்தையை உண்மையாக நம்பி அதைக் கூறியதால் அல்லாஹ் உலகத்திலேயே சிறந்த மனிதரான மாநபி அவர்களையே கணவராக கொடுத்து விட்டான்.

எனவே நபி அவர்களின் ஒவ்வொரு வார்த்தைகளையும் நாம் நம்ப வேண்டும். நபித்தோழர்களின் ஈமானைப் போன்று நாம் ஈமான் கொள்ள வேண்டும்.  

10 comments:

  1. மாஷா அல்லாஹ் அருமையான பல தகவல்கள்

    ஹஜ்ரத் வாரம் வாரம் குறிப்புகளை நாங்கள் எதிர்பார்க்கின்றோம்

    அல்லாஹுத்தஆலா உடல் ஆரோக்கியத்தையும் கல்வி ஞானங்களையும் அதிகப்படுத்தி தருவானாக
    ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்

    ReplyDelete
  2. அல்ஹம்துலில்லாஹ் அருமையான பதிவு ஹஜ்ரத்
    அல்லாஹ் தங்களுக்கு நீண்ட
    ஆயுள் நிறைந்த செல்வம் ஆரோக்கியமான வாழ்வையும்
    சீரிய சிந்தனையும் தந்தருள்வானாக ஆமீன்!

    ReplyDelete
  3. அல்ஹம்துலில்லாஹ்... அருமையான பதிவு! தொடர்ந்து தங்களின் (ஜூம்ஆ குறிப்பு) பதிவை எதிர்பாக்கிறோம். அல்லாஹ் தங்களின் வாழ்க்கையில் எல்லாவிதமான வளங்களையும் நலன்களையும் நிறப்பமாக வழங்குவானாக ஆமீன்...

    ReplyDelete
  4. மாஷா அல்லாஹ்

    ReplyDelete
  5. தங்களின் மேலான பதிவு அருமை

    ReplyDelete
  6. Masha Allah barakallah hazrath

    ReplyDelete
  7. அருமை ஹஜ்ரத்

    ReplyDelete