Pages

Pages

Wednesday, March 22, 2023

ஏன் இந்த தயக்கம் ?

 

اِنَّ اللّٰهَ لَا يَسْتَحْـىٖۤ اَنْ يَّضْرِبَ مَثَلًا مَّا ‌بَعُوْضَةً فَمَا فَوْقَهَا ‌ فَاَمَّا ‌الَّذِيْنَ اٰمَنُوْا فَيَعْلَمُوْنَ اَنَّهُ الْحَـقُّ مِنْ رَّبِّهِمْ‌ وَاَمَّا الَّذِيْنَ ڪَفَرُوْا فَيَقُوْلُوْنَ مَاذَآ اَرَادَ اللّٰهُ بِهٰذَا مَثَلًا ۘ يُضِلُّ بِهٖ ڪَثِيْرًا وَّيَهْدِىْ بِهٖ كَثِيْرًا ‌ وَمَا يُضِلُّ بِهٖۤ اِلَّا الْفٰسِقِيْنَۙ ‏

கொசு அல்லது அதைவிட (அற்பத்தில்) மேலான எதையும் உதாரணமாகக் கூறுவதற்கு அல்லாஹ் நிச்சயமாக வெட்கப்பட மாட்டான். ஆதலால் எவர்கள் (உண்மையாக) நம்பிக்கை கொண்டிருக்கிறார்களோ அவர்கள் (அவ்வுதாரணம்) தங்கள் இறைவனால் கூறப்பட்ட உண்மையான உதாரணம்தான் என்று உறுதியாக அறிந்து கொள்வார்கள். எனினும், (இவ்வேதத்தை) நிராகரிப்பவர்களோ இதை உதாரணமாக்குவதைக் கொண்டு அல்லாஹ் என்னதான் நாடுகிறான்? எனக் கூறுவார்கள். இதைக் கொண்டு பலரை வழிகெடும்படியும் செய்கிறான். இதைக் கொண்டு பலரை நேர்வழி பெறும்படியும் செய்கிறான். (ஆனால், இவ்வேதத்தை மனமுரண்டாக நிராகரிக்கும்) பாவிகளைத் தவிர (மற்றவர்களை) இதைக் கொண்டு வழிகெடும்படி அவன் செய்யமாட்டான். (அல்குர்ஆன் : 2:26)

أنَّهُ جاءَ في القُرْآنِ ذِكْرُ النَّحْلِ والذُّبابِ والعَنْكَبُوتِ والنَّمْلِ، وهَذِهِ الأشْياءُ لا يَلِيقُ ذِكْرُها بِكَلامِ الفُصَحاءِ فاشْتِمالُ القُرْآنِ عَلَيْها يَقْدَحُ في فَصاحَتِهِ فَضْلًا عَنْ كَوْنِهِ مُعْجِزًا، فَأجابَ اللَّهُ تَعالى عَنْهُ بِأنَّ صِغَرَ هَذِهِ الأشْياءِ لا يَقْدَحُ في الفَصاحَةِ إذا كانَ ذِكْرُها مُشْتَمِلًا عَلى حِكَمٍ بالِغَةٍ

குர்ஆன் என்பது இலக்கிய நயமுள்ளது. அத்தனை இலக்கியவாதிகளுக்கும் சவால் விடக் கூடியது என்று சொல்கிறீர்கள். ஆனால் அந்த குர்ஆனில் தேனி எறும்பு சிலந்திப்பூச்சி கொசு ஈ போன்ற அற்பமான விஷயங்கள் கூறப்பட்டிருப்பது அதனுடைய இலக்கியத்தில் குறையை ஏற்படுத்துகிறது. அற்பமான விஷயங்கள் கூறப்பட்டிருக்கிற குர்ஆன் எப்படி அற்புதமாக இருக்க முடியும் என்று இணைவைப்பாளர் கள் கேட்டார்கள். சிரித்தார்கள். அவர்களுக்கு பதிலாகத் தான் இந்த வசனம் அமைந்திருக்கிறது. பார்ப்பதற்கு அற்பமான விஷயங்களாக இருந்தாலும் அதில் ஆழமான கருத்துக்கள் இருக்கிறது. பல்வேறு நுட்பங்கள் மறைந்திருக்கிறது என்று இறைவன் பதிலளிக்கிறான். (தஃப்ஸீர் ராஸீ)

ضَرْبُ الأمْثالِ بِهَذِهِ الأشْياءِ الحَقِيرَةِ لا يَلِيقُ بِاللَّهِ تَعالى، قُلْنا: هَذا جَهْلٌ؛ لِأنَّهُ تَعالى هو الَّذِي خَلَقَ الصَّغِيرَ والكَبِيرَ وحُكْمُهُ في كُلِّ ما خَلَقَ وبَرَأ عامٌّ؛ لِأنَّهُ قَدْ أحْكَمَ جَمِيعَهُ، ولَيْسَ الصَّغِيرُ أخَفَّ عَلَيْهِ مِنَ الكَبِيرِ والعَظِيمُ أصْعَبَ مِنَ الصَّغِيرِ، وإذا كانَ الكُلُّ بِمَنزِلَةٍ واحِدَةٍ لَمْ يَكُنِ الكَبِيرُ أوْلى أنْ يَضْرِبَهُ مَثَلًا لِعِبادِهِ مِنَ الصَّغِيرِ، بَلِ المُعْتَبَرُ فِيهِ ما يَلِيقُ بِالقِصَّةِ، فَإذا كانَ الألْيَقُ بِها الذُّبابَ والعَنْكَبُوتَ يَضْرِبُ المَثَلَ بِهِما لا بِالفِيلِ والجَمَلِ، فَإذا أرادَ تَعالى أنْ يُقَبِّحَ عِبادَتَهُمُ الأصْنامَ وعُدُولَهم عَنْ عِبادَةِ الرَّحْمَنِ صَلُحَ أنْ يَضْرِبَ المَثَلَ بِالذُّبابِ لِيُبَيِّنَ أنَّ قَدَرَ مَصَرَّتِها لا يَنْدَفِعُ بِهَذِهِ الأصْنامِ، ويَضْرِبُ المَثَلَ بِبَيْتِ العَنْكَبُوتِ لِيُبَيِّنَ أنَّ عِبادَتَها أوْهَنُ وأضْعَفُ مِن ذَلِكَ، وفي مِثْلِ ذَلِكَ كُلَّما كانَ المَضْرُوبُ بِهِ المَثَلُ أضْعَفَ كانَ المَثَلُ أقْوى وأوْضَحَ. (رازي

இந்த மாதிரியான அற்பமான பொருட்களை கூறுவது இறைவனுடைய தகுதிக்கு பொருந்தாது என்று சொல்வது அறியாமை ஆகும். ஏனென்றால் சிறியதையும் பெரியதையும் இறைவன் தான் படைத்தான். ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு நுட்பத்தை மறைத்து வைத்திருக்கிறான். பெரிய பொருளை விட சிறிய பொருள் தாழ்ந்ததும் இல்லை. சிறிய பொருளை விட பெரிய பொருள் உயர்ந்ததும் இல்லை. இறைவனைப் பொறுத்த வரை எல்லாம் ஒரே நிலையில் உள்ளது தான். எனவே எதை வேண்டுமானாலும் இறைவன் உதாரணப்படுத்துவதற்கு முடியும். இரண்டாவது, இந்த வசனத்தில் அல்லாஹ் சொல்ல வரும் கருத்திற்கு அற்பமான விஷயங்களை உதாரணப்படுத்துவது தான் பொருத்தமாக இருக்கும். இந்த வசனத்தில் அவர்கள் தன்னை வணங்குவதை விட்டு விட்டு அற்பமான சிலைகளை வணங்குவதை தவறு என்று சுட்டிக் காட்ட விரும்புகிறான். எனவே இந்த இடத்தில் சாதாரண பொருளை உதாரணப்படுத்துவது தான் பொருத்தமானதாக இருக்கும். (தஃப்ஸீர் ராஸீ)

இந்த வசனம் இறைவனுடைய வெட்கத்தைப் பற்றி பேசுகிறது. வெட்கம் என்பது மனிதனுக்கு ஏற்படக்கூடிய ஒரு குணம். வெட்கம் என்றாலே மற்றவர்களுக்கு பயந்து ஒரு அருவருப்பான காரியத்தை விடுவது. இது இறைவனுக்கு எப்படி பொருந்தும்? என்ற கேள்வியை முன்வைக்கப் படுகிறது.

القانُونُ في أمْثالِ هَذِهِ الأشْياءِ؛ أنَّ كُلَّ صِفَةٍ ثَبَتَتْ لِلْعَبْدِ مِمّا يَخْتَصُّ بِالأجْسامِ فَإذا وُصِفَ اللَّهُ تَعالى بِذَلِكَ فَذَلِكَ مَحْمُولٌ عَلى نِهاياتِ الأعْراضِ لا عَلى بِداياتِ الأعْراضِ، مِثالُهُ أنَّ الحَياءَ حالَةٌ تَحْصُلُ لِلْإنْسانِ لَكِنَّ لَها مَبْدَأً ومُنْتَهًى، أمّا المَبْدَأُ فَهو التَّغَيُّرُ الجُسْمانِيُّ الَّذِي يَلْحَقُ الإنْسانَ مِن خَوْفِ أنْ يُنْسَبَ إلى القَبِيحِ، وأمّا النِّهايَةُ فَهو أنْ يَتْرُكَ الإنْسانُ ذَلِكَ الفِعْلَ، فَإذا ورَدَ الحَياءُ في حَقِّ اللَّهِ تَعالى فَلَيْسَ المُرادُ مِنهُ ذَلِكَ الخَوْفُ الَّذِي هو مَبْدَأُ الحَياءِ ومُقَدَّمَتُهُ، بَلْ تَرْكُ الفِعْلِ الَّذِي هو مُنْتَهاهُ وغايَتُهُ، وكَذَلِكَ الغَضَبُ لَهُ عَلامَةٌ ومُقَدَّمَةٌ وهي غَلَيانُ دَمِ القَلْبِ وشَهْوَةُ الِانْتِقامِ، ولَهُ غايَةٌ وهو إنْزالُ العِقابِ بِالمَغْضُوبِ عَلَيْهِ، فَإذا وصَفْنا اللَّهَ تَعالى بِالغَضَبِ فَلَيْسَ المُرادُ ذَلِكَ المَبْدَأ - أعْنِي شَهْوَةَ الِانْتِقامِ وغَلَيانَ دَمِ القَلْبِ - بَلِ المُرادُ تِلْكَ النِّهايَةُ وهو إنْزالُ العِقابِ، فَهَذا هو القانُونُ الكُلِّيُّ في هَذا البابِ (رازي)

பதில் : பொதுவாக ஒவ்வொரு தன்மைகளுக்கும் தொடக்க நிலை, முடிவு நிலை ஆகிய இரு விஷயங்கள் இருக்கும். வெட்கத்தின் தொடக்கம் என்பது உடம்பில் ஏற்படுகின்ற ஒரு மாற்றம். அதாவது அருவருப்பான காரியங்களை செய்வதற்குப் பயப்படுதல். அதனுடைய முடிவு நிலை என்பது அந்த காரியத்தை விட்டு விடுவது. இறைவனோடு இந்த தன்மைகள் இணைக்கப்படுகின்ற பொழுது அதனுடைய முடிவு நிலையைத் தான் கவனிக்க வேண்டும். அதாவது அருவருப்பான காரியங்களை இறைவன் செய்ய மாட்டான் என்று பொருள் கொள்வது.

கோபம் என்ற தன்மையின் தொடக்க நிலை இரத்தம் உஷ்ணமடைவது. பழிவாங்க வேண்டும் என்ற உணர்வு மேலிடுவது. அதனுடைய முடிவு நிலை தண்டனையைக் கொடுப்பது இதில் அதனுடைய முடிவு நிலையைத்தான் இறைவனோடு சேர்க்க வேண்டும். அதாவது இறைவன் கோபமடைகிறான் என்றால் தண்டனையைக் கொடுக்கிறான் என்று பொருள்.

இந்த நேரத்தில் வெட்கம் குறித்து இஸ்லாம் கூறும் செய்திகளை நாம் கவனிக்க வேண்டும்.சில இடங்களில் வெட்கமோ தயக்கமோ கூடாது என்று கூறுகிறது.

வெட்கம் கூடாது என்று இஸ்லாம் சொல்லும் முதல் இடம் நன்மையான காரியங்களில். நன்மையான காரியங்களைச் செய்வதில் வெட்கம் இருக்கக் கூடாது. ஒரு தவறைப் பார்த்தால் முடிந்த வரை தடுக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.எனவே  தவறைக் கண்டால் தடுப்பது நம் கடமை. ஆனால் நம்மில் எத்தனை பேர் அதைத் தடுக்க முற்படுகிறோம். தடுப்பதில்லை, காரணம், நம்மை நம் வெட்கம் தடுக்கிறது. வழியில் இடறு தரும் பொருளை அகற்றுவது ஈமானின் முக்கிய அம்சம். வழியில் ஒரு மரம் பாதசாரிகளுக்கு இடையூறாக சரிந்து கிடக்கிறது, நம்மில் எத்தனை பேர் அதை அகற்ற முற்படுகிறோம். மரம் விழுந்து விட்டது, பயங்கரமான டிராஃபிக் ஜாம் ஆகி விட்டது. என்று பேசுவோமே தவிர களத்தில் இறங்கி வேலை செய்பவர்கள் ரொம்ப ரொம்பக் குறைவு,

عَنْ أَبِي وَاقِدٍ اللَّيْثِيِّ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَمَا هُوَ جَالِسٌ فِي الْمَسْجِدِ وَالنَّاسُ مَعَهُ، إِذْ أَقْبَلَ ثَلَاثَةُ نَفَرٍ، فَأَقْبَلَ اثْنَانِ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَذَهَبَ وَاحِدٌ، قَالَ : فَوَقَفَا عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَمَّا أَحَدُهُمَا فَرَأَى فُرْجَةً فِي الْحَلْقَةِ، فَجَلَسَ فِيهَا، وَأَمَّا الْآخَرُ فَجَلَسَ خَلْفَهُمْ، وَأَمَّا الثَّالِثُ فَأَدْبَرَ ذَاهِبًا، فَلَمَّا فَرَغَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : " أَلَا أُخْبِرُكُمْ عَنِ النَّفَرِ الثَّلَاثَةِ ؟ أَمَّا أَحَدُهُمْ فَأَوَى إِلَى اللَّهِ فَآوَاهُ اللَّهُ، وَأَمَّا الْآخَرُ فَاسْتَحْيَا فَاسْتَحْيَا اللَّهُ مِنْهُ، وَأَمَّا الْآخَرُ فَأَعْرَضَ فَأَعْرَضَ اللَّهُ عَنْهُ ".

அல்லாஹ்வின் தூதர் அவர்கள் மக்களுடன் பள்ளிவாசலில் அமர்ந்து கொண்டிருந்தபோது மூன்றுபேர் வந்து கொண்டிருந்தனர். அவர்களில் இருவர் அல்லாஹ்வின் தூதர் அவர்களை முன்னோக்கி வந்தனர். மற்றொருவர் (அலட்சியப் படுத்திவிட்டுச்) சென்று விட்டார். (பள்ளிக்குள் வந்த) அவ்விருவரும் அல்லாஹ்வின் தூதர் அவர்கள் (வீற்றிருந்த அவை) முன்னால் வந்து நின்றார்கள். அவ்விருவரில் ஒருவர் வட்டமான அந்த அவையில் ஒரு இடைவெளியைக் கண்ட போது அதில் அமர்ந்து கொண்டார். மற்றவரோ அவையினருக்குப் பின்னால் அமர்ந்துகொண்டார். அல்லாஹ்வின் தூதர் அவர்கள் (தமது பேச்சை) முடித்ததும் கூறினார்கள்:

இம்மூன்று பேர்களைப் பற்றி உங்களுக்குச் சொல்லட்டுமா? அவர்களில் ஒருவர் அல்லாஹ்வின் (அருளின்) பக்கம் ஒதுங்கினார். அல்லாஹ்வும் அவரை அரவணைத்துக் கொண்டான். மற்றவரோ வெட்கப்பட்டு (க்கொண்டு கடைசியில் உட்கார்ந்து) விட்டார். எனவே அல்லாஹ்வும் வெட்கப்பட்டுக் கொண்டான். மூன்றாமவரோ அலட்சியப்படுத்திச் சென்று விட்டார். எனவே அல்லாஹ்வும் அவரை அலட்சியப்படுத்திவிட்டான். (புகாரி : 66

இரண்டாவது சத்தியத்தை எடுத்துச் சொல்வதில் வெட்கம் இருக்கக்கூடாது. சத்தியத்தை சொல்ல வேண்டிய இடத்தில் சொல்ல வேண்டிய நேரத்தில் சொல்ல வேண்டும்.அங்கே வெட்கம் தடையாக வந்து நிற்கக்கூடாது.

يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَدْخُلُوْا بُيُوْتَ النَّبِىِّ اِلَّاۤ اَنْ يُّؤْذَنَ لَـكُمْ اِلٰى طَعَامٍ غَيْرَ نٰظِرِيْنَ اِنٰٮهُ وَلٰـكِنْ اِذَا دُعِيْتُمْ فَادْخُلُوْا فَاِذَا طَعِمْتُمْ فَانْتَشِرُوْا وَلَا مُسْتَاْنِسِيْنَ لِحَـدِيْثٍ  اِنَّ ذٰلِكُمْ كَانَ يُؤْذِى النَّبِىَّ فَيَسْتَحْىٖ مِنْكُمْ وَاللّٰهُ لَا يَسْتَحْىٖ مِنَ الْحَـقِّ  وَاِذَا سَاَ لْتُمُوْهُنَّ مَتَاعًا فَسْــٴَــــلُوْهُنَّ مِنْ وَّرَآءِ حِجَابٍ  ذٰ لِكُمْ اَطْهَرُ لِقُلُوْبِكُمْ وَقُلُوْبِهِنَّ  وَمَا كَانَ لَـكُمْ اَنْ تُؤْذُوْا رَسُوْلَ اللّٰهِ وَلَاۤ اَنْ تَـنْكِحُوْۤا اَزْوَاجَهٗ مِنْ بَعْدِهٖۤ اَبَدًا  اِنَّ ذٰ لِكُمْ كَانَ عِنْدَ اللّٰهِ عَظِيْمًا‏

நம்பிக்கையாளர்களே! (உங்களை உங்களுடைய நபி விருந்துக்காக அழைத்திருந்தபோதிலும்) அனுமதியின்றி நபியின் வீட்டினுள் செல்லாதீர்கள். அது தயாராவதை எதிர்பார்த்துத் தாமதித்து இருக்கக்கூடிய விதத்தில் முன்னதாகவும் சென்று விடாதீர்கள். (விருந்து தயாரானதன் பின்னர்) நீங்கள் அழைக்கப் பட்டால்தான் உள்ளே செல்லவும். தவிர, நீங்கள் உணவைப் புசித்து விட்டால் உடனே வெளிப்பட்டு விடுங்கள். (அங்கிருந்து கொண்டே வீண்) பேச்சுக்களை ஆரம்பித்துவிட வேண்டாம். (அவ்வாறு செய்தால்) நிச்சயமாக இது நபிக்கு பெரும் வருத்தத்தையளிக்கும். (இதனை) உங்களிடம் (கூற) அவர் வெட்கப்படலாம். எனினும், உண்மையைச் சொல்ல அல்லாஹ் வெட்கப்பட மாட்டான். நபியுடைய மனைவிகளிடம் யாதொரு பொருளை நீங்கள் கேட்(கும்படி நேரிட்)டால், (நீங்கள்) திரை மறைவிலிருந்து கொண்டே அவர்களிடம் கேளுங்கள். இது உங்கள் உள்ளங்களையும், அவர்கள் உள்ளங்களையும் பரிசுத்தமாக்கி வைக்கும். அல்லாஹ்வுடைய தூதரை நீங்கள் துன்புறுத்துவது உங்களுக்குத் தகுமானதன்று. அன்றி, அவருடைய மனைவிகளை அவருக்குப் பின்னர் ஒரு காலத்திலும் நீங்கள் திருமணம் செய்து கொள்வதும் கூடாது. நிச்சயமாக இது அல்லாஹ்விடத்தில் மிக்க கடுமையான (பாவமான) காரியமாகும்.

(அல்குர்ஆன் : 33:53)

عن أنس رضي الله عنه في قصة زواجه ـ صلى الله عليه وسلم ـ بزينب ـ رضي الله عنها ـ حينما بنى النبي صلى الله عليه وسلم وعمل وليمة العرس وجعل الناس يدخلون أفواجاً أفواجاً يقول أنس رضي الله عنه : وبقي طائفة منهم فأطالوا عليه الحديث ( أي : استمروا في الحديث) فجعل النبي صلى الله عليه وسلم يستحيي منهم أن يقول لهم شيئاً ولهذا انزل الله سبحانه ما أنزل : ( ولا مستأنسين لحديث إن ذلكم كان يؤذي النبي فيستحيي منكم والله لا يستحي من الحق (مسلم)

ஜைனப் ரலி அவர்களை நபியவர்கள் நிக்காஹ் செய்து கொண்ட பிறகு வலீமா உணவை ஏற்பாடு செய்திருந்தார்கள். அதற்கு மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து அதிலே கலந்து கொண்டார்கள். அதிலே ஒரு பிரிவினர் நீண்ட நேரமாக நபி அவர்கள் வீட்டில் அமர்ந்து கொண்டு பேசிக்கொண்டு இருந்தார்கள். இது நபியவர்களுக்கு அசௌகரீகத்தை ஏற்படுத்தியது. இருந்தாலும் அவர்கள் எதுவும் கூற வில்லை. ஆனால் அல்லாஹ் உடனே வசனத்தை இறக்கி விட்டான்.

பேசிக் கொண்டிருப்பவர்களை நபி அவர்கள் எதுவும் சொல்லாமல் இருந்த காரணத்தினால் சத்தியத்தை சொல்வதற்கு அவர்கள் வெட்கப்பட்டார்கள் என்று நம் புரிந்து கொள்ளக்கூடாது. நீண்ட நேரம் பேசிக் கொண்டிருப்பது ஒரு வகையில் தனக்கு சிரமமாக இருந்தாலும் வீட்டுக்கு வந்தவர்களை கிளம்புங்க என்று சொல்வது அந்தளவு நாகரீகமாக இருக்காது. அதனால் தான் நபி அவர்கள் அப்படி சொல்வதற்கு தயக்கம் காட்டினார்கள்.யோசித்தார்கள். அதே சமயத்தில் தன் ஹபீபுக்கு இடையூறு தருவதை தடுப்பதற்கு அல்லாஹ்வுக்கு எந்த தயக்கமோ வெட்கமோ தேவையில்லை.அதனால் அல்லாஹ் அவர்களுக்கு அதை உணர்த்தி விட்டான்.

மூன்றாவது மார்க்கத்தை படிப்பதில் மார்க்கத்தை தெரிந்து கொள்வதில் வெட்கம் கூடாது.

 اثنان لا يتعلمان المستحي والمستكبر 

வெட்கப்படுபவன், பெருமை கொள்பவன் இருவரும் கல்வி கற்க முடியாது என்று கூறுவார்கள்.

கல்வியில் வெட்கமும் கூடாது, பெருமையும் கூடாது. இதை எப்படி கேட்பது, கேட்டால் என்ன நினைப்பார்களோ என்று வெட்கப்படுபவனுக்கும் மார்க்கம் கிடைக்காது. அவரிடம் சென்று நாம் கேட்க வேண்டுமா.கேட்டால் நம் மரியாதை என்ன ஆகுவது என்று தற்பெருமை கொள்பவனுக்கும் மார்க்கம் கிடைக்காது.

வெட்கத்துக்கே உதாரணமாக சொல்லப்படுகிற பெண்கள் கூட அன்றைக்கு மார்க்க சட்டங்கள் கேட்பதில் வெட்கப்பட வில்லை.

قالت عائشة رضي الله عنها : ( نعم النساء نساء الأنصار ، لم يمنعهن الحياء ، أن يتفقهن في الدين

பெண்களில் சிறந்தவர்கள் மதீனத்துப் பெண்கள். மார்க்கத்தை தெரிந்து கொள்வதற்கு அவர்களின் வெட்கம் தடையாக இருக்காது என்று ஆயிஷா ரலி அவர்கள் கூறுகிறார்கள்.

قالت جاء أم سليم إلى رسول الله صلى الله عليه وسلم فقالت : يارسول الله إن الله لا يستحى من الحق , فهل على المرأة غسل إذا احتلمت فقال ـ النبي صلى الله عليه وسلم ـ : (إذا هي رأت الماء

அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் உண்மையைக் கூற வெட்கப்பட மாட்டான். பெண்ணுக்கு ஸ்கலிதம், ஏற்பட்டால் அவள் குளிப்பது அவசியமா? என்று ஒரு பெண்மணி நபி அவர்களிடம் கேட்ட போது, ஆம்! ஈரத்தை அவள் (மேனியில், ஆடை யில்) கண்டால் குளிக்க வேண்டும்என்று நபி அவர்கள் கூறினார்கள். (புகாரி-273)

நான்காவது அழைப்புப் பணியில் வெட்கம் கூடாது.மக்களை இஸ்லாத்தின் பக்கம் நல்வழியின் பக்கம் அழைப்பதில் வெட்கம் இருக்கக்கூடாது.நபி அவர்கள் அழைப்புப் பணியின் போது எத்தனை மனவேதனைகளை சந்தித்தார்கள்.எத்தனை அவமானங்களை சந்தித்தார்கள். பார்க்கும் இடங்களிலெல்லாம் அவர்களைக் கேலியும் கிண்டலும் செய்தார்கள். தாயிஃபில் அவர்களை கல்லால் அடித்து துறத்தினார்கள்,ஸஜ்தாவில் இருக்கிற போது ஒட்டகக் குடலை எடுத்து அவர்கள் முதுகில் போட்டார்கள். உக்பதுப்னு முஈத் என்பவன் நபியின் மீது காரி உமிழ்ந்தான்.இத்தனை அவமானங்களை சந்தித்தும் அவர்களது அழைப்புப் பணியில் எந்த தொய்வும் ஏற்பட வில்லை.

No comments:

Post a Comment