Pages

Pages

Thursday, September 30, 2021

ஹதீீஸ் எண் 29 ان لله ما اخذ

 

عن أسامة بن زيد بن حارثة -رضي الله عنهما- قال: أرسلت بنت النبي -صلى الله عليه وسلم- إنَّ ابني قد احتُضِر فاشْهَدنَا، فأرسَل يُقرِىءُ السَّلام، ويقول: «إنَّ لِلَّه ما أَخَذ ولَهُ ما أَعطَى، وكلُّ شَيءٍ عِنده بِأجَل مُسمَّى فَلتَصبِر ولتَحتَسِب». فأرسلت إليه تُقسِم عَليه لَيَأتِيَنَّها، فقام ومعه سعد بن عبادة، ومعاذ بن جبل، وأبي بن كعب، وزيد بن ثابت، ورجال -رضي الله عنهم- فَرفع إلى رسول الله -صلى الله عليه وسلم- الصَّبِي، فأَقعَدَه في حِجرِه ونَفسه تَقَعقَع، فَفَاضَت عينَاه فقال سعد: يا رسول الله، ما هذا؟ فقال: «هذه رَحمَة جَعلَها الله تعالى في قُلُوب عِباده» وفي رواية: «في قلوب من شاء من عباده، وإنَّما يَرحَم الله من عِبَاده الرُّحَماء

நபியின் மகள் ஜைனப் ரலி அவர்கள், என் மகன் உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. எங்களிடம் நீங்கள் வர வேண்டும் என்று சொல்லி நபி ஸல் அவர்களிடம் ஆள் அனுப்பி வைத்தார்கள். அவர் சலாம் கூறியவராக திரும்பி வந்தார். அவரிடம் நிச்சயமாக அல்லாஹ்வுக்கு அவன் எடுத்துக் கொண்டது உண்டு. மேலும் அவனுக்கே அவன் கொடுத்ததும் உண்டு. அவனிடத்தில் ஒவ்வொரு பொருளும் குறிப்பிட்ட தவணையில் தான் இருக்கிறது. எனவே என் மகள் பொறுமையாக இருக்கட்டும். நன்மையை எதிர்பார்க்கட்டும் என்று கூறி அனுப்பினார்கள். தன்னிடம் கண்டிப்பாக நபியவர்கள் வர வேண்டும் என சத்தியமிட்டு கூறி மகளார் மீண்டும் ஒருவரை அனுப்பினார்கள். உடனே நபி ஸல் அவர்கள் எழுந்து வந்தார்கள். அவர்களுடன் ஸஃது பின் உபாதா முஆத் பின் ஜபல் உபை பின் கஃப் ஸைத் பின் ஸாபித் ஆகியோரும் மற்றும் சில நபித்தோழர்களும் சென்றார்கள். அப்போது நபி ஸல் அவர்களிடம் சிறுவர் தரப்பட்டார். அதுவரை தன் மடியில் வைத்தார்கள்.அவருக்கு மூச்சு வாங்கிக் கொண்டிருக்கிறது. அப்போது அவர்களின் கண்கள் கண்ணீரை வடித்தன. உடனே ஸஃது ரலி அவர்கள் இறைத்தூதர் அவர்களே என்ன நீங்களும் அழுகிறீர்கள் என்று கேட்டார்கள். அதற்கு இது தான் இரக்கமாகும். தன் அடியார்களின் இதயங்களில் இதை அல்லாஹ் ஏற்படுத்தி இருக்கிறான் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள். (புகாரி ; 1284)


ان لله ما اخذ

அவன் எடுத்துக் கொண்டது அவனுக்குரியது.

இந்த வார்த்தையின் பொருள் என்னவென்றால், நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிற அனைத்தும் அல்லாஹ்விற்குறியது. அதைக் கொடுத்தது அல்லாஹ். அவன் நாடியவர்களுக்கு நிஃமத்தைக் கொடுக்கிறான். நாடியவர்களிடமிருந்து அதை எடுத்து விடுகிறான்.

انا لله زانا اليه راجعون

நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கு உரியவர்கள் அவன் பக்கமே மீளக் கூடியவர்களாக இருக்கிறோம்.

எல்லாம் அல்லாஹ்விற்கு உரியவைகளாக இருப்பதினால் அவன் எப்பொழுது வேண்டுமானாலும் அதை எடுத்துக் கொள்ளலாம். அவ்வாறு எடுத்துக் கொள்வதற்கான உரிமையும் அதிகாரமும் அவனுக்கு உண்டு. ஆனால் அவன் எப்பொழுது எடுத்துக் கொண்டாலும் அதைப் பொருந்திக் கொள்கிற மனோ நிலை நமக்கு இருக்க வேண்டும். ஒருவர் ஒரு பொருளை அமானிதமாக நம்மிடத்தில் தருகிறார் என்றால், அது அவருக்குரிய பொருளாக இருப்பதனால் அவர் எப்பொழுது திருப்பி கேட்டாலும் அதை கொடுக்க வேண்டும். இப்போது தர மாட்டேன் என்று சொல்வது அது உசிதமல்ல.

قالت : يا أبا طَلحةَ أرأَيْتَ أهلَ بيتٍ أَعاروا أهلَ بيتٍ عاريةً فطلَبها أصحابُها أيرُدُّونَها أو يحبِسونَها ؟ فقال : بل يرُدُّونَها عليهم قالتِ : احتسِبْ أبا عُمَيرٍ

அபூ தல்ஹா ரலி அவர்களின் மகன் அவர்கள் வெளியூர் பயணத்தில் இருக்கின்ற பொழுது மவ்த்தாகி விடுகிறான். திரும்பி வந்தவுடன் மகன் மரணித்து விட்டான் என்று சொல்லும் போது அவர்கள் பொறுமை இழந்து விடலாம் என்று எண்ணி அவர்களின் மனைவி உம்மு ஸலமா ரலி அவர்கள், ஒரு குடும்பத்தினர் இன்னொரு குடும்பத்தினரிடம் ஒரு பொருளை  அடமானமாக கொடுக்கிறார்கள். பின்பு அதை திருப்பி கேட்கிற பொழுது அதைக் கொடுக்காமல் இவர்கள் தடுத்து வைத்துக் கொள்ளலாமா என்று கேட்டார்கள். அதற்கு அபூ தல்ஹா ரலி அவர்கள் இல்லை, அதை கேட்கும் பொழுது ஒப்படைத்து விட வேண்டும் என்று சொன்னார்கள். அப்போது உம்மு ஸலமா ரலி அவர்கள் நீங்கள் பொறுமையாக இருங்கள். நம் மகன் இறந்து போய் விட்டான் என்று சொன்னார்கள்.

எனவே அனைத்தும் அல்லாஹ் கொடுத்தவை. அவன் எடுக்கின்ற பொழுது அதைக் கொடுப்பதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும். அந்த இழப்பை ஏற்றுக் கொள்ளும் மனோ நிலையில் நாம் இருக்க வேண்டும் என்பது இந்த வார்த்தையின் பொருள் ஆகும்.

له ما اعطي

அவன் கொடுத்தது அவனுக்குரியதே.

இந்த வார்த்தையின் பொருள் என்னவென்றால். எல்லாமே அவன் தான் கொடுத்திருக்கிறான். நம் உயிர், நம் உடமைகள், நம் சொத்து, சுகம், பிள்ளைகள், பொருளாதாரம், அனைத்தும் அல்லாஹ் தந்தவை. எல்லாம் அவனுக்குரியதாக இருப்பதினால் அல்லாஹ் ஒவ்வொன்றையும் எந்த நோக்கத்தில் தந்திருக்கிறானோ அந்த நோக்கத்தில் பயன்படுத்த வேண்டும் ஷரீஅத்துக்கு உட்பட்டு மார்க்கம் சொல்லுகின்ற வழிமுறைப்படி ஒவ்வொன்றையும் செய்ய வேண்டும் என்பது இதன் பொருளாகும்.

فَفَاضَت عينَاه

அப்போது அவர்களின் கண்கள் கண்ணீரை வடித்தன.

இறந்தவருக்காக அழுவது கூடுமா என்கின்ற கேள்வி எங்கே வருகிறது. ஒரு ஹதீஸில்

الْمَيِّتُ يُعَذَّبُ فِي قَبْرِهِ بِمَا نِيحَ عَلَيْهِ

ஒப்பாரி வைத்து அழப்படுகின்ற காரணத்தினால் மண்ணறையில் இருக்கக்கூடிய மைய்யித்து வேதனை செய்யப்படுகிறது என்று வருகிறது.

اختلف العلماء في تأويل الأحاديث التي وردت بتعذيب الميِّت بما نيح عليه، فحمَلَها الجمهور على من وصَّى بأن يُبكَى عليه ويُناح بعد موته فنفِّذت وصيَّته، فهذا يُعَذب ببكاء أهله عليه ونوحهم؛ لأنه بسببه ومنسوب إليه. فأما مَن بَكَى عليه أهله وناحوا من غير وصية منه فلا يعذَّب،

இந்த ஹதீஸிற்கு விளக்கம் சொல்லக்கூடிய மார்க்க அறிஞர்கள் அய்யாமுல் ஜாஹிலிய்யா காலத்தில் ஒரு பழக்கம் இருந்தது. இறந்து போகக் கூடியவர் இறப்பதற்கு முன்பு எனக்காக இப்படி அழ வேண்டும். இப்படி ஒப்பாரி வைக்க வேண்டும் என்றெல்லாம் வஸிய்யத் செய்து விட்டு செல்வார். அவ்வாறு செய்யப்படும். இப்படி யார் வஸியத்தை செய்து, அவருக்காக அவ்வாறு அழைக்கப்படுகிறதோ அந்த மையத்துக்குத் தான் வேதனை செய்யப்படும் என்று கூறுகிறார்கள்.

இறந்தவருக்காக கண்ணீர் வடித்து அழுவது குற்றமல்ல. அது இரக்கத்தின் வெளிப்பாடாகும் என்பதற்கு மேற்கூறப்பட்ட ஹதீஸ் ஆதாரமாகும். எனவே கண்ணீர் வடிப்பது கூடும். ஆனால் சட்டையை கிழித்துக்கொண்டு கன்னத்தில் அடித்துக் கொண்டு ஒப்பாரி வைத்துக் கொண்டு அழுவது மார்க்கத்தில் தடை செய்யப்பட்டிருக்கிறது.

No comments:

Post a Comment