Pages

Pages

Wednesday, December 4, 2013

வரதட்தணை ; நேர்காணல்

                                                         
சித்தீக்       ;   ஹலோ சார் உங்கப்பெயர் என்ன?     

முஜாஹித்   ;     என் பெயர் வரதட்சனைசீதனம்  என்றும்  செல்லமாகஅழைப்பார்கள்.                 

சித்தீக்           :     உங்க பிறப்பு வளர்ப்பைப்பற்றி சொல்ல முடியுமா சார்?           

 முஜாஹித்  ;     தாராளமா நான் பிறந்தது இந்தியாவில் பேராசைப்பிடித்த மனிதர்கள் வீட்டில்.அங்கு பிறந்த எனக்கு இப்போது உலகெங்கிலும் செல்வாக்கு உண்டு

சித்தீக்           ;    நீங்க எந்த மதம் சார்?  

முஜாஹித்   ;    நான் ஒரு பிராமண மதத்தைச்சேர்ந்தவன்.    

சித்தீக்           ;    இப்போது நீங்க இருப்பது?       

 முஜாஹித்  ;    பிராமணர்கள் இப்போது கொஞ்சம் சொஞ்சமாக என்னை ஒதுக்குகிறார்கள். அதனால் மற்ற இடங்களில் இருப்பேன்.குறிப்பாக முஸ்லிம்கள் வீட்டில் என்னை அதிகம் பார்க்கலாம்.ஏன் உங்க ஊர் கேம்பலாபாத்ல கூட எனக்கு நிறைய வீடுகள் இருக்கிறது,நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள்.வேண்டுமானால் கேட்டுப்பாருங்கள். 

சித்தீக்           ;     உங்களுக்கு உடன் பிறந்தவர்கள் எத்தனைபேர் சார்?   

முஜாஹித்   ;     வட்டி, கடன்,லஞ்சம்,லாட்டரி,சூதாட்டம் என்று பல பேர் உண்டு.    

சித்தீக்           ;     சார் நீங்க ரொம்ப மகிழ்ச்சியா இருக்கீங்க போல?      

முஜாஹித்   ;     இது என்ன கேள்வி மடத்தனமா.இந்த நாட்ல வேறு யாருக்கும் மகிழ்ச்சி இருக்கிறதோ இல்லையோ எனக்கு ஆக மகிழ்ச்சி

சித்தீக்           ;     உங்க தொழில் என்ன சார்?       

முஜாஹித்   ;     ஆகா இந்த கேள்வியத்தான் நான் ரொம்ப நேரமா எதிர்பாத்தேன்.என்னோட தொழில் வேற ஒன்னும் இல்ல.ஆண்களுக்கு பணத்தாசையை ஏற்படுத்துவது,பெண்களை கண்ணீர் வடிக்க வைப்பது,அவர்களை தற்கொலை செய்ய வைப்பது,அவர்களை தவறான வழியில் தள்ளுவது,பெண்ணைப்பெற்றவர்களை வட்டி வாங்க வைப்பது,பிச்சை எடுக்க வைப்பது,அவர்களை நடுத்தெருவுக்கு கொண்டு வருவது,பெண் குழந்தைகளைப்பிறக்க விடாமல் கருவலேயே அவர்களுக்கு சமாதி கட்டுவது அவ்ளோ தான்.            

சித்தீக்            ;     உங்களோட எதிர்கால லட்சியம் என்ன சார்

முஜாஹித்     ;     பெண் சமூகத்தை வேறோடு அழிப்பது.  

சித்தீக்            ;     உங்க லட்சியம் எதுவும் நிறைவேறி இருக்குதா சார்?   

முஜாஹித்      :      ஊம் நிறையவே நிறைவேறி இருக்குது.அண்ணல் நபியும்,அருமை ஸஹாபாக்களும், நல்லோர்களும் இருந்த காலம் வரை நான் மதிப்பில்லாமல் இருந்தேன்.என்னைக்கேட்பாரில்லை.ஆனால் அந்த நல்லவர்கள் சென்ற பிறகு நிலமை தலைகீழாக மாறி விட்டது.நான் ரொம்ப முன்னேறி இருக்கிறேன்.நிறைய பெண்கள் என்னுடன் மோதிப்பார்த்து விட்டு இறுதியில் காணாமல் போய் விட்டார்கள்.இன்னும் சிலர்  திருமண வாழ்க்கையைத்தொலைத்து விட்டார்கள்.இன்னும் சிலர் என்காரணமாக ஆடு மாடுகளைப்போல அறுக்கப்படுகிறார்கள்,எரிக்கப்படுகிறார்கள்,கணவனால் சித்தரவதை செய்யப்படுகிறார்கள்,நீங்கதான் தினமும் பேப்பர்ல பாத்திருப்பீங்களே.அந்த மாதிரி செய்தி இல்லாம ஒருநாளும் பேப்பர் பாக்க முடியாதே.அத வச்சே என் உயர்ந்த லட்சியம் எந்த அளவு நிறைவேறி இருக்குதுன்னு புரிஞ்சிக்கலாமே. 

சித்தீக்               ;    இந்த உயர்ந்த லட்சியத்த நிறைவேத்துறதுக்கு உங்களுக்கு உதவியாளர்கள் யாரும் உண்டா சார்?                                

முஜாஹித்       ;   நிறைய இருக்காங்களே----- இந்த உலகத்துல இருக்குற தாய்மார்கள் தான் எனக்கு உதவியாளர்கள், ஆதரவாளர்கள் எல்லாமே

சித்தீக்             ;    என்னங்க சொல்றீங்க ஆச்சர்யமா இருக்குது.உங்க லட்சியமே பெண்கள அழிப்பதுன்னு தான் சொல்றீங்க----- பின்ன அந்த பெண்களே எப்டி உங்களுக்கு ஆதரவு கொடுப்பாங்க பெண்களே எப்டி சார் பெண்கள அழிப்பதற்கு ஹெல்ப் பன்னுவாங்க.ஒன்னும் புரியலயே?      

முஜாஹித்      ;   கல்யான வயசுல இருக்குற இளம் பெண்கள் தான் எனக்கு எதிரிங்க. அதனால அவங்கள அழிக்கனும்னு நினக்கிறேன்.அதே ஒரு பொண்ணு கல்யானம் ஆகி ஒரு ஆம்பல புள்ளய பெத்து விட்டால் எனக்கு நண்பர்களா ஆயிட்றாங்க.ஏன் ஒன்னும் புரியலயா இன்னக்கு  வரதட்சனை கொடுமைக்கு அடிப்படை காரணமே இந்த மாப்பிள்ளையைப்பெற்ற தாய்மார்கள் தானே.     

சித்தீக்               ;   ஏன் சார் உங்களுக்கு மவ்த்லாம் கிடையாதா?      

 முஜாஹித்      ;  சின்ன வயசு பொண்ணா இருக்குற வரைக்கும் வரசட்சனை ஒரு வன் கொடுமை என்றும்,பெரிய தாயான பிறகு வரதட்சனை ஒரு கட்டாய கடமை என்றும் சொல்லி இரட்டை வேடம் ஆடக்கூடிய இந்த பெண்கள் இருக்கும் வரை எனக்கு என்றும் அழிவே கிடையாது.ஆஆஆஆஆ------ 

No comments:

Post a Comment