Pages

Pages

Thursday, December 19, 2013

இஸ்லாம் கற்றுத்தந்த ஆட்சி முறை




அன்பு நிறைந்த நேயர்களே! அல்லாஹுத்தஆலா ; அண்ணல் நபி {ஸல்}அவர்கள் குறித்து
لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ அல்லாஹ்வுடைய தூதரிடத்தில் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறதுஎன்பதாக அல்குர்ஆன் அத்தியாயம்-33.வசனம்-22-ல் குறிப்பிடுகிறான்.அண்ணல் நபியவர்கள் இவ்வுலக மக்களுக்கு முன்மாதிரியான வாழ்க்கைத் திட்டத்தை
முழுமையாக வடிவமைத்துக் கொடுத்து நாம் கால் வைக்கிற அனைத்துத் துறைகளிலும் சிறந்த வழிகாட்டுதலை வழங்கிச் சென்றிருக்கிறார்கள்.வீட்டில் வாழ்வது முதல் நாட்டை ஆள்வது வரை தெளிவான வழிகாட்டுதல்களை அவர்களின் அழகிய வாழ்வு நமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டும்.

அண்ணல் நபியவர்கள் இவ்வுலகில் அவதரிப்பதற்கு முன்பு உலகில் முழுமையானதொரு ஆட்சிமுறையோ,ஆட்சி திட்டங்களோ இல்லை.தலைவர்கள் தலைவர்களாக இல்லை.மக்கள் மக்களாக இல்லை.மனம்போன போக்கிலே தான்தோன்றிகளாக வாழ்ந்த அந்த மக்களுக்கு முழுமையான வாழ்க்கை கட்டமைப்பை உருவாக்கி மாக்களாக வாழ்ந்த அவர்களை மக்களாக வடிவமைத்த பெருமை அண்ணல் நபியைச்சாரும்.வாழ்க்கை,வழிபாடு, உறவு, குடும்பம், கூட்டுவாழ்க்கை,தனிமனித வாழ்க்கை,வணிகம்,தொழில்,குழந்தை வளர்ப்பு என அத்தனை விஷயங்களையும் திரம்பட போதித் தார்கள்.குறிப்பாக தெளிவான ஓர் அரசியல் அமைப்பை கட்டமைத்தார்கள்.

இன்று அரசியல் என்றாலே சாக்கடை என்று சொல்லுகிற அளவிற்கு அதன் நிலைபாடு மிக மோசமாக இருப்பதை நாம் கண்டு வருகிறோம். இன்றைய சில தலைவர்கள் மக்களின் கூக்குறலை செவிமடுப்பதும் இல்லை.மக்கள் அந்த தலைவர்ளுக்கு கட்டுப்படுவதும் இல்லை.  

ஆனால் அண்ணல் நபி {ஸல்} அவர்கள் சிறந்த மக்களையும் உருவாக்கினார்கள். சிறந்த தலைமைத் துவத்திற்கும் வித்திட்டார்கள்.
عَنْ يَحْيَى بْنِ حُصَيْنٍ قَالَ سَمِعْتُ جَدَّتِي تُحَدِّثُ
أَنَّهَا سَمِعَتْ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُ فِي حَجَّةِ الْوَدَاعِ وَهُوَ يَقُولُ وَلَوْ اسْتُعْمِلَ عَلَيْكُمْ عَبْدٌ يَقُودُكُمْ بِكِتَابِ اللَّهِ فَاسْمَعُوا لَهُ وَأَطِيعُوا                   

 “அடிமையொருவர் உங்களுக்கு தலைவராக ஆக்கப்பட்டாலும் அவருடைய சொல்லை கேளுங்கள்.அவருக்கு கீழ்படியுங்கள்” [முஸ்லிம்] என்று கூறி தலைமையின் கீழ், கட்டுப்பட்டு வாழ வேண்டும் என்ற பக்குவத்தை மக்களிடம் போதித்தார்கள்.மக்களுக்கு ஊழியம் செய்பவன்தான் மக்களுக்கு தலைவனாக இருக்க முடியும் என்று கூறி சிறந்த தலைமைத் துவத்தின் இலக்கணத்தை தலைவர்களுக்கு புரியவைத்தார்கள் நபியவர்கள்.

இன்றைய கால கட்டத்தில் ஓர் ஆட்சியைப்பிடிக்க,ஓர் தலைமைத்துவத்தை தக்க வைத்துக்கொள்ள எதையும் செய்யத் துணிந்த இன்றைய தலைவர்களுக்கு மத்தியில் பதவி மோகம் குறித்து, ஆட்சித்தலைமையை நீங்களாக கேட்காதீர்கள்.நீங்களாக கேட்டு அது உங்களுக்கு வழங்கப்பட்டால் அதோடு தனியாக விடப்படுவீர்கள்.அதில் இறைவனின் உதவி உங்களுக்கு கிடைக்காது. நீங்களாக கேட்காமல் அது உங்களின் கரம் வந்து சேர்ந்தால் அதில் இறைவனின் உதவி உங்களுக்கு கிடைக்கும் என்ற அண்ணல் நபியவர்களின் நாவில் வெளிவந்த வார்த்தைகள் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டியவை.

மக்களாட்சியை எவ்வாறு மக்களுக்கு சேவை செய்யும் விதத்தில் நடத்துவது என்பதை அண்ணல் நபியவர்கள் அன்றைய கால அரபிகளுக்கும், தம்முடைய தோழர்களுக்கும் தெளிவான முறையில் செயல்முறைப்படுத்தியும், ஆட்சி செய்தும் வழிகாட்டினார்கள்.இஸ்லாம் காட்டித்தந்த இந்த சிறந்த ஆட்சி முறையின் படி இன்றைய தலைவர்கள் நடக்க ஆரம்பித்தால் நாடும்,வீடும் வளம்பெரும்.

இறைவா! அண்ணல் நபியின் முழுமையான வழிகாட்டுதலை பின்பற்றி வாழ எங்களுக்கு கிருபை செய்வாயாக!   


No comments:

Post a Comment