Pages
▼
Pages
▼
சிறந்தவர்கள் யார்?
1.ஆண்களில் சிறந்தவர் யார்?
தன்
மனைவியிடத்தில்
நல்ல பெயரை
வாங்குபவரே ஆண்களில்
சிறந்தவர்.
2.பெண்களில்
சிறந்தவர் யார்?
கணவன்
பார்த்தால் மகிழ்ச்சியை
ஏற்படுத்துபவளே
பெண்களில் சிறந்தவர்.
3.பெரியவர்களில்
சிறந்தவர் யார்?
சிறுவர்களின்
மீது இறக்கம்
காட்டுபவரே பெரியவர்களில்
சிறந்தவர்.
4.சிறுவர்களில் சிறந்தவர் யார்?
பெரியவர்களுக்கு
மரியாதை அளிப்பவரே
சிறுவர்களில்
சிறந்தவர்.
5.முதலாளிகளில் சிறந்தவர் யார்?
தொழிலாளியின்
வியர்வை காயும்
முன் ஊதியம்
கொடுப்பவரே முதலாளிகளில்
சிறந்தவர்.
6.தொழிலாளிகளில் சிறந்தவர் யார்?
தன்
முதலாளிக்கும்
தன்னைப் படைத்த
இறைவனுக்கும்
கட்டுப்பட்டு
நடப்பவரே
தொழிலாளிகளில்
சிறந்தவர்.
7.செல்வந்தர்களில்
சிறந்தவர் யார்?
நன்றி
செலுத்தி வாழ்பவரே
செல்வந்தர்களில்
சிறந்தவர்.
8.ஏழைகளில் சிறந்தவர் யார்?
பொறுமையோடு
வாழ்பவரே ஏழைகளில்
சிறந்தவர்.
9.படித்தவர்களில்
சிறந்தவர் யார்?
படித்ததை பிறருக்கு
கற்றுக் கொடுப்பவரே
படித்தவர்களில்
சிறந்தவர்.
10.ஆலிம்களில்
சிறந்தவர் யார்?
கற்றதின்
படி அமல்
செய்பவரே ஆலிம்களில்
சிறந்தவர்.
11.முஸ்லிம்களில் சிறந்தவர் யார்?
தன்
கரத்தாலும் நாவாலும்
பிறருக்கு தொந்தரவு
கொடுக்காமல்
இருப்பவரே
முஸ்லிம்களில்
சிறந்தவர்.
12.பாவிகளில்
சிறந்தவர் யார்?
செய்த
பாவத்திற்காக
அல்லாஹ்விடம்
மன்னிப்புத்
தேடுபவரே பாவிகளில்
சிறந்தவர்.
13.வாலிபர்களில்
சிறந்தவர் யார்?
பள்ளிவாசலுடன்
தொடர்பு வைத்திருப்பவரே
வாலிபர்களில்
சிறந்தவர்.
14.நண்பர்களில்
சிறந்தவர் யார்?
கஷ்டத்தில்
உதவி செய்பவரே
நண்பர்களில்
சிறந்தவர்.
15.அமல்
செய்பவர்களில்
சிறந்தவர் யார்?
மனத்தூய்மையோடு
அமல் செய்பவரே
அமல் செய்பவர்களில்
சிறந்தவர்.
16.தொழுகையாளிகளில்
சிறந்தவர் யார்?
உள்ளச்சத்தோடு
தொழுபவரே தொழுகையாளிகளில்
சிறந்தவர்.
17.கடன்
கொடுப்பவர்களில்
சிறந்தவர் யார்?
முடிந்த
வரை கடனை
மன்னிப்பவரே
கடன் கொடுப்பவர்களில்
சிறந்தவர்.
18.கடனாளிகளில் சிறந்தவர் யார்?
கடனை
அடைக்க வேண்டும்
என்று உறுதி
கொள்பவரே கடனாளிகளில்
சிறந்தவர்.
19.ஆசிரியர்களில்
சிறந்தவர் யார்?
மாணவர்களுக்கு
ஒழுக்கத்தை கற்றுக்
கொடுப்பவரே ஆசிரியர்களில்
சிறந்தவர்.
20.மாணவர்களில் சிறந்தவர் யார்?
ஆசிரியருக்கு
கண்ணியம் அளிப்பவரே
மாணவர்களில்
சிறந்தவர்.
No comments:
Post a Comment