Pages

Pages

Friday, March 28, 2014

கணவன்,மனைவி


அபூஃபயாஸ் ; என்னம்மா எப்டி இருக்க? நல்லா இருக்கியா?

பரக்கத் நிஸா ; நல்லா தான் இருக்கேன். ஏன் கேக்குறீங்க?                                              

அபூஃபயாஸ் ;  ஏம்மா கேக்குறது தப்பா?

பரக்கத் நிஸா ;  இல்ல….. ஒரு மாதிரியா கேக்குறீங்களே.... அதான் கேட்டேன். 
                                                     

அபூஃபயாஸ் ;  ஒழுங்கா தானம்மா கேட்டேன். இந்த பொம்பளைங்களுக்கு எத எடுத்தாலும் குத்தம் சொல்றதே.... வேளையா போச்சு!!!

பரக்கத் நிஸா ;  உங்களப்போல ஆம்பளைங்க இருந்தா குத்தம் சொல்லாம  உங்க தலையில என்ன கிரீடமா மாட்டுவாங்க?                                                                       
அபூஃபயாஸ் ;  என்ன கிரீடமா?  முதல்ல எங்கள ஃபிரீடமா விடுங்கம்மா சுதந்திரமா விடுங்க. அப்புறமா கிரீடத்த பாக்கலாம். வீட்ட வுட்டு வெளியே வந்தா 1008 மிஸ்ட் கால் ,1008 ஃபோன் கால். வீட்லதான் நிம்மதி இல்லன்னு வெளியே போனா வெளியேயும் உங்க தொந்தரவு தாங்க முடியலயே ச்சே....

பரக்கத் நிஸா ;  எல்லாம் உங்க மேல உள்ள அக்கரை தான்.                          
அபூஃபயாஸ் ;  அக்கரையும் கிடையாது பாஷா கட சக்கரையும் கிடயாது. வெளிய போன புருஷன் வருவானா? மாட்டானா? நாம கேட்ட நெய் ஃபாலிஷ் வருமா? வராதா? அப்டிங்ற கவலதான வேறென்ன?

பரக்கத் நிஸா ;  ஏன் நெய் ஃபாலிஷ் லாம் வாங்கித் தரக்கூடாதா என்ன?      

அபூஃபயாஸ் ;  இங்க எங்களோட life ஃபே ஸ்பாயிலாகிட்டு இருக்கு. உங்களுக்கு நெய் ஃபாலிஷ் கேக்குதோ!!

பரக்கத் நிஸா ;  ஏன் உங்க லைஃப் கெட்டுப் போறதுக்கு நாங்க என்ன பண்ணுனோம்.             

அபூஃபயாஸ் ; கல்யாணத்து முன்னால நல்லாதான் இருக்கான். கல்யாணத்துப் பிறகு பேய் புடிச்ச மாதிரி ஆயிடுறான். பொம்பளைங்க அப்டி என்னதான்..... பன்றீங்களோ தெரியல!!

பரக்கத் நிஸா ;  கல்யாணத்து முன்னால நாங்களும் சந்தோஷமாதான் இருக்குறோம்.கல்யாணத்துப்பிறகு ஒரே அழ வேண்டியதாலோ இருக்கு.                               

அபூஃபயாஸ் ;  யாரு நீங்களா? நீங்க எதுக்காக அழுவீங்கன்னு தான் எல்லாத்துக்கும் தெரியுமே. சாயங்காலம் 6 மணி ஆயிடுச்சின்னா போதும்  அந்த சணியம் புடிச்ச டீவி முன்னால உக்காந்து அய்யோ அம்மான்னு ஒரே அழுகையாதான இருக்கும்.அல்லாஹ்வுக்கு முன்னால அழுதாலாவது ஒரு பிரயோஜனம்!

பரக்கத் நிஸா ;  உங்கள மாதிரி ஆம்பளைங்களால தான் நாங்க தினந் தினம் வேதனைய அனுபவிக்கிறோம். வேலைக்கு போயிட்டு வந்தா சும்மா இருக்குறது கிடையாது. அங்குள்ள டென்ஷன பூறாம் எங்க மேல காட்டுறது.                

அபூஃபயாஸ் ;  ஆஃபீஸ்ல தான் டென்ஷன்னு வீட்டுக்கு வந்தா இங்க அத வுட டென்ஷனா இருக்கு. அது இல்ல இது அல்ல.உப்பு இல்ல மொளகா இல்ல, டீவி சேனல் ஒழுங்கா தெரியலன்னு ஒரே டார்ச்சர்.

பரக்கத் நிஸா ;  ஆமா இல்லன்னா இல்லன்னு தான் சொல்லுவாங்க. இருக்குதுன்னா சொல்ல முடியும்!!        

அபூஃபயாஸ் ;  ஆமா என்னைக்குத் தான் நீங்க இருக்குன்னு சொல்லியிருக்கீங்க. அப்படியே சொன்னாலும் என்னங்க உப்பு டப்பா காலியா இருக்கு”, ”அரிசி டப்பா காலியா இருக்கு”, மிளகா டப்பா காலியா இருக்குன்னு அப்டியே பிளேட்ட மாத்தி போடுவீங்க!

பரக்கத் நிஸா ;  நீங்க மட்டும் என்ன சுத்தமா? பொண்டாட்டி கஷ்டப்பட்டு சமைச்சா, என்னடி சமைச்சிருக்க? சோத்துல உப்பு இல்ல, சாம்பார்ல காரம் இல்ல, கறி வேகலன்னு சொல்லுவீங்க சாப்பாட்ட கொற சொல்றதே உங்க பொளப்பா போச்சு.                                            

அபூஃபயாஸ் ;  நீங்க ஒழுங்கா சமைச்சா நாங்க ஏம்மா குற சொல்றோம்!

பரக்கத் நிஸா ;  நீங்க ஒழுங்கா வாங்கித் தந்தா தான.                                 

அபூஃபயாஸ் ;  ஆமா உங்க வாயில என்னைக்கு தான் போதுன்னு வந்துருக்கு?  புருஷன்ட பணம் இல்லன்னு தெரிஞ்சும் சேலைய எடுத்தாங்க, ஜாக்கட்ட எடுத்தாங்கன்னு நச்சரிக்கிறீங்க.

பரக்கத் நிஸா ;  வேற சேலைய எடுத்துக் கேக்காம என்ன துண்டையும் கைலியையுமா எடுத்துக் கேப்பாங்க....!                                 

அபூஃபயாஸ் ;  அத சொல்லலம்மா! ஒரு 200 ரூபாயிக்கு சேலை எடுத்து கேக்கனும், அத விட்டுட்டு 1000 ரூபாயிக்கு சேலை எடுத்து கேட்டா! நாங்க வாங்ற சம்பளமே 4000 தான். இதுலா 1000 ரூபாயிக்கு சேலை எடுத்துக் கொடுத்தா, நாங்க தலையில துண்ட போட வேண்டியது தான்.

பரக்கத் நிஸா ;  உங்கத் துணிய துவைக்கிறது நாங்க,உங்களுக்கு சமைச்சிப்போடுறது நாங்க,உங்க வீட்ட பாத்துக்கிறது நாங்க, உங்களுக்கு குழந்தைய பெத்துக் கொடுக்குறது நாங்க,அவங்கள கவனிக்கிறது நாங்க, உங்க குழந்தைக்கு ரத்தத்தையே பாலாக்கி உணவு கொடுக்குறது நாங்க. இவ்ளோ தியாகம் பன்ற எங்களுக்கு ஒரு 1000 ரூபாயிக்கு சேலை எடுத்துக் கொடுத்தா கொறஞ்சா போயிடுவீங்க?                             

அபூஃபயாஸ் ;  ஆ....கொறஞ்சி போக மாட்டோம். கறஞ்சி போயிடுவோம். நீஙக மினுக்கு மினுக்குன்னு உடுத்திட்டு போறதுக்கு நாங்க வெயில்ல கடந்து கறையனுமா..? இந்தப்பாரு..புருஷனோட வருமானத்துக்கு தோதுவா செலவு செஞ்சி, அவனுக்கு எந்த கஷ்டத்தையும் கொடுக்காம, யாருகிட்டேயும் கையேந்த வைக்காம, அவனோட கவுரவத்த காப்பாத்தி, அவனோட திருப்திய வாங்குறவ தான் உண்மையான மனைவியா இருக்க முடியும்,ஏன்னா கணவனோட அதிர்ப்தியோட மரணிக்கிற மனைவி சொர்க்கத்து வாடையக் கூட நுகர முடியாதுன்னு [நபி] ஸல் அவங்க சொல்லியிருக்காங்க. அதனால ஒழுங்கா இருக்க கத்துக்கோங்க புரியுதா...

பரக்கத் நிஸா ;  புரியுது. ஆனா நபி [ஸல்] அவங்க, தன் மனைவியிடத்தில் சிறந்தவன் தான் உலகத்திலேயே சிறந்தவன் அப்டின்னு சொல்லியிருக்காங்க. அதனால நீங்களும் மனைவி விஷயத்தில் நீதமா நடந்துக் கோங்க புரியுதா?                                            
அபூஃபயாஸ் ;  ஆ--- நல்லா புரியுது. நாம புரிஞ்ச மாதிரி இந்த மக்களும் புரிஞ்சிருப்பாங்கன்னு நினைக்கிறேன். அல்லாஹ் நம் எல்லோருக்கும் இஸ்லாமிய குடும்ப வாழ்க்கை முறையை புரிய வைப்பானாக.

பரக்கத் நிஸா ;  ஆமீன்.




                                                                                         
           
                                                           
                                               
                                                                       
           
                                                     

1 comment:

  1. ஆமா...ஆமா...ஹஸ்ரத் வீட்ல ஒரே சண்டை யா கிடக்கின்னு புரிந்சிரிச்சி.

    ReplyDelete