Pages

Pages

Thursday, November 8, 2018

செல்வமே 1


                                                                               
                                                                                  செல்வமே...1          
அஸ்ஸலாமு அலைக்கும் [வரஹ்]. அல்ஹம்து லில்லாஹ். அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன். வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா சய்யிதினா முஹம்மதின் வஆலிஹி வஸஹ்பிஹி அஜ்மஈன்.                                                                                              அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருநாமம் கூறி  ஆரம்பிக்கிறேன்.   
                                
உயர்ந்த வாழ்விற்கு உறுதுணையாக இருப்பது கல்வியா ? செல்வமா ? என்ற தலைப்பில் இங்கே ஒரு அழகான பட்டிமன்றம் நடந்து கொண்டிருக்கிறது. பட்டிமன்றத்தை சீரும் சிரப்போடும் நடத்திக் கொண்டிருக்கிற எங்கள் பள்ளி ஹள்ரத்மார்களே, சட்டைப்பை நிறைய ரூபாய் நோட்டுகளை அடுக்கி வைத்து கம்பீரமாய்,ஒய்யாரமாய் அமர்ந்திருக்கிற சேலத்து செல்வச்சீமான் எங்கள் அருமை நடுவர் அவர்களே, செல்வச்செழிப்பால் முகத்தில் மகிழ்ச்சியோடு அமர்ந்திருக்கும் எனது அணியின் செல்வந்தரே, பாவம் சாப்ட்டு பல நாள் ஆன மாதிரி முக வாட்டத்தோடும் ஏக்கத்தோடும் அமர்ந்திருக்கிற எதிரணி ஓட்டாண்டிகளே, இந்த பட்டிமன்றத்திற்கு வருகை தந்திருக்கும் பள்ளியின் நிர்வாகிகளே ஜமாத்தார்களே எனதருமை தாய்மார்களே உங்கள் அனைவருக்கும் என் இதயம் எனும் பள்ளத்திலிருந்து துள்ளி எழும் ஸலாமைக் கூறி என் உரையை ஆரம்பம் செய்கிறேன். அஸ்ஸலாமு அலைக்கும் [வரஹ்]...         
உயர்ந்த வாழ்க்கைக்கு உறுதுணையாக இருப்பது செல்வம் தான் என்று நான் பேச வந்திருக்கிறேன்.                                               
நடுவர் அவர்களே இன்னைக்கி காசில்லாம எதுவுமே நடக்காது, எந்த மதிப்புமே கிடையாது. ஒரு கவிஞன் கூட அழகாக பாடினான்.கையிக்கும் பைய்யிக்கும் ஓட்டம் இருந்தால் கூட்டம் இருக்கும் உன்னோடு. தலைகளை ஆட்டும் பொம்மைகலெள்ளாம் தாளங்கள் போடும் தன்னோடு.பணம் இருந்தா தாங்க மதிப்பு,மரியாத எல்லாமே பணம் இல்லாட்டா நம்மல ஒரு..... பய மதிக்க மாட்டான்.ஏன் பணம் இல்லாட்டா நம்ம சொந்தக்காரங்கூட கிட்ட வர மாட்டான்.இப்பவுள்ள நிலம அப்டித்தா இருக்குது.
படிச்ச முட்டாளுங்களா நல்ல கேளுங்க. ஒரு ஆளப்பாத்து நான் கேட்டேன்..... ஏங்க அந்த காருல போராரே அவரு உங்க சொந்தக்காரரு தான அப்டின்னு. அதுக்கு அவரு ஆமாங்க அவர்லாம் ரொம்ப பெரிய ஆளா ஆயிட்டாரு அதனால எங்கள கண்டுக்கிறதே இல்ல அப்டின்னு சொன்னாரு.சரி....சாப்பாட்டுக்கு கூட வழி இல்லாம கூலி வேள பாக்குறாரே அவரும் உங்க சொந்தக்காரரு தான அப்டின்னு கேட்டேன். அதுக்கு அவர் சொல்றாரு, ஆமாங்க இப்ப நாங்க அவர கண்டுக்கிறதுல்ல.   
பாத்தீங்களா நடுவர் அவர்களே காருல போறவரு...... இவர கண்டுக்கிறதில்ல, கூலி வேள பாக்கிறவர இவரு கண்டுக்கிறதில்ல அப்ப என்ன அர்த்தம்.... பணம் தாங்க எல்லாமே.                              
ஏம்பா படிச்சவங்களா…. நல்லா தெரிஞ்சிக்கிங்க. துட்டு இல்ல... உங்க சொந்தக்காரன் கூட உங்கள மதிக்க மாட்டான்.ஏன் உங்க புள்ள கூட உங்கள மதிக்காது.அதத்தான் ஒரு கவிஞன் அருமையா பாடுனான், பானையில சோறிருந்தா பூன கூட சொந்தமடா பெட்டியில பணமில்ல பெத்த புள்ள கூட சொந்தமில்ல. அதனால..... படிப்பலாம் மூட்ட கட்டிட்டு எங்கள மாதிரி சம்பாதிக்கிற வழியப்பாருங்க என்ன....          
அடுத்து நடுவர் அவர்களே.... ஒரு பழமொழி ஒன்னு அழகாகச் சொல்வாங்க. மணி இஸ் குட் சர்வண்ட், அதாவது பணந்தான் நமக்கு நல்ல பணியாளன். இன்னைக்கி உண்ம நிலவரம் அப்டித்தாங்க இருக்குது. ஏன்னா ஒரு மனிதனுக்கு அவனுக்கு தேவையான எல்லாத்தையும் செஞ்சி கொடுக்கிறது பணம் தாங்க. பணம் இல்லன்னா எதையுமே பெற முடியாது.       
நடுவர் அவர்களே..... கல்வி தான் ஒசத்தின்னு இவங்க பெருசா பேச வந்துட்டாங்களே... நான் கேக்கிறேன்... நீங்க புடிச்சி பேசுறீங்களே அந்த மைக் எங்க பணத்தால வந்துச்சா? இல்ல உங்க கல்வியால வந்துச்சா?, நாம நின்னு பேசிக்கிட்டு இருக்கிற இந்த மார்க்கெட் பள்ளிவாசல் எங்க பணத்தால வந்துச்சா? இல்ல உங்க கல்வியால வந்துச்சா?, இங்க அடுக்கி வச்சிருக்கிற பரிசுகள் எங்க பணத்தால வந்துச்சா? இல்ல உங்க கல்வியால வந்துச்சா?, ஏன் இப்ப மதியம் வயிறு முட்ற அளவுக்கு சாப்டுட்டு வந்தீங்களே..... அந்த பிரியாணி  எங்க பணத்தால வந்துச்சா? இல்ல உங்க கல்வியால வந்துச்சா? படிச்சவங்களா சொல்லுங்க ஏன் மவ்னமா உக்காந்துருக்கீங்க. பணமில்லாம இதுலாம் வருமா?...
நடுவர் அவர்களே இதுக்கு மேலயும் இவங்க கல்விதான் பெருசு.... படிப்பு தான் ஒஸ்தி,பணம் ஒன்னுத்துக்கும் ஒதவாது அப்டின்னு சொன்னா…. இவங்களுக்கு எந்த பரிசும் கிடையாது, எப்டியும் நீங்க எங்களுக்கு சாதகமா தான் தீர்ப்பு சொல்லப் போறீங்க.அதனால எல்லாத்தையும் நாம எடுத்துக்கலாம்.அப்டியாவது இவங்களுக்கு புத்தி வருதான்னு பாப்போம்.
அதுமட்டுமில்ல நடுவர் அவர்களே இன்னைக்கி எத்தனையோ அப்பாக்களுக்கு அவர் பெத்த ஸன் சோறு போடுறதில்ல அவர் வாங்குற பென்ஸன் தான் சோறு போடுது.ஒரு ஆள்ட்ட கேட்டாங்க ஏங்க உங்களுக்கு 5 ஸன் இருக்காங்களே.. அதுல எந்த ஸன்னுங்க உங்கள கவனிக்கிறாரு அப்டின்னு. அதுக்கு அவர் சொன்னாரு....எந்த ஸன்னும் என்ன கவனிக்கல நான் வாங்குற பென்ஸன் தான் என்ன கவனிக்கிது... பாத்தீங்களா நடுவர் அவர்களே இன்னைக்கி  நிறைய பேருக்கு கஞ்சி ஊத்துறது இந்த பணமா ? இல்ல இவங்க படிச்ச கல்வியா ? அதனால படிப்பு பத்து காசுக்கு உதவாது பணம் தான் எல்லாமே.          
அதுமட்டுமா நடுவர் அவர்களே படிப்பு தான் பொன்னு பணம்லாம் மண்ணுன்னு பேச வந்துட்டாங்களே.... இன்னைக்கி பணமில்லாம நம்மால எதையாவது செய்ய முடியுமா. பாக்கைட்ல பணமில்லாம பஸ்ஸில தான் போ முடியுமா.... இல்ல மார்க்கெட் போய் ஒரு காக்கிலோ சீனி தான் வாங்க முடியுமா... இல்ல.... நம்ம இன்பாலா பேக்கரில போய் ஒரு அரைக்கிலோ வருக்கி தான் வாங்க முடியுமா ?.                    
நம்ம ஆஷிக் பஸ்ஸுல போறான். கண்டக்டர் கேக்குறாரு எங்கப்பா போவனு... மேட்டுப்பாளையத்துக்கு போகனும். 35 ரூபா அப்டிங்றாரு உடனே நம்ம ஆஷிக் ஏய் யாரப்பாத்து காசு கேட்டே, நான் யாரு தெரியுமா... எம்,ஏ பட்டதாரியாக்கும். அப்டின்னு சொன்னா அவரு என்னங்க செய்வாரு.... ஏம்பா நீ கலைக்டராவே இருந்துட்டுப்போ 35 ரூபா இல்லாம ஜேரிங் கிராஸ் கூட போக முடியாது அப்டின்னு ஏ.டி.சி பஸ்டாண்ட்லயே கழுத்த புடிச்சி கீழ இறங்கி விட்டுட்டு போயிடுவாரு அப்புறம் நம்ம ஆஷிக் லொக் லொக்குன்னு நடந்து வீட்டுக்குத் தான் வரனும்.    
அடுத்து நம்ம அனஸ் மார்க்கெட்டுக்கு போறான். பாய் ஒரு கால் கிலோ சீனி போடுங்கன்னான். அந்த பாயும் சீனிய போட்டுட்டு 15 ரூபா அப்டின்னு சொன்னாரு. உடனே நம்ம அனஸ் என்ன பாய் நான் பி காம் படிச்சிருக்கேன் என்கிட்ட போய் காசு கேக்குறீங்க.... அப்டின்னு சொன்னா அந்த பாய் என்னங்க செய்வாரு.. அப்டியாப்பா என் செல்லம் என் தங்கம் அப்டின்னு கொஞ்சுவாரா ? இல்ல விலக்கமாத்த தூக்குவாரா ?  நீங்களே சொல்லுங்க,விலக்கமாத்த தான தூக்குவாரு...அப்ப இந்த படிப்ப வச்சி ஒரு கால் கிலோ சீனியக்கூட வாங்க முடியலன்னா அந்த எலவு படிப்பு எதுக்கு ?...
எனவே அன்பான நடுவர் அவர்களே இன்னைக்கி குடும்பத்த கவனிக்க பணம் தேவ,உறவினர்களுக்கு உதவ பணம் தேவ,திருமணம் நடத்த பணம் தேவ,ஒரு நிகழ்ச்சி நடத்த பணம் தேவ, நாம இறந்துட்டா நம்மல அடக்கம் பன்றதுக்கும் பணம் தேவ,ஏன் ஒரு வாய் சோறு உண்ணனும்னா கூட அதுக்கும் பணம் தேவ, பிறப்பு முதல் இறப்பு வரை பணம் இல்லாம நம்மால வாழவே முடியாது.எனவே நமது உயர்ந்த வாழ்க்கைக்கு உறுதுணையாக இருப்பது செல்வமே,செல்வமே,செல்வமே என்று கூறி விடைபெறுகிறேன். அஸ்ஸலாமு அலைக்கும் [வரஹ்]                                                 

No comments:

Post a Comment