Pages

Pages

Thursday, November 8, 2018

நடுவர்



الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام علي سيدنا محمد واله وصحبه اجمعين
பிள்ளைகள் கெட்டுப்போவதற்கு யார் காரணம் ? பெற்றோர்களா ஆசிரியர்களா இன்னைக்கு இருக்குற சூழ்நிலைகளா என்ற ஒரு அழகான தலைப்பில் இங்கு கருத்தரங்கம் நடந்து கொண்டிருக்கிறது.
இன்னைக்கி காலம் ரொம்ப கெட்டுப்போயிடுச்சி, ரொம்ப மோசமாயிடுச்சி. குறிப்பா நம்ம புள்ளைங்களோட நிலம ரொம்பவே மோசமா இருக்குது. நீ மட்டும் ரொம்ப சுத்தமா அப்டின்னு நீங்க எல்லாரும் என்னப் பார்த்து கேக்குறது எனக்கு தெரியுது. இன்னைக்கு அப்டித்தான் யாரும் கண்டுக்காதீங்க.

கடந்த காலத்துல இருந்த புள்ளைங்கள விட இன்னைக்கு இருக்குற புள்ளைங்க எல்லா வகையிலும் அறிவாளியா இருக்குறாங்க, திறமசாளியா இருக்குறாங்க, எதையும் ஈசியா புரிந்து கொள்ளக் கூடியவங்களா இருக்குறாங்க, எந்த பிரச்சனை வந்தாலும் ஈசியா சமாளிக்கக்கூடியவங்களா இருக்குறாங்க.குறிப்பா ரொம்ப விவரமாவும் இருக்குறாங்க.
அதுவும் நம்ம புள்ளைங்க பேசுற பேச்சு இருக்கே...... சில சமயத்துல அவங்க பேசுறத பாத்து பெரியவங்களே தலைய பிச்சுக்குவாங்க.அந்த மாதிரி பேசுவாங்க.
ஒரு ஆசிரியர் ஒரு பையன்ட பெருசா ஆனதும் நீ என்னடா செய்யப் போற? அப்டின்னு கேட்டாரு.அதுக்கு அவன் கல்யாணம் செஞ்சிக்குவேன் சார் அப்டின்னு சொன்னான். அத கேக்கலடா.. நீ என்னவா ஆகப் போறே? மாப்பிள்ளையா ஆவேன் சார்.. அதில்லடா..பெருசா ஆனா பிறகு நீ எத அடைய போற? ஒரு பொண்ண அடைவேன் சார்.. அட முட்டாள்,  முட்டாள்... நீ பெருசா ஆனா பிறகு உங்க அப்பா அம்மாவுக்காக என்ன செய்வ.. அத சொல்லுடா... வீட்டுக்கு ஒரு நல்ல மருமகள கொண்டு வருவேன் சார்..டேய் லூசுப்பயலே... உங்க அப்பா உன்கிட்ட என்ன எதிர் பார்ப்பார்? அத முதல்ல சொல்லுடா. ஒரு பேரனோ பேத்தியோ எதிர் பார்ப்பாங்க சார்.. சுத்தம்.. உருப்பட்ட மாதிரி தான்.. நீ போய் உக்காருடா உன் கிட்ட போய் கேள்வி கேட்டம்பாரு என்ன செருப்பாலயே அடிக்கனும் அப்டின்னு சொல்லி அனுப்பிட்டாரு. இப்பவுள்ள புள்ளைங்க இப்டித்தான். ரொம்ப உஷார்.
அதனால கடந்த காலத்த விட இந்த காலத்துல உள்ள புள்ளைங்க எல்லா விஷயத்துலயும் BEST டா தான் இருக்குறாங்க.அதுல எந்த சந்தேகமும் இல்ல.ஆனா ஒழுக்கம்னு வரும் போது கலாச்சாரம்னு வரும் போது பழக்கவழக்கம்னு வரும் போது இப்பவுள்ள புள்ளைங்க ரொம்ப ரொம்ப மோசமா தான் இருக்குறாங்க.நமக்கே தெரியும். நாம பார்த்துகிட்டு தான் இருக்கோம்.டி.வி, சினிமா மொபைல் போன், இன்டர்நெட் என்று தானும் கெட்டுப்போய் மத்தவங்களையும் கெடுக்குறவங்களா தான் இருக்காங்க.
இதுக்குலாம் என்ன காரணம் யார் காரணம் பெத்தவங்களா ஆசிரியர்களா அல்லது இன்னைக்குள்ள சூழ்நிலைகளா என்று பேசுறதுக்கு மூனு பேரு வந்துருக்காங்க.அவங்க என்ன சொல்றாங்கன்னு பார்ப்போம்.முதல்ல புள்ளைங்க கெட்டுப்போறதுக்கு பெத்தவங்க தான் என்று பேசுறதுக்கு வஜ்ஹுல்லாஹ் வரார்.
திருத்திக் கொடுக்குறது தான் எப்டி மண்டைல நாலு கொட்டு கொட்றதா
(Prilliant)   எப்டி வஜ்ஹுல்லாஹ் உங்கள மாதிரியா ?
(பெத்தவங்க தான் காரணம்) பாவம்பா எல்லாத்துக்கும் அவங்க தான் காரணம்னு சொன்னா அவங்க என்ன செய்வாங்க
மாஷா அல்லாஹ் நல்ல பேசுனாரு. பெத்தவங்க தான் புள்ளைங்களுக்கு ரோல்மாடல்.ஆனா இன்னைக்குள்ள பெத்தவங்க கெட்ட விஷயங் களுக்குத்தான் ரோல் மாடலா இருக்காங்க. நல்ல விஷயங்களுக்கு ரோல்மாடலா இருக்குறதுல்ல.புள்ளைங்க பாக்குற மாதிரி எல்லா தப்பையும் செய்றாங்க.அதப்பாத்து புள்ளைங்க கெட்டுப் போறாங்க. ஒட்டுமொத்தமா புள்ளைங்க கெட்டு போறதுக்கும் அவங்க வீணாப் போறதுக்கும் முக்கிய காரணமா இருக்குறதே இத்த பெத்தவங்க தான் அப்டின்னு இப்டின்னு பெத்தவங்கள போட்டு நல்ல வாங்கு வாங்குன்னு வாங்கிட்டு போயிருக்காரு.அநேகமா வீட்ல போய் செமயா அடி வாங்குவாருன்னு நினைக்கிறேன்.சரி அந்த கத நமக்கு எதுக்கு. அடுத்த ஆள கூப்டுவோம். அடுத்து நண்பர்களே என்று பேசுவதற்கு அம்சாத் வரார்.அம்சாத் வாங்க உங்க கருத்துக்கள தாங்க.
(நண்பர்கள பொறுத்து தான்) நீங்க முதல்ல யாரு அதச்சொல்லுங்க நல்லவரா கெட்டவரா ?
(அவன பாத்தாவே போதும்) அப்ப உன்ன பத்தி தெரியுறதுக்கு யாரப்பா பாக்கனும்.
 அம்சாத் வந்தாரு.புள்ளைங்க கெட்டுப்போறதுக்கு நண்பர்கள் தான் காரணம். வானத்துல இருந்து மழை பெய்யுது. அந்த தண்ணீ ர்  கடல்ல  விழுந்தா உப்பா  மாறிடும்,  சிப்பிக்குள்ள  நுழைஞ்சா  முத்தா மாறிடும்,   சாக்கடைல விழுந்தா  நஜீஸாக  மாறிடும் அப்டின்னு தத்துவம்லா பேசுனாரு.அப்றம் அன்னை தெரஸாவ பத்தி சொன்னாரு.அடுத்து தீர்ப்ப ஒழுங்கா சொல்லுங்க இல்லன்னா நீங்க யாரு கூட பழகுறீங்கன்னு உங்க வண்ட வாலத்த தண்ட வாலத்துல ஏத்திருவேன்னு மிரட்டுனாரு.நீ சொன்ன மாதிரி நானே உன் கூட தானப்பா நட்பு வச்சிருக்கேன்.அப்ப உன் லட்சனத்த பார்த்தாவே போதுமே நான் எப்டின்னு.ஆக மொத்தத்துல நண்பர்கள் தான் எல்லாத்துக்கும் காரணம்னு பேசிட்டுப் போயிருக்காரு. அடுத்து வர்ரவரு என்ன சொல்றாருன்னு பாப்போம்.வாங்க வாசிம்.
(இல்லாம போச்சி என்ன பன்றது) அவன் உங்கள மாதிரின்னு நினைக்கிறேன்
மூனு பேரும் பேசி முடிச்சாச்சி.ஒருத்தர், புள்ளைங்க கெட்டுப் போறதுக்கு பெத்தவங்க தான் காரணம்னு பேசிருக்காரு,இன்னொருத்தர் நண்பர்கள் தான் காரணம்னு பேசிருக்காரு.இன்னொருத்தர் இன்னைக்குள்ள சூழ்நிலைகள் தான் காரணம்னு பேசிருக்காரு.மூனுமே காரணம் தான். அதுல எந்த சந்சேகமும் இல்ல.புள்ளைங்க பெத்தவங்களாலயும் கெட்டுப்போறாங்க.நண்பர்களாலயும் கெட்டுப் போறாங்க.சூழ்நிலை களாலயும் கெட்டுப் போறாங்க.
நான் ஆரம்பத்துலயே சொன்ன மாதிரி இன்னைக்கு காலம் ரொம்ப கெட்டுப்போச்சி,வெளிய போகவே முடில.வெளிய போற புள்ளைங்க ஒழுங்கா ஒழுக்கமா வீடு வந்து சேருவாங்களா மாட்டாங்களான்னு தெரில.புள்ளைங்க வெளிய அனுப்பிட்டு நாம வயித்துல நெருப்ப கட்டிட்டு உக்கார வேண்டியதா இருக்குது.அந்தளவு மோசமான காலம்.அதனால சூழ்நிலைகளால நம்ம புள்ளைங்க கெட்டுப் போறாங்கன்னு சொல்றது உண்மையான விஷயந்தான்.
அதேபோல நட்பும் ரொம்ப ஆபத்தான விஷயமா தான் இருக்குது.நாம புள்ளைங்கள ஒழுக்கமா நல்லபடியா வளர்த்துருப்போம்.ஆனா ஃபிரன்ஸ்மாருங்க அதையும் இதையும் சொல்லிக்கொடுத்து கெடுத்துறு வாங்க. இன்னைக்கு புள்ள வளக்குறது ரோட்ல வண்டி ஓட்டிட்டு போற மாதிரி.நாம என்ன தான் கரைக்டா ஓரமா வண்டி ஓட்டிட்டு போனாலும் எதிர்ல வர்ரவன் தாருமாரா  வந்தா நம்ம கதி அவ்ளோ தான்.அந்த மாதிரி நாம என்ன தான் நல்ல விஷயங்கள சொல்லிக் கொடுத்து நம்ம புள்ளைங்கள வளர்த்தாலும் ஃப்ரன்ஸ்மாருங்க கூட சேர்ந்து கெட்டுப் போயிடுறாங்க.அதனால நண்பர்களால நம்ம புள்ளைங்க கெட்டுப் போறாங்கன்னு சொல்றதும் உண்மையான விஷயந்தான்.
ஆனா எல்லாத்துக்கும் மேல புள்ளைங்க கெட்டுப் போறதுக்கும் அவங்க தவறான வழியில போறதுக்கும் ரொம்ப ரொம்ப முக்கியமான காரணம் பெத்தவங்க தான்.ஏன்னா புள்ளைங்கள பொறுத்த வரைக்கும் அவங்களுக்கு மொத்த பொறுப்பும் பெத்தவங்க தான்.அவங்க தான் தங்களோட பொறுப்ப உணர்ந்து சரியா வளர்க்கனும் சரியா கவனிக்கனும். புள்ளைங்க யாரோட பேசுறாங்க யாரோடு பழகுறாங்கன்னு பார்க்கனும், எங்க போறாங்க என்ன செய்றாங்கன்னு கவனிக்கனும்.பெத்தவங்க நினைச்சா கெட்ட நண்பர்களோட சேர விடாம தடுக்கலாம்.மோசமான சூழ்நிலைகள்ள புள்ளைங்க விழாம தடுக்கலாம்.ஆனா இந்த இரண்டையுமே பெத்தவங்க செய்றதில்ல.அதனால தான் புள்ளைங்க கெட்டுப் போறாங்க.புள்ளைங்க கெட்டுப் போறதுக்கு தெரிந்தோ தெரியாமலோ பெத்தவங்க காரணமா ஆயிடுறாங்க.எனவே பிள்ளைகள் கெட்டுப் போவதற்கு முழுக்க முழுக்க காரணம் பெற்றவர்களே என்று கூறி இந்த கருத்தரங்கத்தை நிறைவு செய்கிறேன்.

  
   


No comments:

Post a Comment