Pages

Pages

Sunday, June 28, 2020

அருள் நபி நாதர்



      
அண்ணல் நபி அவர்கள் அகிலத்தில் அவதரித்த மாதத்தில் அமர்ந் திருக்கிறோம்.வருடம் முழுக்க நபியைப் பற்றி பேசப்படுகிறது.நபியின் வாழ்க்கை அலசப்படுகிறது.நபியின் வரலாறுகள் குறித்து ஆராயப் படுகிறது.

நபியைப்பற்றி பேசாமல் நபியின் வாழ்க்கை குறித்து அலசாமல் நபியின் வரலாறுகள் குறித்து ஆராயாமல் நாம் எந்தத் தலைப்புக்குள்ளும் நுழைய முடியாது.அப்படியே நுழைந்தாலும் அது முழுமை பெறாது.

குடும்பம் குறித்து சமூகம் குறித்து அரசியல் குறித்து ஆன்மீகம் குறித்து வியாபாரம் குறித்து விளையாட்டு குறித்து எதைக்குறித்து பேசுவதா னாலும் நபியைத் தொடாமல் நபியின் வாழ்வை அலசாமல் பேச முடியாது.அப்படி பேசினாலும் அது மார்க்கமாக ஆகாது.

எனவே வருடம் முழுக்க நபியைப்பற்றித்தான் பேசுகிறோம்.என்றாலும் நபி பிறந்த மாதம் என்பதினால் வள்ளல் நபியை வல்லோன் அல்லாஹ் இந்த உலகிற்கு அறிமுகம் செய்த மாதம் என்பதினால் இந்த மாதத்தில் கொஞ்சம் அதிகமாக கூடுதலாக நபியைப்பற்றி அலசப்படுகிறது,ஆராயப் படுகிறது.

வள்ளல் நபியை குறித்து வல்லோன் அல்லாஹ் தன் வான்மறையில் கூறுகிறான் ;- 
وما ارسلناك الا رحمة للعالمين
அகிலத்தார் அனைவருக்கும் ரஹ்மத்தாகவே தவிர உம்மை அனுப்ப வில்லை. (அல்குர்ஆன் : 21 ; 107)

மனித இனம்,ஜின் இனம்,மிருகங்கள் பறவைகள், பூச்சிக்கள், மரங்கள் மலைகள் காற்று கடல் என உலகத்திலுள்ள எல்லா படைப்பினங்களுக்கும் நபி அவர்கள் ரஹ்மத்தாக, அருளாக, கிருபையாக, கருணையாக இருக்கிறார்கள்.
الحمد لله رب العالمين
அகிலம் அனைத்திற்கும் அல்லாஹ் ரப்பாக இருப்பதைப் போல் நபி அவர்கள் அகிலம் அனைத்திற்கும் ரஹ்மத்தாக இருக்கிறார்கள்.

அண்ணல் நபியின் அளவிலா அன்பைப் பற்றி கண்ணல் நபியின் நிகரில்லா கிருபையைப் பற்றி பூமான் நபியின் முடிவில்லா பரிவைப் பற்றி காருண்ய நபியின் கரை சேர்க்கும் கருணையைப் பற்றி பேசுவதற்கும் கேட்பதற்கும் பார்ப்பதற்கும் படிப்பதற்கும் எண்ணற்ற விஷயங்கள் குர்ஆனில் ஹதீயிலும் நிரம்பி இருக்கிறது.

அண்ணல் நபியின் அன்பையும் பாசத்தையும் கருணையையும் கரிசனத்தையும் ஒரு எல்லைக்குள் மட்டுப்படுத்த முடியாது.ஒரு வட்டத்திற்குள் வட்டப்படுத்தி விட முடியாது.ஒரு காலத்திற்கு மட்டும் என்றோ ஒரு சமூகத்திற்கு மட்டுமென்றோ அதை வரையறுத்து சொல்ல முடியாது.

இவ்வளவு தான் என்று சொல்ல முடியாத இந்த எல்லைக்குள் தான் என்று வரையறுக்க முடியாத விசாலமான அன்புக்கும் பாசத்திற்கும் கருணைக்கும் கரிசனத்திற்கும் சொந்தக்காரர் அருமை நாயகம் ஸல் அவர்கள்.

ﺃﻥﺍﻟﻨﺒﻲ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻗﺎﻝ ﻟﺠﺒﺮﻳﻞ ﻋﻠﻴﻪ ﺍﻟﺴﻼﻡ: ﻫﻞ ﺃﺻﺎﺑﻚ ﻣﻦ ﻫﺬﻩ ﺍﻟﺮﺣﻤﺔ ﺷﺊ؟ ﻗﺎﻝ : ﻧﻌﻢ، ﻛﻨﺖ ﺃﺧﺸﻰ ﺍﻟﻌﺎﻗﺒﺔ
ﻓﺄﻣﻨﺖ ﻟﺜﻨﺎﺀ ﺍﻟﻠﻪ ﻋﺰ ﻭﺟﻞ ﻋﻠﻰ ﺑﻘﻮﻟﻪ ﴿ﺫﻯ ﻗﻮﺓ ﻋﻨﺪ ﺫﻯ ﺍﻟﻌﺮﺵ ﻣﻜﻴﻦ ﻣﻄﺎﻉ ﺛﻢ ﺃﻣﻴﻦ﴾
ஒரு முறை நபி அவர்கள் ஹள்ரத் ஜிப்ரயீல் அலை அவர்களிடம் என்னை அல்லாஹ் அகிலமனைத்திற்கும் ரஹ்மத்தாக அனுப்பியிருக் கிறான். இந்த ரஹ்மத் உங்களுக்கும் கிடைத்திருக்கிறதா? என்று கேட்டார்கள்.அதற்கவர்கள், ஆம் நான் ஆரம்பத்தில் என் இறுதி நிலை குறித்த அச்சத்தில் இருந்தேன்.ஆனால் உங்களுக்கு இறக்கப்பட்ட வேதத்தில் என்னைப் பற்றி அல்லாஹ் சிலாகித்துச் சொன்னதற்குப் பிறகு  தான் நான் நிம்மதி பெற்றேன் என்று கூறினார்கள். (ஷிஃபா)

பொதுவாக இறுதி முடிவைக் குறித்த அச்சம் எல்லோருக்கும் இருக்க வேண்டும்.நல்லமல்கள் செய்த எல்லோரும் வெற்றி பெற முடியாது.இறுதி முடிவு நல்லதாக இருந்தால் தான் வெற்றி கிடைக்கும்.எத்தனையோ நல்லடியார்களின் இறுதி முடிவு மாறிப் போய் இருப்பதை வரலாறு கூறுகிறது.இப்லீஸ் அதற்கு மிகச்சிறந்த உதாரணம்.அதனால் தான் நபி அவர்கள் எங்கள் இறுதி முடிவை அழகாக்கு என்பதை தங்கள் துஆவில் அதிகம் சேர்த்துக் கொள்வார்கள்.அந்த அச்சம் ஜிப்ரயீல் அலை அவர்களுக்கும் இருந்தது.ஆனால் நபியின் ரஹ்மத்தினால் அந்த அச்சம் அவர்களை விட்டும் நீங்கியது.எனவே நபி அவர்கள் ஹள்ரத் ஜிப்ரயீல் அலை அவர்களுக்கும் ரஹ்மத்தாக இருக்கிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்கிறோம்.

மட்டுமல்ல இஸ்லாத்திற்கு எதிராக செயல்படக்கூடிய காஃபிர்களுக்கும் அண்ணல் நபி அவர்கள் அருளாக இருக்கிறார்கள்.அன்றைக்கு மக்கத்து குரைஷிகள் நபி நபி அவர்களுக்கு எத்தனையோ கஷ்டங்களைக் கொடுத்தார்கள்.சொல்லால் அடித்தார்கள்,கல்லால் அடித்தார்கள்,அவர்களது புனித உடலைக் காயப்படுத்தினார்கள். மனதையும் காயப்படுத்தினார்கள். பற்களை உடைத்தார்கள்.கொலை செய்ய முயற்சித்தார்கள்.அவர்கள் செல்லும் பாதையில் முற்களையும் கற்களையும் புதைத்து வைத்தார்கள். ஊரை விட்டு துறத்தினார்கள். தன் ஹபீபான அண்ணலுக்கு இத்தனை துன்பங்களைத் தந்தால் அல்லாஹ் வால் தாங்கிக் கொள்ள முடியுமா? எனவே அல்லாஹ் வானவரை அனுப்பி வைத்தான்.

ﻓﺮﻓﻌﺖ ﺭﺃﺳﻲ ﻓﺈﺫﺍ ﺃﻧﺎ ﺑﺴﺤﺎﺑﺔ ﻗﺪ ﺃﻇﻠﺘﻨﻲ، ﻓﻨﻈﺮﺕ ﻓﺈﺫﺍ ﻓﻴﻬﺎ ﺟﺒﺮﻳﻞ ﻓﻨﺎﺩﺍﻧﻲ، ﻓﻘﺎﻝ : ﺇﻥ ﺍﻟﻠﻪ ﻗﺪ ﺳﻤﻊ ﻗﻮﻝ ﻗﻮﻣﻚ ﻟﻚ، ﻭﻣﺎ ﺭﺩﻭﺍ ﻋﻠﻴﻚ، ﻭﻟﻘﺪ ﺃﺭﺳﻞ ﺇﻟﻴﻚ ﻣﻠَﻚ ﺍﻟﺠﺒﺎﻝ ﻟﺘﺄﻣﺮﻩ ﺑﻤﺎ ﺷﺌﺖ، ﻓﻨﺎﺩﺍﻧﻲ ﻣﻠﻚ ﺍﻟﺠﺒﺎﻝ ﻭﺳﻠﻢ ﻋﻠﻲَّ، ﺛﻢ ﻗﺎﻝ: ﻳﺎ ﻣﺤﻤﺪ، ﺇﻥ ﺍﻟﻠﻪ ﻗﺪ ﺳﻤﻊ ﻗﻮﻝ ﻗﻮﻣﻚ ﻟﻚ،ﻭﺃﻧﺎ ﻣﻠَﻚ ﺍﻟﺠﺒﺎﻝ، ﻭﻗﺪ ﺑﻌﺜﻨﻲ ﺭﺑﻚ ﺇﻟﻴﻚ ﻟﺘﺄﻣﺮﻧﻲ ﺑﺄﻣﺮﻙ ﻓﻴﻤﺎ ﺷﺌﺖ؟، ﺇﻥ ﺷﺌﺖَ ﺃﻥ ﺃُﻃﺒﻖ ﻋﻠﻴﻬﻢ ﺍﻷﺧﺸﺒﻴﻦ ‏(ﺍﻟﺠﺒﻠﻴﻦ‏) ، ﻓﻘﺎﻝ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ـ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ـ : ﺑﻞ ﺃﺭﺟﻮ ﺃﻥ ﻳﺨﺮﺝ ﺍﻟﻠﻪ ﻣﻦ ﺃﺻﻼﺑﻬﻢ ﻣﻦ ﻳﻌﺒﺪ ﺍﻟﻠﻪ ﻭﺣﺪﻩ ﻻ ﻳﺸﺮﻙ ﺑﻪ ﺷﻴﺌﺎ
ஒரு முறை அல்லாஹ் ஒரு மலக்கை அனுப்பி வைத்தான். அந்த மலக் நபி அவர்களிடம் வந்து உங்கள் சமூகம் உங்களைப் பார்த்து என்ன சொன்னது என்பதை அல்லாஹ் கேட்டு விட்டான்.நீங்கள் விரும்புவதை எனக்கு கட்டளையிடுங்கள்.அதை செயல்படுத்துவதற்குத்தான் அல்லாஹ் என்னை உம்மிடம் அனுப்பியிருக்கிறான்.நீங்கள் விரும்பினால் அந்த மக்களை இந்த மலைகளுக்கிடையே நசுக்கி விடுகிறேன் என்று கூறினார். அதற்கு நபி அவர்கள் அல்லாஹ்வை மட்டும் வணங்குபவர்கள் இவர்களின் சந்ததிகளிலிருந்தும் வருவார்கள் என்று நான் ஆதரவு வைக்கிறேன் என்று கூறினார்கள். (முஸ்லிம் ; 1795)

ﻗﺎﻝ ﺍﻟﻠﻬﻢ ﺍﻏﻔﺮ ﻟﻘﻮﻣﻲ ﻓﺈﻧﻬﻢ ﻻ ﻳﻌﻠﻤﻮﻥ
என் சமூகத்தை மன்னித்து விடு! அவர்கள் அறியாதவர்கள். (முஸ்னத் அஹ்மத் ; 470)

நாம் இங்கே ஒன்றை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.நமக்கு ஒருவன் ஒரு துரோகம் செய்து விட்டால் அவனை மட்டுமில்லாது அவனது சந்ததிகளை யும் சேர்த்து பத்வா செய்வோம்.ஆனால் நபி அவர்கள் அந்த மக்கள் மட்டுமல்ல அவர்களது சந்ததிகளின் நலவிலும் அக்கரை செலுத்தினார் கள்.இதுபோன்ற ஒரு கிருபையை ஒரு இரக்கத்தை கரிசனத்தை காருண்ய நபியிடம் மட்டும் தான் காண முடியும்.

மிருகங்கள் மீதும் அன்புள்ளவர்களாக நபி அவர்கள் இருந்தார்கள்.
ﻋﻦ ﻋﺒﺪ ﺍﻟﻠﻪ ﺑﻦ ﺟﻌﻔﺮ ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻪ ان النبي ﺪﺧﻞ ﺣﺎﺋﻄًﺎ ﻟﺮﺟﻞ ﻣﻦ ﺍﻷﻧﺼﺎﺭلحاجة ﻓﺈﺫﺍ ﺟﻤﻞ، ﻓﻠﻤﺎ ﺭﺃﻯ ﺍﻟﻨَّﺒﻲَّ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﺣﻦَّ ﻭﺫﺭﻓﺖ ﻋﻴﻨﺎﻩ، ﻓﺄﺗﺎﻩ ﺍﻟﻨَّﺒﻲ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻓﻤﺴﺢ ﺫﻓﺮﺍﻩ، ﻓﺴﻜﺖ، ﻓﻘﺎﻝ : ﻣﻦ ﺭﺏ ﻫﺬﺍ ﺍﻟﺠﻤﻞ؟ ﻟﻤﻦ ﻫﺬﺍ ﺍﻟﺠﻤﻞ؟ ﻓﺠﺎﺀ ﻓﺘﻰ ﻣﻦ ﺍﻷﻧﺼﺎﺭ ﻓﻘﺎﻝ: ﻟﻲ ﻳﺎ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ. ﻓﻘﺎﻝ: ﺃﻓﻼ ﺗﺘﻘﻲ ﺍﻟﻠﻪ ﻓﻲ ﻫﺬﻩ ﺍﻟﺒﻬﻴﻤﺔ ﺍﻟﺘﻲ ﻣﻠَّﻜﻚ ﺍﻟﻠﻪ ﺇﻳﺎﻫﺎ؟ ﻓﺈﻧﻪ ﺷﻜﺎ ﺇﻟﻲَّ ﺃﻧﻚ ﺗﺠﻴﻌﻪ ﻭﺗﺪﺋﺒﻪ
நபி அவர்கள் அன்ஸாரி ஸஹாபிகளில் ஒருவரின் தோட்டத்திற்குள் நுழைந்தார்கள்.அங்கே ஒரு ஒட்டகத்தைக் கண்டார்கள்.நபியைப் பார்த்தவுடன் அது அழத்துவங்கியது. நபி அவர்கள் அதனைத் தடவிக் கொடுத்தவுடன் அமைதியானது.பின்பு இந்த ஒட்டகத்தின் எஜமானன் யார் என்று கேட்டார்கள்.அப்போது ஒரு அன்ஸாரித் தோழர் அல்லாஹ்வின் தூதர் அவர்களே இது எனக்குரியது என்றார்.அல்லாஹ் உன் கையில் கொடுத்திருக்கிற இந்த கால்நடை விஷயத்தில் அல்லாஹ்வை நீ அஞ்ச வேண்டாமா! நீ இதற்கு உணவு தராமல் பட்டினி போடுகிறாய்,இதற்கு அதிக சிரமத்தை தருகிறாய் என்று என்னிடம் முறையிடுகிறது என்றார்கள். (அபூதாவூது ; 2549)
عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدِ اللَّهِ عَنْ أَبِيهِ قَالَ كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم- فِى سَفَرٍ فَانْطَلَقَ لِحَاجَتِهِ فَرَأَيْنَا حُمَّرَةً مَعَهَا فَرْخَانِ فَأَخَذْنَا فَرْخَيْهَا فَجَاءَتِ الْحُمَّرَةُ فَجَعَلَتْ تَفْرُشُ فَجَاءَ النَّبِىُّ -صلى الله عليه وسلم- فَقَالَ « مَنْ فَجَعَ هَذِهِ بِوَلَدِهَا رُدُّوا وَلَدَهَا إِلَيْهَا ». وَرَأَى قَرْيَةَ نَمْلٍ قَدْ حَرَّقْنَاهَا فَقَالَ « مَنْ حَرَّقَ هَذِهِ ». قُلْنَا نَحْنُ. قَالَ « إِنَّهُ لاَ يَنْبَغِى أَنْ يُعَذِّبَ بِالنَّارِ إِلاَّ رَبُّ النَّارِ ».[ابوداود]
ஒரு பறவை தன் சிறகுகளை அடித்துக் கொண்டிருந்தது.அதனைக் கண்ட நபி அவர்கள் இதன் குஞ்சுகளைக் கொண்டு இதற்கு சிரமம் கொடுத்தது யார்? என்று கேட்டு விட்டு அதன் குஞ்சுகளை அதனிடமே விட்டு விடுங்கள் என்றார்கள்.ஒரு எறும்பு புற்று எறிக்கப்பட்டிருப்பதைக் கண்ட நபி அவர்கள் இதை யார் எறித்தது? என்று கேட்டார்கள். நாங்கள் தான் அவர்கள் கூறியபோது நெருப்பைப் படைத்த இறைவனைத் தவிர வேறு எவருக்கும் நெருப்பைக் கொண்டு வேதனைபடுத்த தகுதியில்லை என்றார்கள்.(அபூதாவூத் ; 2675)

குறிப்பாக தன் சமூகத்தின் எல்லையில்லா அன்பாளராக நிகரில்லா கிருபையாளராக இருக்கிறார்கள். இந்த சமுதாயம் உயர்வடைய வேண்டும் அல்லாஹ்விடம் உயர்ந்த இடத்தைப் பெற  வேண்டு மென்பதற்காக அண்ணல் நபி அவர்கள் என்னென்ன செய்ய முடியுமை அத்தனையையும் செய்தார்கள். இன்றைக்கு நாம் பல்வேறு சிறப்புகளைப் பெற்றிருக்கிறோம் என்றால் உம்மத்தே முஹம்மதிய்யா என்று பெருமைப் பட்டுக் கொள்கிறோம் என்றால் அந்த பெருமையையும் சிறப்பையும் நமக்குப் பெற்றுத்தந்தது நபி அவர்கள் தான்.

ان اعمار امتي قصيرة فزد من ثوابهم فانزل يؤتون اجرهم مرتين قال فزد من ثوابهم فانزل من جاء بالحسنة فله عشر امثالها ﻟﻤﺎ ﻧﺰﻟﺖ : }ﻣﺜﻞ ﺍﻟﺬﻳﻦ ﻳﻨﻔﻘﻮﻥ ﺃﻣﻮﺍﻟﻬﻢ ﻓﻲ ﺳﺒﻴﻞ ﺍﻟﻠّﻪ ﻛﻤﺜﻞ ﺣﺒﺔ ﺃﻧﺒﺘﺖ ﺳﺒﻊ ﺳﻨﺎﺑﻞ { ﺇﻟﻰ ﺁﺧﺮﻫﺎ ﻓﻘﺎﻝ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠّﻪ ﺻﻠﻰ ﺍﻟﻠّﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ : ( ﺭﺏ ﺯﺩ ﺃﻣﺘﻲ‏) ﻓﻨﺰﻟﺖ : } ﻣﻦ ﺫﺍ ﺍﻟﺬﻱ ﻳﻘﺮﺽ ﺍﻟﻠّﻪ ﻗﺮﺿﺎً ﺣﺴﻨﺎً ﻓﻴﻀﺎﻋﻔﻪ ﻟﻪ ﺃﺿﻌﺎﻓﺎً ﻛﺜﻴﺮﺓ {، ﻗﺎﻝ : ‏( ﺭﺏ ﺯﺩ ﺃﻣﺘﻲ‏)، ﻓﻨﺰﻟﺖ : }ﺇﻧﻤﺎ ﻳﻮﻓﻰ ﺍﻟﺼﺎﺑﺮﻭﻥ ﺃﺟﺮﻫﻢ ﺑﻐﻴﺮ ﺣﺴﺎﺏ { "" ﺭﻭﺍﻩ ﺍﺑﻦ ﺃﺑﻲ ﺣﺎﺗﻢ ﻋﻦ ﻧﺎﻓﻊ ﻋﻦ ﺍﺑﻦ ﻋﻤﺮ ""
என் சமூகத்தின் ஆயுட்காலம் ரொம்பக் குறைவானது.எனவே அவர்களுக்கு நன்மைகளை அதிகமாகக் கொடு என்று நபி அவர்கள் அல்லாஹ்விடம் கேட்டார்கள்.அப்போது அல்லாஹ் அவர்கள் இரு முறை கூலி வழங்கப்படுவார்கள் என்ற வசனத்தை அருளினான்.இன்னும் அதிகப்படுத்து என்று கேட்டார்கள்.அப்போது ஒரு நன்மை செய்தால் அதுபோன்று பத்து கூலி உண்டு என்ற வசனத்தை இறக்கினான்.இன்னும் அதிகப்படுத்து என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் செலவு செய்பவர்களுக்கு உதாரணம் ஒரு வித்தைப் போல என்று தொடங்கும் வசனத்தை இறக்கினான். இன்னும் அதிகப்படுத்து என்று கேட்டார்கள்.அல்லாஹ்விற்கு யார் அழகிய கடன் தருகிறாரோ அவருக்கு அதனை பன்மடங்காக்கித் தருவான் என்ற வசனத்தை இறக்கினான். அதற்குப் பிறகும் இன்னும் அதிகப்படுத்து என்று கேட்டார்கள். பொருமையாளர்கள் கணக்கின்றி கூலி வழங்கப்படுவார்கள் என்ற வசனத்தை அல்லாஹ் இறக்கி வைத்தான். (இப்னு அபீ ஹாதம்)

كلُّ نبيٍّ سألَ سؤلًا ، أو قالَ : لِكُلِّ نبيٍّ دَعوةٌ قد دعا بِها فاستُجيبَ ، فَجعلتُ دعوَتي شَفاعةً لأُمَّتي يومَ القيامةِ
ஒவ்வொரு நபிக்கும் ஒரு விஷேசமான துஆவுண்டு.அதைக் கொண்டு அவர்கள் பிரார்த்தித்து பதிலளிக்கப்பட்டு விட்டார்கள்.ஆனால் எனது துஆவை கியாமத் நாளில் என் சமூகத்திற்கு பரிந்துரைப்பதற்காக வைத்துள்ளேன். (புகாரி ; 6304) 

இந்தளவு நம்மீது இரக்கமும் கிருபையும் கொண்டுள்ள அண்ணல் நபியின் மீது நாம் எந்தளவு அன்பு வைத்திருக்கிறோம்,அவர்களை நாம் எந்த இடத்தில் வைத்திருக்கிறோம்.நம் வாழ்வில் அவர்களுக்கு எந்த இடத்தைக் கொடுத்திருக்கிறோம் என்று சிந்தனை செய்து பார்க்க வேண்டும்.

நபியின் பிரியம் தான் நம்மை உயரத்தில் கொண்டு போய் சேர்க்கும்.
عَنْ أَنَسٍ أَنَّ رَجُلاً مِنْ أَهْلِ الْبَادِيَةِ أَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللهِ مَتَى السَّاعَةُ قَائِمَةٌ قَالَ وَيْلَكَ وَمَا أَعْدَدْتَ لَهَا قَالَ مَا أَعْدَدْتُ لَهَا إِلاَّ أَنِّي أُحِبُّ اللَّهَ وَرَسُولَهُ قَالَ إِنَّكَ مَعَ مَنْ أَحْبَبْتَ فَقُلْنَا وَنَحْنُ كَذَلِكَ قَالَ نَعَمْ فَفَرِحْنَا يَوْمَئِذٍ فَرَحًا شَدِيدًا[البخاري]
கியாமத் நாள் எப்போது என்று கேட்ட ஒரு நபித்தோழரைப் பார்த்து அதற்காக என்ன தயாரித்து வைத்திருக்கிறீர் என்று நபி அவர்கள் கேட்டார்கள்.நான் எந்த தயாரிப்பையும் செய்ய வில்லை.ஆனால் நான் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் பிரியப்படுகிறேன் என்று சொன்னார்.அதற்கு நபி அவர்கள் நீ யாரை நேசிக்கிறாயோ அவருடன் இருப்பாய் என்றார்கள். (புகாரி ; 3688)

தன் சமூகத்தின் மீது அளவுகடந்த அக்கரையும் அன்பும் கொண்ட அண்ணல் நபிகள் நாயகம் அவர்களை நாம் உளமாற நேசிக்க வேண்டும்.அல்லாஹ் அத்தகைய நன்மக்களாக ஆக்குவானாக




1 comment: