Pages

Pages

Thursday, January 7, 2021

ஜனவரி 9


 

2003 ம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் ஜனவரி 9 ம் நாள் வெளிநாடு வாழ் இந்தியர் தினம் அனுசரிக்கப்படுகின்றது. தேசத்தந்தை என்றழைக்கப்படுகிற மகாத்மா காந்தி 1915 ம் ஆண்டு  தென்னாப்பிரிக்காவிலிருந்து மும்பை வந்து சேர்ந்த நாள் ஜனவரி 9, அதனை அடிப்படையாகக் கொண்டு தான் இந்த நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது.

இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு பிழைக்கச் சென்ற இந்தியர்கள் காலப்போக்கில் அங்கேயே குடியுரிமை வாங்கி வாழ்வது அதிகமாகி விட்டது. அப்படி அங்கு வாழும் இந்தியர்களின் உறவை அப்படியே துண்டித்து விட முடியாது; நம் நாட்டில் பிறந்தவர்கள் என்ற முறையில் அவர்களையும் நாம் இணைக்க வேண்டும், அவர்களையும் நாம் கண்ணியப்படுத்த வேண்டும். மட்டுமல்ல, வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு உலக நாடுகள் முழுவதிலும் தகுந்த பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் (தற்போது இந்தியாவில்  வாழும் இந்தியர்களுக்கே தகுந்த பாதுகாப்பு இல்லை என்பது வேறு விஷயம்) என்ற நோக்கில் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.

உலகெங்கும் உள்ள வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவழி நபர்கள் மக்கள் தொகை 30 மில்லியனாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2010 ல் எடுக்கப்பட்ட கணக்கு. தற்போது இன்னும் அதிகமாகி இருக்கும். ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தின் 2010 ஆம் ஆண்டு அறிக்கைப்படி சீனாவிற்கு அடுத்ததாக உலகின் மிகப் பெரிய விரிந்து பரவிய புலம்பெயர் இனம் இந்தியர்களாகும். மேலும் ஆசியாவிலேயே "புலம் பெயர்வதை" கூடுதலாக,0.8%, கொண்டுள்ள நாடும் இந்தியா எனக் குறிப்பிட்டுள்ளது. மேலும் வெளிநாட்டில் கல்விக்காக செல்லும் மாணவர் களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை நாம் பார்க்கிறோம்.

வெளிநாட்டில் குடியுரிமை பெற்று வாழும் இந்தியர்களின் தினமாக ஜனவரி 9 பார்க்கப்பட்டாலும் பிழைப்பிற்காக, வாழ்வாதாரத்திற்காக, குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக, குமர்களை கரை சேர்ப்பதற்காக, பிள்ளைகளின் படிப்பு மற்றும்  எதிர் காலத்திற்காக, வசிப்பதற்கு வசதியான வீடு கட்ட வேண்டும் என்பதற்காக, குடும்பத்தாரின் மருத்துவ செலவிற்காக, வாங்கிய கடனை அடைப்பதற்காக, இன்னும் பல்வேறு நோக்கத்திற்காக தன் சுக துக்கங்களை மறந்து, தன் சொந்த  விருப்பங்களை மறந்து, தன் நட்புக்களையும் தன் குடும்பத்தையும் தன் சொந்த பந்தங்களையும் பிரிந்து, தனிமையை தேர்ந்தெடுத்துக் கொண்டு பல்வேறு தியாகங்களை மேற்கொண்டு வெளிநாடுகளில்  பாடுபடும் நம் இளைஞர்களையும் குடும்பத்தலைவர்களையும் இந்நேரத்தில் நினைத்துப் பார்ப்பது மிகப்பொருத்தமாக இருக்கும்.

திரைகடல் ஓடியும் திரவியம் தேடு" என்ற ஔவையார் பாடிய பாடலுக்கு ஏற்ப மனிதன் உயிர் வாழ நாடு விட்டு நாடு செல்வது இன்றைக்கு  தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது.

வெளி நாடுகளில் பிழைப்பிற்காக சென்ற இந்தியர்கள் படும் துன்பங்களும் இன்னல்களும் கொஞ்சமல்ல.

வெளி நாட்டில் வேலை பார்ப்பவர்களில் பெரும்பாலும் லீவுக்கு வரும் போது ஒவ்வொரு முறையும் இன்னும் மிச்சம் எத்தனை நாள் இருக்கிறது என்று எண்ணி கொண்டே இருப்பார்கள். அங்கேயும் அவர்களுக்கு நிம்மதி  இல்லை.  இங்கே வந்த நாட்களிலும் அவர்களுக்கு நிம்மதி இல்லை. கூடப் பிறந்தவர்கள், குடும்பத்தார்கள், சொந்த பந்தங்களெல்லாம், இவர்கள் நமக்கு என்ன வாங்கி விட்டு வருவார்கள் என்று தான் யோசிக்கிறார்கள்.அங்கே அவர்கள் படும் சிரமங்களை எண்ணிப் பார்ப்பதில்லை. நான் பேருக்கு தாண்டா இஞ்சினீர். என்ன கேவலமான வேலையெல்லாம் செய்ரேன்னு வெளியே சொல்ல முடியாது" என்று புலம்புபவர்கள் தான் அதிகம்.

இதை விட கொடுமையான சில நிகழ்வுகளும் வெளி நாடு வாழ் இந்தியர்களுக்கு நிகழ்கின்றன.சில வருடங்களுக்கு முன்பு உ. பி யை சேர்ந்த ஹபிப் ஹுசைன் எனும் தொழிலாளி தனக்கு இருந்த கொஞ்ச நிலத்தையும் விற்று ஒரு லட்சம் ருபாய் தந்து வெளி நாடு சென்றார். மாத சம்பளம் 10000 முதல் 15000 ருபாய் என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால் நடந்தது வேறு.. இவரது passport -ஐ வாங்கி வைத்து கொண்டு அடிமை போல் நடத்தியிருக்கிறார்கள். மிக மிக குறைவான அளவே சாப்பாடு தந்துள்ளார்கள். மாத ஊதியமும் எதுவும் கொடுக்க வில்லை. ஊருக்கு phone பேசி அவர்கள் எப்படி உள்ளார்கள் என்று கூட தெரிய முடியாத சூழல்.

இவர் தனது passport ஐ தந்து விடும் படி பல முறை கெஞ்சியிருக்கிறார். ஆனால் எந்தப் பயனும் இல்லை. கடைசியாய் சவுதி ஏர் போர்ட்டில் வேலை செய்தவர், திருட்டு தனமாக விமானத்தில் ஏறி அதன் கழிவரையில் ஒளிந்து கொண்டுள்ளார். பறக்க ஆரம்பித்து அரை மணி ஆன பின் இது தெரிய வர, அவருக்கு சீட் தந்து உணவும் தந்துள்ளார்கள். என்றாலும் அவரது இக்கட்டான இந்த சூழ்நிலையை பார்க்காமல், அங்கே அவருக்கு நடந்த கொடுமைகளை ஆராய்ந்து அதற்குரிய நடவடிக்கைகளை எடுப்பதை விட்டு விட்டு திருட்டுத்தனமாக வந்ததற்காக இந்திய அரசாங்கம் அவரை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது.

இவ்வாறு கொத்தடிமை வாழ்க்கை வாழ்வோரை விடுவிக்க இந்திய அரசாங்கம் ஏதும் செய்ய முற்படுமா என்பது ஒரு புறம் இருந்தாலும் நம் இல்லங்களிலிருந்து பிழைப்பிற்காக வெளிநாடுகளில் சிரமப்படும் நம் உறவுகளின் சிரமங்களை உணர்ந்து அவர்களின் சிரமங்களில் நாமும் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக வியர்வைகளையும் இரத்தங்களையும் சிந்தி சம்பாதித்து நமக்காக அவர்கள் அனுப்பும் பணம் காசுகளை வீண்விரயம் செய்யாமல் இருக்க வேண்டும் என்பது இந்த நேரத்தில் நாம் மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டிய செய்தி.

அங்கே அவர்கள் படும் கஷ்டங்களை மனதில் கொள்ளாமல் வெளிநாட்டிலிருந்து பணம் வருகிறது என்ற எண்ணத்தில் இன்றைக்கு நம்மில் பலர் காசுகளையும் உணவுகளையும் வீணடிக்கின்ற நிலைகள் மாற வேண்டும். நாம் வீணடிக்கின்ற ஒவ்வொரு காசிலும் அவர்களின் வியர்வையும் இரத்தமும் ஒளிந்திருக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இஸ்லாம் சம்பாதிப்பதற்கோ, உழைப்பதற்கோ, பொருளாதாரத்தைத் திரட்டுவதற்கோ தடை விதிக்க வில்லை. அதை ஊக்கப்படுத்தித் தான் இருக்கிறது. இருந்தாலும் சம்பாதிப்பதிலும் செலவு செய்வதிலும் தடுக்கப்பட்ட நிலைகளை இஸ்லாம் தெளிவுபடுத்தி இருக்கிறது. அவ்வாறு பொருளாதாரத்தை செலவு செய்யும் விஷயத்தில் தடுக்கப்பட்டவற்றிலிருந்தும் உள்ளது தான் அந்த பொருளாதாரத்தை வீண்விரயம் செய்தல் என்பது.

இஸ்லாம் வீண்விரயம் செய்வதை வன்மையாக கண்டிக்கிறது.

كلوا واشربوا ولا تسرفوا انه لا يحب المسرفين

உண்ணுங்கள் பருகுங்கள் வீண்விரயம் செய்யாதீர்கள். விரயம் செய்வோரை அவன் (அல்லாஹ்) நேசிப்பதில்லை”. (அல்குர்ஆன் : 7 ; 31)

قال القرطبي رحمه الله في تفسير آية آل عمران: "قوله تعالى: (وَكُلُوا وَاشْرَبُوا وَلا تُسْرِفُوا) قال ابن عباس: أحل الله في هذه الآية الأكل والشرب ما لم يكن سرفا أو مخيلة.

வீண்விரயமோ அல்லது பெருமையோ இல்லாத உணவையும் பானத்தையும் அல்லாஹ் ஆகுமாக்கி இருக்கிறான் என்று இந்த வசனத்திற்கு இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் விளக்கம் தருகிறார்கள். (குர்துபி)

كُلوا واشرَبوا وتَصدَّقوا والْبَسوا ما لم يخالِطْهُ إسرافٌ أو مَخيَلةٌ .

உண்ணுங்கள், பருகுங்கள், தரமம் செய்யுங்கள், ஆடை அணியுங்கள். ஆனால், அதில் விரயமும், கர்வமும் கலந்து விடக் கூடாது”(இப்னுமாஜா ; 2920)

أنَّ مُعَاوِيَةَ كَتَبَ إلى المُغِيرَةِ: أنِ اكْتُبْ إلَيَّ بحَدِيثٍ سَمِعْتَهُ مِن رَسولِ اللَّهِ صَلَّى اللهُ عليه وسلَّمَ، قالَ: فَكَتَبَ إلَيْهِ المُغِيرَةُ: إنِّي سَمِعْتُهُ يقولُ عِنْدَ انْصِرَافِهِ مِنَ الصَّلَاةِ: لا إلَهَ إلَّا اللَّهُ وحْدَهُ لا شَرِيكَ له، له المُلْكُ وله الحَمْدُ، وهو علَى كُلِّ شيءٍ قَدِيرٌ ثَلَاثَ مَرَّاتٍ، قالَ: وكانَ يَنْهَى عن قيلَ وقالَ، وكَثْرَةِ السُّؤَالِ، وإضَاعَةِ المَالِ، ومَنْعٍ وهَاتِ، وعُقُوقِ الأُمَّهَاتِ، ووَأْدِ البَنَاتِ

முஆவியா ரலி அவர்கள் முஃகீரா இப்னு ஷுஅபா ரலி அவர்களுக்கு (ஒரு கடிதம்) எழுதியிருந்தார்கள். அதில், 'இறைத்தூதர் அவர்களிடமிருந்து தாங்கள் செவியேற்ற ஹதீஸ் ஒன்றை எனக்கு எழுதியனுப்புங்கள்' என்று குறிப்பிட்டிருந்தார்கள். அப்போது முஃகீரா ரலி அவர்கள் (பின்வருமாறு) எழுதினார்கள்: நபி அவர்கள் தொழுது முடித்தவுடன், வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு நிகரானோர் எவருமில்லை. ஆட்சியதிகாரம் அவனுக்கே உரியது எல்லாப் புகழும் அவனுக்கே சொந்தம். அவன் அனைத்தின் மீதும் ஆற்றல் உள்ளவன்' என்று கூறுவார்கள்.

மேலும், நபி அவர்கள்,  'இவ்வாறு சொல்லப்பட்டது;  (இவ்வாறு அவர் சொன்னார் என்று (ஊர்ஜிதமில்லாதவற்றை, அல்லது தேவைக்கதிகமாகப் பேசுவது,  அதிகமாக கேள்வி, அல்லது யாசகம் கேட்பது, செல்வத்தை வீணாக்குவது, (அடுத்தவருக்குத் தரவேண்டியதைத்) தரமறுப்பது, (அடுத்தவருக்கு உரியதைத்) தருமாறு கோருவது, அன்னையரைப் புண்படுத்துவது, பெண் சிசுக்களை உயிருடன் புதைப்பது ஆகியவற்றுக்குத் தடை விதிப்பவர்களாக இருந்தார்கள். (புகாரி : 6473)

فعَن عبد الله بن عمرو أن رسول الله صلى الله عليه وسلم مَرَّ بِسَعْدٍ وهو يتوضأ فقال: ما هذا الإسراف؟ فقال: أفي الوضوء إسراف؟! قال: نعم، وإن كنتَ على نهرٍ جارٍ

ஒழு செய்து கொண்டிருந்த சஃது ரலி அவர்களை நபியவர்கள்  கடந்து சென்றார்கள். என்ன இது வீண் விரயம் என்று கேட்டார்கள். ஒழுவில் கூட வீண் விரயம் உண்டா என்று அவர்கள் கேட்ட போது, ஆம், நீ ஓடக்கூடிய நதியில் இருந்தாலும் அதிலும் வீண்விரயம் இருக்கிறது என்று சொன்னார்கள். (அஸ்ஸுனனு வல் அஹ்காம் ; 1/108)

வீண்விரயம் என்பதற்கு மார்க்க அறிஞர்கள் பல விதமான விளக்கங்களைத் தருகிறார்கள்.

1, பாவமான காரியங்களில் பொருளை செலவு செய்வது வீண்விரயம்.

قال سفيان الثوري رضي الله عنه: "ما أنفقت في غير طاعة الله فهو سرف

அல்லாஹ்விற்கு மாறு செய்யும் விஷயத்தில் நீ செலவு செய்கின்ற பணம் அது மிகக் குறைவாக இருந்தாலும் அது வீண் விரயம் என்று சுஃப்யான் ஸவ்ரி ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.

 

2, முறையின்றி செலவு செய்வது வீண்விரயம்.

قال ابن عباس رضي الله عنه: "من أنفق درهماً في غير حقه فهو سرف".

முறையின்றி ஒருவர் ஒரு திர்ஹமை செலவு செய்தால் அதுவும் வீண்விரயம் என்று இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் கூறுகிறார்கள்.

 

3, தேவைக்கு அதிகமாக பயன்படுத்துவது வீண்விரயம்.

قال الزَّجَّاجُ -رحمه الله- في تفسير الإسراف: "لا تأكلوا من الحلال فوق الحاجة"

ஆகுமானதைக் கூட உன் தேவைக்கு மேலே நீ உண்ண வேண்டாம். அவ்வாறு உண்ணுவது வீண் விரயம் ஆகும் என்று ஸுஜாஜ் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.

قال عمر بن الخطاب رضي الله عنه: إياكم والبطنة في الطعام والشراب فإنها مفسدة للجسم، مورثة للسقم، مكسلة عن الصلاة، وعليكم بالقصد فيهما فإنه أصلح للجسد وابعد من السرف

உணவாலும்  பானத்தாலும் வயிறு நிரப்புவதை நீங்கள் தவிர்ந்து கொள்ளுங்கள். ஏனென்றால் அவ்வாறு வயிற்றை நிரப்புவது உடலைக் கெடுத்து விடும். நோயை உருவாக்கும். தொழுகையில் சோம்பேறித்தனத்தை ஏற்படுத்தும். நீங்கள் இந்த உணவிலும் குடிப்பிலும் நடுநிலையை அவசியமாக்கிக் கொள்ளுங்கள். அந்த நடுநிலை தான் உடலுக்கு நன்மையாக இருக்கும்  வீன் விரயத்தில் இருந்து உங்களை தூரமாகும். (அல்மகாஸிதுல் ஹஸனா)

وأتى سلمان الفارسي أبا بكر الصديق - رضي الله تعالى عنهما - في مرضه الذي مات فيه فقال: أوصني يا خليفة رسول الله صلى الله عليه وسلم فقال أبو بكر: (إن الله فاتح عليكم الدنيا فلا يأخذنَّ منها أحد إلا بلاغاً)

ஹள்ரத் அபூபக்கர் ரலி அவர்கள் மரண வேளையில் இருக்கிற பொழுது அவர்களை சந்திப்பதற்காக ஸல்மான் ஃபாரிஸி ரலி அவர்கள் வந்தார்கள். கலிஃபா அவர்களே எனக்கு ஏதேனும் உபதேசம் செய்யுங்கள் என்று சொன்னார்கள். அப்போது அபூபக்கர் ரலி அவர்கள், நிச்சயமாக அல்லாஹுத்தஆலா உங்களுக்கு உலகத்தை விசாலமாக திறந்து கொடுத்திருக்கிறான். அதிலிருந்தும் ஒருவர் தன் தேவையை தவிர வேறு எதையும் அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று கூறினார்கள்.

وكتب سعد بن أبى وقاص إلى عمر بن الخطاب - رضي الله عنهما - وهو على الكوفة يستأذنُه في بناء بيت يسكنه فوقع في كتابه:

(ابنِ ما يستركَ من الشمس، ويُكنُّك من الغيث، فإنَّ الدنيا دار بلغة)

கூஃபா நகரத்தின் அதிகாரியாக இருந்த ஸஃது பின் அபீவக்காஸ் ரலி அவர்கள் ஜனாதிபதி உமர் ரலி அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதி, தான் வசிப்பதற்கு ஒரு வீடு கட்டிக்கொள்ள அனுமதி தேடினார்கள். அதற்கு பதில் கடிதத்தை எழுதும் போது உமர் ரலி அவர்கள், சூரிய வெப்பத்திலிருந்து உன்னை தடுத்துக் கொள்ளும் படியான மேலும் மழையிலிருந்து உன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் படியான ஒரு வசிப்பிடத்தை நீங்கள் கட்டிக் கொள்ளுங்கள். ஏனென்றால் இந்த உலகம் என்பது தேவையை பூர்த்தி செய்வதற்கு போதுமானதை மட்டுமே எடுத்துக் கொள்கிற உலகம் ஆகும் என்றார்கள்.

4, விரும்பியதையெல்லாம் சாப்பிடுவதும் வீண்விரயம்.

عن أنس أن النبي صلى الله عليه وسلم قال: "من السرف أن تأكل كل ما اشتهيت

நீ விரும்பிய அனைத்தையும் உண்பது கூட விரயம் தான்”. (இப்னுமாஜா ; 3352)

عن عُمرَ بنِ الخطَّابِ أنَّه قالَ : كفَى سَرَفًا أن لا يشتَهيَ رجلٌ شيئًا إلَّا اشتراهُ فأكلَه .

விரும்பியதை உடனே வாங்கி சாப்பிடுவதே வீண்விரயம் என்பதற்கு போதுமாகும். (அல்மகாஸிதுல் ஹஸனா ; 515)

دخل عمر بن الخطاب على ابنه عبد الله - رضي الله تعالى عنهما - فرأى عنده لحماً، فقال: ما هذا اللحم؟ قال: أشتهيه! قال: وكلما اشتهيت شيئاً أكلته؟ كفى بالمرء سرفاً أن يأكل كلَّ ما اشتهاه)!

ஹஜ்ரத் உமர் ரலி அவர்கள், அவர்களது மகன் அப்துல்லாஹ் ரலி அவரிடத்தில் வந்தார்கள். அவரிடத்தில் இறைச்சித் துண்டு இருப்பதைப் பார்த்தார்கள். என்ன இது இறைச்சி என்று கேட்ட போது, சாப்பிட வேண்டும் என்ற ஆசை எனக்கு ஏற்பட்டது அதனால் சாப்பிடுகிறேன் என்று சொன்னார். அப்போது உமர் ரலி அவர்கள் நீ விரும்பியதையெல்லாம் சாப்பிடுவாயா என்று கேட்டு விட்டு, ஒருவர், தான் விரும்பியதையெல்லாம் சாப்பிடுவதே அவர் வீண்விரயம் செய்கிறார் என்பதற்கு போதுமானதாகும் என்று கூறினார்கள்.

எப்படியிருந்தாலும் வீண்விரயம் செய்தால் இறைவனுக்கு நாம் பதில் சொல்ல வேண்டும்.

خَرَجَ رَسولُ اللهِ صَلَّى اللَّهُ عليه وَسَلَّمَ ذَاتَ يَومٍ، أَوْ لَيْلَةٍ، فَإِذَا هو بأَبِي بَكْرٍ وَعُمَرَ، فَقالَ: ما أَخْرَجَكُما مِن بُيُوتِكُما هذِه السَّاعَةَ؟ قالَا: الجُوعُ يا رَسولَ اللهِ، قالَ: وَأَنَا، وَالَّذِي نَفْسِي بيَدِهِ، لأَخْرَجَنِي الذي أَخْرَجَكُمَا، قُومُوا، فَقَامُوا معهُ، فأتَى رَجُلًا مِنَ الأنْصَارِ فَإِذَا هو ليسَ في بَيْتِهِ، فَلَمَّا رَأَتْهُ المَرْأَةُ، قالَتْ: مَرْحَبًا وَأَهْلًا، فَقالَ لَهَا رَسولُ اللهِ صَلَّى اللَّهُ عليه وَسَلَّمَ: أَيْنَ فُلَانٌ؟ قالَتْ: ذَهَبَ يَسْتَعْذِبُ لَنَا مِنَ المَاءِ، إذْ جَاءَ الأنْصَارِيُّ، فَنَظَرَ إلى رَسولِ اللهِ صَلَّى اللَّهُ عليه وَسَلَّمَ وَصَاحِبَيْهِ، ثُمَّ قالَ: الحَمْدُ لِلَّهِ ما أَحَدٌ اليومَ أَكْرَمَ أَضْيَافًا مِنِّي، قالَ: فَانْطَلَقَ، فَجَاءَهُمْ بعِذْقٍ فيه بُسْرٌ وَتَمْرٌ وَرُطَبٌ، فَقالَ: كُلُوا مِن هذِه، وَأَخَذَ المُدْيَةَ، فَقالَ له رَسولُ اللهِ صَلَّى اللَّهُ عليه وَسَلَّمَ: إيَّاكَ، وَالْحَلُوبَ، فَذَبَحَ لهمْ، فأكَلُوا مِنَ الشَّاةِ وَمِنْ ذلكَ العِذْقِ وَشَرِبُوا، فَلَمَّا أَنْ شَبِعُوا وَرَوُوا، قالَ رَسولُ اللهِ صَلَّى اللَّهُ عليه وَسَلَّمَ لأَبِي بَكْرٍ، وَعُمَرَ: وَالَّذِي نَفْسِي بيَدِهِ، لَتُسْأَلُنَّ عن هذا النَّعِيمِ يَومَ القِيَامَةِ، أَخْرَجَكُمْ مِن بُيُوتِكُمُ الجُوعُ، ثُمَّ لَمْ تَرْجِعُوا حتَّى أَصَابَكُمْ هذا النَّعِيمُ

அல்லாஹ்வின் தூதர் "ஒரு பகல்" அல்லது "ஓர் இரவு" (தமது இல்லத்திலிருந்து) வெளியே புறப்பட்டு வந்தார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்களும் உமர் (ரலி) அவர்களும் வெளியே இருந்தனர். அல்லாஹ்வின் தூதர் அவர்கள், "இந்த நேரத்தில் நீங்கள் இருவரும் உங்கள் வீடுகளிலிருந்து புறப்பட்டு வர என்ன காரணம்?" என்று கேட்டார்கள். அதற்கு, "பசிதான் (காரணம்), அல்லாஹ்வின் தூதரே!" என்று அவ்விருவரும் பதிலளித்தனர்.  அப்போது அல்லாஹ்வின்  தூதர் அவர்கள், "என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! நானும் (புறப்பட்டு வந்தது அதனால்)தான். உங்கள் இருவரையும் வெளியேவரச் செய்ததே என்னையும் வெளியேவரச் செய்தது" என்று கூறிவிட்டு, "எழுங்கள்" என்று கூறினார்கள். அவ்வாறே அவர்கள் இருவரும் எழுந்தனர். பிறகு (மூவரும்) அன்சாரிகளில் ஒருவரிடம் (அவரது வீட்டுக்குச்) சென்றனர்.அப்போது அந்த அன்சாரி வீட்டில் இருக்கவில்லை. அல்லாஹ்வின் தூதர் அவர்களை அந்தத் தோழரின் துணைவியார் கண்டதும், "வாழ்த்துகள்! வருக" என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் அவர்கள் அப்பெண்ணிடம், "அவர் எங்கே?" என்று கேட்டார்கள். அதற்கு அப்பெண், "எங்களுக்காக நல்ல தண்ணீர் கொண்டுவருவதற்காக (வெளியே) சென்றுள்ளார்" என்று பதிலளித்தார்.அப்போது அந்த அன்சாரி வந்துவிட்டார். அல்லாஹ்வின் தூதர் அவர்களையும் அவர்களுடைய இரு தோழர்களையும் (தமது வீட்டில்) கண்டார். பிறகு "எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! இன்றைய தினம் மிகச் சிறந்த விருந்தினரைப் பெற்றவர் என்னைத் தவிர வேறெவரும் இல்லை" என்று கூறிவிட்டு, (திரும்பிச்) சென்று ஒரு பேரீச்சங்குலையுடன் வந்தார். அதில் நன்கு கனியாத நிறம் மாறிய காய்களும் கனிந்த பழங்களும் செங்காய்களும் இருந்தன. அவர், "இதை உண்ணுங்கள்" என்று கூறிவிட்டு, (ஆடு அறுப்பதற்காக) கத்தியை எடுத்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் அவர்கள், "பால் தரும் ஆட்டை அறுக்க வேண்டாம் என உம்மை நான் எச்சரிக்கிறேன்"என்று கூறினார்கள்.அவ்வாறே அவர்களுக்காக அவர் ஆடு அறுத்(து விருந்து சமைத்)தார். அவர்கள் அனைவரும் அந்த ஆட்டையும் அந்தப் பேரீச்சங்குலையிலிருந்தும் உண்டுவிட்டு (தண்ணீரும்) அருந்தினர். வயிறு நிரம்பி தாகம் தணிந்தபோது அல்லாஹ்வின் தூதர் அவர்கள் அபூபக்ர் (ரலி) மற்றும் உமர் (ரலி) ஆகியோரிடம், "என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீதாணையாக! இந்த அருட்கொடை பற்றி மறுமை நாளில் நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள். பசி உங்களை உங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றியது. பின்னர் இந்த அருட்கொடையை அனுபவித்த பிறகே நீங்கள் திரும்பிச் செல்கிறீர்கள்" என்று கூறினார்கள். (முஸ்லிம் ؛ 2038)

لا تزول قدما ابنِ آدمَ يومَ القيامةِ من عندِ ربِّه حتى يُسألَ عن خمسٍ : عن عمُره فيما أفناهُ، وعن شبابِه فيما أبلاهُ، وعن مالِه من أين اكتسَبه وفيما أنفقَه، وماذا عمِل فيما علِم

ஒருவன் தன் ஆயுள் காலத்தை எப்படி அழித்தான். அவனுடைய வாலிபத்தை எப்படி கழித்தான். அவன் பொருளாதாரத்தை எங்கிருந்து சம்பாதித்தான். எதில் செலவழித்தான். அவன் கற்றதில் என்ன அமல் செய்தான் என்ற ஐந்து கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வரை இறைவன் புறத்திலிருந்து மறுமை நாளில் மனிதனின் பாதங்கள் நகராது. (திர்மிதி ; 2416)

நாம் அனுபவிக்கிற அனைத்தையும் அல்லாஹ் நமக்களித்த அருட்கொடைகள் என்று எண்ணி அதை உரிய முறையில் பயன்படுத்த வேண்டும். வீண்விரயம் ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும். நாம் சம்பாதிக்கிற மற்றும் செலவழிக்கிற ஒவ்வொன்றுக்கும் இறைவனிடம் பதில் சொல்ல வேண்டும் என்பதை நினைவில் வைத்து செயல்பட வேண்டும், அல்லாஹ் அதற்கு அருள் புரிவானாக

 

 

 

 


No comments:

Post a Comment