Pages

Pages

Thursday, January 14, 2021

மிருகவதை

 

உலகிலுள்ள சமயங்களிலெல்லாம் மிக உயர்ந்த சமயமாக உலகில் இருக்கிற மார்க்கங்களிலெல்லாம் மிகச்சிறந்த மார்க்கமாக தன்னிகரில்லாத மார்க்கமாக இஸ்லாம் இருக்கிறது.

இஸ்லாமியர்கள் மட்டுமில்லாமல் உலகில் அனைவராலும்  பாராட்டப்படுகின்ற, எல்லோரின் மனதிலும் நீங்கா இடம்  பிடித்திருக்கின்ற அனைவரின் உள்ளங்களையும் கவர்ந்திழுக்கின்ற மார்க்கம் இஸ்லாம். அதற்கு ஆயிரக்கணக்கான காரணங்கள் உண்டு. அதில் ஒன்று  தான் ஒரு முஸ்லிம்  இன்னொரு முஸ்லிமுக்கோ அல்லது சகோதர சமயத்தைச் சார்ந்த்தவனுக்கோ எவ்வகையிலும் தொந்தரவுகள் தரக்கூடாது, தொல்லைகள் கொடுக்கக்கூடாது, பிறரின் மனதை காயப்படுத்தக்கூடாது.இவ்வாறு நடப்பதை இறைநம்பிக்கையின் ஒரு அங்கமாக இஸ்லாம் பதிவு செய்திருக்கிறது. அவ்வாறு நடப்பவர் தான் உண்மையான இறை நம்பிக்கையாளர்  என்று கூறுகிறது.

المسلمُ مَن سَلِمَ المسلمون من لسانِه و يدِه ، و المهاجرُ من هجَر ما نهى اللهُ عنه

பிற முஸ்லிம்கள் எவருடைய நாவு, கையின் தொல்லைகளிலிருந்து பாதுகாப்புப் பெறுகிறார்களோ அவரே முஸ்லிமாவார். மேலும் அல்லாஹ்வால் தடுக்கப்பட்டவற்றை விட்டு ஒதுங்கியவரே முஹாஜிர் எனும் துறந்தவராவார்' (புகாரி ; 10)

قال رجلٌ : يا رسولَ اللهِ ! إنَّ فلانةً تذكر من كثرةِ صلاتها وصيامها وصدقتها ؛ غير أنها تؤذي جيرانها بلسانها ؟ قال : هي في النارِ، قال : يا رسولَ اللهِ ! فإنَّ فلانةً تذكر قلةَ صيامِها وصدقتها وصلاتها، وإنها تصَّدقُ تدقُّ بالأثوارِ من الأقطِ، ولا تؤذي بلسانها جيرانها ؟ قال : هي في الجنةِ

ஒருமனிதர் நபி அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே, இந்த பெண் அவளின் அதிகமான தொழுகைகள், அதிகமான நோன்புகள், அதிகமான தானதர்மங்கள் இவற்றைக்கொண்டு நினைவுபடுத்தப்படுகிறாள். எனினும், அவள் தமது அண்டை வீட்டாருக்கு தமது நாவினால் தொல்லை தருகிறாள்என்று முறையிட்டார். உடனே நபி அவர்கள் அவள் நரகவாதிஎன்றார்கள். மேலும் அவர், அல்லாஹ்வின் தூதரே! இந்தப்பெண் அவளின் குறைவான தொழுகைகள், குறைவான நோன்புகள், குறைவான தானதர்மங்கள் கொண்டு அவள் பேசப்படுகிறாள். எனினும், அவர் தமது நாவால் தமது அண்டை வீட்டாருக்கு நோவினை தருவதில்லைஎன்று முறையிட்டார். உடனே நபி அவர்கள் அவள் சொர்க்கவாசிஎன்று விளக்கமளிப்பார்கள்.’ (அஹ்மது 9675)

ஒரு முஸ்லிமின்  இறை நம்பிக்கை வெறுமனே வணக்க வழிபாடுகளோடும் மறைவானவற்றை நம்புவதோடு  மட்டும் நின்று விடுவதில்லை. பிறரிடம் அவன்  நடந்து கொள்ளும் நடைமுறைகள்  வரை அது நீளுகிறது.

பிறரிடம் என்பது பிற மனிதர்களிடம்  மட்டுமல்ல, உலகில் இருக்கிற எல்லா ஜீவராசிகளிடமும் நல்ல விதமாக  நடந்து கொள்ள வேண்டும். அப்போது தான் அவனுடைய ஈமான் முழுமை பெறுகிறது.  அவ்வாறு நடந்து கொள்ளாதவனின் ஈமான் பரிசோதனைக்குரியதாகத்தான் இருக்கும்.

உயிரினங்களிடம் அன்பு காட்டுவதை ஜீவகாருண்யம் என்று சொல்வார்கள். மனிதன் மனிதனுக்கு கருணை காட்டுவது போலவே ஏனைய ஜீவராசிகளுக்கும் அவன் கருணை காட்ட வேண்டும்.பகுத்தறிவற்ற வாய்பேச முடியாத மிருகங்கள்பறவைகள் என அனைத்தின் மீதும் பரிவு காட்ட வேண்டும் என்று இஸ்லாம் வலியுறுத்துகிறது.

நம்மைப்போன்றே உலகில் இருக்கிற ஜீவராசிகளையும் அல்லாஹ் சமூகம் என்று குர்ஆனில் பதிவு செய்திருக்கிறான்.

وَمَا مِنْ دَابَّةٍ فِي الْأَرْضِ وَلَا طَائِرٍ يَطِيرُ بِجَنَاحَيْهِ إِلَّا أُمَمٌ أَمْثَالُكُمْ

பூமியில் ஊர்ந்து திரியும் பிராணிகளும், தம் இரு இறக்கைகளால் பறக்கும் பறவைகளும் உங்களைப் போன்ற இனமேயன்றி வேறில்லை; (அல்குர்ஆன் : 6 ; 38)

 

அவைகளை நம்மைப்போன்ற ஓர் இனம் என்று சொன்னதற்கான காரணங்களில் ஒன்று நமக்கிருப்பதைப் போன்ற வலியும் சிரமமும் பசியும் தாகமும் உணர்வுகளும் அவைகளுக்கும் உண்டு என்பதாகும். அந்த அடிப்படையில் நம் உணர்வுகளை மற்றவர் புரிந்து நடக்க வேண்டும் நாம் விரும்புவதைப் போன்று அவைகளின் உணர்வுகளை நாமும் புரிந்து நடக்க வேண்டும். இதில் இஸ்லாம் நமக்கு தெளிவான வழிகாட்டுதலை வழங்கியுள்ளது.

 

உலகில் எல்லா உயிரிணங்களின் உணர்வுகளையும் புரிந்து நடக்க வேண்டும். அவைகளின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும். அவகைளின் சிரமங்களைப் போக்க முயற்சிக்க வேண்டும். ஒருவரின் பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கும் இறை பொருத்தத்தைப் பெறுவதற்கும் அதன் மூலம் சுவனத்தை சொந்தமாக்கிக் கொள்வதற்கும் அந்த ஒரு செயல் கூட போதுமாகி விடும்.

 

أنَّ رَسولَ اللَّهِ صَلَّى اللهُ عليه وسلَّمَ قالَ: بَيْنا رَجُلٌ يَمْشِي، فاشْتَدَّ عليه العَطَشُ، فَنَزَلَ بئْرًا، فَشَرِبَ مِنْها، ثُمَّ خَرَجَ فإذا هو بكَلْبٍ يَلْهَثُ يَأْكُلُ الثَّرَى مِنَ العَطَشِ، فقالَ: لقَدْ بَلَغَ هذا مِثْلُ الذي بَلَغَ بي، فَمَلَأَ خُفَّهُ، ثُمَّ أمْسَكَهُ بفِيهِ، ثُمَّ رَقِيَ، فَسَقَى الكَلْبَ، فَشَكَرَ اللَّهُ له، فَغَفَرَ له، قالوا: يا رَسولَ اللَّهِ، وإنَّ لنا في البَهائِمِ أجْرًا؟ قالَ: في كُلِّ كَبِدٍ رَطْبَةٍ أجْرٌ

'ஒரு மனிதர் பாதையில் நடந்து சென்று கொண்டிருந்த போது அவருக்குக் கடுமையான தாகம் ஏற்பட்டது. உடனேஅவர் (அங்கிருந்த) ஒரு கிணற்றில் இறங்கிஅதிலிருந்து (தண்ணீரை அள்ளிக்) குடித்தார். பிறகு கிணற்றிலிருந்து அவர் வெளியே வந்த போது நாய் ஒன்று தாகத்தால் தவித்துநாக்கைத் தொங்க விட்டபடி ஈர மண்ணை நக்கிக் கொண்டிருப்பதைக் கண்டார். அவர் (தம் மனதிற்குள்) ''எனக்கு ஏற்பட்டதைப் போன்றே இந்த நாய்க்கும் (கடுமையான தாகம்) ஏற்பட்டிருக்கின்றது போலும்'' என்று எண்ணிக் கொண்டார். உடனே, (மீண்டும் கிணற்றில் இறங்கிதண்ணீரைத்) தனது காலுறையில் நிரப்பிக் கொண்டுஅதை வாயால் கவ்விக் கொண்டுமேலே ஏறி வந்து அந்த நாய்க்கும் புகட்டினார். அல்லாஹ் அவருடைய இந்த நற்செயலை ஏற்று அவரை (அவரது பாவங்களை) மன்னித்தான்'' என்று நபி  அவர்கள் கூறினார்கள். இதைச் செவியுற்ற நபித்தோழர்கள், ''அல்லாஹ்வின் தூதரே! கால்நடைகளுக்கு உதவும் விஷயத்திலும் எங்களுக்குப் பலன் கிடைக்குமா?'' என்று கேட்டார்கள். நபி அவர்கள் ''ஆம்! உயிருடைய பிராணி ஒவ்வொன்றின் விஷயத்திலும் (அதற்கு உதவி செய்யும் பட்சத்தில் மறுமையில்) அதற்கான பிரதிபலன் கிடைக்கும்'' என்று கூறினார்கள். (நூல்: புகாரி 2363)

 

ஜீவராசிகள் மீது இரக்கம் இல்லாமல் அரக்க குணத்துடன் நடந்து கொள்வதை இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது.

عن سهل بن الحنظلية قال : (مر رسول الله صلى الله عليه وسلم ببعير قد لحق ظهره ببطنه، فقال:" اتقوا الله في هذه البهائم المعجمة، فاركبوها صالحة وكلوها صالحة)

அல்லாஹ்வின் தூதர் நபி அவர்கள் ஓர் ஒட்டகையைக் கடந்து சென்றார்கள். அதன் முதுகு அதன் வயிறுடன் ஒட்டி இருந்தது. 'இவ்வாய் பேச முடியாத மிருகங்கள் விஷயத்தில் அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள்! அவை நல்ல நிலையில் இருக்கும் போது அவைகள் மீது சவாரி செய்யுங்கள்! மேலும் அவை நல்ல நிலையில் இருக்கும் போது அவற்றை உண்ணுங்கள்!எனக் கூறினார்கள். (அபூ தாவூது ; 2548)

عُذِّبَتِ امرأةٌ في هِرّةٍ سَجَنَتها حتى ماتَت فدَخَلَت فيها النَّارَ؛ لا هي أطعَمَتها ولا سَقَتها إذ حَبَسَتها، ولا هي تَرَكَتها تَأكُلُ مِن خَشاشِ الَأرضِ» متفق عليه.

ஒரு பூனையை, அது சாகும் வரை (பட்டினி போட்டு) கட்டி வைத்த காரணத்தால் பெண் ஒருத்தி (நரகத்தில்) வேதனை செய்யப்பட்டாள். அதை அடைத்து வைத்த போது அவள் அதற்குத் தீனியும் போடவில்லை; அதற்கு (குடிக்கத்) தண்ணீரும் கொடுக்க வில்லை; அவள் அதை பூமியின் புழு பூச்சிகளைத் தின்ன (அவிழ்த்து) விடவுமில்லை. (புகாரி ; 3482)

سمعتُ رسولَ اللهِ صلى الله عليه وسلم يقولُ: قرصت نملةٌ نبيًّا من الأنبياءِ ، فأمر بقريةِ النملِ فأُحْرِقت، فأوحى اللهُ إليه: أن قرصتك نملةٌ أحْرَقتَ أُمةً من الأُممِ تُسَبِّحُ.

நபிமார்களில் ஒரு நபியை எறும்பொன்று கடித்து விட்டது.அந்த எறும்புப் புற்றை தீயிட்டுக் கொளுத்தும் படி அந்த நபி உத்தரவிட்டார்கள். அதன் படி கொளுத்தப்பட்டது. அப்போது அல்லாஹ் அந்த நபிக்கு ஒரு எறும்பு கடித்ததினால் அல்லாஹ்வை தஸ்பீஹ் செய்யும் ஒரு கூட்டத்தை அழித்து விட்டீர்களே என்று வஹியின் மூலம் கூறினான். {புகாரி ; 3019}

إذا سافَرْتُمْ في الخِصْبِ، فأعْطُوا الإبِلَ حَظَّها مِنَ الأرْضِ، وإذا سافَرْتُمْ في السَّنَةِ، فأسْرِعُوا عليها السَّيْرَ، وإذا عَرَّسْتُمْ باللَّيْلِ، فاجْتَنِبُوا الطَّرِيقَ، فإنَّها مَأْوَى الهَوامِّ باللَّيْلِ

நீங்கள் செழிப்பான காலத்தில் பயணம் செய்தால், (பசுமையான) பூமியில் ஒட்டகங்களுக்குரிய பங்கை (மேய்ச்சலை)க் கொடுத்து விடுங்கள். வறட்சியான காலத்தில் பயணம் செய்தால், ஒட்டகங்களைத் துரிதமாகச் செலுத்துங்கள். நீங்கள் இரவில் இறங்கி ஓய்வெடுத்தால், (போக்குவரத்துச்) சாலையைத் தவிர்த்து விடுங்கள். ஏனெனில், அது இரவில் விஷஜந்துகள் உலவும் இடமாகும்.  (முஸ்லிம் ; 1926)

புற்கள் நிறைந்த பசுமையான இடங்களில் மெதுவாக செல்ல வேண்டும். காரணம்,  நாம் பயணிக்கும் கால்நடைகளுக்கு தீணி கிடைக்க வேண்டும். அதன் மூலம் அவைகள் தன் பசியைத் தீர்த்துக் கொள்ளும். மட்டுமல்ல பொதுவாக நமக்கான சிறந்த உணவைப் பார்க்கிற போது அதை உண்ண வேண்டும் என்ற ஆவல் நமக்கு ஏற்படும். அதே ஆவலும் தேட்டமும் நமக்கிருப்பதைப் போன்றே பிராணிகளுக்கும் இருக்கத்தான் செய்யும். அவ்வாறு அதற்கான உணவுகள் நிறைந்த இடத்தில் அது உண்ணுவதற்கு இடமளிக்காமல் விரைவாக அந்த இடத்தைக் கடந்து விட்டால் தனக்கான தீணியைப் பார்த்தும் உண்ண முடிய வில்லையே என்ற ஏக்கம் அந்த பிராணிகளுக்கு ஏற்படும். அதேபோல் வரட்சியான இடங்களை மிக வேகமாக கடந்து விட வேண்டும். ஏனெனில் அது பயணிப்பவருக்கு மட்டுமல்ல சுமந்து செல்லும் அந்த பிராணிகளுக்கும் நாவரட்சியையும் சிரமத்தையும் ஏற்படுத்தும்.  இதையெல்லாம் உணர்த்தும் விதமாகத்தான் இந்த நபி அமைந்திருக்கிறது.

 

أردفني رسول اللهِ صلى الله عليه وسلم خلفه ذات يوم فأسر إلي حديثا لا أحدث به أحدا من الناس وكان أحب ما استتر به رسول اللهِ صلى الله عليه وسلم لحاجته هدفا أو حائش نخل قال فدخل حائطا لرجل من الأنصار فإذا جمل فلما رأى النبي صلى الله عليه وسلم حن وذرفت عيناه فأتاه النبي صلى الله عليه وسلم فمسح ذفراه فسكت فقال من رب هذا الجمل لمن هذا الجمل فجاء فتى من الأنصار فقال لي يا رسول اللهِ فقال أفلا تتقي الله في هذه البهيمة التي ملكك الله إياها فإنه شكا إلي أنك تجيعه وتدئبه .

அப்துல்லாஹ் இப்னு ஜஃபர் ரலி அவர்கள் கூறுகிறார்கள்: ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் அவர்கள் வாகனத்தில் என்னை அவர்களுக்குப் பின்னால் ஏற்றிக் கொண்டார்கள். அன்சாரிகளில் ஒரு மனிதரின் தோட்டத்தில் அவர்கள் நுழைந்தார்கள். அப்போது ஓர் ஒட்டகை. அது நபி அவர்களைக் கண்ட போது அனுங்கியதுஅதன் இரு கண்களும் கண்ணீர் வடித்தன. நபியவர்கள் அதனிடம் வந்து அதன் தலையைத் தடவிய போது அது அமைதியடைந்தது. 'இந்த ஒட்டகையின் சொந்தக்காரர் யார்? இவ்வொட்டகம் யாருக்குரியது?' என அவர்கள் கேட்க அன்சாரிகளைச் சேர்ந்த ஓர் இளைஞர் வந்து அல்லாஹ்வின் தூதரே! எனக்குரியது என்றார். 'அல்லாஹ் உமக்கு உரிமையாக்கியுள்ள இம்மிருகத்தின் விஷயத்தில் நீர் அல்லாஹ்வைப் பயப்படுவதில்லையாஏனெனில் நீர் அதை பசியில் போட்டு களைப்படையச்செய்வதாக அது என்னிடம் முறை யிட்டதுஎன்றார்கள் (அபூதாவூது ; 2549)

இப்படி கால்நடைகள் மீதும் உலகில் இருக்கிற எல்லா ஜீவராசிகள் மீதும் அன்புடன், இரக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதை நபி அவர்கள் தன் வாழ்வின் பலவேறு கட்டங்களில் நினைவுபடுத்தியிருக்கிறார்கள்.

 

இதுவரை நாம் கோடிட்டுக்காட்டிய நபிமொழிகளின் நிழலில் இன்றைக்கு வீர விளையாட்டு என்ற பெயரில் நடக்கிற ஜல்லிக்கட்டை ஆய்வு செய்தால் அது கூடுமா கூடாதா என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்.

 

இன்றைக்கு ஜல்லிக்கட்டை ஆதரிக்கின்ற அனைவரும் சொல்லக்கூடிய ஒரே காரணம் அது வீர விளையாட்டு என்பதும் அது தமிழனின் பாரம்பரியம் என்பதும் தான்.

 

ஆனால் இது வீர விளையாட்டு என்பதே முதலில் தவறான வாதம்! உண்மையில் வீரம் என்றால் தனி ஒருவராக மாட்டை களத்தில் சந்திக்க வேண்டும். நூற்றுக்கணக்கான பேர் சேர்த்து ஒரு மாட்டை விரட்டுவதும் அதன் மேல் பாய்வதும் அதன் வாளைப் பிடித்து இழுப்பதும் அதன் தலையைப் பிடித்து அழுத்துவதும் எப்படி வீரமாகும். இதற்குப் பெயர் வீரமல்ல. மிருக வதை.

 

மாட்டை நாங்கள் மதிக்கிறோம், அது எங்களுக்கு தெய்வம், அதை நாங்கள் எங்கள் வீட்டுப் பிள்ளைகள் போன்று கருதுகிறோம் என்றெல்லாம் பேசுகிறார்கள். ஆனால் 100 பேருக்கு மத்தியில் அதை அவிழ்த்து விட்டு அதை வதையும் செய்கிறார்கள் என்பது வேடிக்கையான விஷயம்.

 

அவைகள் எங்களின் குழந்தைகள் என்று சொல்பவர்கள், முன் பின் அறிமுகம் இல்லாத 100 பேர் இருக்கும் ஒரு குறுகிய இடத்தில் தங்கள் குழந்தையை அடைத்து வைத்து இந்த மாட்டை பிடிப்பது போல் வாலைப் பிடித்து இழுத்து தலையை பிடித்து இழுத்து, மேலே ஏறி மிதித்து விளையாட அனுமதிப்பீர்களா?

 

எனவே அவர்கள் சொல்வதற்கும் அவர்கள் செய்வதற்கும் சம்பந்தமே இல்லை என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.இதற்குப் பெயர் வீர விளையாட்டு அல்ல என்பதையும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

 

மட்டுமல்ல, ஒரு பொருள் எந்தந்த நோக்கங்களுக்காக படைக்கப்பட்டிருக்கிறதோ அந்தந்த நோக்கங்களுக்காகத் தான் அதைப் பயன்படுத்த வேண்டும். இல்லையென்றால் அதை முறையாகாது. குர்ஆனில் அல்லாஹ் கால்நடைகளின் பயன்கள் குறித்து பல்வேறு வசனங்களில் பேசுகிறான்.

 

وإن لكم في الأنعام لعبرة نسقيكم مما في بطونها ولكم فيها منافع كثيرة ومنها تأكلون وعليها وعلى الفلك تحملون )

நிச்சயமாக உங்களுக்கு (ஆடு, மாடு, ஒட்டகம் முதலிய) பிராணிகளில் ஒரு படிப்பினை இருக்கிறது. அவற்றின் வயிறுகளிலிருந்து (சுரக்கும் பாலை) நாம் உங்களுக்கு புகட்டுகிறோம்; இன்னும் அவற்றில் உங்களுக்கு நிறைய பயன்கள் இருக்கின்றன; அவற்றி(ன் மாமிசத்தி)லிருந்து நீங்கள் புசிக்கின்றீர்கள். மேலும் அவற்றின் மீதும், கப்பல்களிலும் நீங்கள் சுமக்கப்படுகின்றீர்கள். (அல்குர்ஆன் : 23; 21)

 

وَالْاَنْعَامَ خَلَقَهَا‌  لَـكُمْ فِيْهَا دِفْ ٴٌ وَّمَنَافِعُ وَمِنْهَا تَاْكُلُوْنَ‏

 

கால் நடைகளையும் அவனே படைத்தான்; அவற்றில் உங்களுக்குக் கத கதப்பு(ள்ள ஆடையனிகளு)ம் இன்னும் (பல) பலன்களும் இருக்கின்றன; அவற்றிலிருந்து நீங்கள் புசிக்கவும் செய்கிறீர்கள். (அல்குர்ஆன் : 16 ; 5)

 

وَلَكُمْ فِيْهَا جَمَالٌ حِيْنَ تُرِيْحُوْنَ وَحِيْنَ تَسْرَحُوْنَ

 

அவற்றை நீங்கள் மாலை நேரத்தில் (வீட்டுக்குத்) திரும்பி ஓட்டி வரும் போதும், காலை நேரத்தில் (மேய்ச்சலுக்காக) அவிழ்த்துவிடும் போதும், அவற்றில் உங்களுக்கு(ப் பொலிவும்) அழகுமிருக்கிறது. (அல்குர்ஆன் : 16 ; 6)

 

وَتَحْمِلُ اَثْقَالَـكُمْ اِلٰى بَلَدٍ لَّمْ تَكُوْنُوْا بٰلِغِيْهِ اِلَّا بِشِقِّ الْاَنْفُسِ‌ؕ اِنَّ رَبَّكُمْ لَرَءُوْفٌ رَّحِيْمٌۙ‏

 

மேலும், மிக்க கஷ்டத்துடனன்றி நீங்கள் சென்றடைய முடியாத ஊர்களுக்கு அவை உங்களுடைய சுமைகளைச் சுமந்து செல்கின்றன - நிச்சயமாக உங்களுடைய இறைவன் மிக இரக்கமுடையவன்; அன்பு மிக்கவன். (அல்குர்ஆன் : 16 ; 7)

 

وَّالْخَـيْلَ وَالْبِغَالَ وَالْحَمِيْرَ لِتَرْكَبُوْهَا وَزِيْنَةً‌ ؕ وَيَخْلُقُ مَا لَا تَعْلَمُوْنَ‏

 

இன்னும், குதிரைகள், கோவேறு கழுதைகள், கழுதைகள் ஆகியவற்றை நீங்கள் ஏறிச்செல்வதற்காகவும், அலங்காரமாகவும், (அவனே படைத்துள்ளான்;) இன்னும், நீங்கள் அறியாதவற்றையும் அவன் படைக்கிறான். (அல்குர்ஆன் : 16 ; 8)

 

 

இந்த வசனங்களை நாம் படித்தால் கால்நடைகளிலிருந்து நமக்கு கிடைக்கும் பயன்களை நாம் அறிந்து கொள்ளலாம். அதன் பாலைக் குடிப்பது, அதன் இறைச்சியை சாப்பிடுவது, அவைகளின் தோல்களினால் தயாரிக்கப்படுகின்ற ஆடைகளை அணிவது, அவைகளின் மீது பயணிப்பது, நம் சுமைகளை சுமக்க பயன்படுத்துவது. இதுபோன்ற விஷயங்களை இந்த வசனங்களின் மூலம் நாம் தெரிந்து கொள்ள முடியும்.

 

பயணிப்பவர்கள் கூட எப்போது பயணம் செய்ய வேண்டிய தேவை ஏற்படுகிறதோ அப்போது மட்டும் தான் அதன் மீது அமர வேண்டும். பயணிக்க வேண்டிய தேவை இல்லாத போதோ அல்லது வேறு காரணங்களுக்காக அதன் மீது அமர்வதை இஸ்லாம் தடுத்திருக்கிறது.

 

عن سهل بن معاذ بن أنس عن أبيه رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم أنه مر على قوم وهم وقوف على دواب لهم ورواحل فقال لهم اركبوها سالمة ودعوها سالمة ولا تتخذوها كراسي لأحاديثكم في الطرق والأسواق فرب مركوبة خير من راكبها وأكثر ذكرا لله منه .  أخرجه أحمد (15629

நபி அவர்கள் ஒரு கூட்டத்தை கடந்து சென்றார்கள்.அவர்கள் தங்கள் வாகனங்களின் மீது அமர்ந்திருந்தார்கள்.அப்போது நபி அவர்கள் அழகிய முறையில் உங்கள் வாகனங்களில் பயணம் செய்யுங்கள்.அழகிய முறையில் அதை விட்டு விடுங்கள்.பயணத்தின் இடையில் நீங்கள் பேசுவதற்காக அதை அமரும் நாற்காலிகளாக ஆக்கி விடாதீர்கள். ஏனென்றால் உங்களை விட உங்கள் வாகனங்கள் அதிகம் அல்லாஹ்வை திக்ர் செய்கின்றன என்றார்கள். {அஹ்மது ; 15629}  

கால்நடைகள் விஷயத்தில் இந்தளவு கட்டுப்பாடுகளை விதித்திருக்கிற இஸ்லாம் வீரத்தை வெளிப்படுத்துதல் என்ற பெயரில் அவைகளை வதை செய்வதை எந்த இடத்திலும் அனுமதிக்க வில்லை.

 

 

     

 

 


4 comments:

  1. தாங்களின் ஆக்கங்கள் அனைத்தும் அருமை. அல்லாஹ் அருள் புரியட்டும்!

    ReplyDelete
  2. அறுமையான வரிகள்

    ReplyDelete
  3. அறுமையான வரிகள்

    ReplyDelete