Pages

Pages

Thursday, January 21, 2021

குடியரசு தினம்

 

 


புத்தாண்டு பிறந்து அதன் முதல் மாதத்தின் இறுதியை நெருங்கிக் கொண்டிருக்கிறோம். நாடு தன்னுடைய 72 வது குடியரசு தின விழாவை விமர்சையாகக் கொண்டாடுவதற்கு ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறது. நம் நாட்டின் குடியரசு தினத்தை எதிர் பார்த்துக் கொண்டிருக்கிற இவ்வேளையில் குடியரசு என்றால் என்ன ? ஜனவரி 26 க்கும் குடியரசுக்கும் என்ன தொடர்பு ? இஸ்லாத்தின் பார்வையில் குடியரசை எப்படி பார்க்க வேண்டும் என்றெல்லாம் சிந்திக்க வேண்டிய தருணம் இது.

இந்தியாவில் சுமார் 200 ஆண்டுகளுக்கும் மேல் நீடித்து வந்த ஆங்கில ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில், தேசிய அளவிலும், மாநில அளவிலும், பல கழகங்களையும், புரட்சிகளையும், அகிம்சை வழியில் பலப் போராட்டங்களையும் நிகழ்த்தி தன்னுடைய குருதியையும், தேகங்களையும் தமது தாய் நாட்டிற்காக அர்பணித்த தேசத் தலைவர்களையும், வீரர்களையும், புரட்சியாளர்களையும் நினைவுக்கூரும் நாள், ‘குடியரசு தினம்ஆகும்.

ஆரம்ப காலத்தில் நமது மன்னர்கள் ஒற்றுமையாக இல்லாமல், இந்தியாவை சிறு சிறு மாநிலங்களாகப் பிரித்து ஆட்சி செய்து கொண்டிருந்ததால், வணிகம் செய்வதற்காக இந்தியாவில் நுழைந்த பிரிட்டிஷ்காரர்கள், படிப்படியாகத் தங்களுடைய ஆதிக்கத்தை ஏற்படுத்தி, இந்தியா முழுவதும் கொடுங்கோல் ஆட்சியை அரங்கேற்றினர். அத்தகைய கொடுங்கோல் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து, 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் இந்தியா விடுதலைப் பெற்றது. இந்திய விடுதலைக்குப் பிறகு, மக்களாட்சி மட்டுமே ஒரு நாட்டின் சிறப்பான வளர்ச்சிக்கு அடையலாம் எனக் கருதி, டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் தலைமையில் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் நிறை வேற்றப்பட்டு, 1950 ஜனவரி 26 முதல் குடியரசு தினமாகக் கொண்டாடப்படுகிறது.

ஆங்கிலேயர்களிடமிருந்து இந்தியாவிற்கு சுந்திரம் கிடைத்த நாளான ஆகஸ்ட் 15 ம் நாளை விட இந்த குடியரசு தினம் தான் முக்கியமானது. ஏனென்றால் மக்களின் விருப்பதற்கேற்ப தங்கள் தலைவரைத் தேர்ந் தெடுத்துக் கொள்வதற்கும் சரியான ஆட்சி இல்லையெனில் தேர்ந்தெடுத்த வரை நீக்கி விட்டு வேறொரு நல்ல தலைவரை தேர்ந்தெடுத்துக் கொள்வதற்குமான மக்களாட்சி முறை இந்தியாவில் உருவாக ஆரம்பித்த நாள் குடியரசு தினம் தான். சுதந்திரம் கிடைத்தாலும் மக்களாட்சி மலராமல் மன்னராட்சி நீடித்துக் கொண்டே இருந்திருந்தால் அந்த சுதந்திரம் கிடைத்ததற்கே அர்த்தம் இல்லாமல் போய் விடும். எனவே நம் நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் சுதந்திரமாக தங்களுக்கான தலைவரை தேர்ந்தெடுக்கும் உரிமை கிடைத்த ஜனவரி 26 ம் நாள் தான் உண்மையான சுதந்திர தினமாக இருக்க முடியும். அந்த வகையில் குடியரசு தினம்  நமக்கு மிக முக்கியமானது

குடியரசு என்பதன் பொருள் மக்களாட்சிஆகும். அதாவது, தேர்தல் மூலம் மக்கள் விரும்பிய ஆட்சியாளர்களைத் தேர்தேடுத்துக் கொள்ளும் முறைக்கு குடியாட்சி எனப்படுகிறது. மக்களுக்காக, மக்களுடைய மக்கள் அரசுஎன மிகச்சரியாக குடியரசு என்ற வார்த்தைக்கு இலக்கணம் வகுத்துத் தந்தவர், அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன். அத்தகைய மக்களுக்கான அரசை இந்தியாவில் ஏற்படுத்தினால் தான், இந்தியா முழு சுதந்திரம் பெற்ற நாடாக ஏற்றுக்கொள்ளப்படும் எனக் கருதி உருவாக்கப்பட்டது தான் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம்.

இந்த நேரத்தில் மக்களுக்கு ஆட்சி செய்யக்கூடிய தலைவர்களையும் அவர்களின் குணங்களையும் அசை போட்டுப் பார்ப்பது பொறுத்தமாக இருக்கும்.இன்றைக்குள்ள ஆட்சியாளர்கள் மக்களுக்காக எதையும் செய்ய மாட்டார்கள். அவர்கள் அனைவரிடத்திலும் சுயநலப்போக்கு தான் இருக்கிறதே தவிர மக்கள் நலனில் அக்கரை செலுத்துகின்ற எண்ணம் இல்லை. ஆட்சியைப் பிடிக்க அல்லது இருக்கிற ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள அல்லது தேர்தலில் வெற்றி பெற, இப்படி சுயநலம் கலக்காமல் எந்தக் காரியத்தையும் அவர்களிடத்தில் பார்க்க முடியாது.

ஒவ்வொரு ஏழையின் குடும்பத்திற்கும் வருடத்திற்கு 72000 ரூபாய் தரப்படும்,நீட் தேர்வு ரத்து செய்யப்படும், விவசாயக்கடன் ரத்து செய்யப்படும், விவசாயிகளுக்கு நல்லதொரு நியாயம் கிடைக்க வழிவகை செய்யப்படும்  பெண்களுக்கு தொழில் தொடங்க 50000 ரூபாய் தரப்படும், ஹைட்ரோகார்பன், மீத்தேன், திட்டங்களை கைவிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். முஸ்லிம் சிறைகைதிகளை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றெல்லாம் இப்போது தேர்தலுக்காக அனைத்துக் கட்சிகளும் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுக் கொண்டிருக்கிறது. இது போன்ற தேர்தல் அறிக்கைகள் அனைத்தும் தேர்தல் வெற்றி என்ற சுயநலத்திற்காகத் தானே தவிர மக்கள் நலனுக்காக அல்ல என்பது நாம் அறிந்த விஷயம்.

ஆனால் ஆட்சியாளர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இஸ்லாம் சொல்லுகின்ற முதல் அடையாளமும்  தகுதியும் அவர் சுயநலம் பாராமல்  மக்களுக்காக மக்கள் நலனுக்காக ஆட்சி செய்பவராக இருக்க வேண்டும். மக்கள் மீது இரக்கமுள்ளவராக இருக்க வேண்டும்.

قال رسول الله -صلى الله عليه وسلم-: "اللهم من ولي من أمر أمتي شيئًا فشق عليهم فاشقق عليه، ومن ولي من أمر أمتي شيئا فرفق بهم فارفق به" (رواه مسلم

இறைவா யார் என் சமூகத்தின் ஒரு காரியத்திற்கு பொறுப்பேற்று அவர்களை சிரமப்படுத்துகிறாரோ அவருக்கு நீயும் சிரமத்தை கொடு. யார் என் சமூகத்தின் ஒரு காரியத்திற்கு பொறுப்பேற்று அவர்கள் மீது கருணையோடு நடந்து கொள்கிறாரோ அவர் மீது நீயும் கருணை காட்டு என்று நபி அவர்கள் சொன்னார்கள். (முஸ்லிம் ; 1828)

மக்கள் மீது இரக்கமும் மக்களுக்கு  நலவை நாடுவதும் தான் உண்மையான ஆட்சியாளர்களின் பண்பாகும். ஆட்சியாளர்கள் மட்டுமல்ல அனைவருக்கும் அந்த பண்பு இருக்க வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது.

عن جرير بن عبدالله - رضى الله عنه - قال: "بايعتُ رسول الله - صلى الله عليه وسلم - على إقام الصلاة وإيتاء الزكاة والنصح لكل مسلم

,தொழுகையை நிலைநாட்டுவது,  ஜகாத்தைக்  கொடுப்பது, அனைவருக்கும் நலவை நாடுவது இவற்றின் மீது நான் நபியிடம் உறுதிப் பிரமானம் எடுத்துக் கொண்டேன் என்று ஜரீர் ரலி அவர்கள் கூறுகிறார்கள். (புகாரி ; 1401)

ويُذكر أن جرير بن عبد الله البجلي رضي الله عنه حين بايع النبي عليه الصلاة والسلام على النصح لكل مسلم، أنه اشترى فرسًا من شخص بدراهم، فلما اشتراه وذهب به وجد أنه يساوي أكثر، فرجع إلى البائع وقال له: إن فرسك يساوي أكثر، فأعطاه ما يرى أنها قيمته، فانصرف وجرَّب الفرس فإذا به يجده يساوي أكثر مما أعطاه أخيرًا، فرجع إليه وقال له: إنَّ فرسك يساوي أكثر فأعطاه ما يرى أنها قيمته، وكذلك مرَّة ثالثةً حتَّى بلغ من مائتي درهم إلى ثمانِ مائة درهمٍ

ஜரீர் பின் அப்துல்லா ரலி அவர்கள் ஒருவரிடமிருந்து ஒரு குறிப்பிட்ட தொகைக்கு குதிரை ஒன்றை வாங்கினார்கள். வாங்கி விட்டு வீட்டுக்கு வந்து விட்டார்கள். வந்த பிறகு, தான், கொடுத்த தொகையை விட அதிக விலைக்கு இந்த குதிரை விற்கப்படும் என்பதை உணர்ந்த ஜரீர்  ரலி அவர்கள், மீண்டும் அந்த வியாபாரியை சந்தித்து உன் குதிரை நான் கொடுத்த விலையை விட அதிகமாக விலை போகும் என்று கருதுகிறேன் என்று சொல்லி, மீண்டும் ஒரு தொகையை அவரிடத்தில் கொடுத்து விட்டு வந்தார்கள். வீட்டுக்கு வந்த பிறகு மறுபடியும் தான் கொடுத்த தொகையை விட இன்னும் அதிகமாக இந்த குதிரை விலை போகும் என்பதை உணர்ந்த அவர்கள், மீண்டும் மூன்றாவது தடவையாக அந்த வியாபாரியை சந்தித்து அவரிடத்தில் உன் குதிரை நான் கொடுத்த தொகையை விட இன்னும் அதிகமாக விலை போகும் என்று சொல்லி, மீண்டும் ஒரு தொகையை அவரிடத்தில் கொடுத்து வந்தார்கள். இப்படியே அந்த குதிரை வியாபாரி 200 திர்ஹம் என்று விலை நிர்ணயித்த அந்த குதிரைக்கு 800 திர்ஹம் வரை அவருக்கு ஜரீர் ரலி அவர்கள் கொடுத்து விட்டு வந்தார்கள். (ஷரஹு ரியாளுஸ்ஸாலிஹீன்)

சாதாரணமாக, சொன்ன விலையை விட குறைத்து குறைத்து அடிமாட்டு விலைக்கு வாங்குவது தான் இன்றைய நடைமுறை. ஆனால் விற்கக்கூடியவரே குறைந்து விலை சொல்லியிருக்கிற பொழுது பொருளின் தரத்தைப் பார்த்து இதை விட அதிகமாக இதற்கு தொகை கொடுக்கலாம் என்பதை சிந்தித்து அதையும் கொடுத்தார்கள் என்றால்,  பிறருக்கு நலவை நாடுவதின் மீது அவர்களுக்கிருந்த அதீத அக்கறையை இந்த நிகழ்வு நமக்கு படம் பிடித்துக் காட்டுகிறது.

குர்ஆனில் அல்லாஹ் ஒரு வரலாற்றை சொல்லிக் காட்டுகிறான். ஹள்ரத் தாவூது அலை அவர்களிடம் ஒரு வழக்கு வருகிறது.

أن رجلين دخلا على داود، أحدهما صاحب حرث والآخر صاحب غنم، فقال صاحب الحرث: إن هذا أرسل غنمه في حرثي، فلم يُبق من حرثي شيئا، فقال له داود: اذهب فإن الغنم كلها لك، فقضى بذلك داود، ومرّ صاحب الغنم بسليمان، فأخبره بالذي قضى به داود، فدخل سليمان على داود فقالا يا نبيّ الله إن القضاء سوى الذي قضيت، فقال: كيف؟ قال سليمان: إن الحرث لا يخفى على صاحبه ما يخرج منه في كل عام، فله من صاحب الغنم أن يبيع من أولادها وأصوافها وأشعارها حتى يستوفي ثمن الحرث، فإن الغنم لها نسل في كلّ عام، فقال داود: قد أصبت، القضاء كما قضيت، ففهَّمها الله سليمان

தாவூது நபியிடம் இருவர் வந்தனர். ஒருவரின் நிலத்தில் மற்றொருவரின் ஆடுகள் இரவில் மேய்ந்து பயிர்களை அழித்து விட்டதாக வழக்குரைத்தனர். தாவூது நபி வழக்கை விசாரித்துஅழிந்த பயிர்களின் இழப்பும் பயிர்களை அழித்த ஆடுகளின் விலையும் சமமாக இருந்ததால் நிலத்திற்குரியவர் இழப்பிற்கு ஈடாக ஆடுகளைப் பெற்றுக் கொள்ளுமாறு தீர்ப்பு அளித்தார்கள்.

தீர்ப்பைப் பெற்றுத் திரும்பிய இருவரும் வழியில் தாவூது நபியின் மகன் சுலைமான் நபியை சந்தித்தனர். அவர்களின் வழக்கையும் தாவூது நபி அவர்கள் வழங்கிய தீர்ப்பையும் சுலைமான் நபி அவர்களிடம் கூறினர். அப்பொழுது சுலைமான் நபி அவர்களுக்கு சுமார் 13 வயது. தந்தை தாவூது நபி அவர்களின் தீர்ப்பினும் தெளிவான எளிய தீர்ப்பு இருப்பதாக சுலைமான் நபி அவர்கள் அறிவித்தார்கள். இச்செய்தியை அறிந்த தாவூது நபி மகனை அழைத்து தக்க தீர்ப்பு என்ன வென்று வினவினார்கள்

"ஆடுகள் பயிரை அழித்து விட்டதாக வழக்கு. ஆடுகளுக்கு சொந்தக்காரன் அந்நிலத்தில் விவசாயம் செய்து கதிர் அறுத்து விளைச்சலை நிலத்துக்கு உரியவரிடம் கொடுக்க வேண்டும். அவ்வாறு விளைச்சலை ஆடுகளுக்கு உரியவன் கொடுக்கும் வரை ஆடுகளை விவசாயி வளர்த்து ஆடுகளின் பாலைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஆடுகள் ஈனும் குட்டிகளையும் திரும்ப ஒப்படைக்கும் வரையில் நிலத்துக்குரியவன் வளர்த்து பயனைப் பெற்றுக்கொள்ள வேண்டும்'' என்று கூறினார்கள். அதைக்கேட்ட தாவூது நபி அலை அவர்கள் இது  தான் சரியான தீர்ப்பு என்று கூறினார்கள். (தஃப்ஸீர் தப்ரீ)

இந்தத் தீர்ப்பால் வழக்குரைத்த இருவருக்கும் பாதிப்பில்லாமல் இழப்பீடு சரி செய்யப்பட்டது. அழிந்த பயிரின் விளைச்சலை நிலத்துக்குச் சொந்தக்காரன் பெறுகிறான். ஆட்டுக்குச் சொந்தக்காரனும் ஆடுகளை இழந்துவிடாமல் மீண்டும் பெறுகிறான்.

எனவே நீதிபதிகள் ஒரு பக்க சார்பாக தீர்ப்பை வழங்கி அதன் மூலம் இன்னொரு பக்கம் முற்றிலுமாக பாதிக்கப்படுவதை இஸ்லாம் விரும்ப வில்லை. எனவே தீர்ப்புகள் ஒரு நியாயத்தின் அடிப்படையில் வழங்கப்பட்டாலும், நியாயத்தையும் தாண்டி தொலை நோக்கு சிந்தனையும் இருக்க வேண்டும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.அவர்கள் வழங்கிய இந்த தீர்ப்பின் காரணமாக கொஞ்ச  காலத்தில் இருவருக்குமே எந்த வித பாதிப்பும் இல்லாமல் இழந்ததைப் பெற்றுக் கொண்டார்கள்.

இன்றைக்கு அளிக்கப்படுகின்ற பெரும்பாலான தீர்ப்புகள் ஒருபக்கம் முழுமையான பாதிப்பை தரக்கூடியதாகத் தான் இருக்கிறது. இன்னும் சொல்ல வேண்டுமென்றால் இன்றைக்குள்ள தீர்ப்புகளில் பெரும்பாலும் நிரபராதிகள் தான் தண்டிக்கப் படுகிறார்கள். ஆனால் குற்றவாளியாக இருக்கக்கூடியவன் கூட பிற்காலத்தில் பாதிப்பை சந்தித்து விடக்கூடாது என்கிற கண்ணோட்டத்தோடு அவனுக்கும் நலவை நாடுகிற வகையில் தீர்ப்பளிப்பது தான் இஸ்லாத்தின் வழிகாட்டுதலாக இருக்கிறது.

فقد روى مالك في الموطأ عن عبد الله بن دينار قال: خرج عمر بن الخطاب من الليل فسمع امرأة تقول

تطاول هذا الليل واسود جانبه                  وأرقني أن لا خليل ألاعبـه

فوالله لولا الله أني أراقبـــه              لحرك من هذا السرير جوانبه

فسأل عمر ابنته حفصة: كم أكثر ما تصبر المرأة عن زوجها؟ فقالت: ستة أشهر، أو أربعة أشهر، فقال عمر: لا أحبس أحداً من الجيوش أكثر من ذلك

ஹஜ்ரத் உமர் ரலி அவர்கள் இரவு நேரத்திலே வெளியே உலா வந்து கொண்டிருந் தார்கள். அங்கே ஒரு பெண் தன் கணவனை பிரிந்த சோகத்தை வெளிப்படுத்தும் முகமாக பாடல்களை பாடிக் கொண்டிருந்தாள். அவளுடைய கணவரை ஒரு போர்க்களத்திற்காக வெளியூருக்கு உமர் ரலி அவர்கள் அனுப்பி வைத்திருந்தார் கள். அந்தப் பெண்ணுடைய மனமுடைந்த சோகமான அந்த வார்த்தைகளைக் கேட்டு அந்தப் பெண்ணுடைய கஷ்டத்தை உணர்ந்த ஹஜ்ரத் உமர் ரலி அவர்கள், தன்னுடைய மகள் ஹப்ஸா ரலி அவரிடத்தில் வந்து ஒரு பெண் தன் கணவனை பிரிந்து எவ்வளவு காலங்கள் பொறுமையாக இருக்க முடியும் என்று கேட்டார்கள். அவர்கள் நான்கு மாதங்கள் அல்லது ஆறு மாதங்கள் என்று சொன்னார்கள். மகளின் அந்த வார்த்தையைக் கேட்ட பிறகு இனிமேல் ஆறு மாதங்களுக்கு அதிகமாக யாரையும் தன் மனைவியோடு சேராமல் தடுத்து வைக்க மாட்டேன் என்று சொன்னார்கள். (முஅத்தா)

 

كان يقول: (إنّي والله لأكون كالسراج، يحرق نفسه ويضيء للناس

தன்னை அழித்து மக்களுக்கு வெளிச்சத்தை தருகின்ற விளக்கைப் போன்று நான் இருக்க வேண்டும் என்று உமர் ரலி அவர்கள் கூறினார்கள்.

فبعث إليه عدي بن حاتم، و لبيد بن ربيعة رضي الله عنهما، بل عزم عمر -رضي الله عنه- على أن يرتحل بنفسه إلى كلّ بلاد المسلمين، ويطّلِع على أحوال أهلها بنفسه، وكان ممّا قاله: (لئن سلَّمني الله، لأدعنّ أرامل العراق لا يحتجنَ إلى رجلٍ بعدي)

ஹள்ரத் உமர் ரலி அவர்கள் மதீனாவில் மட்டுமல்ல, மதீனாவைச் சுற்றி பக்கத்தில், தூரத்தில் இருக்கிற அத்தனை ஊர்களிலுள்ள மக்களின் மீதும் கவனம் செலுத்துபவர்களாக இருந்தார்கள். அவ்வப்போது சிரியா மற்றும் இராக் நாட்டிற்கு ஆட்களை அனுப்பி அங்குள்ள மக்களின் நிலைகளை கேட்டு அறிவார்கள். இருந்தாலும் எல்லா ஊர்களுக்கும் தானே பயணம் செய்து அந்த ஊர் மக்களுடைய நிலவரங்களை தெரிந்து கொள்ள வேண்டுமென்று ஆசைப்படுவார் கள். ஒரு தடவை அவர்கள், அல்லாஹ் எனக்கு ஸலாமத்தைக் கொடுத்திருந்தால் இராக்கில் இருக்கிற அனாதைகள் எவரையும் யாரிடத்திலும் தேவையாக நான் விடமாட்டேன் என்று கூறினார்கள்.

فقد قال ابن عُلَيّة في قول بكر المزني: "ما فاق أبو بكر رضي الله عنه أصحابَ رسول الله صلى الله عليه وسلم بصوم ولا صلاة، ولكن بشيءٍ كان في قلبه"، قال: "الَّذي كان في قلبه؛ الحبُّ لله عزَّ وجلَّ، والنَّصيحةُ في خلقه"

ஹஜரத் அபூபக்கர் சித்தீக் ரலி அவர்கள் தொழுகையின் மூலமாகவோ நோன்பின் மூலமாகவோ நபியுடைய தோழர்களை விட அவர்கள் உயர வில்லை. மாறாக அவர்களது உள்ளத்தில் இருந்த ஒரு விஷயத்தின் மூலமாகத்தான் எல்லா நபித்தோழர்களை விட உயர்ந்த நிலைக்கு சென்றார்கள். அதில் ஒன்று அல்லாஹ்வை நேசித்தல். இன்னொன்று எல்லா படைப்பினங்களுக்கும் நலவை நாடுதல்.

எல்லா மக்களுக்கு நலவை நாடுதல் என்பதை பொதுவாக இஸ்லாம் ஊக்கப்படுத்துகிறது. குறிப்பாக மக்களின் மீது ஆட்சி செய்யக்கூடியவர்களுக்கு அவசியம் இருக்க வேண்டிய ஒரு குணம் அது.


No comments:

Post a Comment