Pages

Pages

Monday, March 7, 2022

நன்றி பொறுமை

 


الحمد لله والصلوة والسلام علي رسول الله سيدنا محمد واله وصحبه اجمعين اما بعد قال الله تعالي في القران العظيم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் வல்லோன் அல்லாஹ்வின் திருநாமத்தால் ஆரம்பம் செய்கிறேன்.சாந்தியும் சமாதானமும் எங்கள் உயிரிலும் மேலான கண்மனி நாயகம் ரசூலுல்லாஹி ஸல் அவர்களின் மீதும் பரிசுத்தமான அவர்களின் குடும்பத்தார் மீது உன்னதமான அவர்களின் தோழர்கள் மீதும் உண்டாகட்டுமாக.


மாணவர்களின் பேச்சுத்திறனை வளர்க்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த மன்றத்தில் உண்மையான முஃமின் என்ற தலைப்பில் பேசுவதற்காக நான் வந்திருக்கிறேன்.

நாம் வாழுகிற வாழ்க்கை வெற்றி தோல்வி, லாப நஷ்டம், இன்பம் துன்பம் என அத்தனை அம்சங்களும் கலந்த வாழ்க்கை.மனித வாழ்வில் மகிழ்ச்சியும் கவலையும் மாறி மாறி வரும். எந்த மகிழ்ச்சியையும் பார்க்காமல் கவலைகளில் மட்டுமே மூழ்கிப்போனவனும் கிடையாது. எந்த கவலைகளும் இல்லாமல் மகிழ்ச்சியில் மட்டுமே மூழ்கிப் போனவனும் கிடையாது. இரண்டும் கலந்த கலவை தான் மனித வாழ்க்கை. 

கவலைகள் இல்லாத எந்த உயிரும் உலகத்துல கிடையாது. பிறப்பு முதல் இறப்பு வரை மனித வாழ்க்கையில் கவலைகள் இருந்து கொண்டே தான் இருக்கும்.பள்ளிப்பருவ குழந்தைகளுக்கு ஸ்கூலுக்கு போகனுமேன்னு கவல,ஸ்கூலுக்கு போனா படிக்கனுமேன்னு கவல,வீட்டுக்கு வந்தா ஹோம் ஒர்க் பண்ணனுமேன்னு கவல,எக்ஸாம் வந்தா அதுல நல்ல மார்க் வாங்கனுமேன்னு கவல,படிப்ப முடிச்சா நல்ல வேல கிடைக்கனு மேன்னு கவல,நல்ல லேல கிடைச்சா வாழ்க்கைல செட்டில் ஆகனுமேன்னு கவல,செட்டில் ஆயிட்டா கல்யாணம் பண்ணனுமேன்னு கவல,கல்யாணம் பண்ணா குழந்தை பெறக்கனுமேன்னு கவல,குழந்தை பிறந்தா அத நல்ல வளர்க்கனுமேன்னு கவல,அப்றம் அவங்கள படிக்க வைக்கனும் அவங்க நல்ல மார்க் வாங்கனும் நல்ல வேலைக்கு போகனும் அவங்களுக்கு கல்யாணம் பண்ணணும் இப்படி கவலைகள் மரணம் வரை நம்மை விடாது துறத்திக் கொண்டே இருக்கும்.

இறுதி வரை வாழ்க்கை இப்படியே இருக்க வேண்டும் என்ற கவலை சிலருக்கு. இறுதி வரை வாழ்க்கை இப்படியே இருந்து விடுமோ என்ற கவலை சிலருக்கு. கவலையின் விதங்கள் அதன் ரூபங்கள் மாறுபடலாமே தவிர கவலையை விட்டும் உலகில் யாரும் தப்ப முடியாது. கவலைக்கான காரணங்கள் மனிதருக்கு மனிதர் வித்தியாசப்படலாமே தவிர கவலை இல்லாத மனிதனைப் பார்க்க முடியாது.

ஆனால் இப்படி மனித வாழ்வில் கவலைகள் அதிகம் இருந்தாலும் அப்படியே இறைவன் விட்டு விடுவதில்லை.அவ்வப்போது சந்தோஷங் களையும் தருகிறான்.என்னடா இப்டி ஆயிடுச்சேன்னு நினைக்கிறதுக்குள்ள ஒரு சந்தோஷமான விஷயம் நடக்கும். அந்த சந்தோஷத்துல இருந்து வெளிய வர்ரதுக்குள்ள ஒரு கவலையான விஷயம் நடந்துரும்.இப்படி கவலையும் சந்தோஷமும் மாறி மாறி வரும். 

இப்படிப்பட்ட நிலையில் நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை சிந்திக்க கடமைப்பட்டிருக்கிறோம்.சந்தோஷம் வரும் போது எப்படி நடக்க வேண்டும்.கவலை வரும் போது எப்படி நடக்க வேண்டும் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். சந்தோஷம் வருகிற போது நாம் துள்ளிக் குதிக்கிறோம், கவலை வருகிற போது துவண்டு விடுகிறோம். இரண்டுமே தவறானது என்று இஸ்லாம் சொல்கிறது. சந்தோஷத்தில் நிதானத்தை கடைபிடித்து அல்லாஹ்வுக்கு ஷுக்ர் செய்ய வேண்டும். கவலையில் பொறுமையை கடைபிடிக்க வேண்டும்.இது தான் ஒரு முஸ்லிமின் தன்மை.

நபி ஸல் அவர்கள் கூறுகிறார்கள் ;  ஒரு முஃமினுடைய விஷயம் எனக்கு ஆச்சரியமாக உள்ளது.அவனுக்கு நடக்கிற எல்லா விஷயமும் அவனுக்கு நல்லதாக ஆகி விடுகிறது.அவனுக்கு ஏதாவது சந்தோஷமான விஷயம் நடந்தால் அல்லாஹ்வுக்கு ஷுக்ர் செய்கிறான்.அதுவும் அவனுக்கு நல்லதாக ஆகி விடுகிறது.அவனுக்கு ஏதாவது துன்பம் ஏற்பட்டால் அப்போது பொறுமையாக இருக்கிறான்.அதுவும் அவனுக்கு நல்லதாக ஆகி விடுகிறது என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

சந்தோஷம் வந்தால் அல்லாஹ்வுக்கு ஷுக்ர் செய்ய வேண்டும்.கவலை வந்தால் பொறுமையாக இருக்க வேண்டும்.அவன் தான் உண்மையான முஸ்லிம் உண்மையான முஃமின் என்று இந்த ஹதீஸின் மூலம் நபி ஸல் அவர்கள் கூறுகிறார்கள்.

ஒரு பெண்மனி நபி ஸல் அவர்களிடம் வந்து எனக்கு வலிப்பு நோய் இருக்கிறது எனக்காக துஆ செய்யுங்கள் என்று கூறினாள்.


வலிப்பு என்பது எவ்ளோ பெரிய நோய்.அதுவும் பெண்களுக்கு இருந்தால் எவ்வளவு சிரமமாக இருக்கும்.ஆனால் அந்த சிரமத்தையும் பொறுமையோடு தாங்கிக் கொண்ட காரணத்தினால் தான் சொர்க்கத்து பெண்மனியாக அவர்கள் ஆனார்கள்.எனவே நாமும் அதிகம் பொறுமையை கடைபிடிக்க வேண்டும்.அல்லாஹ்வுக்கு அதிகம் ஷுக்ர் செய்ய வேண்டும்.அல்லாஹ் இந்த இரண்டு தன்மைகளையும் நமக்கு தருவானாக



No comments:

Post a Comment