Pages

Pages

Monday, March 7, 2022

ஸ்கூல் & மதரஸா

 நபர் : 1 


பள்ளி மாணவர்

1, அஸ்ஸலாமு அலைக்கும் என்னப்பா ........... நல்ல இருக்கியா

2, அப்றம் எங்க போயிட்டு இருக்க

3, இல்லப்பா வரல.வந்து அப்டி என்னத்த கத்துக்க போறோம்.

4, அதுலாம் சரி தான், எங்க பக்கத்து வீட்ல ஒரு பையன் மதரஸாவுக்கு போறான். ஆனா வருஷக்கனக்கா அலிஃப் பா தா தான் ஓதிக்கிட்டு இருக்கான். குர்ஆன் தொடங்குற மாதிரியே தெரில. அதான் அப்டி சொன்னேன்.

5, நீ சொல்றதுலாம் சரி தான். ஆனா லீவு எடுக்காம ஒழுங்கா வர்ர புள்ளைங்க கூட குர்ஆன் சீக்கிரம் எடுக்கிறதில்லையே.அதான் மதரஸாவுல ஒழுங்கா ஓதிக் கொடுக்குறதில்லன்னு நினைச்சேன்.

6, ஏன்பா லேட் ஆகுது.

7, தஜ்வீதா அப்டினா என்னப்பா

8, ஏன் தஜ்வீதோட தான் குர்ஆன் ஓதனுமா. தஜ்வீது இல்லாம ஓதுனா என்ன

9, என்னப்பா சொல்ற

10, அல்லாஹூ.... எவ்ளோ பெரிய ஆபத்து இது.

11, புள்ளைங்கள விடு இன்னைக்கு நிறைய பெரியவங்களே இப்டித்தான ஓதுறாங்க அதுக்கு என்ன பன்றது.

12, நீ சொல்றத பார்த்தா நிறைய பேறோட தொழுக கூடாம போயிடும் போல இருக்கே.

13, ஆமா ஆமா. அந்த கவல வந்தா தான் அத கத்துக்கனுன்னு எண்ணம் வரும். அது சரி.... மதரஸாவுக்கு வர்ர புள்ளைங்க சீக்கிரம் குர்ஆன் முடிக்கிறதில்லன்னு சில பேர் கம்லைன்ட் பன்றாங்களே. அதுக்கு என்ன சொல்ற.

14, என்னப்பா இப்டி சொல்லிட்ட. குர்ஆன் முடிக்கிறது முக்கியந்தான.

15, அதுவும் சரி தான்.

16, ஓ இதான் விஷயமா. நான் கூட மதரஸால ஒழுங்கா ஓதிக் கொடுக்கிறதில்லன்னு நினைச்சேன்.இப்பத்தான் புரியுது.

17, ஓ, கே இன்ஷா அல்லாஹ், இன்னைக்கு நிறைய பேரன்ஸ் இப்டித்தான் தப்பா புரிஞ்சிக்கிறாங்க. மதரஸாவுல ஒழுங்கா ஓதிக் கொடுக்குறதில்ல. என் புள்ள அதே பாடத்துல இருக்கான். இன்னும் அலிஃப் பா தா தாண்டல, குர்ஆன் தொடங்கல, குர்ஆன் முடிக்கல அப்டி இப்டின்னு சொல்லி மதரஸாவ தப்பா நினைச்சிக்கிறாங்க. இங்க என்ன நடக்குது. ஏன் இப்டி ஆகுது. இதுக்கு யார் காரணம், நாமலும் புள்ளைங்கள கரைக்டா மதரஸாவுக்கு அனுப்பனுமே அப்டி எந்த பேரன்ஸும் நினைக்கிறதில்ல. அதனால இனிமேலாச்சும் மதரஸாவ நல்ல புரிஞ்சி மார்க்க கல்வியோட அருமைய நல்ல விளங்கி புள்ளைங்கள ஒழுங்கா அனுப்புங்க.அல்லாஹ் நம் எல்லோருக்கும் சத்தியத்தை புரிந்து அதன் படி நடக்க கிருபை செய்வானாக



நபர்  : 2 

மதரஸா மாணவர்
1, வ அலைக்குமுஸ் ஸலாம் நல்ல இருக்கேண்ணே
2, மதரஸாவுக்குத்தான். ஏன் நீங்க மதரஸாவுக்கு வரலயா ?
3, என்னண்ணே இப்டி சொல்லிட்டீங்க.குர்ஆன தஜ்வீதோட அழகான முறைல சொல்லித் தராங்க,தொழுக சொல்லித்தராங்க, மார்க்க ஒழுக்கங்கள் சொல்லித்தராங்க, இஸ்லாமிய சட்டங்கள் சொல்லித்தராங்க. துஆக்கள் சொல்லித்தராங்க,ஹதீஸ் சொல்லித்தராங்க, முன்னோர்கள் வரலாறு சொல்லித்தராங்க. இப்டி எவ்ளோ நல்ல விஷயம் இருக்கு.
4, ஓ அவனா! அவன் ஒழுங்க மதரஸாவுக்கு வந்தா தானா. வாரத்துல 2 நாள் தான் மதரஸாவுக்கே வருவான்.இப்டி ஓயாம லீடு எடுத்துட்டே இருந்தா எப்டி ஒழுங்கா ஓத முடியும். பெத்தவங்களும் அதுல அக்கர எடுத்துக்க மாட்டுக்காங்க. ஸ்கூலுக்கு மட்டும் கரைக்டா அனுப்பிர்ராங்க. ஆனா மதரஸாவுக்கு அனுப்புறதில்ல. எங்கையாவது கெஸ்ட் வீட்டுக்கு போனா மதரஸாவுக்கு லீவு. எந்த கெஸ்டாவது அவங்க வீட்டுக்கு வந்தாலும் மதரஸாவுக்கு லீவு, கடைக்கு போனா மதரஸாவுக்கு லீவு,ட்ரஸ் வாங்கனுன்னா மதரஸாவுக்கு லீவு,ஷூ வாங்கனுன்னா மதரஸாவுக்கு லீவு,எதாவது புராஜக்ட் பொருள் வாங்கனுன்னா மதரஸாவுக்கு லீவு,இத விட பெரிய கொடும. வீட்ல டீ போட லேட் ஆயிட்டாலும் மதரஸாவுக்கு லீவு. இப்டி எதுக்கெடுத்தாலும் மதரஸாவுக்கு லீடு போட்டுக்கிட்டே இருந்தா புள்ளைங்க எப்டி ஓதுவாங்க. மதரஸாவுக்கு ஒழுங்கா கரைக்டா அனுப்புறதில்ல. ஆனா என் புள்ள ஒழுங்கா ஓத மாட்டுக்கான் இன்னும் குர்ஆன் தொடங்க மாட்டுக்கான்னு கம்லைன்ட் மட்டும் பன்னுவாங்க. லீவு எடுக்காம மதரஸாவுக்கு ஒழுங்கா வந்தா தான நல்ல ஓதுவான்.
5, மதரஸால லாம் நல்ல தான் ஓதிக் கொடுக்குறாங்க.பெத்தவங்க தான் புள்ளைங்கள ஒழுங்கா அனுப்புறதில்ல. வீட்ல என்ன பிரச்சனனாலும் ஸ்கூலுக்கு அனுப்பிர்ராங்க. ஆனா மதரஸாவுக்கு அவனே போறன்னு சொன்னா கூட பரவா இல்லம்மா நாளைக்கு போயிக்கலான்னு சொல்லிர்ராங்க. இப்டி பெத்தவங்க இருந்தா புள்ளைங்க எப்டி ஓதுவாங்க. 2 வது... புள்ளைங்க ஏன் குர்ஆன் எடுக்க லேட் ஆகுது தெரியுமா ?
6, இங்க குர்ஆன் சும்மா ஓதிக் கொடுக்குறதில்ல. தஜ்வீதோட ஓதிக் கொடுக்குறாங்க.
7, தஜ்வீதுன்னா குர்ஆன தவறில்லாம, எப்டி இறங்குச்சோ, எப்டி ஸல் அவங்க ஓதுனாங்களோ அப்டி கரைக்டா ஓதுறது.
8, என்னண்ணே இப்டி கேட்டுட்டீங்க. தஜ்வீத் சாதாரண விஷயமில்ல. தஜ்வீத் இல்லாம குர்ஆன் ஓதுனா பாவமாயிடும்.அர்த்தம் மாறிப்போயிடும்.அப்டி ஓதும் போது சில நேரங்கள்ள தொழுக கூட கூடாம போயிடும்.
9, ஆமாண்ணே, இப்ப உதாரணமா குர்ஆன்ல நிறைய இடங்கள்ள خلق னு வருது. خلق னா இறைவன் படைத்தான்னு அர்த்தம். ஒருத்தன் தஜ்வீத் தெரியாம அந்த எழுத்த மாத்தி حلق னு படிச்சா இறைவன் சிறைத்தான்னு அரத்தம் வந்துடும். அதே வார்த்தைய هلك  னு படிச்சா இறைவன் அழிந்து போனான்னு அர்த்தம் வந்துடும்.இப்டிலாம் அர்த்தம் மாறாம கரைக்டா ஓதனுன்னு தான் தஜ்வீத் சொல்லிக் கொடுக்குறாங்க.
10, ஆமா சாதாரண விஷயமில்ல. ரொம்ப ஆபத்தான விஷயம், ஆனா இன்னைக்கி யாரும் அத புரிஞ்சிக்கிறதில்ல. என் புள்ள சீக்கிரமா குர்ஆன் ஆரம்பிக்கனுன்னு நினைக்கிறாங்களே தவிர சரியா ஓதுறானான்னு யாரும் பாக்குறதும் இல்ல, யோசிக்கிறதும் இல்ல. 
11, அப்டி ஓதுனா அது பாவந்தான். அவங்க அத சரி பன்னித்தான் ஆகனும்.
12, ஆமா என்ன பன்றது. எல்லாருக்கும் அந்த கவல வரனும். அல்லாஹ்வோட வேதத்த ஒதுறோம். அத தப்பில்லாம ஓதனும் அப்டின்னு எல்லாரும் நினைக்கனும்.
13, எதுக்குப்பா குர்ஆன் முடிக்கனும். முடிச்சு என்ன பன்ன போறாங்க
14, குர்ஆன் முடிக்கிறது முக்கியம்னு யாருப்பா சொன்னா. இன்னைக்கு நிறைய பேரன்ஸ் அப்டித்தான் நினைச்சிக்கிறாங்க. என் புள்ள குர்ஆன் ஆரம்பிச்சி ரொம்ப நாள் ஆச்சி. ஆனா இன்னும் குர்ஆன் முடிக்கல இன்னும் குர்ஆன் முடிக்கலன்னு சொல்றாங்க. நான் கேக்குறேன்... குர்ஆன அறகுறயா ஓதி முடிக்கிறது முக்கியமா. இல்ல குர்ஆன் முறையா ஓத தெரியிறது முக்கியமா. குர்ஆன் முறையா ஓதத் தெரியிறது தான முக்கியம்.குர்ஆன் முறையா ஓதத் தெரிஞ்சிகிட்டா எப்ப வேணாலும் முடிச்சிக்கலாமே
15 இதுலாம் இன்னைக்குள்ள பேரன்ஸுக்கு புரியாதனால தான் என் புள்ள ரொம்ப நாளா ஓதுறான். குர்ஆன் எடுக்குறதில்ல, எடுத்தாலும் சீக்கிரமா முடிக்கிறதில்ல. அப்டின்னும் கம்லைன்ட் பன்றாங்க.
16, புரிஞ்சிடுச்சுல்ல, இன்னைலயிருந்து மதரஸா கரைக்டா வந்துடுங்க ஓ கே வா 




No comments:

Post a Comment