Pages

Pages

Monday, March 7, 2022

பிறந்த நாள்

 நபர் : 1 


ஆயிஷா சனோஃபர் 1

(ஆயிஷா – ஆஃப்ரின்)

1, அஸ்ஸலாமு அலைக்கும் என்னம்மா ஆஃப்ரின் இன்னைக்கு மதரஸால உன்ன காணோம். மதரஸாக்கு வராம எங்க போயிட்ட

2, என்னது பெர்த் டேவா........

3, இல்ல..... பெர்த் டேலா கொண்டாடக் கூடாதே

4, முதல்ல பிறந்த நாள சந்தோஷமான நாளுன்னு சொல்றதே பெரிய தப்பு. கரைக்டா சொல்றதா இருந்தா பிறந்த நாளுங்குறது உண்மைல  துக்க நாளுன்னு தான் சொல்லனும்.

5, யார் என்ன சொன்னாலும் பரவா இல்ல. சொல்ல வேண்டியத சொல்லித்தான ஆவனும், ஏன்னா பழிக்கக்கூடியவர்களின் பழிப்புக்கு அஞ்ச மாட்டார்கள். அவங்க தான் எனக்கு பிடிச்சவங்கன்னு அல்லாஹ் குர்ஆன்ல சொல்றான். அதனால நான் யாருக்கும் பயப்பட மாட்டேன். 

6, பிறந்த நாள் துக்க நாளுன்னு. 

7, எல்லாரும் கொண்டாடுறதனால அது கொண்டாட்ட நாளா ஆயிடுமா

8, லாஜிக் தான கேக்குற. இப்ப சொல்றேன் கேளு. உன் கிட்ட ஒரு ஆயிறம் ரூபாய் இருக்கு.நீ ரொம்ப நாளா அத செலவழிக்காம அப்டியே பத்தரமா பாதுகாத்து வச்சிருக்க. ஆனா திடீர்னு அதுல இருந்து ஒரு 100 ரூபா காணாம போயிடுச்சின்னா நீ கவலப்படுவியா சந்தோஷப்படுவியா

9, இரு சொல்றேன்.அல்லாஹ் உனக்கு ஒரு 50 வயச கொடுத்துருக்கான்னு வச்சிக்கோ

10, சரி சரி கவலப்படாத 100 வயச கொடுத்திருக்கான். (அல்லாஹ் நம் எல்லாத்தையும் ஆரோக்கியத்தோட நீண்ட காலம் வாழச்செய்வானாக)

11, சரிம்மா கோவப்படாத உனக்கும் துஆ செய்றேன். நம்ம ஆஃப்ரினுக்கு அல்லாஹுத்தஆலா அழகான கணவன கொடுத்து நல்ல ஸாலிஹான புள்ளைங்கள கொடுத்து நல்ல வசதியான வாழ்க்கைய கொடுத்து பேரன் பேத்திகளோட சந்தோஷமா வாழச் செய்வானாக

12, சரி நான விஷயத்துக்கு வரேன். உனக்கு அல்லாஹ் 100 வயச கொடுத்துருக்கான். அல்லாஹ் கொடுத்த அந்த 100 வயசுல ஒரு வயசு கம்மியாயிடுச்சின்னா அய்யோ ஒரு வயசு போயிடுச்சேன்னு ரூம் போட்டு அழுவுவியா இல்ல ஜாலியா அத செலப்ரேட் பன்னுவியா

13, ஆ... இப்ப சொல்லு. பிறந்த நாளுங்குறது என்ன

14, ஒரு வயசு முடிஞ்சிச்சில்ல. அப்ப அல்லாஹ் உனக்கு எழுதுன ஆயுள்ள இருந்து ஒரு வருஷம் கம்மியாயிடுச்சின்னு அர்த்தம். ஒரு வயசு கம்மியானதுக்கு கவலப்படத்தான செய்யனும்.

15, என்ன ஓமா... நான் சொல்றது புரிஞ்சுதா இல்லையா.

16, இப்ப சொல்லு. பிறந்த நாள் சந்தோஷமான நாளா இல்ல துக்க நாளா

17, அப்ப இனிமே பிறந்த நாள்ள என்ன செய்யனும்

18, ஆ கரைக்டா புரிஞ்சிகிட்ட.

19, அம்மாட்ட போய் சொல்லு, பிறந்த நாள்ளாம் கொண்டாடக்கூடாதுன்னு. 


ஆயிஷா and  ஷிஃபானா


20, என்ன ஆன்டி கூப்டீங்களா 

21, ஆமா ஆன்டி. பிறந்த நாள் சந்தோஷப்பட வேண்டிய நாளில்ல. நமக்கு அல்லாஹ் கொடுத்த ஆயுள்ள ஒரு வருஷம் கம்மியாயிடுச்சின்னு கவலப்படனும். அது மட்டுமில்லாம இஸ்லாத்திலயும் பிறந்த நாள் கொண்டாடுறதுக்கு அனுமதியில்ல. 

22, எல்லோரும் கொண்டாடுறதனால அது சரின்னு ஆயிடுமா ஆன்டி.

23, இஸ்லாம் என்பது அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் காட்டித் தந்த வழிமுறைகள். இது நபி (ஸல்) அவங்க காலத்தோடு முழுமை பெற்று விட்டது. அல்லாஹ் குர்ஆன்ல அல்யவ்ம அக்மல்து லகும் தீனகும்  இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன் அப்டின்னு சொல்றான். அதனால இஸ்லாம் மார்க்கம் நபி ஸல் அவங்க காலத்தோட கம்லிட் ஆயிடுச்சி. எது நல்லது எது கெட்டது. எத செய்யனும் எத செய்யக்கூடாது எல்லாத்தையும்  நபி ஸல் அவங்க நமக்கு தெளிவா சொலித்தந்துட்டு போயிட்டாங்க. அதத்தான் நாம எடுத்துக்கனும். நாமாக ஒன்னு செஞ்சோம் அப்டின்னு சொன்னா அது மார்க்கமும் கிடையாது. அப்டி செஞ்சா அது குற்றமாவும் ஆயிடும். 

அந்த அடிப்படைல நபி (ஸல்) அவங்க தன்னோட வாழ்நாள்ள தன் பிறந்த நாளையோ, தன் பிள்ளைங்களோட பிறந்த நாளையோ கொண்டாடுனது இல்ல. பிறரையும் கொண்டாடும் படி சொன்னதும் இல்ல.. நபி (ஸல்) அவங்கள எல்லா விஷயத்துலேயும் நூத்துக்கு நூறு பின்பற்றி வந்த நபித்தோழர்கள் யாரும் பிறந்த நாள் கொண்டாடுனது இல்ல. அதுமட்டுமா ஹள்ரத் உமர் ரலி அவங்க காலத்துல இஸ்லாமிய வருஷப்பிறப்ப எங்கிருந்து ஆரம்பிக்கலான்னு ஒரு ஆலோசன நடந்துச்சி. அதுல பல பேர் பல யோசன சொன்னாங்க. அப்ப நபி ஸல் அவங்க பிறந்த நாள்ளயிருந்து வருஷத்த தொடங்கலாம் அப்டின்னு யோசன சொன்ன சமயத்துல அது வேண்டாம். அப்டி பிறந்த நாள்ள இருந்து வருஷத்த தொடங்குறது மாற்றார் கலாச்சாரம். யார் மாற்றார் கலாச்சாரத்த பின்பற்று கிறார்களோ அவர் நம்மைச் சார்ந்தவறல்ல என்ற நபி ஸல் அவங்க சொன்னத சுட்டிக்காட்டி உமர் ரலி அவங்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க. அதனால பிறந்த நாள் கொண்டாடுறது நம்ம கலாச்சாரம் இல்ல.அத நாமும் செஞ்சா நம்ம ஈமானுக்கே ஆபத்தாயிடும்.

24, ஆமீன்.

25, ஒன்னும் பன்னத்தேவ இல்ல. வேண்ணா ஸதகா செய்யுங்க, நோன்பு வைய்யுங்க.நபி ஸல் அவங்க பிறந்த தினமான திங்கட்கிழம நோன்பு வச்சிருக்காங்க. ஸதகா நமக்கு வர  இருக்கிற எல்லா முஸீபத்தையும் போக்கிடும். அதுமட்டுமில்லாம யாராவது இல்லாதவங்களுக்கு ஸதகா கொடுத்து என் புள்ளைக்காக துஆ செய்யுங்கன்னு சொல்லுங்க. அவங்க துஆ செஞ்சாவே போதும். உங்க புள்ளையோட வாழ்க்கை சிறப்பாயிடும்.இன்ஷா அல்லாஹ். 

26, ஆமீன்.



நபர்  : 2 

ஆஃப்ரின் மகள் 2
(ஆஃப்ரின்  - ஆயிஷா)
1, வ அலைக்குமுஸ்ஸலாம். நாளைக்கு.... என் தம்பிக்கு பெர்த் டே அதான் புது ட்ரஸ் போட்டு எல்லாத்தையும் கூப்புட்டு கேக் வெட்டி செலப்ரேட் பன்னலான்னு இருக்கோம். அதான் கடைக்கு போய் புது ட்ரஸ்ஸு, கேக்கு, ரிப்பனு எல்லாம் வாங்கிட்டு வந்தோம். அதான் மதரஸாக்கு வரல.
2, அத ஏன்டி பெர்த் டேவான்னு இப்டி இழுக்க்க்குற.
3, ஏண்டி பெர்த் டே கொண்டாடுனா என்ன. பிறந்த நாள் வரும் போது சந்தோஷமா புது ட்ரஸ்  போட்டு கேக் வெட்டி செலப்ரேட் பண்றோம். இதுல என்ன தப்பு இருக்கு.
4, என்னடி சொல்ற..... பிறந்த நாள் துக்க நாளா. பாத்து பேசுடி. நம்ம ஊர் தாய்மாருங்க எல்லாரும் இங்க தான் உக்காந்துருக்காங்க. பெர்த்டேவ செலப்ரேட் பன்றதுல அவங்கள மிஞ்சிக்க ஆளில்ல. அவங்க உக்காந்திருக்கும் போது துக்க நாளு அது இதுன்னு பேசிட்டு இருக்க. அப்றம் எதாச்சும் சொல்லிட போறாங்க. பாத்துக்கோ.
5, என்ன சொல்லப்போற
6, ஏய் சும்மா இருடி. நான் சொல்லிட்டு இருக்கேன், மறுபடியும் மறுபடியும் அப்டியே சொல்லிட்டு இருக்க. உலகத்துல எல்லாரும் அத கிராண்டா கொண்டாடுறாங்க. நீ என்னமோ புதுசா வந்து பேசுற.
7, அது சரி.... பிறந்த நாளு துக்க நாளு துக்க நாளுன்னு சொல்றியே.... அதுக்கு எதாச்சும் லாஜிக் இருக்கா.லாஜிக் இருந்தா சொல்லு நான் ஏத்துக்குறேன்.
சரி, ஊம்
8, கவல தான் படுவேன். நான் மட்டுமா எல்லாரும் கவலப்படத்தான் செய்வாங்க. நாம வச்சிருக்கிற ஒன்னு காணாம போயிட்டா கவலப்படாம என்ன சந்தோஷப்படவா செய்வாங்க. அது சரி...... இதுக்கும் பிறந்த நாளுக்கு என்ன சம்பந்தம்.
9, என்னது 50 வயசா...........
10 எனக்குலாம் துஆ இல்லயா.
11, ஆமீன் ஆமீன் ஆமீன்.
12, ஒரு வயசு போச்சின்னா கவலத்தான் படனும்.எப்டி சந்தோஷப்பட முடியும்.
13, ஒரு வயசு முடிஞ்சி அடுத்த வயசு ஆரம்பமாகுதுன்னு அர்த்தம்.
14, ஆமா..... 
15, ஆம் புரிஞ்சிச்சு புரிஞ்சிச்சு. நம்ம ஆயுள்ள ஒரு வருஷம் போனதுன நெனச்சி கவலப்படத்தான் செய்யனும். 
16, துக்க நாளு தான். 
17, ஒரு வருஷம் போயிடுச்சேன்னு ரூம் போட்டு அழனும். ஓகே வா
18, அதுலாம் சரி தான். இப்ப வாங்குன கேக்க என்ன பன்றது. அம்மாட்ட என்ன சொல்றது.

ஆஃப்ரின் and ஷிஃபானா
19, அம்மா பிறந்த நாள்ளா கொண்டாடக்கூடாதாம்.
20. ஆமாம்மா அது சந்தோஷமான நாள் இல்ல. துக்க நாளு. 
21, நம்ம ஆயிஷா தாம்மா சொன்னா.


நபர் : 3 

ஷிஃபானா அம்மா 3
1, என்னது கொண்டாடக்கூடாதா
2, அடிப்பாவி என்ன வார்த்தடி சொல்ற. நாளைக்கு நம்ம புள்ளைக்கு பொறந்த நாளு, சந்தோஷமா கொண்டாடலான்னு இருக்கோம். இப்ப வந்து துக்க நாளு அது இதுன்னு அபசகுணமா பேசிட்டு இருக்க. உனக்கு என்ன புத்தி கித்தி கெட்டுப் போச்சா. ஆமா இதுலாம் உனக்கு யாரு சொன்னா.
3, என்னது ஆயிஷாவா அவ வீட்டுக்குத்தான் நான் இன்வைட் பன்னிட்டனே பின்ன எதுக்கு இப்டிலாம் சொன்னா.அவள கூப்டு வா நான் கேக்குறேன்.


ஷிஃபானா and ஆயிஷா
4, வாம்மா ஆயிஷா என் புள்ளைட்ட என்னன்னலாமோ சொல்லிருக்க.
5, என்னது அனுமதியில்லயா எல்லாரும் கொண்டாடுறாங்களே 
6, சரி அப்டி இஸ்லாம் என்ன சொல்லுது.
7, ஓ இவ்ளோ விஷயம் இருக்கா. நான் கூட என்னமோன்னு நினச்சேன். எல்லாரும் பிறந்த நாள் கொண்டாடுறாங்க. நாமலும் கொண்டாடலான்னு சொல்லித்தான் வருஷா வருஷம் அது கிரேண்டா செலப்ரேட் பன்னிட்டு இருக்கோம். இப்பத்தான் அது  எவ்ளோ பெரிய தப்புன்னு தெரியுது. இப்டி  நல்லது நல்லதுன்னு நெனச்சிகிட்டு எவ்ளோ விஷயத்த நாம செய்றோம். அல்லாஹ் தான் பாதுகாக்கனும்.
8, சரி அப்ப பிறந்த நாள் வந்தா என்ன பன்னனும்.
9, இன்ஷா அல்லாஹ் கண்டிப்பா செய்றேன்.
10, எனவே அன்புத்தாய்மார்களே நான் தெளிவா விளங்கிட்டேன். நீங்களும் நல்லா புரிஞ்சிக்கோங்க. பிறந்த நாள் பிறந்த நாளுன்னு சொல்லி அதையும் இதையும் வாங்கி காச வீணாக்காதீங்க. அல்லாஹ்வோட கோபத்துக்கு ஆளாயிடாதீங்க. நம்மள மாதிரி பெண்களுக்கு பெரிய மைனஸே என்னன்னா மார்க்கத்த படிக்கிறதில்ல. படிக்கிறதுக்கு முயற்சி பன்றதும் இல்ல. அதனால தான் மார்க்கத்துல இல்லாத எல்லாத்தையும் செஞ்சிட்டு இருக்கோம்.
நபி ஸல் அவங்க காலத்துல பெண்கள் மார்க்கத்த தெரிஞ்சிக்குறதுக்கு அவ்ளோ ஆர்வமா இருந்துருக்காங்க. சில பெண்கள் நபி ஸல் அவங்கள்ட வந்து யாரசூலல்லாஹ் நீங்க எப்போமே ஆண்களுக்கு மட்டும் பயான் செய்றீங்க.எல்லா நல்ல விஷயத்தையும் சொல்லிக் கொடுக்குறீங்க. எங்களுக்கும் சொல்லிக் கொடுக்க கூடாதா அப்டின்னு கேட்டாங்க. அதுக்கு பிறகு நபி ஸல் அவங்க பெண்களுக்கும் ஒரு தனி நாள ஒதுக்கி பயான் செய்ய ஆரம்பிச்சாங். அந்தளவு அன்னைக்குள்ள பெண்கள் ஆர்வமா இருந்தாங்க. 
மார்க்கத்த தெரிஞ்சிக்கிறதுல மட்டுமில்ல நன்மைய செய்றதுலேயும் ரொம்ப ரொம்ர ஆர்வமா இருந்தாங்க. ஒரு தடவ சில பெண்கள் நபி ஸல் அவங்கள்ட வந்து யாரசூலல்லாஹ் ஆண்கள் நிறைய நன்மைகள் செய்றாங்க. ஜும்ஆ தொழுகைல கலந்துக்குறாங்க. ஜனாஸா தொழுகைல கலந்துக்குறாங்க. போர்க்களத்துல கலந்துக்குறாங்க. எங்களுக்கு அதுலா அனுமதியில்ல, அப்ப நாங்க அவங்கள விட நன்மைல குறஞ்சி போய் விடுவோமே அப்டின்னு வருத்தப்பட்டு சொன்னாங்க. அப்ப நபி ஸல் அவங்க. கவலப்படாதீங்க. நீங்க உங்க வீட்ல உங்க கணவன்மார்களுக்கும் உங்க பிள்ளைகளுக்கும் செய்ய வேண்டிய கடமைகள சரியான முறையில செய்யுங்க.அப்டி செஞ்சா ஆண்கள் வெளிய போய் என்ன நன்மைகள சம்பாதிக்கிறாங்களோ அதே மாதிரி நன்ம உங்களுக்கும் கிடைக்கும்னு சொன்னாங்க.
அன்புத் தாய்மார்களே நம்மோட மிகப்பெரிய பொறுப்பு என்னன்னா நம் பிள்ளைங்கள சரியா வளர்க்கனும் அவங்களுக்கு சரியா மார்க்க விஷயத்த கொடுத்து வளர்க்கனும். அதுக்கு முதல்ல நாம மார்க்கத்த சரியா புரிஞ்சிக்கனும். அதனால மார்க்கத்த சரியா தெரிஞ்சி செய்யுங்க. இஸ்லாம் எதை செய்ய வேண்டும் என்று சொல்கிறதோ அத மட்டும் செய்யுங்க. மார்க்கம் சொல்லாத விஷயத்த செய்யாதீங்க. அல்லாஹுத்தஆலா மார்க்கத்தை சரியா புரிந்து அமல் செய்வதற்கு தவ்ஃபீக் செய்வானாக   


No comments:

Post a Comment