Pages

Pages

Monday, March 7, 2022

டியூஷன்

 நபர் : 1 


டியூஷன் 1

1, என்ன ................... எங்க போற

2, என்னது மதரஸாவுக்கா ? 

3, எங்கடா நான் லாம் மதரஸா பக்கம் போயே ரொம்ப நாளாச்சு. 

4, பிராக்டிஸ் இருக்கு, ஸ்பெஷல் கிளாஸ் இருக்கு,ஹிந்தி டியூஷன் இருக்கு, இங்கிலிஷ் டியூஷன் இருக்கு.ஸைன்ஸ் டியூஷன் இருக்கு. எல்லாம் முடிச்சி வர்ரதுக்கே நைட் 9 மணி ஆயிடும்.இதுல எங்க மதரஸாவுக்கு போறது.

5, ஆமா என்ன பன்றது.

6, ஸ்கூல்ல எல்லாம் சொல்லித்தர்ர தான் செய்வாங்க

7, கொஞ்சம் நல்ல தெரிஞ்சிக்கலாம்ல

8, அப்டி இல்லப்பா, அந்த ஸப்சக்ட்ல எதாவது டவ்டுன்னா டியூஷன் டீச்சர்ட கேட்டுக்கலாம்ல அதான்

9, என்னப்பா இப்டி குன்டக்க மண்டக்க கேள்வி கேட்ட நான் எப்டி பதில் சொல்றது.

10, என்னடா இப்டி பயங்காட்டுற

11, அல்லாஹு...... இவ்ளோ பிரச்சன இருக்கா. இதுலாம் தெரியாம போச்சே. இருந்தாலும் என்ன பன்றது. வீட்ல அம்மா போவச் சொல்றாங்களே.

12, ஆமா அதுலா இருக்கட்டும் நீ படிக்கிறதே இல்லயா.

13, அப்ப நீ டியூஷன்லா போறதில்லயா

14, டியூஷன் போகாம எப்டி நல்ல மார்க் வாங்க முடியும் ?

15, ஆனா இன்னைக்கு நிறைய மார்க்க தான முக்கியமா பாக்குறாங்க. ஸ்கூலுக்கு போனா அங்கேயும்  நிறைய மார்க் வாங்கனும் நிறைய மார்க் வாங்கனும்னு சொல்றாங்க. அங்க தான் டார்ச்சன்னு வீட்டுக்கு வந்தா வீட்லயும் நிறைய மார்க் வாங்கனும் நிறைய மார்க் வாங்கனுன்னு அத விட டார்ச்சர் பன்றாங்க. 

16, மார்க்கு மார்க்குன்னு இப்டி எல்லாரும் டார்ச்சர் பன்றதனால தான் இன்னைக்கு ரிஸல்ட் வரும் போதுலாம் பசங்களோட தற்கொலை செய்தியும் சேர்த்தே வருது.

17, ஆமா ஆமா இன்னைக்குள்ள பேரன்ஸுகளுக்கு அவங்க புள்ளைங்களோட உயிர விட மார்க் தான் பெருசா போச்சு.

18, புள்ளைங்கள ஒரு அளவுக்கு மேல கஷ்டப்படுத்தாதீங்க.எங்கள ஃபிரியா விடுங்க. நாங்க மார்க் வாங்குறமோ இல்லையோ அல்லாஹ்வோட கிருபையால எங்களால முடிஞ்ச அளவு படிச்சு நல்ல வேலைக்கு போய் உங்கள வச்சு காப்பாத்துவோம். இன்ஷா அல்லாஹ்.

19, நம் பெற்றோர்கள் நன்கு புரிந்திருப்பார்கள் என்று நினைக்கிறோம். அல்லாஹ் அருள் புரிவானாக.  



நபர்  : 2 

டியூஷன் 2
1, மணி 5 ஆயிடுச்சி, அதான் மதரஸாவுக்கு போயிட்டு இருக்கேன்
2, ஆமா, அத ஏன்டா பூகம்பமே வந்த மாதிரி இவ்ளோ அதிர்ச்சியா கேக்குற. ஏன் நீ மதரஸாவுக்குலாம் போறதே இல்லயா ?
3, என்னது மதரஸாவுக்கு போறதே இல்லயா ? அப்ப என்ன பன்னுவ.
4, என்னது நைட் 9 மணியா ?
5, அது சரி ஹிந்தி டியூஷன் போனுங்குற, இங்கிலிஷ் டியூஷன் போனுங்குற, ஸைன்ஸ் டியூஷன் போனுங்குற. அப்ப இந்த ஸப்சக்ட்லாம் உங்க ஸ்கூல்ல சொல்லித் தர்ரதே இல்லயா.ஸ்கூல்ல அப்டி என்னத்த தான் சொல்லித் தர்ராங்க
6, பின்ன எதுக்கு டியூஷனுக்கு போற
7, அப்ப ஸ்கூல்ல நல்ல சொல்லித்தர்ரதில்ல அப்டித்தான
8, அப்ப ஸ்கூல்ல எந்த டவுட்டுக்கும் பதில் சொல்ல மாட்டாங்களா
9, பின்ன என்னடா ஸ்கூல்லயே நல்ல சொல்லித்தராங்கன்னா டியூஷன் போவக்கூடாது. டியூஷன்ல தான் நல்ல சொல்லித் தராங்கன்னா ஸ்கூலுக்கு போவக்கூடாது. எதுக்கு ஸ்கூலுக்கும் போயிட்டு டியூஷனுக்கு போயிட்டு காச வேஸ்ட் பன்றீங்க. அதுமட்டுமில்லாம காலைல 8 மணிக்கு ஸ்கூலுக்கு போயிட்டு சாய்ங்காலம் 4 மணிக்கு வீட்டுக்கு வற்றீங்க.அப்றம் பிராக்டிஸ், ஸ்பெஷல் கிளாஸ், அந்த டியூஷன் இந்த டியூஷன். இப்டியே நெட் 9 மணி வரைக்கும் படிக்கிறீங்க. மறுபடியும் வீட்டுக்கு போய் ஹோம் ஒர்க் பன்றீங்க. இப்டியே நாள் ஃபுல்லா படிச்சிகிட்டே இருந்தா மனசளவுல பாதிக்கப்பட்டு மென்டலா ஆயிடுவீங்கடா.
10, ஆமா உனக்கு தெரியாதா ? கொஞ்சங்கூட ரெஸ்ட் இல்லாம ஓய்வில்லாம ஒரேயடியா படிச்சிகிட்டே இருக்குறதனால தான் இன்னைக்கு சின்ன வயசுலயே இரத்தக்கொதிப்பு, பிரஷ்ஷர், மனநோய்.இப்டி ஏகப்பட்ட நோய் வருது. இதுவே முத்திடுச்சின்னா பைத்தியம் கூட புடிச்சிடுன்னு மனோதத்துவ டாக்டர்கள் சொல்றாங்க.
11, வீட்ல அம்மாக்களுக்கு வேற வேலயே இல்ல. ஒரே படி படின்னு போட்டு டார்ச்சர் பன்னுவாங்க.
12, நானும் படிக்கத்தான் செய்றேன்
13, டியூஷன்லா போறதில்ல. ஸ்கூல்ல இருந்து என்ன படிக்கிறியோ அதே போதும். ரொம்ப டென்ஷன் எடுத்துக்க வேண்டாம்னு எங்க உம்மா சொல்லிட்டாங்க.
14, மார்க்க வாங்கி நாம என்ன பன்ன போறோம். 2 வது நான் மார்க்குக்காக படிக்கல. அறிவ வளக்குறதுக்காக தான் படிக்கிறேன்.
15, இதாச்சும் பரவா இல்ல. ஒரு பையன் நல்ல படிச்சு 10 th ல 499 மார்க் வாங்கிருக்கான். ஆனா அவங்க அப்பா 10 th ல 500 மார்க் தான. மீதி ஒரு மார்க் எங்க போச்சுன்னு அவன போட்டு திட்டிருக்காரு. இப்டியும் பேரன்ஸ் இருக்கத்தான் செய்றாங்க என்ன பன்றது.
16, ஆமா கரக்டா சொன்ன இன்னைக்கு அதிகமான தற்கொலைக்கு காரணமே இந்த மார்க் தான். இன்னைக்குள்ள பேரன்ஸுகளும் அத புரிஞ்சிக்கிறதே இல்ல. இதுல ரொம்ப வேதனையான விஷயம் என்னன்னா நம்ம இஸ்லாமிய பேரன்ஸுங்களே அப்டித்தான் இருக்காங்க. மார்க் குறஞ்சு போச்சுனா சரிமா பரவா இல்ல. அல்லாஹ்வோட நாட்டம் அது தான்.நீ கவல படாத. இன்ஷா அல்லாஹ் அடுத்த தடவ முயற்சி பன்னி நிறைய மார்க் வாங்கிக்கலாம்னு பேரன்ஸ் தான் புள்ளைங்களுக்கு ஆறுதல் சொல்லனும். ஆனா இன்னைக்கு அப்டி எத்தன பேரன்ஸ் புள்ளைங்களுக்கு ஆறுதல் சொல்றாங்க.
17, இன்னைக்குள்ள பேரன்ஸ பாத்து நான் ஒன்னு கேக்குறேன். ஒரே மார்க்கு மார்க்குன்னு புள்ளைங்க போட்டு பாடா படுத்துறீங்களே... நல்ல மார்க் எடுத்த எத்தன பேரு இன்னைக்கு நல்ல வேலைய இருக்காங்க சொல்லுங்க பார்ப்போம். தமிழ் நாட்டுலயே ஃபர்ஸ்ட் வந்தாலும் அல்லாஹ்வோட நாட்டம் இருந்தா தான் நல்ல வேல கிடைக்கும். அத முதல்ல புரிஞ்சுக்கோங்க. 
18, நம் பெற்றோர்கள் நன்கு புரிந்திருப்பார்கள் என்று நினைக்கிறோம். அல்லாஹ் அருள் புரிவானாக   



No comments:

Post a Comment