Pages

Pages

Monday, March 7, 2022

ஹிஜாப்

 நபர்  : 1 


1 ''ஏய் நிஸா   ஹவ் ஆர் யூ?'' எப்டி இருக்க ? எங்க கல்யாணத்துக்கு வந்தியா ? உன்ன பார்த்து எவ்ளோ நாளா ஆச்சி.உங்க வீட்ல எல்லோரும் நல்லா இருக்காங்களா ? 


2 அது என்னமோ தெரில எனக்கு புர்காவ பாத்தாவே புடிக்க மாட்டேங்குது. அத போடுறதுக்கே எனக்கு ஒரு மாதிரியா இருக்குது. 

          

3 அதுலாம் கரைக்டு தான் இருந்தாலும் எனக்கு  என்னமோ  இந்த பர்தா மேல இஷ்டமே இல்ல.


4 வீட்ல எவ்ளவோ ட்ரஸ் இருக்கு. விதவிதமா சேல இருக்கு. ரக ரகமா சுடிதார் இருக்கு. ஜீனஸ் டீ ஷர்ட் இருக்கு. அதுலா இப்டி போட்டு வந்தா தான நல்லா இருக்கும். இப்டி இழுத்து மூடிட்டு வந்தா நம்ம போட்ற ட்ரஸ் எப்டி தெரியும்!!! 

  

5 என்னப்பா நீ அந்த காலத்துலயே இருக்க. அந்த காலத்துல தான் அப்டி இருந்தாங்க.இப்ப நாம 2019 ல இருக்கோம். இப்ப வந்து உடம்ப மறைக்க அத மறைக்கன்னு சொல்லிட்டு இருக்க.இந்த புர்காலாம் நல்லவா இருக்கு. இப்டி ட்ரஸ் போட்டா தான் பாக்க நல்லா இருக்கும்.அது மட்டுமில்லாம இன்னைக்கு இதான் ஃபேஷன்.


6 மார்க்கம் முக்கியம் தான் இருந்தாலும் அந்த பாரு. ஒவ்வொருத்தங்களும் என்ன அழகா ட்ரஸ் போட்டு கல்யாணத்து வந்து ஃபோட்டாக்கு போஸ் கொடுக்குறாங்க.இந்த மாதிரி ட்ரஸ் போட்டா தான நாமலும் ஜாலியா என்ஜாய் பன்ன முடியும்.இப்டிலாம் புர்கா போட்டு வந்தா என்ன பன்ன முடியும்.....


7 அதுலாம் சரி தான்.. நாம கருப்பா அசிங்கமா இருந்தா புர்கா போட்டு மறைக்கலாம்.நாம தான் சிகப்பா அழகா இருக்கும்போது ஏன் புர்கா போடனும்? பார்த்து ரசிக்கத்தானே அழகு?''


8 நீ சொல்றதுலாம் ஓகே தாம்மா ஆனா புர்கா நம்ம சுதந்திரத்த பறிச்சி நம்மல அடிம படுத்துற மாதிரிலோ இருக்குது எந்த காரியத்தையும் ஃபிரியா செய்ய முடியலயே 


9 சொல்லு


10 நீ சொல்றத பாத்தா புர்கா போடுறது தான் சரின்னு தோனுது. இருந்தாலும் இப்டியே ட்ரஸ் போட்டு பழகிடுச்சி. ரண்டாவது இந்த மாதிரி  கொழுத்துற வெயில்ல இப்டி புர்காவ போட்டு நடக்குறதுக்கு ரொம்ப கஷ்டமா இருக்குதே. இந்த கடுமையான வெயில்ல இந்த ட்ரஸ்ஸ போட்டே இருக்க முடியல இதுல புர்காவ போட்டு எப்டி இருக்குறது?  


11 நீ இதுலா சொல்லும் போது எனக்கும் கொஞ்சம் அல்லாஹ்வோட பயம் வருது புர்கா போடனும்னு தோனுது. இருந்தாலும்  முன்ன  பின்ன புர்கா போட்டு பழக்கமில்ல.  புதுசா  போட  ஒரு மாதிரி இருக்கு அதான் வேற ஒன்னுமில்ல’12 சரி சரி திட்டாத எனக்கு நல்லவே விளங்கிடுச்சி.இருந்தாலும் இந்த புர்கால வேற எதும் நன்மைகள் இருந்தா சொல்லு.எனக்கும் கேக்குறதுக்கு இன்ட்ரஸ்டிங்கா இருக்குது.நம்ம ஊட்டி மக்களும் புரிஞ்சிக்குவாங்க.


13 சொல்லு சொல்லு


14 ''அடடா.. புர்காவில் இவ்வளவு நன்மைகள் இருக்கிறதா? இது புரியாமல் இவ்வளவு நாள் இருந்துட்டேனே. புர்காவை விரும்பி பல பெண்கள் இஸ்லாத்தில் இணையும் போது முஸ்லிமாக பிறந்த நான் புர்கா அணியாமல் இருக்கலாமா? இதோ இப்போதே சென்று இந்த கண்றாவியை எல்லாம் கழட்டிப் போட்டுவிட்டு கண்ணியமான புர்காவை அணியப்போகிறேன்.



15 இன்ஷா அல்லாஹ் இனி நம் உதகை மக்களும் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு தங்கள் சேலைகளையும் தங்கள் நகைகளையும் காட்டி தங்கள் மானத்தை இழக்காமல் புர்கா அணிந்து கண்ணியமாக வருவார்கள் என்று நம்புகிறோம். அல்லாஹ் நம் அனைவருக்கும் ஒழுக்கமான வாழ்வைத் தருவானாக! 

 

நபர் : 2 


1 ஐ அம் ''ஃபைன். நான் நல்ல இருக்கேன்.எங்க வீட்ல எல்லாரும் நல்லா இருக்காங்க. அல்ஹம்து லில்லாஹ்.நீ எப்டி இருக்க? அது சரி…  அஸ்ஸலாமு அலைக்கும்  அப்டின்னு சொல்லி ஆரம்பிச்சா  எவ்ளோ  நல்லா இருக்கும்? இந்த உலகத்திலேயே அழகான வாழ்த்தும்  அருமையான காணிக்கையும் அது தானப்பா......''சரி அதுலா இருக்கட்டும்..... என்ன அடக்க ஒடுக்கமா புர்கா போடாம இப்டி ட்ரஸ் போட்டு வந்துருக்க. 


2 ‘’என்னப்பா இப்டி சொல்லிட்டே..  நம்ம  இஸ்லாமிய பண்பாடே  இதானே? நம் மார்க்கம் பெண்கள இப்டித்தான ட்ரஸ் போட சொல்லுது.அதான பாதுகாப்பாவும் இருக்கும்.    

3 ‘’ஏம்பா  அப்படி சொல்றெ..’’


4 ஏம்பா நாம போடுற ட்ரஸ் வெளிய காட்டுறதுக்கு இல்ல. நம்ம உடம்ப மறைக்குறதுக்குத்தான் சரியா


5 உனக்கு ஃபேஷன் முக்கியமா இல்ல நம்ம மார்க்கம் முக்கியமா ?


6 நீ சொல்றது கரைக்ட் தான்.அப்டி ட்ரஸ் போட்டா நல்லா என்ஜாய் பன்லாம் தான், ஆனா நம்ம மார்க்கம் அப்டி சொல்லலயே.நம்ம மார்க்கம் பெண்கள்னா அடக்க ஒடுக்கமா இருக்கனும்.தன் உடல் முழுவதையும் மறைக்கனும். தன் அழக அந்நிய ஆண்களுக்கு காட்டக்கூடாது.அந்நிய ஆண்கள் பாத்து ரசிக்கிற  மாதிரி இருக்க கூடாது.இப்டிலாம் சொல்லிருக்கே உனக்கு தெரியாதாஎன்ன ?  


7 ஆமா ரசிக்கத்தான் அழகு!  ஆனா யாரு ரசிக்க? கண்டவனெல்லாம் கண்டு ரசிக்கவா? கட்டிய கணவன் கண்டு ரசிக்க மட்டும் தான் இந்த அழகு!

கண்டவனுக்கெல்லாம் அழகைக் காட்டவா ஆண்டவன் படைத்தான்?

அன்னை ஃபாத்திமா நாயகிக்கு இல்லாத அழகா? அவர்கள் என்ன இப்படியா அலைந்தார்கள்? வீட்டில் கணவருக்கு மட்டும் கண்ணுக்கு அழகாய் காட்சி தந்தார்கள்.ஆனா வெளியிலோ யாருமே அடையாளம் கண்டு கொள்ள முடியாத அளவுக்கு கடினமான உடையல்லவா உடுத்தியிருந்தார்கள்?


அன்று குமரி கூட கிழவி போல நடமாடி பெண்ணினத்திற்கு பெருமை சேர்த்தார்கள். இன்று கிழவி கூட மேக்கப் போட்டுக்கொண்டு குமரி போல நடமாடி குடியைக் கெடுக்கிறார்கள். காலக் கொடுமையைப் பார்த்தீர்களா? 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிஃராஜுக்குசென்றிருந்தபோது நரகத்தில் ஒரு காட்சியைக் கண்டார்கள்.சில பெண்கள் அவர்களுடைய இரண்டு கால் களுக்கிடையில் நெருப்பு மூடப்பட்டு உடல் உறுப்புகளெல்லாம் உருகி ஓடிக்கொண்டிருந்தது. இவர்கள் யார்? ஏன் இப்படி வேதனை செய்யப்படுகிறார்கள் என்று நபியவர்கள் கேட்டதற்கு இவர்கள் தான் அந்நிய ஆண்கள் பார்ப்பதற்காக தங்களை அலங்கரித்துக்கொண்டவர்கள் என்று சொல்லப்பட்டது.


அதுமட்டுமல்ல எந்த பெண் அந்நிய ஆண்கள் பார்ப்பதற்காக ஒரே ஒரு முறை கண்ணுக்கு மை தீட்டினாலும் மறுமையில் அல்லாஹ் அவளது முகம் முழுவதையும் கருப்பா ஆக்கிவிடுவான். அவளது கப்ரை தீக்கிடங்காக மாற்றிடுவான் என்று நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள். அப்படியிருக்க அந்நிய ஆடவருக்கு நம் அழகைக் காட்டலாமா?

8 யார் சொன்னா புர்கா போட்டா ஃபிரியா இருக்க முடியாதுன்னு! புர்கா போட்டுகிட்டே சாதித்தவங்க உலகத்துல எத்தன பேரு இருக்காங்க தெரியுமா

மொகலாய மன்னர் ஜஹாங்கீரின் மனைவி நூர்ஜஹானைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறியா? அவர் புலிகளை அடக்கிய வீரப் பெண்மனியல்லவா? ஒரு முறை தன்னந்தனியாக ஒரேசமயத்தில் 4 புலிகளை வேட்டையாடிவிட்டு வெற்றியுடன் திரும்பி வந்தாராம். பல போர்களிலும் வீரமாகப் போர் புரிந்துள்ளார் நூர்ஜஹான். அவருக்கு ஒருபோதும் தடையாக இருந்ததில்லை இந்த புர்கா!


''அதுமட்டுமா காதிஸிய்யா போரிலே ஒரு ஸஹாபிப் பெண்மனி தனது நான்கு புதல்வர்களுக்கு வீரத்தைச் சொல்லிக் கொடுத்து போருக்கு தயார் செய்து அனுப்பினாரே அந்தப் பெண்மனி புர்காவைப் புறக்கனித்தவரா?

''ஸிஃப்பீன் போரை தலைமை தாங்கி நடத்திய அன்னை ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) புர்காவைத் தூக்கி எறிந்து விட்டுத்தான் அதில் இறங்கினார்களா?'' என்னமா புரியாம பேசுற.அதனால புர்காவுக்கும் ஃபிரீனஸுக்கும் சம்பந்தமே இல்லை இன்னொரு விஷயம் உனக்கு சொல்லவா


9 புர்கா போட்டா சுதந்திரம் போயிடும் ஃபிரீனஸ் போயிடும் அப்டி இப்டின்னு நீ சொல்ற.ஆனா புதுசா இஸ்லாத்துக்கு வந்த எத்தனையே பெண்மனிகள் சொன்ன விஷயம் என்ன தெரியுமா!! நாங்க இஸ்லாத்துக்கு வர்ரதுக்கு முன்னாடி புர்கா போடாம வெளிய போகும் போது யாரோ எங்கள பாக்குற மாதிரியே இருக்கும் யாரோ எங்கள ஃபாலோ பன்ற மாதிரியே இருக்கும். எங்களுக்கு எதும் ஆபத்து வந்துருமோன்னு பயமாவே இருக்கும்.ஆனா இப்ப இஸ்லாத்து வந்து இந்த புர்காவ போட ஆரம்பிச்ச பிறகு எங்களுக்கே ஒரு ரிலாக்ஸா இருக்குது, நாங்க பாட்டுக்கு ஃபிரியா போறோம்.ஃபிரியா வரோம். எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்ல அப்டின்னு சொல்றாங்க.

 

10 வெக்கையப் பத்தி கவலை படுறியே.......   வெக்கத்தப்பத்தி  கவலப் பட்டியா.. இந்த கடுமையான வெயில்ல புர்கா எப்டி போடுறதுன்னு யோசிக்கிற. ஆனா  அல்லாஹ்வின்  கட்டளையைப் புறக்கணித்தால் நரகத்தோட வெப்பம் இத விட கடுமையாக இருக்குமே அப்ப என்ன செய்வ?

அப்படித்தான் ஒரு தடவ  சிரியாவிலே  டமாஸ்கஸ்  பல்கலைக் கழகத்திலே புர்கா  போட்ட  மாணவிகளைச்  சந்தித்து  ஒரு  நிருபர் .'இந்த கடுமையான   வெயில்லலும் எப்படியம்மா புர்கா அணிந்து நடமாடுகின்றீங்க?'' அப்டின்னு கேட்டார். அதுக்கு அந்த மாணவிங்க  என்ன சொன்னாங்க தெரியுமா?

''குல் நாரு ஜஹன்னம அஷத்து ஹர்ரா’ உலகத்தின்  வெப்பத்தை  விட  நரகத்தின் வெப்பம்  கடுமையானது; கொடுமையானது.  மஹ்ஷர் மைதானத்தின் வெப்பம்  பயங்கரமானது. உலகத்திலே  உடலை மறைத்து ஒழுக்கமாக வாழா விட்டால்  நரக  நெருப்பில்  போட்டு தண்டிக்கப் படுவோமே ? அதனால் ஒரு போதும் நாங்கள் புர்காவைப்  புறக்கணிக்க  மாட்டோம்’’ என்று அந்த மாணவிகள் கூறியிருக்கிறார்கள். அந்த மாதிரி வெஸ்டன் கல்ச்சர்ல இருக்கிற மாணவிகளுக்கே  இவ்வளவு  இறையச்சம் இருக்கும் போது இங்க இருந்து கிட்டு இந்த மாதிரி பேசுறியேமா?''

11 அடிப்பாவி மவளே அல்லாஹ்வின்  கோபத்தையும்  அண்ணலாரின் சாபத்தையும்  அதிகமாக  பெற்றுத்  தரும் இந்த அரை குறை ஆடைய போடுறதுக்கு வெட்கமில்ல.. அந்நிய ஆண்கள கவர்ர மாதிரி விதவிதமா சுடியும் மிடியும் போடுறதுக்கு வெட்கமில்ல... போட்டும் போடாத மாதிரி இருக்கிற இந்த மாதிரி ட்ரஸ்ஸ போட்டு மேக்கப்ப  போட்டுக் கிட்டு ஊரெல்லாம் சுற்றி வர்ரதுக்கு  மனசுல  உறுத்தல்  இல்ல… ஆனா பெண்ணியத்தின் கண்ணியத்தைக் காப்பாத்துர இந்த புர்காவ போடுறதுக்கு மட்டும் வெட்கமாக இருக்கிறது அப்டித்தான?  நல்லா  இருக்கும்மா  உன்னோட வெட்கம்.!'' 


12 என்ன இப்டி கேட்டுபுட்டே… புர்கால எவ்ளோ நன்மைகள் இருக்குது.அதுல முக்கியமான ஒரு நன்மைய மட்டும் சொல்றேன் கேளு.


13 புர்கால தான் நம்ம பெண்களுக்கு பாதுகாப்பே இருக்குது. இன்னைக்கு நம்ம இந்தியால மட்டும் 50 நிமிடங்களுக்கு ஒரு பெண் மானபங்கப் படுத்தப் படுகிறாள். அப்படியானால் ஒரு நாளைக்கு குறைந்தது 25 பெண்கள்  இந்த நாட்டிலே தங்கள் மானமரியாதையை இழக்கிறார்கள். இந்த கொடுமை களுக்கெல்லாம் அடிப்படைக் காரணம் என்ன?

என்னைக்குமே மோசமான செய்திகளை போடுற தினமலர் பத்திரிக்கையே சொல்கிறது.இன்னைக்கு ஈவ்டீசிங் கொடுமைகளுக்கும் பெண்கள் சீரழிக்கப் படுவதற்கும் மிக முக்கிய காரணம் அவர்கள் அணிகின்ற அரைகுறையான ஆடைகள் தான்.

''ஆனால் இஸ்லாம் வலியுறுத்தும் புர்கா பெண்களுக்கு பாதுகாப்பைக் கொடுக்கிறது.திறந்திருக்கிற இனிப்பைத்தான் ஈக்கள் மொய்க்கும். மூடியிருக்கிற இனிப்பை ஈக்கள் ஏறெடுத்தும் பார்க்காது.அதே போல் தான் பெண்கள் தங்கள் அழகைக் காட்டி நடந்தால் அவர்களுக்கு ஆபத்துத்தான்.


2003 ல் ஜெர்மனியில் மட்டும் 8000 பெண்கள் இஸ்லாத்திற்கு வந்தார்கள். நீங்கள் கலிமா சொன்னதற்கு என்ன காரணம்? என்று அவர்களிடம் கேட்கப்பட்டது :அப்போது அவர்கள் சொன்ன வாக்குமூலம் என்ன தெரியுமா? 

மேற்கத்திய கலாச்சாரம் எங்களை சீரழித்து விட்டது. இதனால் பெண்கள் மானமரியாதையை இழந்து மன அமைதியைத் தொலைத்து அணு அணுவாக செத்துக் கொண்டிருந்தோம். ஆனால் இன்று இஸ்லாத்தை ஏற்று புர்கா அணிந்த பிறகு எங்களுக்கு பாதுகாப்பு கிடைத்து விட்டது; கண்ணியமும் கிடைத்து விட்டது'' என்று சொன்னார்கள்.


14 ''அப்படியா ரொம்ப ரொம்ப சந்தோஷம்! 


15 ஆமீன்


No comments:

Post a Comment