Pages

Pages

Wednesday, April 27, 2022

யாரையும் சாதாரணமாக எடை போட வேண்டாம்

(இன்றுடன் தராவீஹ் குறிப்புகளை நிறைவு செய்கிறேன். இது வரை நான் பதிவிட்ட குறிப்புகளைப் பார்த்து எனக்காக துஆ செய்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மனமார நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களின் மேலான துஆவில் என்றைக்கும் என்னை மறந்து விட வேண்டாம்) 

عَبَسَ وَتَوَلّٰٓىۙ‏

(நமது நபி) கடுகடுத்தார்; புறக்கணித்தார். (எதற்காக?) (அல்குர்ஆன் : 80:1)

اَنْ جَآءَهُ الْاَعْمٰى‏

தன்னிடம் ஓர் பார்வையற்றவர் வந்ததற்காக. (அல்குர்ஆன் : 80:2)

وَمَا يُدْرِيْكَ لَعَلَّهٗ يَزَّكّٰٓىۙ‏

(நபியே! உங்களிடம் வந்த) அவர் பரிசுத்தவானாக இருக்கலாம் என்பதை நீங்கள் அறிவீர்களா? (அல்குர்ஆன் : 80:3)

اَوْ يَذَّكَّرُ فَتَنْفَعَهُ الذِّكْرٰى‏

அல்லது (உங்களுடைய) நல்லுபதேசம் அவருக்குப் பயனளிக்கலாம் (என்பதை நீங்கள் அறிவீர்களா? அவ்வாறிருக்க, அவரை நீங்கள் ஏன் கடுகடுத்துப் புறக்கணித்தீர்கள்?) (அல்குர்ஆன் : 80:4)

عن عائشة ، قالت : نزلت عبس وتولى في ابن أم مكتوم الأعمى ، أتى رسول الله - صلى الله عليه وسلم - فجعل ، يقول : يا رسول الله أرشدني ، وعند رسول الله - صلى الله عليه وسلم - رجل من عظماء المشركين ، فجعل رسول الله - صلى الله عليه وسلم - يعرض عنه

ஒரு சந்தர்ப்பத்தில் அண்ணல் நபி அவர்கள் மக்கத்து குறைஷி குலத் தலைவர்களை அழைத்து, அவர்களிடத்தில், தூய இஸ்லாத்தை எடுத்துரைத்துக் கொண்டிருந்தார்கள். அந்த சமயத்தில் கண் பார்வையற்ற நபித்தோழர் -  அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம் (ரலி) அவ்வழியாகச் சென்றார்கள். நபி அவர்களின் உபதேசம் தனது காதுகளுக்கு கேட்பதை உணர்ந்த உம்மி மக்தூம் (ரலி) அவர்கள், அந்தச் சபைக்கு  வந்தார்கள். அல்லாஹ்வின் திருத்தூதர் அவர்களே  அல்லாஹ் உங்களுக்கு அறிவித்தவற்றை எனக்கு நீங்கள் கற்றுத்தாருங்கள்என்று உரிமையுடன் நபி அவர்களிடம் வினவினார்கள். நபி அவர்களின் உன்னத தோழரல்லவா, கண் பார்வை தெரியாத காரணத்தால் அந்த சபையில் யார் யார் எல்லாம் உள்ளார்கள் என்பதும் அந்த சபையின் முக்கியத்துவமும் அவருக்கு தெரிய வில்லை.

குறைஷி குலத்தின் முக்கியத் தலைவர்களிடம் பேசிக் கொண்டிருந்த பெருமானார் அவர்கள், அத்தலைவர்கள் எப்படியாவது இஸ்லாத்தை புரிந்து அதற்குள் வந்து விட வேண்டும் என்ற மேலெண்ணத்திலும் மிகுந்த ஆசையிலும் அந்த கண் தெரியாத ஸஹாபியிடம் பிறகு பேசிக் கொள்ளலாம், முதலில் இவர்களைப் பார்க்கலாம் என்ற கோணத்தில் தன் முகத்தை சற்று திருப்பிக்கொண்டு தன்னுடைய பேச்சைத் தொடர்ந்தார்கள். நபி அவர்கள் தன் முகத்தை திருப்பிக் கொண்டார்கள் என்பது அருமைத் தோழர் உம்மி மக்தூம் (ரலி) அவர்களுக்கு தெரியாது என்றாலும், அல்லாஹ் இதனை கண்காணித்து, நபி அவர்களுக்கு அறிவுரைக் கூறும் விதமாக இந்த அத்தியாயத்தை இறைவன் அருளினான். (குர்துபீ)

وَلَا تَطْرُدِ الَّذِيْنَ يَدْعُوْنَ رَبَّهُمْ بِالْغَدٰوةِ وَالْعَشِىِّ يُرِيْدُوْنَ وَجْهَهٗ‌  مَا عَلَيْكَ مِنْ حِسَابِهِمْ مِّنْ شَىْءٍ وَّمَا مِنْ حِسَابِكَ عَلَيْهِمْ مِّنْ شَىْءٍ فَتَطْرُدَهُمْ فَتَكُوْنَ مِنَ الظّٰلِمِيْنَ‏

(நபியே!) தங்கள் இறைவனின் திருப்பொருத்தத்தை விரும்பி காலையிலும் மாலையிலும் பிரார்த்தித்துக் கொண்டிருப்பவர்களை  நீங்கள் விரட்டி விடாதீர்கள்! அவர்களுடைய கணக்கிலிருந்து எதுவும் உங்களுடைய பொறுப்பாகாது. உங்களுடைய கணக்கிலிருந்து எதுவும் அவர்களுடைய பொறுப்பாகாது. ஆகவே, நீங்கள் அவர்களை விரட்டினால் அநியாயக்காரர்களில் நீங்களும் ஒருவராகி விடுவீர்கள்! (அல்குர்ஆன் : 6:52)

ولا تطرد الذين يدعون ربهم بالغداة والعشي ) قال : جاء الأقرع بن حابس التميمي وعيينة بن حصن الفزاري ، فوجدوا رسول الله - صلى الله عليه وسلم - مع صهيب وبلال وعمار وخباب قاعدا في ناس من الضعفاء من المؤمنين فلما رأوهم حول النبي - صلى الله عليه وسلم - حقروهم ، فأتوه فخلوا به ، وقالوا : إنا نريد أن تجعل لنا منك مجلسا تعرف لنا به العرب فضلنا ، فإن وفود العرب تأتيك فنستحيي أن ترانا العرب مع هذه الأعبد ، فإذا نحن جئناك فأقمهم عنا ، فإذا نحن فرغنا فاقعد معهم إن شئت . قال : " نعم " . قالوا : فاكتب لنا عليك كتابا ، قال : فدعا بالصحيفة ودعا عليا ليكتب ، ونحن قعود في ناحية ، فنزل جبريل فقال : ( ولا تطرد الذين يدعون ربهم [ بالغداة والعشي يريدون وجهه ما عليك من حسابهم من شيء وما من حسابك عليهم من شيء فتطردهم فتكون من الظالمين ] ) فرمى رسول الله - صلى الله عليه وسلم - بالصحيفة ، ثم دعانا فأتيناه

அக்ரஃ பின் ஹாபிஸ், உயைனா பின் ஹிஸ்ன் போன்ற மக்காவின் முக்கிய தலைவர்கள் நபியிடத்தில் வரும் பொழுது ஸுஹைப் ரலி, பிலால் ரலி, அம்மார் ரலி, கப்பாப் ரலி  போன்ற ஏழை ஸஹாபாக்கள் நபி அவர்களைச் சுற்றி அமர்ந்திருந்தார்கள். நபி அவர்களைச் சுற்றி மிகவும் பலவீனமான ஏழைகள் அமர்ந்திருந்ததைப் பார்த்து அவர்கள் அதை இழிவாகக் கருதினார்கள். எனவே நபியை தனியாக அழைத்து ஊரில் எங்களுக்கென்று தனி மரியாதை இருக்கிறது. உங்களோடு மிகவும் ஏழ்மையான மனிதர்கள் அமர்ந்திருக்கிறார்கள். அவர்களுக்கு சரிக்கு சமமாக நாங்களும் அமர்ந்திருப்பதை மற்றவர்கள் பார்த்தால் அதனால் எங்கள் மரியாதை போய் விடும். எனவே அவர்களோடு அமர்வதற்கு நாங்கள் வெட்கப்படுகிறோம். எனவே நாங்கள் வரும் போது அவர்கள் உங்களோடு இருக்கக்கூடாது. நாங்கள் சென்று விட்டால் உங்களோடு அவர்களை அமர்த்திக் கொள்ளுங்கள் என்று சொன்னார்கள். நபி அவர்கள் சரி என்ற போது அதை எங்களுக்கு எழுதித் தாருங்கள் என்று அவர்கள் கேட்டுக் கொண்டார்கள். நபி அவர்கள் எழுதுவதற்காக அலி ரலி அவர்களை அழைத்த போது இந்த வசனம் அருளப்பட்டது. உடனே நபி அவர்கள் எழுதுவதற்காக கொண்டு வரப்பட்ட அந்த காகிதத்தை தூக்கி எறிந்து விட்டு எங்களை அழைத்து தன்னோடு அமர வைத்தார்கள் என்று அந்த நபித்தோழர்கள் கூறுகிறார்கள். (குர்துபீ)

இந்த இரு நிகழ்விலும் வந்த ஏழை ஸஹாபாக்களையும் அந்த பார்வையற்ற நபித்தோழரையும் புரக்கணிப்பது நபி அவர்களின் நோக்கமல்ல என்பது நாம் அனைவரும் அறிந்த விஷயம். எப்படியாவது மக்கத்து தலைவர்களும் தீனுல் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற பேராசையில் தான் அவ்வாறு நபி அவர்கள் நடந்து கொண்டார்கள். அவ்வாறு நினைத்தார்கள். இருந்தாலும் அல்லாஹ் உடனே உணர்த்தி விட்டான். உங்களோடு இருக்கிற அந்த பலவீனமானர்களை ஒதுக்கி விட்டுத்தான் அவர்கள் ஈமான் கொள்ள வேண்டும் என்றால் அது அவசியமில்லை என்று அல்லாஹ் இந்த வசனங்கள் வழியாக உணர்த்துகிறான்.

 

قال علماؤنا : ما فعله ابن أم مكتوم كان من سوء الأدب لو كان عالما بأن النبي - صلى الله عليه وسلم - مشغول بغيره ، وأنه يرجو إسلامهم ، ولكن الله تبارك وتعالى عاتبه حتى لا تنكسر قلوب أهل الصفة ; أو ليعلم أن المؤمن الفقير خير من الغني ، وكان النظر إلى المؤمن أولى وإن كان فقيرا

அந்த கண் தெரியாத ஸஹாபி உள்ளே வருவதைப் பார்த்ததும் நபி அவர்கள் அவரை அழைத்து வந்தவரிடம் அவரை தடுக்குமாறு உணர்த்தினார்கள். அவரும் தடுத்தார். ஆனால் அந்த ஸஹாபி இல்லை, நான் பேசிவிட்டுத்தான் செல்வேன் என்று உள்ளே வர முற்பட்டார்கள். அப்போது தான் நபி அவர்கள் தன் முகத்தை அவரை விட்டும் திருப்பி விட்டு அவர்களோடு பேச ஆரம்பித்தார்கள். ஒரு வகையில் பார்த்தால் அந்த நபித்தோழர் நடந்து கொண்டது சபை ஒழுக்கத்திற்கு மாற்றமானது தான். இருந்தாலும் அவர்கள் போன்றவர்களின் உள்ளம் உடைந்து விடக்கூடாது என்பதற்காக அவரை விட்டும் முகத்தை திருப்பிக் கொண்டதை அல்லாஹ் தன் வசனத்தின் வழியாக உணர்த்தி விட்டான். (குர்துபீ)

قال الثوري : فكان النبي - صلى الله عليه وسلم - بعد ذلك إذا رأى ابن أم مكتوم يبسط له رداءه ويقول : " مرحبا بمن عاتبني فيه ربي " . ويقول : " هل من حاجة " ؟ واستخلفه على المدينة مرتين في غزوتين غزاهما

அந்த வசனம் இறங்கிய பிறகு அந்த நபித்தோழரைப் பார்த்தால் அவருக்காக தன் விரிப்பை விரித்து அமர வைத்து யார் விஷயத்தில் அல்லாஹ் என்னை உணர்த்தினானோ அந்த மாண்பிற்குரியவே என்று கூறி அவரை நபி அவர்கள் அழைப்பார்கள். போருக்காக சென்ற இரு சமயத்தில் அந்த நபித்தோழரைத்தான் தனக்குப் பகரமாக மதீனாவில் அமர்த்தி விட்டு சென்றார்கள். (குர்துபீ)   

சமூகத்தில் யாரையும் நாம் சாதாரணமாக  எடை போட்டு விடக்கூடாது. சாதாரணமான தோற்றத்தில் காட்சி தருகின்ற எத்தனையோ பேர் அல்லாஹ்விடம் மிக உயர்ந்தவர்களாக இருக்கலாம் என்பது இந்த நிகழ்வுகள் கூறும் உண்மை.

رب أشعث أغبر مدفوع بالأبواب لو أقسم على الله لأبره) رواه أحمد

தலைவிரி கோலமான புழுதி படிந்த வீட்டு வாசல்களில் உள்ளே வருவதற்கு தடுக்கப்படுகின்ற எத்தனையோ பேர் அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு ஒன்றை சொன்னால் அல்லாஹ் அதை உண்மைப்படுத்தி விடுவான். (அஹ்மது)

قال رسول الله صلى الله عليه وسلم : " إن من أمتي من لو أتى باب أحدكم يسأله دينارا أو درهما أو فلسا لم يعطه ، ولو سأل الله الجنة لأعطاه إياها ، ولو سأله الدنيا لم يعطه إياها ، ولم يمنعها إياه لهوانه عليه ، ذو طمرين لا يؤبه له ، لو أقسم على الله لأبره

என் சமூகத்தில் சிலர் இருக்கிறார்கள். ஒருவரின் இல்லத்திற்கு வந்து அவர்கள் எதாவது தீனாரையோ திர்ஹமையோ பணத்தையோ கேட்டால் அவருக்கு அவர் கொடுக்க மாட்டார். ஆனால் அவர் அல்லாஹ்விடம் சொர்க்கத்தை கேட்டால் அல்லாஹ் அவருக்கு அதைக் கொடுத்து விடுவான். (இப்னுகஸீர்)

وقال محمد بن سويد قحط أهل المدينة وكان بها رجل صالح لا يؤبه له لازم لمسجد رسول الله صلى الله عليه وسلم فبينما هم في دعائهم إذ جاءهم رجل عليه طمران خلقان، فصلى ركعتين فأوجز فيهما، ثم بسط يديه فقال: يا رب أقسمت عليك إلا أمطرت علينا الساعة، فلم يرد يديه ولم يقطع دعاءه حتى تغشت السماء بالغمام وأمطروا حتى صاح أهل المدينة من مخافة الغرق، فقال: يا رب إن كنت تعلم أنهم قد اكتفوا فارفع عنهم، فسكن

முஹம்மத் பின் ஸவீத் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள். மதினாவில் ஒரு நாள் பஞ்சம் ஏற்பட்டது. அனைவரும் மழையை எதிர்பார்த்து துஆ செய்து கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு மனிதர் வந்தார். கிழிந்து மக்கிப்போன இரண்டு ஆடைகளை உடுத்தியிருந்தார். பள்ளிக்குள் வந்து இரண்டு ரக்அத் தொழுது தன் கரத்தை உயர்த்தி இறைவா நான் சத்தியமிட்டு சொல்கிறேன். இப்பொழுது இங்கே எங்களுக்கு நீ மழையை தர வேண்டும் என்று கேட்டார். அவரது துஆவை முடிப்பதற்குள் மழை கொட்ட ஆரம்பித்து விட்டது. ஒரு கட்டத்தில் மழை அதிகமாகி வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போது, மீண்டும் அவர் மக்களுக்கு இது போதுமாகி விட்டது. எனவே மழையை நிறுத்தி விடு என்று சொன்ன பொழுது மழை நின்று விட்டது என்று கூறுகிறார்.

 

فإنكم إنما تُرزقون وتُنصرون بضعفائكم

நீங்கள் உதவியும் ரிஜ்கும் அளிக்கப்படுவது உங்களில் உள்ள பலவீனமானர்களைக் கொண்டு தான். (அஹ்மது)

மக்களில் பலவீனமானவர்களைக் கொண்டு அல்லாஹ் நமக்கு பல்வேறு உதவிகளை செய்து கொண்டிருக்கிறான். அதனால் தான் மழைத் தொழுகைக்காக செல்லும் போது பால் குடிக்கும் குழந்தைகள் வயோதிகர்கள் கால்நடைகள் போன்றவற்றை அந்த இடத்திற்கு அழைத்துச் சென்று மழைக்காக துஆ செய்ய வேண்டும் என்று மார்க்கம் நமக்கு உணர்த்துகிறது.

وفي أخبار فتوح الصين  قتيبة بن مسلم الباهلي سأل عن محمد بن إبراهيم التيمي، ومحمد بن إبراهيم التيمي عابد كما وصفه بعض من عرفه، يقول: ما أتينا إبراهيم التيمي في ساعة يطاع الله فيها إلا وجدناه مطيعاً، إن كان في ساعة صلاة وجدناه مصلياً، وإن لم تكن ساعة صلاة وجدناه إما متوضئاً، أو عائداً مريضاً، أو مشيعاً جنازة، أو قاعداً في المسجد، فكنا نرى أنه لا يحسن أن يعصي الله ، سأل عنه قائد المعركة قائد الجيش، وهي جيوش كالجبال، أين هو؟ فقيل: ها هو على ميمنة الجيش يُبصبص بأصبعه، يحركها -يعني يدعو  بها، فقال: والله إن هذه الأصبع لتعدل عندي ألف فارس"[3]، رجل دعوته تستجاب، من صالحي الأمة وخيارهم وأتقيائهم.  وسير أعلام النبلاء (6/ 324).

ஹிஜ்ரி 49 ல் இராக்கில் பிறந்தவர் குதைபா பின் முஸ்லிம் ரஹ் அவர்கள். அவர்கள் ஒரு நாள் ஒரு பெரும் படையை திரட்டிக் கொண்டு ஒரு போருக்கு கிழம்பினார்கள்.  அந்த படையில் முஹம்மத் பின் இப்ராஹீம் தமீமீ ரஹ் அவர்களும் இருந்தார்கள். அவர்கள் ஸாலிஹான ஒரு இறைநேசர். எப்போதும் பள்ளியோடு தன்னை இணைத்துக் கொண்டவர். துஆ கபூலாகக்கூடிய அந்தஸ்தைப் பெற்றவர். போர் தொடங்குவதற்கு முன் குதைபா ரஹ் அவர்கள் முஹம்மத் பின் இப்ராஹீம் தமீமீ எங்கு நிற்கிறார்கள் என்று கேட்டார்கள். படையின் வலப்பக்கம் நிற்கிறார் என்று சொல்லப்பட்டது அவரைப் பார்த்தார்கள். அவர்கள் தன் கையை உயர்த்தி துஆ செய்து கொண்டிருந்தார்கள். அப்போது குதைபா ரஹ் அவர்கள் இவரின் இந்த விரல்கள் ஆயிரம் குதிரை வீரர்களுக்கு சமமானது என்று குறிப்பிட்டார்கள்.

No comments:

Post a Comment