Pages

Pages

Friday, February 17, 2023

சிறைகளுக்குள்ளேயே வாழ்க்கை முடிந்து விடுகிறது

 

وكذلك جعلنكم امة وسطا

அவ்வோறே நடுநிலைச் சமூகமாகவும் நாம் உங்களை ஆக்கினோம். (அல்குர்ஆன் : 2 ; 143)

நாம் பின்பற்றி வாழுகின்ற இஸ்லாம் ஒரு நடுநிலை மார்க்கம். வாழ்வின் அனைத்து விஷயங்களிலும் நடுநிலையைக் கற்றுத் தரும் ஓர் ஒப்பற்ற மார்க்கம்.படைத்தவனுக்காக படைப்பினங்களையோ படைப்பினங்களுக்காக படைத்தவனையோ மறந்து விடுவதற்குப் பெயர் நடுநிலையல்ல. இஸ்லாம் அவ்விருவரையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று கற்றுத் தருகிறது.ஆன்மிகத்திற்காக உலகத்தையோ உலகத்திற்காக ஆன்மிகத்தையோ விட்டு விடுவதற்குப் பெயர் நடுநிலையல்ல. இஸ்லாம் அவ்விரண்டும் வேண்டும் என்று கூறுகிறது.பூர்வீகத்தைப் பற்றிப் பிடித்துக் கொண்டு சமகாலத்தையோ சமகாலத்தைப் பற்றிப் பிடித்துக் கொண்டு பூர்வீகத்தையோ கண்டு கொள்ளாமல் இருப்பதற்குப் பெயர் நடுநிலையல்ல. இஸ்லாம் அவ்விரண்டையும் கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று போதிக்கிறது.கசப்பான கடந்த காலத்தை நினைத்து வருங்காலத் திட்ட மில்லாமல் இருப்பதோ கடந்த காலத்தை மறந்து வருங்காலத் திட்டமிடுவதோ நடுநிலையல்ல. கடந்த காலத்தை மறக்காமல் வருங்காலத் திட்டமிடல் வேண்டும் என்று இஸ்லாம் வழிகாட்டுகிறது.

இவ்வாறு அனைத்து காரியங்களிலும் நடுநிலையைக் காண்பிக்கின்ற இஸ்லாம் குற்றவாளிகள் விஷயத்திலும் நடுநிலையைக் கையாள வேண்டும் என்று சொல்கிறது.குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதற்காக அறவே மனிதாபிமானமின்றி செயல் படுவதையும் இஸ்லாம் விரும்ப வில்லை. மனிதாபிமானத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு குற்றவாளிகள் முழுவதுமாக தப்பித்து விடுவதையும் இஸ்லாம் விரும்ப வில்லை.  சமூகத்தில் குற்றங்கள் குறைய குற்றவாளிகள் முறையாக தண்டிக்கப்பட வேண்டும் என்பது இஸ்லாத்தின் நிலைப்பாடாக இருந்தாலும் மனிதாபிமானத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று சொல்கிறது.

اَلزَّانِيَةُ وَالزَّانِىْ فَاجْلِدُوْا كُلَّ وَاحِدٍ مِّنْهُمَا مِائَةَ جَلْدَةٍ‌وَّلَا تَاْخُذْكُمْ بِهِمَا رَاْفَةٌ فِىْ دِيْنِ اللّٰهِ اِنْ كُنْتُمْ تُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِ‌ وَلْيَشْهَدْ عَذَابَهُمَا طَآٮِٕفَةٌ مِّنَ الْمُؤْمِنِيْنَ‏

விபச்சாரம் செய்த பெண், விபச்சாரம் செய்த ஆண்   இவர்களில் ஒவ்வொருவரையும் நூறு கசையடிகள் அடியுங்கள். மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும் இறுதிநாளையும் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால், அல்லாஹ் விதித்த இக்கட்டளையை நிறைவேற்றுவதில் அவ்விருவர்களுடைய விஷயத்தில் உங்களுக்கு இரக்கம் ஏற்படக்கூடாது. அவ்விருவருக்கும் (தண்டனையாக) வேதனை கொடுக்கும் சமயத்தில் நம்பிக்கையாளர்களில் ஒரு தொகையினர் அதன் சமீபமாக இருக்கவும். (அல்குர்ஆன் : 24 ; 2)

فَجاءَتِ الغامِدِيَّةُ، فَقالَتْ: يا رَسولَ اللهِ، إنِّي قدْ زَنَيْتُ فَطَهِّرْنِي، وإنَّه رَدَّها، فَلَمّا كانَ الغَدُ، قالَتْ: يا رَسولَ اللهِ، لِمَ تَرُدُّنِي؟ لَعَلَّكَ أَنْ تَرُدَّنِي كما رَدَدْتَ ماعِزًا، فَواللَّهِ إنِّي لَحُبْلى، قالَ: إمّا لا فاذْهَبِي حتّى تَلِدِي، فَلَمّا وَلَدَتْ أَتَتْهُ بالصَّبِيِّ في خِرْقَةٍ، قالَتْ: هذا قدْ وَلَدْتُهُ، قالَ: اذْهَبِي فأرْضِعِيهِ حتّى تَفْطِمِيهِ، فَلَمّا فَطَمَتْهُ أَتَتْهُ بالصَّبِيِّ في يَدِهِ كِسْرَةُ خُبْزٍ، فَقالَتْ: هذا يا نَبِيَّ اللهِ قدْ فَطَمْتُهُ، وَقَدْ أَكَلَ الطَّعامَ، فَدَفَعَ الصَّبِيَّ إلى رَجُلٍ مِنَ المُسْلِمِينَ، ثُمَّ أَمَرَ بها فَحُفِرَ لَها إلى صَدْرِها، وَأَمَرَ النّاسَ فَرَجَمُوها، فيُقْبِلُ خالِدُ بنُ الوَلِيدِ بحَجَرٍ، فَرَمى رَأْسَها، فَتَنَضَّحَ الدَّمُ على وَجْهِ خالِدٍ، فَسَبَّها، فَسَمِعَ نَبِيُّ اللهِ سَبَّهُ إيّاها، فَقالَ: مَهْلًا يا خالِدُ؛ فَوالَّذِي نَفْسِي بيَدِهِ لقَدْ تابَتْ تَوْبَةً لو تابَها صاحِبُ مَكْسٍ لَغُفِرَ له. ثُمَّ أَمَرَ بها فَصَلّى عَلَيْها، وَدُفِنَتْ.

இந்த ஹதீஸில் (முஸ்லிம் ; 1695) நான் தவறு செய்து விட்டேன்.எனக்குத் தண்டனையை நிறைவேற்றுங்கள் என்று வந்து நின்ற பெண்ணிடத்தில் குழந்தையைப் பெற்றெடுத்த பிறகு வா என்று நபி அவர்கள் சொன்னார்கள். குழந்தையைப் பெற்றெடுத்து வந்த பிறகு குழந்தை பால்குடி நிறுத்திய பிறகு வா என்று சொன்னார்கள். குழந்தை பால்குடி நிறுத்தி விட்டது என்பதை அறிவிக்கும் முகமாக அந்த குழந்தையின் கையில் ரொட்டித் துண்டைக் கொடுத்து அந்தப் பெண் வந்தாள். அதன் பிறகே தண்டனை நிறைவேற்றப்பட்டது.

மேற்கூறப்பட்ட வசனத்தையும் இந்த ஹதீஸையும் சிந்தனைக்கு எடுத்துக் கொண்டால் இஸ்லாத்தில் இருக்கின்ற நடுநிலை நமக்குப் புரியும். தண்டனையை நிறைவேற்றும் விஷயத்தில் இரக்கம் கூடாது என்று அந்த வசனம் பேசுகிறது. குழந்தை பால்குடி மறந்த பிறகு அப்பெண்ணிற்குத் தண்டனையை நிறைவேற்றியது மனிதாபிமானத்தை எடுத்து இயம்புகிறது.

இன்றைக்கு உலகில் எதிலும் நடுநிலை இல்லை. நீதம் பேணப் படுவதில்லை. ஒன்று குற்றவாளிகள் ஒரேயடியாக தப்பித்துக் கொள்கிறார்கள். அல்லது தண்டிக்கிறோம் என்ற பெயரில் மனிதாபிமானத்தை அறவே மறந்து விடுகிறார்கள்.

தவறு செய்யும் மனிதர்களுக்கு தண்டனை வழங்குவது இயல்பு. ஒருவர் செய்யும் தவறுக்கு ஏற்ற வகையில், அவருக்கு தண்டனை அதிகமாகவோ அல்லது குறைவாகவோ கிடைக்கக் கூடும். சில நேரங்களில், சிறிய வகையிலான குற்றம் புரிந்தோருக்கு, சில மாதங்கள் மட்டுமே, சிறை தண்டனை இருக்கும். பெரிய வகையிலான குற்றம் புரிந்தோருக்கு தண்டனையானது, சில, பல வருடங்களாக இருக்கலாம்.மிகக் கொடூரமான குற்றம் செய்தவருக்கு, மரண தண்டனை கூட வழங்கப்பட நேரிடும். சில நேரங்களில், சிறையில் ஒருவர், நல்ல நடத்தையுடன் நடந்து கொண்டால், அவர், தான் விடுதலை அடையும் காலத்திற்கு முன்னரே, விடுதலை செய்யப் படலாம். இளம் வயதில் குற்றம் புரிந்தோருக்கு, கடும் தண்டனை வழங்கப் படாமல், அவர்கள் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டு, பருவம் எய்திய உடன், விடுதலை செய்யப் படுவார்கள். இது தான் நம் நாட்டில் இருக்கின்ற நடைமுறை.

தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு சிறைகளில் 38 இஸ்லாமிய சிறைவாசிகள், 27 முதல் 28 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர்.இந்த சிறைவாசிகளில் 17 பேர் 1998 ஆம் ஆண்டு நடைபெற்ற கோயம்புத்தூர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாகக் கூறி கைது செய்யப்பட்டவர்கள். அதில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்த சகோதரர் அபூதாஹிர் உடல் நலிவுற்று சிறையிலேயே உயிரிழந்தார். பல வருடங்களாக நோயினாலும் உடல் உபாதைகளாலும் சிரமப்பட்டு வந்த அபூதாஹிரை விடுவிக்க வேண்டும் என்று நம் சமூகத்திலிருந்து இதர சமூகத்திலிருந்தும் பல்வேறு குரல்கள் ஒளித்த போதும் அதிகாரத்தில் இருப்பவர்கள் கண்டு கொள்ளாத காரணத்தினால் இன்றைக்கு அவர் இறந்திருக்கிறார். அதிகாரத்தில் இருப்பவர்களின் மனிதாபிமானமற்ற செயலால் இன்றைக்கு ஒரு உயிர் பறிபோயிருக்கிறது.

இந்தியாவில் தண்டனை விதிக்கப்பட்டு சிறைவாசம் அனுபவிக்கும் கைதிகளின் தண்டனைக் காலத்தைக் குறைக்கவும், முன்கூட்டியே விடுதலை செய்யவும் மத்திய மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தின் 161 வது பிரிவு மாநில அரசுக்கு கைதிகளை முன்விடுதலை செய்யும் அதிகாரத்தை வழங்குகிறது. அதனடிப்படையில், தலைவர்களின் பிறந்த நாள்கள், சுதந்திர தினம் அல்லது குடியரசு தினம் போன்ற நாட்களில் கைதிகளை நன்னடத்தையின் அடிப்படையின் விடுதலை செய்வது வழக்கம்.

தமிழகத்தில் கடந்த 2008 ம் ஆண்டு முன்னாள் முதல்வர் அண்ணாவின் நூற்றாண்டின் போது ஏழு ஆண்டுகளுக்கும் மேல் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த 1400 சிறைக்கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். 2017 ம் ஆண்டு முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் நூற்றாண்டின் போது 10 ஆண்டுகளுக்கும் மேல் சிறை தண்டனை அனுபவித்த 1,627 சிறைக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.

கடந்த 2021 ம் ஆண்டு அண்ணாவின் பிறந்தநாளில் 700 ஆயுள் தண்டனை சிறைவாசிகள் முன்விடுதலை செய்யப்படுவார்கள் என அரசாணை வெளியிடப்பட்டது. இதையடுத்து, `முன் விடுதலை' என்ற சலுகையைப் பெறுவதற்குத் தகுதியுள்ள சிறைவாசிகள் குறித்த அரசாணையும் வெளியிடப்பட்டது. அந்த ஆணையில், பயங்கரவாதம், மதமோதல், வகுப்பு மோதல், பாலியல் வன்கொடுமை, சாதி மோதல், அரசுக்கு எதிராக செயல்பட்டவர்கள், சிறைவாசத்தில் இருந்து தப்பிக்க முயன்றவர்கள், ஊழல் வழக்கு, குண்டுவெடிப்பு என 17 குற்றங்களை வகைப்படுத்தி, இந்தக் குற்றங்கள் தொடர்பாக தண்டனை பெற்றவர்கள் விடுதலை பெற முடியாது என்று கூறியதின் மூலம் 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் அணுபவித்துக் கொண்டிருக்கிற முஸ்லிம் சிறைவாசிகள் என்றைக்கும் விடுதலை ஆகுவதற்கு வாய்ப்பே இல்லாத நிலை ஏற்பட்டு விட்டது.

முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை செய்வதில் தொடர்ந்து பாரபட்சம் நிலவி வருகிறது என்கிறார் வழக்கறிஞரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான நிஜாமுதீன். 2008 ம் ஆண்டு அண்ணா நூற்றாண்டையொட்டி சிறைவாசிகள் விடுதலை செய்யப்பட்ட போதும், தகுதியுள்ள பல முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலை செய்யப்பட வில்லை. இதே நிலை தான் 2017 ம் ஆண்டு எம்ஜிஆர் நூற்றாண்டின் போதும் தொடர்ந்தது. பல முஸ்லிம் சிறைவாசிகள் தங்களை விடுதலை செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அதில் வெற்றியும் பெற்றிருந்தனர். அவ்வாறிருந்தும் அவர்கள் விடுதலை செய்யப்பட வில்லை என்று குறிப்பிடுகிறார்.

முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன் சட்டப்படி ஒரு ஆயுள் தண்டனை கைதி 14 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து விட்டால் அவரை விடுதலை செய்வதில் எந்தத் தடையும் இல்லை. ஒருவர் தண்டனைக் காலத்தை அனுபவித்து விட்ட பிறகு அவர் என்ன குற்றம் செய்தார் என்பதைப் பார்க்க வேண்டிய தேவையில்லை. தண்டனைக் காலம் முடியும் முன்னரே கூட ஒருவரை விடுதலை செய்ய மாநில அரசுக்கு அரசியலமைப்பின் 161வது விதியின் கீழ் அதிகாரம் உள்ளது. ஒரு சிறைவாசியின் நடத்தைக்கான நற்சான்று இருப்பதே விடுதலை செய்வதற்கு போதுமானது. இவ்வாறு விதிகள் தெளிவாக இருந்தாலும் சிறைவாசிகள் விடுதலை என்பது பாரபட்சமாக, தன்னிச்சையாகத்தான் இதுவரை கையாளப்பட்டு வந்திருக்கிறது என்று கூறுகிறார்.

அதிகார வர்க்கத்தில் இருப்பவர்களின் மனிதாபிமானமற்ற செயலால் இன்றைக்கு பல இஸ்லாமியச் சகோதரர்களின் வாழ்க்கை சிறைச் சாலைகளுக்குள்ளேயே முடிந்து விடுகிறது.

அனைத்து விஷயங்களிலும் மனிதாபிமானம் பேணப்பட வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது. நபி அவர்கள் இஸ்லாத்திற்கு கலங்கத்தை ஏற்படுத்தியவர்கள், இஸ்லாமியர்களுக்கு பெரும் தொல்லைகளைக் கொடுத்தவர்கள் மீதும் இரக்கம் கொண்டு மனிதாபிமான அடிப்படையில் அவர்களை மன்னித்து விட்ட வரலாறுகள் நிறைய உண்டு.

أن عمر بن الخطاب قال لرسول الله صلى الله عليه وسلم : يا رسول الله ، دعني أنزع ثنيتي سهيل بن عمرو ، ويدلع لسانه ، فلا يقوم عليك خطيبا في موطن أبدا ، قال : فقال رسول الله صلى الله عليه وسلم : لا أمثل به فيمثل الله بي وإن كنت نبيا

ஸுஹைல் பின் அம்ர் குரைஷித் தலைவர்களுள் மதிப்புமிக்க ஒருவர். ராஜ தந்திரம், அசாத்திய நாவன்மை, அறிவுக் கூர்மை மிக்கவர். ஆனால் இஸ்லாமிய விரோதப் போக்கு மட்டும் அவரிடம் பெருமளவில் நிறைந்திருந்தது. நபியவர்கள் ஏகத்துவப் பிரச்சாரத்தைத் துவங்கிய காலத்தில் அவர்களுக்கு எதிராகத் தமது நாவன்மையைப் பயன் படுத்திய முக்கியமான ஒருவர் ஸுஹைல்.

சுஹைலின் இஸ்லாமிய விரோதப் போக்கையும் நபியவர்களுக்கு எதிரான அவரது பேச்சையும் பிரச்சாரத்தையும் நன்கு அறிந்திருந்தவர் உமர் ரலி அவர்கள். அதனால் அவருக்குள் சுஹைலின் மீது நீண்ட நாளாய் மிகப்பெரிய ஆத்திரம் இருந்து கொண்டே இருந்தது. இந்நிலையில் அவர் பத்ரில் கைதியாக பிடிபட்டார். அவர் வசமாக முஸ்லிம்களிடம் சிக்கியதும், உமர் நபியவர்களிடம் சென்று, “அல்லாஹ்வின் தூதரே! சுஹைலின் முன் பற்களை நான் உடைத்து எடுத்து விடுகிறேன். அதன் பிறகு அவரது நாக்குத் துறுத்தி, எங்கும் எவர் முன்னிலையிலும் தங்களுக்கு எதிராகப் பேச இயலாதவராக ஆகிவிடுவார்என்று அனுமதி கேட்டார்கள்.

அதற்கு முஹம்மது நபி அவர்கள், “நான் எவருடைய அங்கத்தையும் சிதைக்க மாட்டேன். ஏனெனில் நான் அல்லாஹ்வின் தூதராகவே இருந்த போதிலும் அல்லாஹ் என் அங்கத்தைச் சிதைக்கக்கூடும். ஒரு காலம் வரலாம். அப்பொழுது இவர் எழுந்து நின்று பேசப்போகும் பேச்சு நீங்கள் குறை காணமுடியாத ஒன்றாக அமையக்கூடும்என்று பதில் அளித்தார்கள். அவர்கள் சொன்னதைப் போன்றே ஸுஹைல் பின் அம்ர் அவர்கள் மக்கா வெற்றியின் போது இஸ்லாத்தை ஏற்றார்கள். (ஸீரத்து இப்னு ஹிஷாம்)

عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ ، أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ يَقُولُ : بَعَثَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَيْلًا قِبَلَ نَجْدٍ، فَجَاءَتْ بِرَجُلٍ مِنْ بَنِي حَنِيفَةَ يُقَالُ لَهُ : ثُمَامَةُ بْنُ أُثَالٍ سَيِّدُ أَهْلِ الْيَمَامَةِ، فَرَبَطُوهُ بِسَارِيَةٍ مِنْ سَوَارِي الْمَسْجِدِ، فَخَرَجَ إِلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ : " مَاذَا عِنْدَكَ يَا ثُمَامَةُ ؟ " فَقَالَ : عِنْدِي يَا مُحَمَّدُ خَيْرٌ إِنْ تَقْتُلْ تَقْتُلْ ذَا دَمٍ ، وَإِنْ تُنْعِمْ تُنْعِمْ عَلَى شَاكِرٍ، وَإِنْ كُنْتَ تُرِيدُ الْمَالَ فَسَلْ تُعْطَ مِنْهُ مَا شِئْتَ. فَتَرَكَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى كَانَ بَعْدَ الْغَدِ، فَقَالَ : " مَا عِنْدَكَ يَا ثُمَامَةُ ؟ " قَالَ : مَا قُلْتُ لَكَ ؛ إِنْ تُنْعِمْ تُنْعِمْ عَلَى شَاكِرٍ، وَإِنْ تَقْتُلْ تَقْتُلْ ذَا دَمٍ، وَإِنْ كُنْتَ تُرِيدُ الْمَالَ فَسَلْ تُعْطَ مِنْهُ مَا شِئْتَ. فَتَرَكَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى كَانَ مِنَ الْغَدِ، فَقَالَ : " مَاذَا عِنْدَكَ يَا ثُمَامَةُ ؟ " فَقَالَ : عِنْدِي مَا قُلْتُ لَكَ ؛ إِنْ تُنْعِمْ تُنْعِمْ عَلَى شَاكِرٍ، وَإِنْ تَقْتُلْ تَقْتُلْ ذَا دَمٍ، وَإِنْ كُنْتَ تُرِيدُ الْمَالَ فَسَلْ تُعْطَ مِنْهُ مَا شِئْتَ. فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " أَطْلِقُوا ثُمَامَةَ ". فَانْطَلَقَ إِلَى نَخْلٍ قَرِيبٍ مِنَ الْمَسْجِدِ، فَاغْتَسَلَ، ثُمَّ دَخَلَ الْمَسْجِدَ، فَقَالَ : أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، يَا مُحَمَّدُ وَاللَّهِ، مَا كَانَ عَلَى الْأَرْضِ وَجْهٌ أَبْغَضَ إِلَيَّ مِنْ وَجْهِكَ فَقَدْ أَصْبَحَ وَجْهُكَ أَحَبَّ الْوُجُوهِ كُلِّهَا إِلَيَّ، وَاللَّهِ مَا كَانَ مِنْ دِينٍ أَبْغَضَ إِلَيَّ مِنْ دِينِكَ فَأَصْبَحَ دِينُكَ أَحَبَّ الدِّينِ كُلِّهِ إِلَيَّ، وَاللَّهِ مَا كَانَ مِنْ بَلَدٍ أَبْغَضَ إِلَيَّ مِنْ بَلَدِكَ فَأَصْبَحَ بَلَدُكَ أَحَبَّ الْبِلَادِ كُلِّهَا إِلَيَّ، وَإِنَّ خَيْلَكَ أَخَذَتْنِي وَأَنَا أُرِيدُ الْعُمْرَةَ، فَمَاذَا تَرَى ؟ فَبَشَّرَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَأَمَرَهُ أَنْ يَعْتَمِرَ، فَلَمَّا قَدِمَ مَكَّةَ قَالَ لَهُ قَائِلٌ : أَصَبَوْتَ ؟ فَقَالَ : لَا، وَلَكِنِّي أَسْلَمْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَلَا وَاللَّهِ لَا يَأْتِيكُمْ مِنَ الْيَمَامَةِ حَبَّةُ حِنْطَةٍ، حَتَّى يَأْذَنَ فِيهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ.

நபி அவர்கள் நஜ்த் பகுதியை நோக்கி குதிரைப் படையொன்றை அனுப்பினார்கள். அந்தப் படையினர் பனூ ஹனீஃபா குலத்தைச் சேர்ந்த சுமாமா பின் உஸால் என்றழைக்கப்படும் மனிதர் ஒருவரைக் (கைது செய்து) கொண்டு வந்தார்கள். பள்ளிவாசலின் தூண்களில் ஒன்றில் அவரைக் கட்டிப் போட்டார்கள்.

நபி அவர்கள், அவரிடம் வந்து, “நீ என்ன கருதுகின்றாய்? சுமாமாவே!என்று கேட்டார்கள். அதற்கு அவர், “நான் நல்லதையே கருதுகின்றேன். நீங்கள் என்னைக் கொன்றால் இரத்தப் பழி வாங்க வேண்டிய ஒருவனையே கொன்றீர்கள். (என்னை மன்னித்து) நீங்கள் உபகாரம் செய்தால் நன்றி செய்யக் கூடிய ஒருவனுக்கே உபகாரம் செய்கின்றீர்கள். நீங்கள் செல்வத்தை விரும்பினால் அதில் நீங்கள் விரும்புவதைக் கேளுங்கள்என்று பதிலளித்தார். அவரை நபியவர்கள் விட்டு விட்டார்கள். மறுநாள் வந்த போது, அவரிடம், “சுமாமாவே! நீ என்ன கருதுகின்றாய்?” என்று நபி அவர்கள் கேட்டார்கள். அவர், “நான் ஏற்கனவே தங்களிடம் சொன்னதைத் தான் கருதுகின்றேன்என்று பதிலளித்தார். நபி அவர்கள் விட்டு விட்டார்கள். மூன்றாவது நாள் கேட்ட போது அப்போதும் அதே பதிலைக் கூறினார். சுமாமை அவிழ்த்து விடுங்கள்என்று கூறினார்கள்.

உடனே சுமாமா, பள்ளிவாசலுக்கு அருகிலிருந்த பேரீச்சந் தோட்டத்திற்குச் சென்று குளித்து விட்டுப் பள்ளிவாசலுக்கு வந்து, “வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு எவருமில்லை என்று நான் உறுதி கூறுகின்றேன். மேலும், முஹம்மது அல்லாஹ்வின் தூதர் என்றும் நான் உறுதி கூறுகின்றேன்என்று மொழிந்தார்.

பிறகு, அல்லாஹ்வின் மீதாணையாக! முன்பு உங்கள் முகத்தை விட என்னிடம் வெறுப்புக்குரிய முகம் பூமியில் வேறெதுவும் இருக்க வில்லை. ஆனால் (இன்று) உங்களுடைய முகம் எல்லா முகங்களை விடவும் பிரியமானதாக ஆகி விட்டது. அல்லாஹ்வின் மீதாணையாக! முன்பு உங்கள் மார்க்கத்தை விட என் வெறுப்புக்குரிய மார்க்கம் வேறெதுவும் இருக்க வில்லை. ஆனால் இன்று மார்க்கங்களிலேயே எனக்கு மிகவும் பிரியமானதாக உங்கள் மார்க்கம் ஆகி விட்டது. அல்லாஹ்வின் மீதாணையாக! முன்பு உங்கள் ஊரை விட எனக்கு வெறுப்பான ஊர் வேறெதுவும் இருக்க வில்லை. ஆனால் இப்போது உங்கள் ஊரே எனக்கு மிகவும் பிரியமான ஊராகி விட்டது. உங்கள் குதிரைப் படையினர் என்னைப் பிடித்துக் கொண்டு விட்டனர்என்று கூறிவிட்டு, “நான் இப்போது (மக்காவிற்குச் சென்று) உம்ராச் செய்ய விரும்புகின்றேன். நீங்கள் என்ன கருதுகின்றீர்கள்?” என்று கேட்டார்.

அல்லாஹ்வின் தூதர் அவர்கள் அவருக்கு நற்செய்தி கூறி உம்ராச் செய்ய அனுமதி அளித்தார்கள். அவர் மக்காவிற்குச் சென்ற போது, ஒருவர் அவரிடம், “நீ மதம் மாறி விட்டாயா?” என்று கேட்டார். அதற்கு சுமாமா ரலி அவர்கள்அல்லாஹ்வின் மீதாணையாக! இல்லை. மாறாக, அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் அவர்களுடன் இணைந்து இறைவனுக்குக் கீழ்ப்படியும் முஸ்லிமாக மாறி விட்டேன். அல்லாஹ்வின் மீதாணையாக! நபி அவர்கள் அனுமதி தரும் வரை (எனது நாடான) யமாமாவிலிருந்து ஒரு கோதுமை தானியம் கூட (மக்காவாசிகளான) உங்களுக்கு வராதுஎன்று சொன்னார். (இப்னு ஹிப்பான் ; 1239)

فجمع علي أموال وأغنام وأسرى القبيلة معًا، إلى المدينة المنورة، وكان من ضمن السبايا سفانة بنت حاتم الطائي، ‏ فجعلوا بنت حاتم في حظيرة بباب المسجد، كانت السبايا يحبسن فيها، فمر بها رسول الله صلى الله عليه وسلم فقامت إليه، وكانت امرأة جزلة أي مفوهة اللسان، فقالت: "‏ يا رسول الله، هلك الوالد، وغاب الوافد، فامنن علي من الله عليك.‏ قال:‏ من وافدكِ ‏؟‏ قالت:‏ عدي بن حاتم.‏ قال:‏ الفار من الله ورسوله؟‏!

ثم مضى رسول الله صلى الله عليه وسلم وتركها، حتى إذا كان من الغد مر بها، فقالت له مثل ذلك وذكر لها مثل ما قال بالأمس.‏ قالت ‏سفانة: "‏ حتى إذا كان بعد الغد مر بي، وقد يئست منه، فأشار إلي رجلٌ من خلفه أن قومي فكلميه، قالت:‏ فقمت إليه، فقلت:‏ يا رسول الله، هلك الوالد، وغاب الوافد، فامنن علي من الله عليك.‏ فقال صلى الله عليه وسلم:‏ قد فعلت فلا تعجلي بخروج حتى تجدي من قومك من يكون لك ثقة، حتى يبلغك إلى بلادك، ثم آذنيني.‏ فسألت عن الرجل الذي أشار إلى أن أكلمه، فقيل:‏ علي بن أبي طالب رضوان الله عليه.‏ وأقمت حتى قدم ركب من بلي أو قضاعة، قالت:‏ وإنما أريد أن آتي أخي بالشام.‏ فجئت رسول الله صلى الله عليه وسلم فقلت:‏ يا رسول الله، قد قدم رهط من قومي، لي فيهم ثقة وبلاغ.‏ قالت:‏ فكساني رسول الله صلى الله عليه وسلم، وحملني، وأعطاني نفقة، فخرجت معهم حتى قدمت الشام ‏، فنصحت أخاها بالإسلام قال عدي:‏ فوالله إني لقاعد في أهلي إذ نظرت إلى ظعينة تصوب إلي تَؤُمُّنا، قال:‏ فقلت ابنة حاتم.‏ قال:‏ فإذا هي هي، فلما وقفت علي انسحلت تقول:‏ القاطع الظالم، احتملت بأهلك وولدك، وتركت بقية والدك عورتك ‏!‏ قال:‏ قلت:‏ أي أخيه لا تقولي إلا خيرا، فوالله ما لي من عذر لقد صنعت ما ذكرت.‏ قال:‏ ثم نزلت فأقامت عندي، فقلت لها:‏ وكانت امرأة حازمة، ماذا ترين في أمر هذا الرجل ‏؟‏ قالت:‏ أرى والله أن تلحق به سريعاً، فإن يكن الرجل نبيا فللسابق إليه فضله، وإن يكن ملكاً فلن تذل في عز اليمن، وأنت أنت.‏ قال:‏ قلت:‏ والله إن هذا الرأي.‏

 

قال فخرجت حتى أقدم على رسول الله صلى الله عليه وسلم المدينة، فدخلت عليه وهو في مسجده، فسلمت عليه، فقال:‏ من الرجل ‏؟‏ فقلت:‏ عدي بن حاتم، فقام رسول الله صلى الله عليه وسلم، فانطلق بي إلى بيته، فوالله إنه لعامد بي إليه، إذ لقيته امرأة ضعيفة كبيرة، فاستوقفته، فوقف لها طويلاً تكلمه في حاجتها ‏ قال:‏ قلت في نفسي:‏ والله ما هذا بملك ‏!‏ قال:‏ ثم مضى بي رسول الله صلى الله عليه وسلم، حتى إذا دخل في بيته، تناول وسادة في أدم محشوة ليفا، فقذفها إلي، فقال:‏ اجلس على هذه، قال:‏ قلت:‏ بل أنت فاجلس عليها، فقال:‏ بل أنت، فجلست عليها، وجلس رسول الله صلى الله عليه وسلم بالأرض.‏ قال:‏ قلت في نفسي:‏ والله ما هذا بأمر ملك

ஹிஜ்ரீ எட்டாம் ஆண்டு மக்காவின் பெருவெற்றிக்குப் பின் நபியவர்கள் மதீனாவுக்குத் திரும்பி விட்டார்கள். அதற்கடுத்த ஆறு மாதங்கள் பெரும்பாலும் அமைதியுடன் கழிந்தன. இருந்தாலும் முக்கியமான சில நடவடிக்கைகளை பெருமானார் அவர்கள் மேற்கொண்டார்கள். அதில் ஒன்று இஸ்லாமிய ஏகத்துவத்திற்கு நேர் முரணான உருவ வழிபாட்டுச் சிலைகள் எந்தப் பகுதியிலெல்லாம் இருந்தனவோ அங்கெல்லாம் முக்கியமான தோழர்களின் தலைமையில் படையை அனுப்பி வைத்தார்கள்.

அல் ஃபலஸ் என்றொரு சிலை தாயீ எனும் குலத்தினருக்கு குலக் கடவுளாக இருந்தது. ஹள்ரத் அலி ரலி அவர்களின் தலைமையில் தோழர்கள் நூற்றி ஐம்பது பேரைத் திரட்டி தாயீ குலத்தினர் வாழும் பகுதிக்குச் சென்று அந்தச் சிலையை அழித்து விட்டு வரும்படிக் கட்டளையிட்டார்கள்.

தாயீ குலத்தினரின் தலைவராக அப்போது கொடை வள்ளல் ஹாதிம் இப்னு அப்துல்லாஹ்வின் மகன் அதீ பின் ஹாதிம் இருந்தார். இப்படி ஒரு படை கிழம்பி வருகிறது என்பதை அறிந்தவுடன் தம் வீட்டுப் பெண்கள், பிள்ளைகள் அனைவரையும் அழைத்துக் கொண்டு ஸிரியாவிற்கு புறப்பட்டு விட்டார். அவசரத்தில் சகோதரி ஸுஃபானா பின்த் ஹாதிமை மறந்து விட்டுச் சென்று விட்டார் அதீ பின் ஹாதிம்.

 

தாயீ மக்களின் ஊருக்குள் வந்த முஸ்லிம்களின் படை அல் ஃபலஸ் சிலையை உடைத்து அந்தப் பகுதியை உருவ வழிபாட்டிலிருந்து மீட்டது. எதிர்த்துச் சண்டையிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். அந்தப் போரில் முஸ்லிம்கள் கைப்பற்றியவர்களில் சில பெண்கள். அந்தப் பெண்களுள் ஒருவர் ஸுஃபானா.

பள்ளிவாசலுக்கு வெளியே போர்க் கைதிகளைச் சிறை வைக்கும் கொட்டடி ஒன்றிருந்தது. பலர் அதில் சிறை வைக்கப்பட்டிருந்தனர். அதில் ஸுஃபானாவும் இருந்தார். அவர் நபியவர்கள் அவ்வழியே பள்ளிவாசலுக்குச் செல்லும் போது அல்லாஹ்வின் தூதரே! என் தந்தை இறந்து விட்டார். எங்களின் தலைவரோ எங்களை விட்டு ஓடி விட்டார். தாங்கள் தான் என்மீது கருணை காட்ட வேண்டும்! என்று கூறினார்.

உன்னைக் கைவிட்ட பாதுகாவலர் யார்?” நபியவர்கள் விசாரித்தார்கள். அதீ பின் ஹாதிம் என்று பதில் சொன்னார் ஸுஃபானா. அல்லாஹ் விடமிருந்தும் அவனுடைய தூதரிடமிருந்தும் ஓடிப்போனாரே அவரா?” என்று கேட்டு விட்டு நபியவர்கள் வேறேதும் பேசாமல் அங்கிருந்து சென்று விட்டார்கள். அடுத்த நாள். நபியவர்கள் அப்பகுதியைக் கடந்து செல்லும் போது மீண்டும் அதேபோல் முறையிட்டார் ஸுஃபானா. முந்தைய நாளைப் போலவே இன்றும் நபியவர்கள் அவரிடம் அதே கேள்வியைக் கேட்டு விட்டுச் சென்று விட்டார்கள்.

அதற்கு அடுத்த நாளும் நபியவர்கள் அதேபோல் அந்த இடத்தைக் கடந்தார்கள். ஆனால் தம் முயற்சியில் நம்பிக்கை இழந்திருந்த ஸுஃபானா இம்முறை ஏதும் பேசாமல் அமைதியாக இருந்து விட்டார். ஆனால் நபியவர்களின் பின்னால் ஒரு முக்கியத் தோழர் வந்து கொண்டிருந்தார். அவர் ஸுஃபானாவிடம்முறையிடுஎன்பது போல் சைகை செய்து தூண்டினார்.

அல்லாஹ்வின் தூதரே! என் பெற்றோர் இறந்து விட்டனர். என்னுடைய பாதுகாவலர் என்னைக் கை விட்டு மறைந்து விட்டார். என்னிடம் கருணை புரியுங்கள். அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரிவானாகஎன்று வார்த்தை பிசகாமல் அதே வேண்டுகோளை விடுத்தார் ஸுஃபானா.

இம்முறை நபியவர்களின் பதில் வேறுவிதமாக அமைந்தது. நான் உன்னை விடுவிக்கிறேன். ஆனால் அவசரப்பட்டு நீ வெளியேற வேண்டாம். உன் குலத்தைச் சேர்ந்த நம்பகமானவர்கள் இங்கு வந்தால், அவர்கள் உன்னைப் பத்திரமாக உன் மக்களிடம் அழைத்துச் செல்வார்கள் என்று நீ நம்பினால், என்னிடம் தெரிவிக்கவும் என்று கூறினார்கள்.

தம் குலத்து மக்கள் யாரேனும் மதீனாவிற்கு வரமாட்டார்களா என்று ஸுஃபானா மதீனாவில் காத்திருக்க ஆரம்பித்தார். ஒருநாள் பலீ அல்லது குதாஆ எனும் குலத்தைச் சேர்ந்த வணிகக் குழு மதீனா வந்தடைந்தது. அக்குலம் அந்தப் பெண் சார்ந்திருந்த கோத்திரத்தின் கிளைக்குலமே. அப்படியொரு வணிகக்குழு வந்துள்ளது என்ற செய்தி தெரிய வந்ததும் ஸிரியாவிலுள்ள தம் சகோதரனிடம் திரும்பத் துடித்து, உடனே நபியவர்களிடம் விரைந்தார் ஸுஃபானா.

அல்லாஹ்வின் தூதரே! என் குல மக்களின் குழுவொன்று மதீனா வந்துள்ளது. அவர்கள் நம்பிக்கைக்குரியவர்கள் என நான் நம்புகிறேன் என்றார்.நல்ல துணிமணிகள், சிறிதளவு பணம், பயணிக்க ஓர் ஒட்டகம் எனக் கொடை அளித்து அந்த வணிகக் கூட்டத்துடன் ஸுஃபானாவை அனுப்பி வைத்தார்கள் வள்ளல் நபியவர்கள். ஸிரியாவை நோக்கிப் பயணம் கிளம்பினார் ஸுஃபானா. ஆனால் அவர் மனதில் மட்டும் தன்னை விட்டுச் சென்ற தன் உடன் பிறப்பின் மீது ஏகக் கோபம்!

அங்கே சென்றுகருணையற்ற, இரக்கமற்ற மனிதனே! உன் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு உடன் பிறந்த சகோதரி என்னை விட்டுவிட்டாயேஎன்று கோபத்துடன் தம் சகோதரரை சரமாரியாக வசை பாடினார்.அதீ பின் ஹாதிம் மன்னிப்புக் கேட்டார்.

பின்பு ஒரு நாள் அதீ பின் ஹாதிம் பெருமானார் அவர்களைப் பற்றி விசாரித்த போதுஉமக்கு எந்தளவு சாத்தியமோ அவ்வளவு துரிதமுடன் அவருடன் இணையவும். இதுவே உமக்கு மிகச் சிறந்த உபதேசம்.அந்த மனிதர் உண்மையிலேயே ஒரு நபியாக இருக்கும் பட்சத்தில் நீர் எவ்வளவு விரைவாக இணைகிறீரோ அந்தளவு உமக்கு நல்லது. மாறாக அவர் ஓர் அரசர் மட்டுமே எனில், உம்முடைய சமூக நிலையையும் சிறப்பையும் கவனத்தில் கொண்டால், அவருடன் இணைவதால் உமக்கு எந்தப் பாதகமும் இல்லை என்று சகோதரி கூறினார். பின்பு ஒரு நாள் அதீ பின் ஹாதிம் பெருமானாரை சந்தித்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள். (ஸீரத்து இப்னு ஹிஷாம்)

ولما سبيت هوازن وغنمت أموالهم في غزوة حنين قدمت وفودهم مسلمين على النبي صلى الله عليه وسلم؛ فقالوا يا رسول الله؛ لنا أصل وعشيرة؛ وأصابنا البلاء؛ فامنُنْ علينا من الله عليك، ثم قام أحدهم فقال يا رسول الله إنما في الحظائر عماتك وخالاتك وحواضنك اللائي كن يَكْفُلْنَكَ؛ فقال صلى الله عليه وسلم أبناؤكم ونساؤكم أحب إليكم أم أموالكم؟ فقالوا خيرتنا بين أموالنا وأحسابنا بل ترد علينا أبناءنا ونساءنا فهم أحب إلينا، فقال صلى الله عليه وسلم للمسلمين ردوا على الناس أبناءهم ونساءهم (رواه أحمد)

 

ஹுனைன் போர் முடிந்ததும், ஹவாஸின் குலத்தின் தூதுக்குழுவினர் நபி அவர்களிடம் முஸ்லிம்களாக வந்தனர். வந்தவர்கள் நபியவர்களிடம் முஸ்லிம்கள் ஹுனைன் போரில் கைப்பற்றிய தம் செல்வங்களையும் போர்க் கைதிகளையும் திருப்பித்தந்து விடும்படி கேட்டனர். அப்போது நபி அவர்கள், 'இந்தப் போர் வீரர்களும் இருக்கின்றனர். இவர்களுக்கும் நான் போர்ச் செல்வத்தில் பங்குதர வேண்டியுள்ளது. அதனால் போர்க் கைதிகள் அல்லது உங்கள் செல்வங்கள் இரண்டில் நீங்கள் விரும்பியதைத் திரும்பப் பெறுங்கள் என்று கூறினார்கள்.

நபி அவர்கள் இரண்டிலொன்றை திருப்பித் தருவார்கள் என்று அவர்களுக்குத் தெளிவாகி விட்ட போது, 'எங்கள் கைதிகளையே நாங்கள் திரும்பப் பெற்றுக் கொள்கிறோம்' என்று கூறினார்கள். அப்போது நபி அவர்கள் நம்மிடம் போர்க் கைதிகளாக இருப்பவர்களை இவர்களிடமே திருப்பிக் கொடுத்து விடும்படிக் கூறினார்கள். (அஸ்ஸுனனுல் குப்ரா லில் பைஹகி)

இப்படி கைதிகளாக பிடிபட்டவர்களை கருணை உள்ளம் கொண்டு விடுவித்ததினால் அவர்களின் உள்ளங்கள் ஈர்க்கப்பட்டு இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட எண்ணற்ற நிகழ்வுகள் வரலாறுகளில் பதிவு செய்யப் பட்டிருக்கிறது.

இந்தக் கருணையும் மனிதாபிமானமும் இன்றைக்குள்ள தலைவர்களிடம் இல்லை. அதனால் இன்றைக்கு செய்யாத குற்றத்திற்காக இஸ்லாமிய இளைஞர்கள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இளமையைத் தொலைத்து, பெற்றோர்களைப் பிரிந்து, மனைவி மக்களைத் துறந்து, சொந்த பந்தங்களை இழந்து, நிர்க்கதியாக, நோயாளிகளாக சிறையின் கம்பிகளுக்குப் பின்னால் மரணத்தின் நாட்களை எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள்.இவ்வளவு காலங்களாக சிறைவாசம் அனுபவித்து விட்ட அவர்கள் வாழ்வின் கடைசி பொழுதுகளையாவது அவர்களின் குடும்பத்தோடு கழிப்பதற்காக கருணை உள்ளம் கொண்டு மனிதாபிமான அடிப்படையில் அவர்களை விடுதலை செய்ய அரசு முன் வர வேண்டும். அல்லாஹ் தவ்ஃபீக் செய்வானாக!

 

No comments:

Post a Comment