Pages

Pages

Tuesday, March 28, 2023

வேண்டாம் அவர்களின் தொடர்பு

 

وَاِذَا رَاَيْتَ الَّذِيْنَ يَخُوْضُوْنَ فِىْۤ اٰيٰتِنَا فَاَعْرِضْ عَنْهُمْ حَتّٰى يَخُوْضُوْا فِىْ حَدِيْثٍ غَيْرِهٖ‌  وَاِمَّا يُنْسِيَنَّكَ الشَّيْطٰنُ فَلَا تَقْعُدْ بَعْدَ الذِّكْرٰى مَعَ الْقَوْمِ الظّٰلِمِيْنَ

(நபியே!) நம் வசனங்களைப் பற்றி (வீண்) விவாதங்களில் மூழ்கிப் போவோர்களை நீங்கள் கண்டால், அவர்கள் அதனைத் தவிர்த்து வேறு விஷயத்தில் பிரவேசிக்கும் வரையில் நீங்கள் அவர்களைப் புறக்கணித்து விடுங்கள். (இக்கட்டளையை) ஷைத்தான் உங்களுக்கு மறக்கடித்து (அவர்களுடன் நீங்களும் இருந்து) விட்டால், அது நினைவுக்கு வந்ததன் பின்னர் அந்த அநியாயக்கார மக்களுடன் அமர்ந்திருக்க வேண்டாம். (அல்குர்ஆன் : 6:68)

நபி அவர்கள் மக்களை இஸ்லாத்தின் பக்கம் அழைத்துக் கொண்டிருப்பார்கள். அல்லாஹ்வைப்பற்றி சொல்லிக் கொண்டிருப் பார்கள். ஆனால் அவர்களோ அல்லாஹ்வையும் தீனையும் கேலி செய்து கொண்டிருப்பார்கள்.அத்தகைய மக்களுடன் நீங்கள் அமர வேண்டாம் என்று இறைவன் கூறுகிறான்.

இது பெருமானார் அவர்களுக்கு சொல்லப்பட்டாலும் அனைத்து முஃமின்களுக்கும் பொதுவானது. தீனில் வீண் விவாதங்கள் செய்பவர்கள்,பாவமான காரியங்களில் ஈடுபடுபவர்கள், அல்லாஹ் வையும் அவனுடைய தூதரான முஹம்மது நபி அவர்களை கண்ணியக்குறைவாக பேசுபவர்கள், மார்க்கத்தை தவறாக விமர்சிப்பவர்கள், இதுபோன்ற நபர்களுடன் அமரக்கூடாது.  

وَرَوَى شِبْلٌ عَنِ ابْنِ أَبِي نَجِيحٍ عَنْ مُجَاهِدٍ فِي قَوْلِهِ: "وَإِذا رَأَيْتَ الَّذِينَ يَخُوضُونَ فِي آياتِنا" قَالَ: هُمُ الَّذِينَ يَسْتَهْزِئُونَ بِكِتَابِ اللَّهِ، نَهَاهُ اللَّهُ عَنْ أَنْ يَجْلِسَ مَعَهُمْ إِلَّا أَنْ يَنْسَى فَإِذَا ذَكَرَ قَامَ

தவறு செய்பவர்களைக் கண்டால் அந்த நேரத்தில் அவர்களுடன் அமரக்கூடாது. மறந்து உட்கார்ந்து விட்டால் கூட உடனே எழுந்திருத்து விட வேண்டும் என முஜாஹித் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.

وَقَالَ الْفُضَيْلُ بْنُ عِيَاضٍ: مَنْ أَحَبَّ صَاحِبَ بِدْعَةٍ أَحْبَطَ اللَّهُ عَمَلَهُ وَأَخْرَجَ نُورَ الْإِسْلَامِ مِنْ قَلْبِهِ، ، وَمَنْ جَلَسَ مَعَ صَاحِبِ بِدْعَةٍ لَمْ يُعْطَ الْحِكْمَةَ،

மார்க்கம் வழிகாட்டாத புதிய காரியங்களை செய்பவனை ஒருவன் நேசித்தால் அவனுடைய அமல்களை அல்லாஹ் அழித்து விடுவான். அவனுடைய உள்ளத்திலிருந்து ஈமானிய ஒளியை நீக்கி விடுவான். பித்அத் செய்பவனுடன் ஒருவன் அமர்ந்தால் அல்லாஹ்விடமிருந்து ஞானங்கள் அவனுக்கு வழங்கப்படாது என்று ஃபுளைல் பின் இயாழ் ரலி அவர்கள் கூறுகிறார்கள். (குர்துபீ)

وَقَدْ قَالَ بَعْضُ أَهْلِ الْبِدَعِ لِأَبِي عِمْرَانَ النَّخَعِيِّ: اسْمَعْ مِنِّي كَلِمَةً، فَأَعْرَضَ عَنْهُ وَقَالَ: وَلَا نِصْفَ كَلِمَةٍ

ஒரு பித்அத்வாதி இம்ரான் நஹயீ ரஹ் அவர்களிடம் என்னிடமிருந்து ஒரு வார்த்தையைக் கேளுங்கள் என்றான். அதற்கவர்கள் பாதி வார்த்தையைக் கூட நான் கேட்க தயாராக இல்லை என்று கூறி விட்டார்கள். (குர்துபீ)

عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ : "مَنْ وَقَّرَ صَاحِبَ بِدْعَةٍ فَقَدْ أَعَانَ عَلَى هَدْمِ الْإِسْلَامِ

பித்அத் செய்பவனை யார் கண்ணியப்படுத்துகிறானோ அவன் இஸ்லாத்தை தகர்ப்பதற்கு உதவி செய்து விட்டான் என்று ஆயிஷா ரலி அவர்கள் கூறுகிறார்கள்.(குர்துபீ)

وقال إبراهيم النخعي: (لا تجالسوا أصحاب الأهواء ولا تكلموهم فإني أخاف أن ترتد قلوبكم

இப்ராஹீம் நஹயீ ரஹ் அவர்கள் கூறுகிறார்கள் ; மனோஇச்சையைப் பின்பற்றுபவர்களோடு நீங்கள் அமர வேண்டாம். அவர்களுடன் பேச வேண்டாம். அவ்வாறு செய்தால் உங்கள் உள்ளத்தில் தடுமாற்றம் ஏற்பட்டு விடும். (குர்துபீ)

دخل رجلان من أصحاب الأهواء على ابن سيرين فقالا: يا أبا بكر: نحدثك بحديث؟ قال: لا قالا: فنقرأ عليك آية من كتاب الله؟ قال: لا لتقومان عني أو لأقومن قال: فخرجا فقال بعض القوم: يا أبا بكر: وما كان عليك أن يقرآ عليك آية من كتاب الله تعالى؟! قال: إني خشيت أن يقرآ علي آية فيحرفانها فيقر ذلك في قلبك

அல்லாஹ்வை அஞ்சாமல் மனோ இச்சையின் படி பேசுகின்ற, மனோஇச்சையின் படி நடக்கின்ற இரண்டு மனிதர்கள்  இப்னு ஸீரீன் ரஹ் அவர்களிடத்தில் வந்து நாங்கள் உங்களுக்கு ஒரு ஹதீஸை சொல்கிறோம் என்றார்கள். வேண்டாம் என்று கூறி விட்டார்கள். ஒரு குர்ஆன் வசனத்தை நாங்கள் ஓதிக் காட்டுகிறோம் என்ற போது அப்போதும் வேண்டாம் என்று சொல்லி விட்டார்கள். நீங்கள் இங்கிருந்து எழுந்து சென்று விடுங்கள். அல்லது நான் எழுந்து சென்று விடுவேன் என்றார்கள். அவ்விருவரும் போய் விட்டார்கள். ஒரு மனிதர் இப்னு ஸீரீன் அவர்களே அவர் குர்ஆனுடைய வசனத்தைத் தானே ஓதப் போகிறார். அதில் என்ன தவறு இருக்கிறது என்று கேட்டார். அப்போது அவர்கள் சொன்னார்கள் ; அவர்கள் இறைவனுக்கு அஞ்சாதவர்கள். மனோ இச்சையின் படி வாழக்கூடியவர்கள். அவர்கள் குர்ஆன் வசனத்தை திரித்து மாற்றி சொல்லி விடுவார்கள். அது உன் உள்ளத்தில் ஏதும் பாதிப்பை ஏற்படுத்தி விடும் என்று அஞ்சுகிறேன் என்றார்கள்.

மேலே குறிப்பிட்ட மனிதர்களுடன் ஏன் அமரக்கூடாது என்பதற்கு இப்னு ஸரீன் ரஹ் அவர்கள் மற்றும் இப்ராஹீம் நஹயீ ரஹ் அவர்கள் கூறிய விளக்கம் பொருத்தமாக இருக்கும். அவர்களுடன் ஒருவர் அமர்ந்தால் அவரின் உள்ளத்தில் தடுமாற்றங்கள் ஏற்படும். தேவையில்லாத சந்தேகங்கள் ஏற்படும். ஈமானில் பலவீனம் ஏற்படும். எனவே தான் தடுக்கப்பட்டுள்ளது.

நல்லவர்களுடன் அமரும் போது நல்ல மாற்றங்கள் ஏற்படும்.

مَثَلُ الجَلِيسِ الصَّالِحِ وَالسَّوْءِ، كَحَامِلِ المِسْكِ وَنَافِخِ الكِيرِ، فَحَامِلُ المِسْكِ: إِمَّا أَنْ يُحْذِيَكَ -[يعطيك]- وَإِمَّا أَنْ تَبْتَاعَ مِنْهُ، وَإِمَّا أَنْ تَجِدَ مِنْهُ رِيحًا طَيِّبَةً، وَنَافِخُ الكِيرِ: إِمَّا أَنْ يُحْرِقَ ثِيَابَكَ، وَإِمَّا أَنْ تَجِدَ رِيحًا خَبِيثَةً.

நல்ல நண்பனுக்கும் தீய நண்பனுக்கும் உதாரணம் கஸ்தூரி வைத்திருப்பவரும் கொல்லனின் உலையுமாகும். கஸ்தூரி வைத்திருப்பவரிடமிருந்து உனக்கு ஏதும் கிடைக்காமல் போகாது. ஒன்று அவர் அதை உனக்குத் தரலாம். அல்லது நீ அதை விலைக்கு வாங்கலாம். அல்லது அதன் நறுமணத்தையாவது நீ பெற்றுக் கொள்ளலாம். கொல்லனின் உலை உனது ஆடையை எரித்து விடும். அல்லது அவனிடமிருந்து கெட்ட வாடையை நீர் பெற்றுக் கொள்வாய். (புகாரி ; 2101)

 مجالسة الصالحين وأهلِ الخير والْمُروءة ومكارمِ الأخلاق والورع والعلمِ والأدبِ والنهيُ عن مجالسة أهلِ الشر وأهل البدع ومن يغتاب الناس أو يكثُرُ فُجرُه وبَطالتُه ونحوُ ذلك من الأنواع المذمومة.."

இந்த ஹதீஸ் நல்லோர்கள், சிறந்தவர்கள், மனிதநேயம் மிக்கவர்கள், நற்குணமுடையவர்கள், பேணுதல் மிக்கவர்கள், மார்க்கக் கல்வியையுடையவர்கள், ஒழுக்கமுடையவர்கள் ஆகியவர்களோடு அமர்வதின் சிறப்பைக் காட்டுகிறது. மேலும் தீயவர்கள், மார்க்கத்தில் இல்லாதவைகளை செய்யக்கூடியவர்கள், புறம் பேசுபவர்கள், பாவம் செய்யக்கூடியவர்கள், இது போன்றவர்களோடு அமர்வது தடுக்கப்பட்டுள்ளது என்பதையும் உணர்த்துகிறது என அல்லாமா நவவி ரஹ் அவர்கள் கூறுகிறார்கள். (ஷரஹு நவவி ; 16/187)

நல்லோர்களின் தொடர்பால் ஏற்படும் மாற்றம் என்பது அதற்கு நீண்ட காலங்கள் தேவையில்லை. ஒரு சில நிமிடங்கள் போதும். அதுவே அவரை பாக்கியசாலியாக மாற்றி விடும்.

إنَّ للهِ مَلائِكةً سَيَّاحينَ في الأَرْضِ، فُضُلًا عَن كُتَّابِ النَّاسِ، فإذا وجَدوا قَوْمًا يَذْكُرون اللهَ تنادَوْا: هَلُمُّوا إلى بُغْيَتِكم، فيَجيئُون، فيَحُفُّون بـهم إلى السَّماءِ الدُّنيا، فيَقولُ اللهُ: أَيَّ شَيْءٍ تركْتُم عِبادي يَصْنَعون؟ فيَقولون: ترَكْناهم يَـحْمَدُونك ويُـمَجِّدونك ويَذْكُرونك، فيَقولُ: هل رأَوْني؟ فيَقولون: لا، فيَقولُ: فكيف لو رأَوْني؟ فيَقولون: لو رأَوْك لكانوا لك أَشَدَّ تَـحْمِيدًا وتَـمْجيدًا وذِكْرًا، فيَقولُ: فأَيَّ شيْءٍ يَطْلُبون؟ فيَقولون: يَطلُبون الجنةَ، فيَقولُ: وهل رأَوْها؟ قال: فيَقولون: لا، فيَقولُ: فكيف لو رأَوْها؟ فيَقولون: لو رأَوْها كانوا أَشَدَّ عليها حِرصًا، وأَشدَّ لَـها طَلَبًا، قال: فيَقولُ: مِن أَيِّ شيءٍ يَتعَوَّذون؟ فيَقولون: مِن النَّارِ، فيَقولُ: وهل رأَوْها؟ فيَقولون: لا، قال: فيَقولُ: فكيف لو رأَوْها؟ فيَقولون: لو رأَوْها كانوا أَشَدَّ مِنها هَرَبًا، وأَشَدَّ مِنها خَوْفًا، قال: فيَقولُ: إنِّـي أُشْهِدُكم أنِّـي قد غفرْتُ لَـهم، قال: فيَقولون: فإنَّ فيهم فُلانًا الـخَطَّاءَ، لَـمْ يُرِدْهم، إنَّـما جاءَ لِـحاجَةٍ، فيَقولُ: هُمُ القَوْمُ لا يَشْقى بِـهِم جَلِيسُهم

 

 அல்லாஹ்விடம் சில வானவர்கள் உள்ளனர். அவர்கள் அல்லாஹ்வை நினைவு கூர்ந்து போற்றுவோரைத் தேடிய வண்ணம் தெருக்களில் சுற்றி வருகின்றனர். அல்லாஹ்வை நினைவு கூர்ந்து போற்றிக்கொண்டிருக்கும் ஒரு குழுவினரை அவர்கள் கண்டால் உங்கள் தேவையைப் பூர்த்தி செய்ய வாருங்கள்என்று அவர்கள் (தம்மில்) ஒருவரை ஒருவர் அழைக்கின்றனர். பின்னர் அந்த வானவர்கள் அல்லாஹ்வைப் போற்றுகிறவர்களைத் தம் இறக்கைகளால் முதல் வானம் வரை சூழ்ந்து கொள்கின்றனர். அப்போது அவ்வானவர்களிடம் அவர்களின் இறைவன் என் அடியார்கள் என்ன கூறுகின்றனர்?” என்று கேட்கிறான். அவ்வானவர்களை விட அவனே தம் அடியார்களை நன்கறிந்தவனாவன் என்று கூறி துதிக்கின்றனர். உன்னைப் பெருமைப்படுத்திக்கொண்டும், உன்னைப் புகழ்ந்து கொண்டும், உன்னைப் போற்றிக் கொண்டும் இருக்கின்றர்என்று வானவர்கள் கூறுகின்றனர்.  அதற்கு இறைவன், ”அவர்கள் என்னைப் பார்த்திருக்கிறார்களா?” என்று கேட்பான். அதற்கு வானவர்கள், ”இல்லை உன் மீதாணையாக! அவர்கள் உன்னைப் பார்த்ததில்லைஎன்று பதிலளிப்பார்கள். அதற்கு இறைவன், ”என்னைப் பார்த்திருந்தால் எப்படியிருப்பார்கள்?” என்று கேட்பான். வானவர்கள், ”உன்னை அவர்கள் பார்த்திருந்தால் இன்னும் அதிகமாக உன்னை வழிபடுவார்கள் இன்னும் கூடுதலாக உன்னைப் போற்றிப் புகழ்ந்து துதிப்பார்கள்என்று பதிலளிப்பார்கள்.  அதற்கு இறைவன், ”என்னிடம் அவர்கள் என்ன வேண்டுகிறார்கள்?” என்று (தனக்குத் தெரியாதது போன்று) கேட்பான். வானவர்கள், ”அவர்கள் உன்னிடம் சொர்க்கத்தைக் கேட்கின்றனர்என்பார்கள். அதற்கு இறைவன், ”அவர்கள் அதைப் பார்த்ததுண்டா?” என்று கேட்பான். அதற்கு வானவர்கள், ”இல்லை உன் மீதாணையாக! அதிபதியே! அவர்கள் அதனைப் பார்த்ததில்லைஎன்பர். அதற்கு இறைவன், ”அவ்வாறாயின் அதனை அவர்கள் பார்த்திருந்தால் அவர்கள் நிலை எப்படியிருக்கும்?” என்று கேட்பான். வானவர்கள், ”சொர்க்கத்தை அவர்கள் பார்த்திருந்தால் இன்னும் அதிகமாக அதன் மீது ஆசை கொண்டு, அதிக வேட்கையுடன் தீவிரமாக அதைத் தேடுவார்கள்என்று பதிலளிப்பார்கள்.  இறைவன், ”அவர்கள் எதிலிருந்து (என்னிடம்) பாதுகாப்புக் கோருகின்றனர்?” என்று வினவுவான். வானவர்கள், ”நரகத்திலிருந்து (பாதுகாப்புக் கோருகின்றனர்)என்று பதிலளிப்பார்கள். இறைவன், ”அதனை அவர்கள் பார்த்திருக்கிறார்களா?” என்று கேட்பான். வானவர்கள், ”இல்லை உன் மீதாணையாக! அதனை அவர்கள் பார்த்தில்லைஎன்பர். அதற்கு இறைவன், ”அவ்வாறாயின் அவர்கள் அதைப் பார்த்திருந்தால் அவர்கள் நிலை என்னவாக இருந்திருக்கும்?” என்று கேட்பான் வானவர்கள், ”நரகத்தை அவர்கள் பார்த்திருந்தால் நிச்சயம் அதிலிருந்து கடுமையாக வெருண்டோடுபவர்களாகவும் அதனை மிகவும் அஞ்சுபவர்களாகவும் இருப்பார்கள்என்பர்.  அப்போது இறைவன், ”எனவே (வானவர்களே!) அவர்களை நான் மன்னித்து விட்டேன் என்பதற்கு உங்களை நான் சாட்சிகளாக ஆக்குகிறேன்என்று கூறுவான். அந்த வானவர்களிடையே உள்ள ஒரு வானவர், ”(அந்தக் குழுவினரிடையே அமர்ந்திருந்த) இன்ன மனிதன், உன்னைப் போற்றுகிற அவர்களில் உள்ளவன் இல்லை. அவன் ஏதோ தேவை நிமித்தமாகவே அங்கு வந்தான்என்பார். அதற்கு இறைவன், ”அவர்கள் ஒன்றாக அமர்ந்துள்ள நண்பர்கள். அவர்களுடன் வந்து அமர்ந்த ஒருவன் அவர்களால் (பாக்கியம் பெறுவானே தவிர,) பாக்கியமற்றவனாக ஆகமாட்டான்என்று கூறுவான்.  (புகாரி ; 6408)

وعن ابن عباس رضي الله تعالى عنهما، قال قيل يا رسول الله صلى الله عليه وسلم: أيُّ جلسائنا خيرٌ؟ قال: "من ذَكَّركم بالله منظرُه، وزاد في علمِكم مَنطِقُه، وذكَّركم بالآخرة علمُه

நாங்கள் யாரோடு அமர்வது சிறந்தது என்று கேட்ட போது நபி அவர்கள் யாரைப் பார்த்தால் உங்களுக்கு இறைவனின் ஞாபகம் வருமோ அவர்களுடன் பேசுவது உங்கள் அறிவைப் பெருக்குமோ யாருடைய கல்விஞானம் உங்களுக்கு மறுமை நினைவுபடுத்துமோ அவர்களே சிறந்தவர்கள் என்றார்கள். (ஷுஃபுல் ஈமான்)

3 comments:

  1. அருமையான ஆக்கம்.
    தப்லீக், ஜாக், டவ்கீத், ஜமாஅத்தே இஸ்லாமி இது போன்ற ஜமாத்துக்காரர்கள் பித்அத்வாதிகளே என்பதில் கிஞ்சித்தும் சந்தேகம் இல்லை.



    ReplyDelete
  2. அருமையான குறிப்பு மாஷா அல்லாஹ் பாரக்கல்லாஹ்

    ReplyDelete