Pages

Pages

Wednesday, March 29, 2023

அஃராஃப்

 

وَبَيْنَهُمَا حِجَابٌ‌ وَعَلَى الْاَعْرَافِ رِجَالٌ يَّعْرِفُوْنَ كُلًّا بِسِيْمٰٮهُمْ‌  وَنَادَوْا اَصْحٰبَ الْجَـنَّةِ اَنْ سَلٰمٌ عَلَيْكُمْ‌ لَمْ يَدْخُلُوْهَا وَهُمْ يَطْمَعُوْنَ‏

(நரகவாசிகளும் சுவர்க்கவாசிகளும் ஆகிய) இவ்விருவருக்குமிடையில் ஒரு மதில் இருக்கும். அந்த மதிலின் சிகரத்தில் சில மனிதர்கள் இருப்பார்கள். (நரகவாசி சுவர்க்கவாசியாகிய) ஒவ்வொருவரையும் அவர்களின் (முகக்) குறியைக் கொண்டே இவர்கள் அறிந்து கொள்வார்கள். இவர்கள் சுவர்க்கவாசிகளை நோக்கி "(இறைவனுடைய) சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாவதாகுக!" என்று சப்தமிட்டுக் கூறுவார்கள். (சிகரத்தில் இருக்கும்) இவர்கள் (இதுவரையிலும்) சுவர்க்கத்தில் நுழையவில்லை. எனினும், அவர்கள் (அதில் நுழைவதை) மிக ஆவலுடன் ஆசைப்பட்டுக் கொண்டிருப் பார்கள். (அல்குர்ஆன் : 7:46)

وَاِذَا صُرِفَتْ اَبْصَارُهُمْ تِلْقَآءَ اَصْحٰبِ النَّارِۙ قَالُوْا رَبَّنَا لَا تَجْعَلْنَا مَعَ الْقَوْمِ الظّٰلِمِيْنَ‏

இவர்களின் பார்வை நரகவாசிகளின் பக்கம் திருப்பப் பட்டால் (அவர்கள் படும் வேதனையைக் கண்டு திடுக்கிட்டு) "எங்கள் இறைவனே! அநியாயக்கார இந்த மக்களுடன் (நரகத்தில்) எங்களையும் சேர்த்துவிடாதே!" என்று (பிரார்த்தித்துக்) கூறுவார்கள். (அல்குர்ஆன் : 7:47)

ويقسم الناس يوم القيامة إلى ثلاثة أنواع: الأوّل: الّذين تكون حسناتهم كثيرة وتغلب على سيّئاتهم، وهؤلاء يدخلهم الله تعالى الجنّة وينعمون بنعيمها الدائم من دون عذاب، والثاني: فهم الّذين تكون سيئاتهم أكثر من حسناتهم وهؤلاء يعذّبهم الله، ويدخلهم نار جهنّم خالدين فيها.

والنوع الثالث: فهم الّذين تكون أعداد حسناتهم مساوية لأعداد سيّئاتهم، وأولئك الأشخاص لا يعتبرون من أهل الجنّة، ولا من أهل النّار؛ بل يضعهم الله تبارك وتعالى في مكان مخصّص لهم يسمّى البرزخ، وفي هذا المكان يتمكّن هؤلاء الأشخاص من رؤية الجنّة ورؤية النار، وبعد ذلك يدخلهم الله تعالى الجنّة بعد أن يقضو الفترة التي يحدّدها الله تعالى لهم في البرزخ جزاء لهم، وإنّهم لايدخلون الجنّة إلّا برحمةٍ من الله تعالى وليس بأعمالهم وحسناتهم.

மறுமையில் மக்கள் மூன்று பிரிவுகள் இருப்பார்கள். ஒன்று பாவங்களை விட நன்மைகள் அதிகமாக இருக்கும். அவர்கள் சுவனவாதிகள். இரண்டாவது நன்மைகளை விட பாவங்கள் மிகைத்திருக்கும். அவர்கள் நரகத்திற்கு செல்வார்கள். மூன்றாவது நன்மைகளும் பாவங்களும் சமமாக இருக்கும். இவர்களுக்கு அஃராஃப்வாசிகள் என்று பெயர். இவர்கள் சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் இடையில் இருப்பார்கள். சொர்க்கவாதிகளையும் பார்ப்பார்கள். நரகவாதிகளையும் பார்ப்பார்கள். குறிப்பிட்ட காலங்கள் அவர்களை அங்கே இருக்க வைப்பான். பின்பு தன் அருளால் அவர்களை சொர்க்கத்தில் நுழைவிப்பான்.

عَنْ حُذَيْفَةَ؛ أَنَّهُ سُئِلَ عَنْ أَصْحَابِ الْأَعْرَافِ، قَالَ: فَقَالَ: هُمْ قَوْمٌ اسْتَوَتْ حَسَنَاتُهُمْ وَسَيِّئَاتُهُمْ، فَقَعَدَتْ بِهِمْ سَيِّئَاتُهُمْ عَنِ الْجَنَّةِ، وخلَّفت بِهِمْ حَسَنَاتُهُمْ عَنِ النَّارِ. قَالَ: فَوَقَفُوا هُنَاكَ(١١) عَلَى السُّوَرِ حَتَّى يَقْضِيَ اللَّهُ فِيهِمْ. (ابن كثير)

அஃராஃப்வாசிகளைப் பற்றி கேட்கப்பட்ட போது ஹுதைஃபா ரலி அவர்கள் கூறினார்கள் ; நன்மைகளும் பாவங்களும் அவர்களுக்கு சமமாக இருக்கும். அவர்களின் பாவங்கள் சொர்க்கத்திற்கு செல்வதிலிருந்து தடுத்து விடும். அவர்கள் செய்த நன்மைகள் நரகத்திற்கு செல்லாமல் அவர்களைப் பாதுகாக்கும். (இப்னுகஸீர்)

عَنِ ابْنِ مَسْعُودٍ قَالَ يُحَاسَبُ النَّاسُ يَوْمَ الْقِيَامَةِ، فَمَنْ كَانَتْ حَسَنَاتُهُ أَكْثَرَ مِنْ سَيِّئَاتِهِ بِوَاحِدَةٍ دَخَلَ الْجَنَّةَ، وَمَنْ كَانَتْ سَيِّئَاتُهُ أَكْثَرَ مِنْ حَسَنَاتِهِ بِوَاحِدَةٍ دَخَلَ النَّارَ. ثُمَّ قَرَأَ قَوْلَ اللَّهِ: ﴿فَمَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ [فَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ * وَمَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُولَئِكَ الَّذِينَ خَسِرُوا أَنْفُسَهُمْ فِي جَهَنَّمَ خَالِدُونَ(١٦) ] ﴾ [الْمُؤْمِنُونَ:١٠٢، ١٠٣] ثُمَّ قَالَ: إِنَّ الْمِيزَانَ يَخِفُّ بِمِثْقَالِ حَبَّةٍ وَيَرْجَحُ، قَالَ: وَمَنِ اسْتَوَتْ حَسَنَاتُهُ وَسَيِّئَاتُهُ كان من أَصْحَابِ الْأَعْرَافِ، فَوَقَفُوا عَلَى الصِّرَاطِ، ثُمَّ عَرَفُوا أَهْلَ الْجَنَّةِ وَأَهْلَ النَّارِ، فَإِذَا نَظَرُوا إِلَى أَهْلِ الْجَنَّةِ نَادَوْا: سَلَامٌ عَلَيْكُمْ، وَإِذَا صَرَفُوا أَبْصَارَهُمْ إِلَى يَسَارِهِمْ نَظَرُوا أَصْحَابَ النَّارِ قَالُوا: ﴿رَبَّنَا لَا تَجْعَلْنَا مَعَ الْقَوْمِ الظَّالِمِينَ﴾ فَتَعَوَّذُوا بِاللَّهِ مِنْ مَنَازِلِهِمْ. (ابن كثير)

இப்னு மஸ்வூத் ரலி அவர்கள் கூறுகிறார்கள் ; மறுமையில் மக்கள் கேள்வி கணக்கு கேட்கப்படுவார்கள். தீமைகளை விட ஒரு நன்மை அதிகமாக இருந்தாலும் அவர் சொர்க்கத்திற்கு செல்வார். நன்மைகளை விட ஒரு தீமை கூடுதலாக இருந்தாலும் அவர் நரகத்திற்கு செல்வார். பின்பு

 فَمَنْ ثَقُلَتْ مَوَازِيْنُهٗ فَاُولٰٓٮِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ

எவர்களுடைய நன்மையின் எடை கணக்கிறதோ அவர்கள்தாம் வெற்றி அடைவார்கள்.(அல்குர்ஆன் : 23:102)

وَمَنْ خَفَّتْ مَوَازِيْنُهٗ فَاُولٰٓٮِٕكَ الَّذِيْنَ خَسِرُوْۤا اَنْفُسَهُمْ فِىْ جَهَـنَّمَ خٰلِدُوْنَ‌ ‏

எவர்களுடைய (நன்மையின்) எடை குறைகின்றதோ அவர்கள் தமக்குத் தாமே நஷ்டத்தை உண்டுபண்ணிக் கொண்டு எந்நாளுமே நரகத்தில் தங்கிவிடுவார்கள்.(அல்குர்ஆன் : 23:103) என்ற வசனத்தை ஓதிக் காட்டினார்கள்.

ஒரு அணு அளவு நன்மையும் நன்மையின் தட்டை கனமாக்கும். ஒரு அணு அளவு தீமையும் அந்த தட்டின் கனத்தை குறைக்கும். யாருடைய நன்மைகளும் தீமைகளும் சமமாக இருக்கிறதோ அவர்களே அஃராஃப்வாசிகள். சொர்க்கவாதிகளைப்  பார்க்கின்ற பொழுது (இறைவனுடைய) சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாவதாகுக!" என்று சப்தமிட்டுக் கூறுவார்கள். நரகவாதிகளைப் பார்க்கின்ற போது "எங்கள் இறைவனே! அநியாயக்கார இந்த மக்களுடன் (நரகத்தில்) எங்களையும் சேர்த்து விடாதே!" என்று (பிரார்த்தித்துக்) கூறுவார்கள். (இப்னுகஸீர்)

يرجع سبب تسمية أصحاب الأعراف بهذا الاسم؛ لأنّهم عرفوا أهل الجنّة وعرفوا أهل النّار، وميّزوا بينهم، فهم عاينوا أهل الجنّة وعرفوا صفاتهم، وعاينوا أهل النّار وقد عرفوا صفاتهم، فسمّوا لذلك أصحاب الأعراف

அஃராஃப் என்றால் அறிந்தவர்கள் என்று பொருள். சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் இடையில் இருந்து கொண்டு இருவரையும் அவர்கள் அறிந்து கொள்வதால் அவர்களுக்கு அஃராஃப்வாசிகள் என்று பெயர்.

இதிலிருந்து நாம் பெறும் பாடம்

1, அல்லாஹ்வின் நீதம்

وَنَضَعُ الْمَوَازِيْنَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيٰمَةِ فَلَا تُظْلَمُ نَـفْسٌ شَيْــٴًـــا‌  وَاِنْ كَانَ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ اَتَيْنَا بِهَا‌  وَكَفٰى بِنَا حٰسِبِيْنَ‏

மறுமை நாளில் சரியான தராசையே நாம் நாட்டுவோம். யாதொரு ஆத்மாவுக்கும் (நன்மையைக் குறைத்தோ, தீமையைக் கூட்டியோ) அநியாயம் செய்யப்படமாட்டாது. (நன்மையோ தீமையோ) ஒரு கடுகின் அளவு இருந்தபோதிலும் (நிறுக்க) அதனையும் கொண்டு வருவோம். கணக்கெடுக்க நாமே போதும். (வேறெவரின் உதவியும் நமக்குத் தேவையில்லை.) (அல்குர்ஆன் : 21:47)

 

2, அல்லாஹ்வின் அருள்

அவர்களுக்கு நன்மைகளும் தீமைகளும் சமமாக இருக்கிறது. ஹுதைஃபா ரலி அவர்கள் கூறியதைப் போன்று அவர்களின் பாவங்கள் சொர்க்கத்திற்கு செல்வதிலிருந்து தடுத்து விடும். அவர்கள் செய்த நன்மைகள் நரகத்திற்கு செல்லாமல் அவர்களைப் பாதுகாக்கும். இருந்தாலும் அவர்களை அல்லாஹ் தன் அருளால் சொர்க்கத்திற்கு அனுப்புகிறான்.  

3, ஒரு நன்மை என்றோ ஒரு பாவம் என்றோ சாதாரணமாக நினைத்து விடக்கூடாது.

قَالَ عِكْرِمَةُ: يَلْقَى الرَّجُلُ زَوْجَتَهُ فَيَقُولُ لَهَا: يَا هَذِهِ، أَيُّ بَعْلٍ كنتُ لَكِ؟ فَتَقُولُ: نِعْمَ الْبَعْلُ كنتَ! وَتُثْنِي بِخَيْرٍ مَا اسْتَطَاعَتْ، فَيَقُولُ لَهَا: فَإِنِّي أطلبُ إِلَيْكِ اليومَ حَسَنَةً وَاحِدَةً تَهَبِينَهَا(٢) لِي لَعَلِّي أَنْجُو مِمَّا تَرَيْنَ. فَتَقُولُ لَهُ: مَا أَيْسَرَ مَا طلبتَ، وَلَكِنِّي لَا أُطِيقُ أَنْ أُعْطِيَكَ شَيْئًا أَتَخَوَّفُ مِثْلَ الَّذِي تَخَافُ. قَالَ: وَإِنَّ الرَّجُلَ لَيَلْقَى ابْنَهُ فَيَتَعَلَّقُ بِهِ فَيَقُولُ: يَا بُنَيَّ، أَيُّ وَالِدٍ كنتُ لَكَ؟ فَيُثْنِي بِخَيْرٍ. فيقولُ لَهُ: يَا بُنَيَّ، إِنِّي احْتَجْتُ إِلَى مِثْقَالِ ذَرَّةٍ مِنْ حَسَنَاتِكَ لَعَلِّي أَنْجُو بِهَا مِمَّا تَرَى. فَيَقُولُ وَلَدُهُ: يَا أَبَتِ، مَا أَيْسَرَ مَا طَلَبْتَ، وَلَكِنِّي أَتَخَوَّفُ مِثْلَ الَّذِي تَتَخَوَّفُ، فَلَا أَسْتَطِيعُ أَنْ أُعْطِيَكَ شَيْئًا. يَقُولُ اللَّهُ تَعَالَى (يَوْمَ يَفِرُّ الْمَرْءُ مِنْ أَخِيهِ * وَأُمِّهِ وَأَبِيهِ * وَصَاحِبَتِهِ وَبَنِيهِ)

இக்ரிமா ரலி அவர்கள் கூறுகிறார்கள் ; மறுமையில் ஒருவர் தன் மனைவியை சந்திப்பார். நான் உனக்கு எத்தகைய கணவனாக இருந்தேன் என்று கேட்பார். சிறந்த கணவனாக இருந்தீர்கள் என்று சொல்லி அவரைப் புகழ்ந்து பேசுவாள். எனக்கு ஒரே நன்மையைக் கொடு. நான் வெற்றி பெற்று விடுவேன் என்று கேட்பான். அதற்கவள் என்னால் முடியாது. உங்களுக்கு உங்களுக்கு இருக்கிற அதே அச்சமும் நன்மையின் மீது தேட்டமும் எனக்கும் இருக்கிறது என்று சொல்லி விடுவாள்.இதே போன்று ஒரு தந்தை தன் மகனிடம் சென்று இவ்வாறு கேட்பான். அவனும் அவ்வாறே பதில் சொல்வான்.

يَوْمَ يَفِرُّ الْمَرْءُ مِنْ اَخِيْهِۙ‏

அந்நாளில் மனிதன் (திடுக்கிட்டுத்) தன் சகோதரனை விட்டும், (அல்குர்ஆன் : 80:34)

وَاُمِّهٖ وَاَبِيْهِۙ‏

தன் தாயை விட்டும், தன் தந்தையை விட்டும், (அல்குர்ஆன் : 80:35)

وَصَاحِبَتِهٖ وَبَنِيْهِ‏

தன் மனைவியை விட்டும், தன் மக்களை விட்டும் வெருண்டோடுவான். (அல்குர்ஆன் : 80:36)

ورُئِي بعضُهم في المنام، فقال: نَدِمنا على أمرٍ عظيم، نعلم ولا نعمل، وأنتم تعملون ولا تعلمون، والله لَتَسبيحةٌ أو تسبيحتان، أو ركعة أو ركعتان في صحيفة أحدِنا أحب إليه من الدنيا وما فيها

இறந்தவரை கனவில் பார்த்த நபரிடம் அந்த இறந்தவர் சொன்னார் ;  நாங்கள் மாபெரும் ஒரு விஷயத்தைப் பற்றி கைசேதப்படுகிறோம். அதை நாங்கள் அறிந்திருக்கிறோம். ஆனால் செய்ய முடியாது. நீங்கள் செய்கிறீர்கள். ஆனால் அதை சரியாக அறிந்து கொள்ள வில்லை. எங்கள் நன்மையின் பதிவேட்டில் ஒரு தஸ்பீஹோ அல்லது ஒரு இரக்கஅத்தோ எழுதப்படுவது இந்த உலகத்தை விட எங்களுக்கு மேலானது.

فإنَّ أحَدَكم لَيَعمَلُ بعمَلِ أهلِ الجَنَّةِ حتَّى ما يكونُ بينه وبينها إلَّا ذِرَاعٌ، أو قِيدُ ذِرَاعٍ، فيسبِقُ عليه الكتابُ فيَعمَلُ بعمَلِ أهلِ النَّارِ فيدخُلُها ابو داود ٤٧٠٨

உங்களில் ஒருவர் சுவனத்தின் பக்கம் ஒரு முழம் வரை நெருங்கும் அளவிற்கு சுவனவாதிகளின் அமல்களை செய்பவராக இருப்பார். ஆனால் அவரிடத்தில் இறைவனுடைய விதி முந்தி விடும். அவர் நரகவாசிகளின் ஒரு செயலை செய்து நரகத்திலும் நுழைந்து விடுவார். (அபூதாவூது ; 4708)

قال ابن الجوزى -رحمه الله- (يا طالب الجنة ، بذنب واحد أخرج أبوك منها ، أتطمع في دخولها بذنوب لم تتب عنها

சுவனத்தை தேடுபவனே! ஒரே ஒரு குற்றத்தினால் தான் உனது தந்தை சுவனத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். ஆனால் நீ பாவங்களை செய்து கொண்டு சுவனத்தில் நுழைந்து விடலாம் என்று கனவு கானுகிறாயா? என்று அல்லாமா இப்னுல் ஜவ்ஸீ ரஹ் அவர்கள் கேட்கிறார்கள்.

 

 

4 comments:

  1. ஒவ்வொரு நாளையும் குறிப்பிட்டு போடுங்கள். ஆறாம் நாள் தராவீஹ் என்பதுப்போல. அல்லாஹ் உங்களுக்கு எல்லா வகையிலும் பரகத்தை தருவானாக.ரமழான் மாத பரகத்தைக் கொண்டுஆண் வாரிசை உங்களுக்கு பரிசளிப்பானாக

    ReplyDelete
  2. மாஷா அல்லாஹ் அருமை

    ReplyDelete