Pages

Pages

Sunday, April 9, 2023

அமானிதம்

 

اِنَّا عَرَضْنَا الْاَمَانَةَ عَلَى السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَالْجِبَالِ فَاَبَيْنَ اَنْ يَّحْمِلْنَهَا وَاَشْفَقْنَ مِنْهَا وَ حَمَلَهَا الْاِنْسَانُ اِنَّهٗ كَانَ ظَلُوْمًا جَهُوْلًا ۙ‏

நிச்சயமாக "(நம்முடைய) பொறுப்பைச் சுமந்து கொள்வீர்களா?" என்று நாம் வானங்கள், பூமி, மலைகள் ஆகியவற்றிடம் வினவினோம். அதற்கு அவை அதனைப் பற்றிப் பயந்து, அதனைச் சுமந்து கொள்ளாது விலகிவிட்டன. அத்தகைய பொறுப்பைத்தான் மனிதன் சுமந்துகொண்டான். (ஆகவே) நிச்சயமாக அவன் அறியாமையால் தனக்குத்தானே தீங்கிழைத்துக் கொண்டான். (அல்குர்ஆன் : 33:72)

إِنَّ اللَّهَ حِينَ خلق خلقه، جمع بين الإنس والجن، والسموات والأرض والجبال، فبدأ بالسموات فَعَرَضَ عَلَيْهِنَّ الْأَمَانَةَ وَهِيَ الطَّاعَةُ، فَقَالَ لَهُنَّ: أَتَحْمِلْنَ هَذِهِ الْأَمَانَةَ، وَلَكِنْ عَلَى الْفَضْلِ وَالْكَرَامَةِ وَالثَّوَابِ فِي الْجَنَّةِ ... ؟ فَقُلْنَ: يَا رَبِّ، إِنَّا لَا نَسْتَطِيعُ هَذَا الْأَمْرَ، وَلَيْسَتْ بِنَا قُوَّةٌ، وَلَكِنَّا لَكَ مُطِيعِينَ. ثُمَّ عَرَضَ الْأَمَانَةَ عَلَى الْأَرْضِينَ، فَقَالَ لَهُنَّ: أَتَحْمِلْنَ هَذِهِ الْأَمَانَةَ وَتَقْبَلْنَهَا مِنِّي، وَأُعْطِيكُنَّ الْفَضْلَ وَالْكَرَامَةَ(١٤) ؟ فَقُلْنَ: لَا صَبْرَ لَنَا عَلَى هَذَا يَا رَبِّ وَلَا نُطِيقُ، وَلَكِنَّا لَكَ سَامِعِينَ مُطِيعِينَ، لَا نَعْصِيكَ فِي شَيْءٍ تَأْمُرُنَا بِهِ. ثُمَّ قَرَّبَ آدَمَ فَقَالَ لَهُ: أَتَحْمِلُ هَذِهِ الْأَمَانَةَ وَتَرْعَاهَا حَقَّ رِعَايَتِهَا؟ فَقَالَ عِنْدَ ذَلِكَ آدَمُ: مَا لِي عِنْدَكَ؟ قَالَ: يَا آدَمُ، إِنْ أَحْسَنْتَ وَأَطَعْتَ وَرَعَيْتَ الْأَمَانَةَ، فَلَكَ عِنْدِي الْكَرَامَةُ وَالْفَضْلُ وَحُسْنُ الثَّوَابِ فِي الْجَنَّةِ. وَإِنْ عَصَيْتَ وَلَمْ ترْعَها حَقَّ رعايتها وَأَسَأْتَ، فَإِنِّي مُعَذِّبُكَ وَمُعَاقِبُكَ وَأُنْزِلُكَ النَّارَ. قَالَ: رَضِيتُ [يَا](١٥) رَبِّ. وتَحمَّلها(١٦) ، فَقَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ: قَدْ حَمَّلْتُكَهَا. فَذَلِكَ قَوْلُهُ: ﴿وَحَمَلَهَا الإنْسَانُ﴾ . رَوَاهُ ابْنُ أَبِي حَاتِمٍ

அல்லாஹுத்தஆலா படைப்பினங்களை படைத்து விட்டு வானங்களை அழைத்து அமானிதம் ஒன்று இருக்கிறது. அதை சுமந்து கொள்வீர்களா? அதை சுமந்து கொண்டால் உங்களுக்கு நன்மை இருக்கிறது. உயர்வு இருக்கிறது. கண்ணியம் இருக்கிறது. சொர்க்கம் இருக்கிறது என்று கேட்டான். அவைகள் எங்களால் முடியாது. எங்களுக்கு அதை சுமக்கின்ற ஆற்றல் இல்லை என்று மறுத்து விட்டன. பின்பு பூமியை அழைத்து அதே கேள்வியைக் கேட்ட போது பூமியும் அதை சுமந்து கொள்ளும் சக்தி எங்களுக்கு இல்லை, அந்தப் பொறுமை எங்களுக்கு இல்லை என்று மறுத்து விட்டது. இறுதியாக இறைவன் ஆதம் நபி அலை அழைத்து அந்த அமானிதத்தை நீங்கள் சுமந்து கொள்கிறீர்களா? என்று கேட்டான். அந்த அமானிதத்தை சுமந்து கொண்டால் எனக்கு என்ன கிடைக்கும் என்று கேட்டார்கள். அதை நீங்கள் சுமந்து கொண்டால், அதைப் பேண வேண்டிய விதத்தில் நீங்கள் பேணினால் உங்களுக்கு கூலி உண்டு, சொர்க்கம் உண்டு. அதை நீங்கள் சரியாக பேணத்தவறி விட்டால் உங்களுக்கு தண்டனை உண்டு என்று கூறினான். அவர்கள் அதை ஏற்றுக் கொண்டார்கள். சுமந்து கொள்ள சம்மதித்தார்கள். (இப்னுகஸீர்)

عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ : (قَالَ اللَّهُ تَعَالَى لِآدَمَ يَا آدَمُ إِنِّي عَرَضْتُ الْأَمَانَةَ عَلَى السَّمَاوَاتِ وَالْأَرْضِ فَلَمْ تُطِقْهَا فَهَلْ أَنْتَ حَامِلُهَا بِمَا فِيهَا فَقَالَ وَمَا فِيهَا يَا رَبِّ قَالَ إِنْ حَمَلْتَهَا أُجِرْتَ وَإِنْ ضَيَّعْتَهَا عُذِّبْتَ فَاحْتَمَلَهَا بِمَا فِيهَا فَلَمْ يَلْبَثْ فِي الْجَنَّةِ إِلَّا قَدْرَ مَا بَيْنَ صَلَاةِ الْأُولَى إِلَى الْعَصْرِ حَتَّى أَخْرَجَهُ الشَّيْطَانُ مِنْهَا

அல்லாஹுத்தஆலா ஆதம் நபியை அழைத்து வானம் மற்றும் பூமியிடத்தில் என்னுடைய அமானிதத்தை சுமந்து கொள்ளுமாறு கேட்டேன். அவைகள் மறுத்து விட்டன. நீங்கள் சுமந்து கொள்கிறீர்களா? என்று கேட்டான். அவர்கள் சம்மதித்தார்கள். சம்மதித்து பிறகு சொர்க்கத்தில் நுழைந்தார்கள். அதிகாலை தொழுகைக்கும் அஸர் தொழுகைக்கும் இடைப்பட்ட கால அவகாசம் மட்டுமே சொர்க்கத்தில் இருந்தார்கள். அதற்குள் அவர்களை ஷைத்தான் சூழ்ச்சிகள் செய்து வெளியாக்கி விட்டான். (இப்னுகஸீர்)

وَقَدِ اخْتُلِفَ فِي تَفَاصِيلِ بَعْضِهَا عَلَى أَقْوَالٍ، فَقَالَ ابْنُ مَسْعُودٍ: هِيَ فِي أَمَانَاتِ الْأَمْوَالِ كَالْوَدَائِعِ وَغَيْرِهَا. وَرُوِيَ عَنْهُ أَنَّهَا فِي كُلِّ الْفَرَائِضِ، وَأَشَدُّهَا أَمَانَةً الْمَالُ. وَقَالَ أُبَيُّ بْنُ كَعْبٍ: مِنَ الْأَمَانَةِ أَنِ ائْتُمِنَتِ الْمَرْأَةُ عَلَى فَرْجِهَا. وَقَالَ أَبُو الدَّرْدَاءِ: غُسْلُ الْجَنَابَةِ أَمَانَةٌ، وَأَنَّ اللَّهَ تَعَالَى لَمْ يأمن ابن آدم على شي مِنْ دِينِهِ غَيْرَهَا

அமானிதம் என்றால் என்ன என்பதில் கருத்து வேறுபாடுகள் இருக்கிறது. இப்னு மஸ்ஊத் ரலி அவர்கள் பொருளாதாரம் குறித்த அமானிதம் என்று கூறுகிறார்கள். உபை பின் கஅப் ரலி அவர்கள் ஒரு பெண் அவருடைய மானத்தை பாதுகாப்பது அமானிதமாகும் என்று கூறுகிறார்கள். அபுத்தர்தா ரலி அவர்கள் குளிப்புக் கடமையானவன் குளிப்புக் கடமையை நிறைவேற்றுவது அமானிதம் என்று கூறுகிறார்கள்.

وَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ عَمْرِو بْنِ الْعَاصِ: أَوَّلُ مَا خَلَقَ اللَّهُ تَعَالَى مِنَ الْإِنْسَانِ فَرْجَهُ وَقَالَ هَذِهِ أَمَانَةٌ اسْتَوْدَعْتُكَهَا، فَلَا تَلْبَسُهَا(٢) إِلَّا بِحَقٍّ. فَإِنْ حَفِظْتَهَا حَفِظْتُكَ فَالْفَرْجُ أَمَانَةٌ، وَالْأُذُنُ أَمَانَةٌ، وَالْعَيْنُ أَمَانَةٌ، وَاللِّسَانُ أَمَانَةٌ، وَالْبَطْنُ أَمَانَةٌ، وَالْيَدُ أَمَانَةٌ، وَالرِّجْلُ أَمَانَةٌ، وَلَا إِيمَانَ لِمَنْ لَا أَمَانَةَ لَهُ

மனிதனுடைய உடலில் அல்லாஹ் முதன் முதலாக படைத்தது அவனுடைய மறைவிடம் தான். இதை உனக்கு அமானிதமாக நான் கொடுத்திருக்கிறேன். இதை உரிய முறையில் மட்டுமே பயன்படுத்து. அதைப் பாதுகாத்தால் உன்னை நான் பாதுகாப்பேன் என்று அல்லாஹ் கூறினான். உடல் உறுப்புக்கள் அனைத்துமே அல்லாஹ் நமக்களித்த அமானிதம் தான். அதை அவன் பயன்படுத்தச் சொன்ன விதத்தில் பயன்படுத்த வேண்டும் என அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ் ரலி அவர்கள் கூறுகிறார்கள். (குர்துபீ)

والأمانة تشمل كل ما يحمله الإنسان من أمر دينه ودنياه قولا وفعلاً , والأمانة هي أداء الحقوق، والمحافظة عليها،

சொல் மற்றும் செயல் அடிப்படையில் தீன் துன்யா சார்ந்த மனிதனுடைய அனைத்துக் கடமைகளும் அமானிதம் தான் என்று உலமாக்கள் கூறுகிறார்கள்.

الأمانة في حفظ الأسرار: فالمسلم يحفظ سر أخيه

ஒரு முஸ்லிம் தன் சகோதரனின் இரகசிய்யத்தைப் பாதுகாப்பதும் அமானிதம் தான்.

عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم ، قَالَ: إِذَا حَدَّثَ الرَّجُلُ الرَّجُلَ بِالْحَدِيثِ ، ثُمَّ الْتَفَتَ  فَهِىَ أَمَانَةٌ

ஒரு மனிதர் தன் சகோதரனிடத்தில் ஒரு விஷயத்தைக் கூறி விட்டு திரும்பி விட்டால் அது அமானிதம் ஆகும்.

நபித்துவத்தின் தொடக்கத்திலேயே நபி அவர்கள் அமானிதம் பேணுவது பற்றி மக்களுக்கு உணர்த்தி விட்டார்கள்.

أَخْبَرَنِي أَبُو سُفْيَانَ أَنَّ هِرَقْلَ قَالَ لَهُ سَأَلْتُكَ مَاذَا يَأْمُرُكُمْ فَزَعَمْتَ أَنَّهُ أَمَرَكُمْ بِالصَّلاَةِ وَالصِّدْقِ وَالْعَفَافِ وَالْوَفَاءِ بِالْعَهْدِ وَأَدَاءِ الأَمَانَةِ قَالَ وَهَذِهِ صِفَةُ نَبِ

அபூசுஃப்யான் ரலி அவர்கள் என்னிடம் கூறினார்கள். ரோம மன்னர் ஹிராக்ளியஸ் என்னைப் பார்த்து உம்மிடம் அவர் )முஹம்மது நபி அவர்கள்( எதையெல்லாம் கட்டளையிடுகிறார்? என்று கேட்டேன். நீர்و அவர் தொழுகை தொழும்படியும், வாய்மையையும் நல்லொழுக் கத்தையும் கைகொள்ளும்படியும் ஒப்பந்தத்தையும் வாக்குறுதியையும் நிறைவேற்றும்படியும் நம்பி ஒப்படைக்கப்பட்ட அடைக்கலப் பொருளை சரிவரப் பாதுகாத்துத் திரும்பத் தரும்படியும் கட்டளையிடுகிறார் என்று சொன்னீர். இது தான் ஒரு இறைத்தூதரின் பண்பாகும் என்று கூறினார். (புகாரி ; 2681)

அமானிதம் இருந்தால் அல்லாஹ் நம்மோடு இருப்பான் அவனுடைய உதவி நமக்கு கிடைக்கும்.

عَنْ أَبِى هُرَيْرَةَ رَفَعَهُ قَالَ إِنَّ اللَّهَ يَقُولُ أَنَا ثَالِثُ الشَّرِيكَيْنِ مَا لَمْ يَخُنْ أَحَدُهُمَا صَاحِبَهُ فَإِذَا خَانَهُ خَرَجْتُ مِنْ بَيْنِهِمَا

வியாபாரக் கூட்டாளிகளில் இருவரில் ஒருவர் இன்னொருவருக்கு மோசடி செய்யாத வரை மூன்றாவது நபராக நான் இருப்பேன். மோசடி செய்து விட்டால் அவர்களை விட்டும் நான் வெளியாகி விடுவேன் என்று அல்லாஹ் கூறினான். (அபூதாவூது ; 3383)

இயற்கையாகவே அல்லாஹ் மனிதர்களின் உள்ளங்களில் அமானிதத்தைப் பேணும் பண்பை படைத்திருக்கிறான். குர்ஆனும் நபிவழியும் வந்த போது ஏற்கனவே இருந்த இந்தப் பண்பை மேலும் உறுதிப் படுத்தியது. ஆனால் காலங்கள் செல்லச் செல்ல இந்த அமானிதம் என்ற பண்பு குறைந்து போனது.

حَدَّثَنَا حُذَيْفَةُ ، قَالَ : حَدَّثَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَدِيثَيْنِ رَأَيْتُ أَحَدَهُمَا وَأَنَا أَنْتَظِرُ الْآخَرَ، حَدَّثَنَا أَنَّ الْأَمَانَةَ نَزَلَتْ فِي جَذْرِ قُلُوبِ الرِّجَالِ، ثُمَّ عَلِمُوا مِنَ الْقُرْآنِ، ثُمَّ عَلِمُوا مِنَ السُّنَّةِ، وَحَدَّثَنَا عَنْ رَفْعِهَا، قَالَ : " يَنَامُ الرَّجُلُ النَّوْمَةَ فَتُقْبَضُ الْأَمَانَةُ مِنْ قَلْبِهِ، فَيَظَلُّ أَثَرُهَا مِثْلَ أَثَرِ الْوَكْتِ ، ثُمَّ يَنَامُ النَّوْمَةَ فَتُقْبَضُ فَيَبْقَى أَثَرُهَا مِثْلَ الْمَجْلِ ، كَجَمْرٍ دَحْرَجْتَهُ عَلَى رِجْلِكَ فَنَفِطَ، فَتَرَاهُ مُنْتَبِرًا وَلَيْسَ فِيهِ شَيْءٌ، فَيُصْبِحُ النَّاسُ يَتَبَايَعُونَ، فَلَا يَكَادُ أَحَدٌ يُؤَدِّي الْأَمَانَةَ فَيُقَالُ : إِنَّ فِي بَنِي فُلَانٍ رَجُلًا أَمِينًا، وَيُقَالُ لِلرَّجُلِ مَا أَعْقَلَهُ، وَمَا أَظْرَفَهُ، وَمَا أَجْلَدَهُ، وَمَا فِي قَلْبِهِ مِثْقَالُ حَبَّةِ خَرْدَلٍ مِنْ إِيمَانٍ ". وَلَقَدْ أَتَى عَلَيَّ زَمَانٌ وَمَا أُبَالِي أَيَّكُمْ بَايَعْتُ لَئِنْ كَانَ مُسْلِمًا رَدَّهُ الْإِسْلَامُ، وَإِنْ كَانَ نَصْرَانِيًّا رَدَّهُ عَلَيَّ سَاعِيهِ ، فَأَمَّا الْيَوْمَ فَمَا كُنْتُ أُبَايِعُ إِلَّا فُلَانًا وَفُلَانًا.

அல்லாஹ்வின் தூதர் அவர்கள் எங்களுக்கு (நம்பகத்தன்மை தொடர்பாக) இரு செய்திகளைக் கூறினார்கள். அவற்றில் ஒன்றை நான் (வாழ்நாளிலேயே) பார்த்து விட்டேன். மற்றொன்றை எதிர் பார்த்திருக்கிறேன். ஒரு செய்தி யாதெனில் (இயற்கையாகவே) மனிதர்களின் ஆழ்மனதில் (அமானத் எனும்) நம்பகத்தன்மை இடம் பிடித்தது. பின்னர் அவர்கள் குர்ஆனிருந்தும் (அதை) அறிந்து கொண்டார்கள். பிறகு சுன்னாவிருந்தும் (அதை) அறிந்து கொண்டார்கள். (நபியவர்கள் கூறிய) இதை நான் பார்த்து விட்டேன்.

இரண்டாவது செய்தி நம்பகத்தன்மை அகற்றப்படுவது தொடர்பானதாகும். மனிதன் ஒருமுறை உறங்குவான். (உறக்கத்திலேயே) அவனது உள்ளத்தி­ருந்து நம்பகத் தன்மை (சிறிது) கைப்பற்றப்படும். அதையடுத்து (அது அகற்றப்பட்டதன்) அடையாளம் சிறு (கரும்) புள்ளி அளவுக்கு (அவனில்) தங்கி விடும். பிறகு மீண்டும் ஒருமுறை அவன் உறங்குவான். அப்போது (மறுபடியும்) அது கைப்பற்றப்படும். இம்முறை அ(து அகற்றப்பட்ட)தன் அடையாளம் காய்ப்பு அளவுக்கு (அவனில்) நிலைத்து விடும். (இவ்வாறு முதல் நம்பகத்தன்மை என்னும் ஒளி உள்ளத்தில் ஏற்றப்பட்டு பிறகு சிறிது சிறிதாக அது அணைக்கப்படுவது) கால் தீக்கங்கை உருட்டி விட்டு அதனால் கால் கொப்பளித்து உப்பி விடுவதைப் போன்றதாகும். பார்வையில் அது உப்பி பெரிதாகத் தெரியுமே தவிர அதனும் ஒன்றும் இருக்காது.

பின்னர் காலையில் மக்கள் தங்களிடையே கொடுக்கல் வாங்கல் செய்து கொள்வார்கள். (ஆனால் அவர்களில்) யாருமே நம்பிக்கையைக் காப்பாற்ற எத்தனிக்க மாட்டார்கள். இன்னாருடைய மக்களில் நம்பிக்கையான ஒருவர் இருக்கிறார்என்று (தேடிக் கண்டுபிடித்து) சொல்லப்படும் (அளவுக்கு நம்பிக்கைக்குரியவர்கள் அரிதாகி விடுவார்கள்). மேலும் ஒருவரைப் பற்றி அவருடைய அறிவு தான் என்ன? அவருடைய விவேகம் தான் என்ன? அவருடைய வீரம் தான் என்ன?” என்று (சிலாகித்துக்) கூறப்படும். ஆனால் அந்த மனிதருடைய உள்ளத்தில் கடுகளவு கூட நம்பிக்கை இருக்காது. (புகாரி ; 6497)

ஷாம் (சிரியா) நாட்டில் மிக பிரபலமான கடைவீதி ஒன்று உண்டு. அதன் பெயர் மதஹ் பாஷா கடைவீதி.அங்கே மக்களிடத்தில்  ஒரு நல்ல பழக்கம் இருந்தது. "யாராவது வெளியூர் அல்லது ஹஜ் பயணம் செல்வதாக இருந்தால் தங்களிடம் இருக்கும் பணத்தையோ அல்லது உயர்தரமான பொருட்களையோ, அங்கிருக்கும் கடைகளில் ஏதாவது ஒரு கடையில் கொடுத்து விட்டு அவர் திரும்பி வந்ததும் அந்த கடையில் இருந்து பொருளை வாங்கி கொள்ளலாம்". யாரும் கொடுத்த பொருளை திரும்பத் தராமல் ஏமாற்ற மாட்டார்கள். இந்த ஒரு காரணத்தால் அந்த கடைவீதியின் புகழ்  பரவியிருந்தது .

ஒரு நாள் வெளியூரில் இருந்து ஒரு மனிதர் அந்த கடைவீதிக்கு வந்தார். அவரிடத்தில் சிகப்பு நிற பை இருந்தது. அதில் 3000 திர்ஹம்களை வைத்திருந்தார். அங்கிருந்த கடைகளில் ஒரு கடைக்கு சென்று "இந்த பையை அமானிதமாக வைத்திருங்கள். நான் ஹஜ் சென்று திரும்பியதும் இதை வாங்கிக் கொள்கிறேன் " என்றார்.

கடைக்காரரும் சரி என்று அந்த பையை வாங்கி வைத்துக்கொண்டார். சில மாதங்கள் கழிந்தது..... அந்த மனிதர் ஹஜ் வணக்கங்களை நிறைவேற்றி விட்டு அந்த பையை வாங்குவதற்காக அந்த கடைக்கு சென்றார், கடையின் உரிமையாளர் அங்கே இல்லை, அருகில் இருப்பவர்களிடம் விசாரித்தார், அவர் இன்னும் சிறிது  நேரத்தில் வந்து விடுவார். நீங்கள் உட்காருங்கள் என்று சொல்ல அவரும் அமர்ந்தார்.

கடையின் உரிமையாளரும் வந்தார்,அவரிடம் தான் கொடுத்த பையை கேட்டார்.

உரிமையாளர்: நீங்கள் எவ்வளவு பணம் அந்த பையில் வைத்திருந்தீர்கள்?

வந்தவர்: 3000 திர்ஹம்கள்

உரிமையாளர்: உங்கள் பெயர் என்ன?

வந்தவர் அவரின் பெயரை கூறிவிட்டு, என்னை உங்களுக்கு நினைவில்லையா?

உரிமையாளர்: என்றைக்கு என்னை நீங்கள் சந்திக்க வந்தீர்கள்?

வந்தவர்: இந்த நாளில் என்று ஒரு சில விஷயங்களை சொன்னார், அவர்  ஏன் இப்படி கேள்விகளை கேட்கிறார் என வந்தவருக்கு சந்தேகம் வந்தது.

உரிமையாளர்: நீங்கள் கொடுத்த பையின் நிறம் என்ன?

வந்தவர்:  சிகப்பு நிறம்

உரிமையாளர்:  இப்போது  உணவு வரும் சாப்பிடுங்கள். எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கிறது. விரைவில் வந்து விடுகிறேன் என்று சொல்லி அங்கிருந்து சென்றார்.

அவர் சொன்னதைப்  போல சாப்பிட்டு முடிப்பதற்குள் விரைவாக வந்து விட்டார். அவருடைய கையில் சிகப்பு நிற பை இருந்தது.அதை அவருடைய கையில் கொடுத்து விட்டார்.பையை திறந்து பார்த்தால் அதில் 3000 திர்ஹம்கள் சரியாக இருந்தது.(அல்ஹம்துலில்லாஹ்) என்று  அவருக்கு நன்றி சொல்லி விட்டு அங்கிருந்து புறப்பட்டார்.

பையை வாங்கி விட்டு அங்கிருந்து நடந்து சென்றார். சில அடிகள் நடந்திருப்பார். அங்கே இன்னொரு கடை இருந்தது. அங்கே சென்று பார்த்தார். ஆச்சரியம் என்னவென்றால் அந்த கடையில் தான் அவர் பையை கொடுத்திருந்தார்.

கடையின் உரிமையாளருக்கு ஸலாம் கூறினார்

அவர் பதில் சொல்லி விட்டு அல்லாஹ் உங்கள் ஹஜ்ஜையும், உம்ராவையும் ஏற்றுக் கொள்ளட்டும். இதோ உங்களுடைய பை எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்ல அதிர்ச்சி அடைந்தார். நாம் தான் தவறான கடைக்கு சென்று விட்டோம். அதனால் தான் அக்கடையின் உரிமையாளருக்கு நம்மை யாரென்று  தெரியவில்லை. ஆனால் அவர் எப்படி இந்த பையை கொடுத்தார் ? ஏன் ? இதற்கான பதிலை அந்த கடையின் உரிமையாளர் தான் சொல்ல வேண்டும் என்று அவரிடம் சென்று கேட்டார்.

 

உங்களிடத்தில் நான் பையை கொடுக்க வில்லையே பிறகு எப்படி கொடுத்தீர்கள்? என்ன காரணம்?

உரிமையாளர்: அல்லாஹ்வின் மீது சத்தியமாக உங்களை யாரென்றே எனக்கு தெரியாது, உங்களுடைய பொருள் எதுவும் என்னிடம் இல்லை, ஆனாலும் இவ்வளவு உறுதியாக நீங்கள் சொல்லும் போது எனக்கு சில விஷயங்கள் புரிந்தது.

நீங்கள் இந்த ஊருக்கு புதியவர்,ஒரு வேளை நான் உங்களுடைய பையை தர வில்லையென்றால் நீங்கள் கவலையோடு மனமுடைந்து செல்வீர்கள் , உங்கள் வீட்டிற்கு சென்று ஷாம் நாட்டின் மதஹ் பாஷா கடைவீதியில் என் பை திருடு போனது என்று சொல்வீர்கள். எங்கள் நாட்டின் நன்மதிப்பு பாழாகி விடும். சில ஆயிரம் திர்ஹம்களுக்காக என் நாட்டின் மரியாதை கெடுவதை நான் விரும்ப வில்லை]. அல்லாஹ்வின் இந்த வசனத்தை நினைத்து பார்த்தேன்..

 فَاِنْ اَمِنَ بَعْضُكُمْ بَعْضًا فَلْيُؤَدِّ الَّذِى اؤْتُمِنَ اَمَانَـتَهٗ وَلْيَتَّقِ اللّٰهَ رَبَّهٗ‌.

 உங்களில் ஒருவர் மற்றவரை நம்பி (இவ்வாறு ஒரு பொருளைக் காப்பாக வைத்தால்,) யாரிடத்தில் அமானிதம் வைக்கப்பட்டதோ அவன் அதனை ஒழுங்காகத் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும்; அவன் தன் இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளட்டும்; (அல்குர்ஆன் : 2:283)

எனவே என்னிடம் 1000 திர்ஹம்கள் இருந்தது மீதி 2000 திர்ஹம்களை கடன் வாங்கி உங்களுக்கு கொடுத்தேன் என்றார். வந்தவர் மிகவும் நெகிழ்ந்து போனார். அவர் கொடுத்த திர்ஹம்களை திருப்பிக் கொடுத்து விட்டு நன்றி சொல்லி விட்டு  அங்கிருந்து புறப்பட்டார்.

1 comment:

  1. மாஷா அல்லாஹ்! அல்லாஹ் ரப்புல் ஆலமீன் தங்களுக்கு அருள் புரிவானாக!!

    அருமையான ஆக்கம்!!

    ReplyDelete