Thursday, October 1, 2015

நல்லதையே எண்ணுவோம்



மலேசிய மின்னல் FM வானொலியில் பேசிய உரை
பேசுவதற்கு நாவையும், நினைப்பதற்கு உள்ளத்தையும்,வணங்குவதற்கு உடலையும் தந்த எல்லாம் வல்ல அல்லாஹ் ஒருவனுக்கே புகழனைத்தும் உரித்தாகுக! சங்கடங்களை சகித்து தங்கடங்களை தகர்த்து இனிய இஸ்லாத்தை சம்பூரணமாக்கிய சர்தார் நபி {ஸல்} அவர்களின் மீதும் அவர்களின் உன்னத வழியை பின்பற்றி வாழ்ந்த உன்னதத்தோழர்கள் மீதும், வாஞ்சை மிக்க இறைநேசர்கள் மீதும், இந்த உரையை செவி மடுத்துக் கொண்டிருக்கும் நம் அனைவர் மீதும் அல்லாஹ்வின் அன்பும் அருளும்,கருணையும் என்றென்றும் குறைவின்றி நிறைவாக நிலவட்டு மாக என்ற உயர்ந்த வாழ்த்துக்களுடன் என் வார்த்தைகளைத் தொடங்குகிறேன்.அன்புமிக்க மின்னல் FM நேயர்களே! “மறை வசனமும் இறைத் தூதரும்” என்ற சிறப்புமிகு இந்நிகழ்ச்சியின் வழியே மீண்டும் உங்களை சந்திப்பதில் ஆனந்தம் அடைகிறேன்.