لا إله الا الله وحده لا شريك له له الملك وله الحمد بيده الخير يحيي ويميت وهو على كل شيء قدير.
லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக லஹு லஹுல் முல்கு வலஹுல் ஹம்து பியதிஹில் கைரு யுஹ்யீ வ யுமீத்து வஹுவ அலா குல்லி ஷையின் கதீர்.
பொருள் ;-
அல்லாஹ்வைத் தவிர வணங்கப்படுவதற்குத் தகுதியானவன் வேறு யாரும் இல்லை.அவன் தனித்தவன்.அவனுக்கு எந்த இணையு மில்லை. ஆட்சி அதிகாரம் அவனுக்கே சொந்தம்.அனைத்துப் புகழும் அவனுக்கே சொந்தம்.நலவுகள் அனைத்தும் அவன் கரத்திலேயே இருக்கிறது.அவனே உயிர்ப்பிக்கிறான்.அவனே மரணிக்கச் செய்கிறான். அவன் அனைத்து வஸ்துக்கள் மீதும் ஆற்றலுள்ளவன்.
من قال في دُبُرِ صلاةِ الفجرِ
، وهوَ ثانٍ رجلَيْهِ قبلَ أن يتكلَّمَ : لا إلهَ إلَّا اللهُ ، وحدَهُ لا شريكَ لهُ
، لهُ المُلْكُ ولهُ الحمدُ ، يُحيي ويُميتُ ، وهوَ على كلِّ شيءٍ قديرٌ . عشرَ مرَّاتٍ
كُتِبَتْ لهُ عشرُ حسناتٍ ، ومُحِيَ عنهُ عشرُ سَيئاتٍ ، ورُفِعَ لهُ عشرُ درجاتٍ ،
وكان يومَهُ ذلكَ كلَّهُ في حِرْزٍ من كلِّ مكروهٍ ، وحُرِسَ من الشَّيطانِ ، ولَم
ينبَغِ لذنبٍ أن يُدركَهُ في ذلكَ اليومِ إلَّا الشِّركُ باللهِ
ஒருவர் சுபுஹு மற்றும் மக்ரிப் தொழுது விட்டு அந்த
இடத்திலிருந்து எழுந்திருப்பதற்கு முன்பு அத்தஹிய்யாத் இருப்பிலிருந்து கால்களை
மாற்றாமல் அதே நிலையிலேயே அமர்ந்து இந்த கலிமாவை பத்து முறை ஓதினால் அவருக்கு
Ø பத்து நன்மைகள்
எழுதப்படுகிறது.
Ø பத்து பாவங்கள்
அழிக்கப்படுகிறது.
Ø பத்து
அந்தஸ்துகள் உயர்த்தப்படுகிறது.
Ø ஆபத்துக்களை விட்டும் ஷைத்தானை விட்டும் பாதுகாப்பு கிடைக்கிறது.
Ø அன்றைய நாளில் இணை வைப்பத்தவிர வேறு எந்த பாவத்திற்காகவும் அவரைப் பிடிக்க வேண்டிய அவசியம் ஏற்படாது.
(ஆதாரம் : திர்மிதி ; 3474)
No comments:
Post a Comment