Friday, October 3, 2025

கௌஸ் நாயகத்தின் வரலாற்று பக்கங்களில் சில...

 


அவர்களின் பிறப்பு


كانت ولادته سنة (٤٧١هـ) كما في معظم تراجمه .


ولد الشيخ - رحمه الله تعالى - بمنتصف شهر رمضان في سنة إحدى وسبعين وأربع مئة بجيلان ، وبها أمضى فترة شبابه الأول إلى أن بلغ الثامن عشرة سنة ، فارتحل إلى بغداد ، ودخلها سنة ثمان وثمانين وأربع مئة " ، واستمر فيها إلى نهاية حياته


அவர்கள் ஹிஜ்ரி 471 ஆம் ஆண்டு ரமலான் மாதத்தில் ஜீலான் என்ற நகரத்தில் பிறந்தார்கள். அங்கேயே அவர்களின் 17 ம் வயது வரைக்கும் இருந்தார்கள். அதற்குப் பிறகு பக்தாத் நகரத்திற்கு பயணப்பட்டார்கள். அவர்களின் இறுதி நேரம் வரை அங்கேயே இருந்தார்கள்.

Thursday, September 11, 2025

இலட்சியங்களை வென்ற இளைஞராக இரசூல் நபி ஸல் அவர்கள்

 கனினி பழுதடைந்திருப்பதால் கைபேசியில் தயார் செய்து தந்திருக்கின்றேன். எனவே சில தகவல்களை சரியாக கோர்வை செய்து தர  முடிய வில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.

Thursday, August 28, 2025

மாநபியின் குழந்தைப் பருவம்

  


اَلَمْ يَجِدْكَ يَتِيْمًا فَاٰوٰى

உம்மை அநாதையாகக் கண்டு, அவன் உமக்குத் தங்கும் இடம் அளி(த்து ஆதரி)க்க வில்லையா? (அல்குர்ஆன் : 93:6)

நபி ஸல் அவர்கள் தாயின் வயிற்றில் இருக்கும் போதே அவர்களின் தந்தை அப்துல்லாஹ் ரலி அவர்கள் மரணித்து விட்டார்கள். நபி ஸல் அவர்கள் எதீமாகவே பிறக்க வேண்டும் என்பது அல்லாஹ்வின் ஏற்பாடு.

Friday, August 22, 2025

அண்ணல் நபியின் அதிசயப் பிறப்பு



அல்லாஹ்வின் மகத்தான அருளால் இஸ்லாமிய ஆண்டின் மூன்றாவது மாதமான ரபீவுல் அவ்வல் மாதத்தை அடைய இருக்கிறோம். மாதங்களில் ரமலான் என்றவுடன் குர்ஆன் நம் ஞாபகத்திற்கு வருவதைப் போல, துல்ஹஜ் என்றவுடன் இப்ராஹீம் நபியின் குடும்பம் நம் நினைவுக்கு வருவதைப் போல, முஹர்ரம் என்றவுடன் இஸ்லாமிய வரலாற்றின் மாபெரும் அத்தியாயமான ஹிஜ்ரத் நம் சிந்தனைக்கு வருவதைப் போல, ரஜப் என்றவுடன் நபி ஸல் அவர்கள் மேற்கொண்ட அற்புத பயணமான மிஃராஜ் நம் எண்ணத்தில் உதிப்பதைப் போல, ரபீவுல் அவ்வல் என்று சொன்னவுடன் நம் எல்லோரின் மனதிலும உள்ளத்திலும் சிந்தனையிலும் எண்ணத்திலும் வருவது நபி ஸல் அவர்களின் அதிசயமான பிறப்பும், அவர்களின் அற்புதமான வாழ்வும் அவர்களின்  படிப்பினை தரும் மரணமும் தான். நபி ஸல் அவர்களின் பிறப்பு அவர்களின் இறப்பு அவர்களின் பரிசுத்தமான வாழ்க்கை என நபியோடு தொடர்பு கொள்கிற அத்தனையும் அற்புதமானது,ஆச்சரியமானது, வியப்பானது.

Thursday, August 14, 2025

இது சுதந்திர நாடா?

 

இந்திய நாடு தனது 79 வது சுதந்திர தின விழாவைக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றது.

சுதந்திரம் மனித குலத்தின் அடிப்படைத் தேவைகளில் ஒன்று. மனிதன் சுதந்திரவானாகவே பிறக்கிறான். அவன் பாவத்தை சுமந்து கொண்டோ அடிமையாகவோ பிறப்பதில்லை. மனிதன் தான், தன்னை ஒன்றுக்கு அடிமையாக்கிக் கொள்கின்றான். அல்லது அடுத்த மனிதர்களை அடிமைப்படுத்துகிறான். இதனை இஸ்லாம் ஏற்றுக்கொள்வதில்லை.