நபி வாழும் மா மதினா நான் அங்கு
வருவேனா... ?
பூ மணக்கும் உங்கள் ரவ்ளா கண்ணால் நான் தழுவேனா...?
1.நபி உம்மை காணத்தான் என்
ஜீவன் வாழுது..
விடுகின்ற மூச்செல்லாம் உம் வதனம்
தேடுது..
நபி உம்மை காணாமல் வாழ்வும் அது
வலிக்கிறது..
விடுகின்ற மூச்செல்லாம் கசப்பாக
தெரிகிறது
2. என் விழிகள் மூடிக்கொண்டே உம் முகத்தை
தேடினேன்.
கண் திறந்து பார்க்கின்றேன் கண்ணீர்
சுரக்க நிற்கின்றேன்.
கண்ணீரும் ஓடியதே காருண்ய நபி முகம்
காண.
ஓடிய நீர் வாடியதே காணவில்லை உம்
முகமே...
யா ரசூலுல்லாஹ் யா ஹபீபுல்லாஹ் யா
ரசூலுல்லாஹ் யா ஹபீபுல்லாஹ் யா ரசூலுல்லாஹ் யா ஹபீபுல்லாஹ் யா
ரசூலுல்லாஹ் யா ஹபீபுல்லாஹ் யா ரசூலுல்லாஹ் யா ஹபீபுல்லாஹ் யா
ரசூலுல்லாஹ் யா ஹபீபுல்லாஹ்
3. நான் கண்ட கனவெல்லாம் காற்றோடு
கரைந்திடுமா ?
நபி உம்மை காணும் ஏக்கம் தீராமல் போய் விடுமா
? (2)
நான் செய்யும் பாவங்கள் திரையாய் வந்து
நின்றிடுமா?
நபி உங்கள் காதலினால் அந்த திரை
கிழிந்து வழி விடுமா?
4.மரக்கட்டை ஏங்கியதே அதன் ஏக்கங்களை
தீர்த்தீரே.
நான் இங்கு கதறுகிறேன். என் கண் முன்னே வருவீரே (2)
என்னை இந்த வார்த்தையே மொழியாய் எந்தன்
குருவே
பாவி எந்தன் ஏக்கம் தீர திரு காட்சி
அருள்வீரே
No comments:
Post a Comment