அல்லாஹுத்தஆலா மனிதனுக்கு வழங்கிய கொடைகளில் ஒன்று மொழி. ஒரு மனிதன் இன்னொரு மனிதனோடு தன் கருத்துக்களை பரிமாறிக்கொள்ள, தன் உள்ளத்தில் தோன்றக்கூடிய எண்ணங்களை வெளிப்படுத்த துணையாக நிற்பது மொழி!
அல்லாஹுத்தஆலா மனிதனுக்கு வழங்கிய கொடைகளில் ஒன்று மொழி. ஒரு மனிதன் இன்னொரு மனிதனோடு தன் கருத்துக்களை பரிமாறிக்கொள்ள, தன் உள்ளத்தில் தோன்றக்கூடிய எண்ணங்களை வெளிப்படுத்த துணையாக நிற்பது மொழி!
இன்று நவம்பர் 14. நாடு முழுக்க சில்ட்ரன்ஸ் டே – குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவிற்கு குழந்தைகள் மீது அதிக அன்பும் அக்கறையும் அவர்களின் எதிர்காலம் குறித்த சிந்தனையும் இருந்தது. குழந்தைகள் நலனில் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக 1955 ல் சில்ட்ரன்ஸ் ஃபிலிம் சொசைட்டி இந்தியாவை நிறுவினார். குழந்தைகளின் நலனில் தனி கவனம் செலுத்தியதாலும் அந்த கவனத்தை சமூகத்திற்கு உணர்த்தியதாலும் அவர்களின் பிறந்த நாளான நவம்பர் 14 ம் தேதியை இந்த நாடு குழந்தைகள் தினமாக கொண்டாடுகிறது.
அவர்களின் பிறப்பு
كانت ولادته سنة (٤٧١هـ) كما في معظم تراجمه .
ولد الشيخ - رحمه الله تعالى - بمنتصف شهر رمضان في سنة إحدى وسبعين وأربع مئة بجيلان ، وبها أمضى فترة شبابه الأول إلى أن بلغ الثامن عشرة سنة ، فارتحل إلى بغداد ، ودخلها سنة ثمان وثمانين وأربع مئة " ، واستمر فيها إلى نهاية حياته
அவர்கள் ஹிஜ்ரி 471 ஆம் ஆண்டு ரமலான் மாதத்தில் ஜீலான் என்ற நகரத்தில் பிறந்தார்கள். அங்கேயே அவர்களின் 17 ம் வயது வரைக்கும் இருந்தார்கள். அதற்குப் பிறகு பக்தாத் நகரத்திற்கு பயணப்பட்டார்கள். அவர்களின் இறுதி நேரம் வரை அங்கேயே இருந்தார்கள்.
கனினி பழுதடைந்திருப்பதால் கைபேசியில் தயார் செய்து தந்திருக்கின்றேன். எனவே சில தகவல்களை சரியாக கோர்வை செய்து தர முடிய வில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.
اَلَمْ
يَجِدْكَ يَتِيْمًا فَاٰوٰى
உம்மை
அநாதையாகக் கண்டு, அவன் உமக்குத் தங்கும் இடம் அளி(த்து ஆதரி)க்க
வில்லையா? (அல்குர்ஆன் : 93:6)
நபி ஸல் அவர்கள் தாயின் வயிற்றில் இருக்கும் போதே அவர்களின் தந்தை அப்துல்லாஹ் ரலி அவர்கள் மரணித்து விட்டார்கள். நபி ஸல் அவர்கள் எதீமாகவே பிறக்க வேண்டும் என்பது அல்லாஹ்வின் ஏற்பாடு.
இந்திய நாடு
தனது 79 வது சுதந்திர தின விழாவைக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றது.
சுதந்திரம் மனித குலத்தின் அடிப்படைத் தேவைகளில் ஒன்று. மனிதன் சுதந்திரவானாகவே பிறக்கிறான். அவன் பாவத்தை சுமந்து கொண்டோ அடிமையாகவோ பிறப்பதில்லை. மனிதன் தான், தன்னை ஒன்றுக்கு அடிமையாக்கிக் கொள்கின்றான். அல்லது அடுத்த மனிதர்களை அடிமைப்படுத்துகிறான். இதனை இஸ்லாம் ஏற்றுக்கொள்வதில்லை.
சமீப காலமாக பிராணிகளை வாங்கி வீட்டில் வளர்க்கும் கலாச்சாரம் அதிகரித்து வருகின்றது. ஆதி காலத்தில் மனிதனின் தேவைக்காகவும் உதவிக்காகவும் சில மிருகங்களை வளர்த்து வந்த மனிதன், பிறகு அவைகளினால் சில இயற்கை நன்மைகளை பெற்ற பொழுது பிராணிகளின் அவசியத்தை உணர்ந்து அவைகளோடு நெருங்கி பழக ஆரம்பித்தான். ஆனால் இன்று பிராணிகளை வளர்ப்பது நவீன காலத்து கலாச்சாரமாக மாறி விட்டது. தேவைக்காகவும் உதவிக்காகவும் வளர்த்த காலம் கடந்து இப்போது அதை வளர்ப்பது ஃபேஷனாக மாறிப்போனது.பிராணிகள் விஷயத்தில் சிலர் எல்லை கடந்து அதற்கு அடிமையாகி விட்டார்கள். வித விதமான பறவைகளையும் பிராணிகளையும் வீட்டில் வாங்கி நிரப்புவதை வழமையாக கொண்டிருக்கின்றார்கள்.
من رأى
منكم منكرًا، فليغيره بيده، فإن لم يستطع فبلسانه، فإن لم يستطع فبقلبه، وذلك
أضعف الإيمان)
உங்களில் ஒருவர் ஒரு தீமையை (மார்க்கத்திற்கு முரணான ஒரு செயலை)க் கண்டால் அவர் அதைத் தமது கரத்தால் தடுக்கட்டும்,முடியாவிட்டால் தமது நாவால் (சொல்லித் தடுக்கட்டும்),அதுவும் முடியாவிட்டால் தமது உள்ளத்தால் (அதை வெறுத்து ஒதுக்கட்டும்). இந்த (இறுதி) நிலையானது இறைநம்பிக்கையின் பலகீனமா(ன நிலையா)கும். (முஸ்லிம்: 78)
நாம் நம் வாழ்வின் 3 ல் ஒரு பங்கை தூக்கத்தில் செலவிடுகிறோம். அந்த அடிப்படையில் நாம் வாழ்வில் அதிகமான கனவுகளை காணுகின்றோம். உலகில் கனவு காணாதவர்கள் இல்லை என்றளவிற்கு கனவு என்பது அனைவருக்கும் பொதுவான ஒன்றாக இருக்கிறது.
ஷரீஅத்திலும் உலகத்திலும் வரலாறு என்பது ஒரு முக்கிய பகுதியாக இருக்கிறது. வரலாறு ஒரு தேசத்தின் அல்லது ஒரு சமூகத்தின் கடந்த கால நிகழ்வுகளைப் பற்றிய தகவல்களை வழங்குகிறது. இது அவர்களின் கலாச்சாரம், பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள் மற்றும் போராட்டங்களைப் புரிந்து கொள்ள உதவுகிறது.நிகழ்காலத்தை சரியாக வடிவமைப்பதற்கும் முறையக கட்டமைப்பதற்கும் வரலாறுகள் மிகவும் அவசியம்.
பணவீக்கம் என்பது தற்போது பயன்படுத்தப்படும் வார்த்தையாக இருக்கின்றது. நமக்கு கிடைக்கும் பணத்துடன் ஒப்பிடும் போது காலப்போக்கில் ஏற்படும் விலை உயர்வை இந்த வார்த்தை குறிக்கிறது. அதாவது ஒரு குறிப்பிட்ட தொகையைக் கொண்டு பல வருடங்களுக்கு முன்பு நாம் வாங்கிய ஒரு பொருளை இப்போது அதே விலையில் வாங்க முடியாது. அதன் விலை அதிகரித்திருக்கும்.இதற்கே பணவீக்கம் என்று சொல்லப்படுகிறது.சுருக்கமாக ஒவ்வொரு காலத்திலும் ஏற்படும் விலைவாசி உயர்வை குறிக்கும் வார்த்தை தான் பணவீக்கம்.
அல்லாஹ்வின் அருளால் அவனால் சங்கை செய்யப்பட்ட முஹர்ரம் மாதத்தின் 10 வது நாளான ஆஷூரா தினத்தை சந்திக்க இருக்கின்றோம். ஆஷூரா என்றால் பத்தாவது என்று பொருள். எல்லா மாதங்களிலும் பத்தாவது நாள் உண்டு என்றாலும், முஹர்ரம் மாதத்தின் பத்தாவது தினத்திற்கே இந்த பெயர் சொல்லப்படுகிறது. ஏனென்றால் பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வுகள் இந்த நாளில் நடந்திருப்பதாக இஸ்லாமிய வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.
இஸ்லாம் பாராட்டும் உயர்ந்த குணங்களில் ஒன்று வீரமும் துணிவும். யாருக்கும் அஞ்சாமல் எதையும் துணிவோடு எதிர் கொள்கின்ற குணம் ஒரு மனிதனிடம் இருக்க வேண்டும். அது ஒரு முஃமினின் பண்பு என்று இஸ்லாம் கூறுகின்றது.
மனிதன் மனிதனாக வாழ அவனுக்கு சில சட்ட திட்டங்கள்، வாழ்க்கை நெறிமுறைகள் அவசியமாய் தேவைப்படுகிறது. சட்டதிட்டங்கள் தான் மனிதனை சுய ஒழுக்கத்தோடும் கட்டுப்பாடோடும் வாழ செய்கிறது. மனிதனால், சட்டம் என்ற கடிவாளம் இன்றி சுய ஒழுக்கத்தோடும் கட்டுப்பாட்டோடும் வாழ முடியாது.
பரக்கத்தைக் கேட்கின்ற, தேடுகின்ற மாதம் இந்த ரஜப் மாதம். பரக்கத் என்பதற்கான சரியான பொருளை இஸ்லாம் கூறியிருக்கிறது. அதை கடந்த வாரம் பார்த்தோம். அந்த பரக்க்த்தைப் பெற்றுக் கொள்வதற்கான வழிகளையும் இஸ்லாம் நிறையவே சொல்லித் தந்திருக்கின்றது. அதில் ஒன்று தான் எதிலும் பேராசை கொள்ளாமல் இருப்பதைக் கொண்டு போதுமாக்கிக் கொள்ளும் தன்மை.
அல்லாஹ்வின் பேரருளால் புனிதமான ரஜப் மாதம்
நம்மை வந்தடைந்திருக்கிறது. இந்த
நேரத்தில் மூன்று சிந்தனைகள் மிக அவசியமானது.
1, அல்லாஹ்வினால் கண்ணியமாக்கப்பட்ட நான்கு மாதங்களில் இந்த ரஜபும் ஒன்று.
இஸ்லாம் மண்ணுக்கேற்ற மார்க்கம் மக்களுக்கு ஏற்ற மார்க்கம் மனிதனை மனிதனாக மதிக்க கற்றுக் கொடுத்த மார்க்கம் மனித உயிர்களையும் மனித உரிமைகளையும் மனித உணர்வுகளையும் புரிந்து கொண்டு அதற்கு மதிப்பளிக்க வேண்டும் என்று உணர்த்திய மார்க்கம். மனித உரிமை என்ற சொல்லுக்கு பல விதமான விளக்கங்களும் வியாக்கியானங்களும் சொல்லப்படுகிறது.இருந்தாலும் உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனும், தான் எவ்வாறு வாழ வெண்டும் என்று விரும்புவானோ, ஒவ்வொரு மனிதனும் தனக்கு எதுவெல்லாம் கிடைக்க வேண்டும் என்று எதிர் பார்ப்போனோ ஆசைப்படுவானோ அவை அனைத்திற்கும் பெயர் தான் மனித உரிமைகள்.
إنَّ الدِّينَ
عِندَ اللَّهِ الْإِسْلَامُ
நிச்சயமாக
தீனுல் இஸ்லாம் தான்
அல்லாஹ்விடம் (ஒப்புக்
கொள்ளப்பட்ட)
மார்க்கமாக இருக்கிறது. (அல்குர்ஆன்:3;19)
உலகத்தில் தோன்றிய சமயங்களில் தனித்துவம் பெற்ற சமயமாக இஸ்லாம் இருக்கிறது. தன்னிகரில்லாத ஈடுஇணையற்ற மார்க்கமாக இஸ்லாம் திகழ்கிறது. எண்ணற்ற விஷயங்களில் இஸ்லாம் மற்ற சமயங்களை விட்டும் மற்ற மதங்களை விட்டும் தனித்து விளங்குகிறது.
இஸ்லாமிய வருடத்தின் மூன்றாம் மாதமான ரபீவுல் அவ்வல் மாதம் நம்மை வந்தடைந்திருக்கின்றது. ரபீவுல் அவ்வல் மாதம் என்றாலே ஈமான் கொண்டவர்களின் இதயங்கள் ஆனந்தத்திலும் மகிழ்ச்சியிலும் துள்ளிக் குதிக்க ஆரம்பித்து விடும்.காரணம் அண்ணல் நபி ஸல் அவர்கள் இந்த மண்ணிற்கு வருகை தந்த மாதம் ரபூவுல் அவ்வல்.
அல்லாஹுத்தஆலா வாழ்வியல் நெறியாக உலக மக்களுக்கு இஸ்லாத்தைத் தந்திருக்கின்றான். இஸ்லாம் முழுமை பெற்ற மார்க்கம். எல்லா காலத்திற்கும் பொருந்தும் மார்க்கம்.