Sunday, December 14, 2025

உரையாடல் - தாய்மை

மாணவி - 1

வயிற்றில் குழந்தையைச் சுமந்திருக்கும் ஒரு பெண்ணின் பிரசவத்திற்கான ஏற்பாடுகள் நடந்துக் கொண்டிருந்தது.உறவினர்கள் எல்லாரும் ஆவலோடு காத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் அந்த தாயோ வலியில் துடித்துக் கொண்டிருந்தாள், கதறிக் கொண்டிருந்தாள்.

வயிற்றில் இருக்கும் குழந்தை பாக்குது. வழக்கத்துக்கு மாற்றா ஏதேதோ சத்தம் கேக்குதே. நமக்கு என்ன நடக்கப் போதோ என்ற குழப்பம் குழந்தையோட மனசுல ஓடுச்சு. அமைதியா ஆனந்தமா மிதந்துக் கிட்டிருந்த நமக்கு என்ன ஆகப்போதோ என்ற கவலை குழந்தைக்கு ஏற்பட்டுச்சு.

வழக்கமா நாம பேசும் இறைவன்டயே இதுக்கான விளக்கத்த கேட்டுறுவோம்னு சொல்லி அந்த குழந்தை இறைவன கூப்டுச்சு.

 

 

 

 

 

 மாணவி - 2

 

1 : இறைவா இங்க என்ன நடக்குது. என்னை என்ன செய்யப் போற.என்ன எங்க அனுப்பப் போற. வழக்கத்துக்கு மாற்றமா ஏதேதோ சத்தம் கேக்குதே எனக்கு ஒன்னும் புரியலயே.

 

2 : நான் இங்க ரொம்ப happy  யா இருக்கனே. எனக்கு இங்க நல்ல சுவையான உணவு கிடைக்குது. மதுரமான நீர் கிடைக்குது. நல்ல சுத்துவேன். தேவப்பட்டா தூங்குவேன். எந்த disturbance ம் இல்ல. நான் ஏன் அங்க போகனும்.

 

3 : இங்க என்னைய நீ நல்ல பாத்துக்கிட்ட. அங்க என்ன யார் பார்த்துக்குவா?

 

4 : உலகத்துல மனிதர்கள் கிட்ட என்னைய தனியா அனுப்புற. நான் ரொம்ப பலவீனமானவன். எனக்கு நடக்க தெரியாது, எனக்கு பேச தெரியாது, அவங்க பேசுறத புரிஞ்சிக்க தெரியாது. நான் எப்படி அங்க வாழுவேன்.

 

5 : நான் இப்ப உன் கூட பேசிக்கிட்டு இருக்கேன். அங்க போன பிறகு உன் கூட நான் எப்டி பேசுவேன்.

 

6 : உலகத்துல கெட்டவங்க இருப்பாங்க, அநியாயக்காரங்க இருப்பாங்க, இரக்கமில்லாதவங்க இருப்பாங்க, மனசாட்சி இல்லாதவங்க இருப்பாங்க. அவங்க கிட்ட இருந்து என்ன நான் எப்டி காப்பாத்திக்குவேன்.

 

7: இனி நான் உன்ன பாக்க முடியாதா பேச முடியாதா.

 

8 : இறைவனே இன்னும் கொஞ்ச நேரத்துல உன்ன விட்டு பிரியப் போறேன். நீ எனக்காக ஏற்பாடு செஞ்சிருக்கிற அந்த தேவதையோட பெயரயாச்சும் எனக்குச் சொல்ல.

 

 தாய்மையை போற்றுவோம்,தாய்மையைப் பாதுகாப்போம்.

 

 


மாணவி - 3

1 : குழந்தாய் நீ உலகத்துல பிறந்து இனி நீ மனிதர்களோட வசிக்கப் போற

 

2 : இல்ல குழந்தாய், நீ இங்க இருக்கிற மாதிரியே அங்கேயும் சந்தோஷமா இருக்கலாம். போயிட்டு வா

 

3 : கவலப் படாத குழந்தாய். அங்க உன்ன பாத்துக்கிறதுக்கு ஒரு தேவதைய ஏற்பாடு செஞ்சிருக்கேன். அந்த தேவத உனக்காக பாடும்.. உனக்காக ஓடும். நீ அழுதா அதும் அழுவும். நீ சிரிச்சா அதுவும் சிரிக்கும். நீ சாப்டா அதுக்கு வயிறு நிறையும். உனக்கு ஒன்னுன்னா அது கவல படும். உன் மேல உயிரா இருக்கும்.

 

4 : அதப் பத்தி நீ ஒன்னும் கவலப்படாத. உனக்காக நான் ஏற்பாடு செஞ்சிருக்கிற அந்த தேவத எல்லாத்தையும் கவனிச்சிக்கும். உனக்கு பேச கத்துக் கொடுக்கும், உனக்கு நடக்க கத்துக் கொடுக்கும்.உனக்கு சாப்பிடக் கத்துக் கொடுக்கும். நீ பயப்படாத.

 

5 : அந்த தேவத இதையும் உனக்கு சொல்லிக் கொடுக்கும்.

 

6 : கவலைப் படாத அந்த தேவத உன்ன நல்லா பாத்துக்கும். தன்னோட உயிரக் கொடுத்தாவது உன்ன பாதுகாக்கும்.

 

7 : நீ அங்க போனதுமே அந்த தேவத என் பெயர உனக்கு சொல்லிக் கொடுக்கும். சதா என்னப் பத்தி உன் கிட்ட பேசிக்கிட்டே இருக்கும். என்னிடம் திரும்பி வரும் வழியையும் உனக்கு சொல்லித் தரும். நான் உன் கூட தான் இருப்பேன். ஆனா நீ என்ன பாக்க முடியாது.

 

8 : குழந்தாய் தைரியமா போயிட்டு வா. அந்த தேவதையின் பெயர் முக்கியமில்ல. அவளை  நீ ’அம்மாஎன்று அழைப்பாய். கடைசியா உனக்கு ஒரு அறிவுரையச் சொல்றேன். நீ எப்பயும் அந்த தேவதையின் மனம் புண்படுற மாதிரி எதையும் பேசிடாத. நடந்துக்காத. அவள சந்தோஷப்படுத்துனா உனக்கு என்னோட பொருத்தம் கிடைக்கும். 

 

தாய்மையை போற்றுவோம்,தாய்மையைப் பாதுகாப்போம். 

No comments:

Post a Comment